PDA

View Full Version : சென்றுவிட்டாய்



இனியவள்
04-08-2007, 06:38 AM
மாலையில் விழுந்தாலும்
சூரியன் மரித்துப் போவதில்லை
நிலவுக்கு ஒளியூட்டி
தன்னை உயிர்ப்பித்துக்
கொள்வது போல் நீ என்னை
பிரிந்து சென்றாலும் உன்
நினைவுகள் என்னை
உயிர்ப்பிக்கின்றதே.....

கடல் நீர் கலந்து உருப்பெறும்
மேகங்கள் உப்பு நீர்
கொடுக்காதது போல்
உன் பிரிவால் உருவான
நினைவுகள் வலியைத் தருவதற்கு
பதிலாய் இன்பத்தையல்லவா
தருகின்றது....

ஒட்சிசனாய் இனிமையான உன்
நினைவுகளை உட்செலுத்தி
பிரிவு தந்த வலிகளை காபனீரொட்சைட்டாய்
வெளிவிடுகின்றேன்....

உடலை மட்டும் என்னிடம்
விட்டுவிட்டு உயிரைக் களவாடி
சென்று நினைவுகளைப் பரிசளித்து
நிழலாய் இருந்த உன்னை ஞாபங்கள்
கொண்டு நிஜமாக்கிச் சென்று விட்டாய்...

அன்புரசிகன்
04-08-2007, 06:54 AM
ஒவ்வொரு பந்தியிலும் காதலுக்கு புது இலக்கணம் கற்பித்திருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்...

நதியில் துள்ளி
கடலில் பாய்ந்து
சமுத்திரத்தில் ஆர்ப்பரித்து
நிலைத்து நிற்கட்டும்
நின்காதல்...

இனியவள்
04-08-2007, 08:31 AM
ஒவ்வொரு பந்தியிலும் காதலுக்கு புது இலக்கணம் கற்பித்திருக்கிறீர்கள்...
பாராட்டுக்கள்...
நதியில் துள்ளி
கடலில் பாய்ந்து
சமுத்திரத்தில் ஆர்ப்பரித்து
நிலைத்து நிற்கட்டும்
நின்காதல்...

நன்றி அன்பு

அழகிய பதில் கவிதைக்கு வாழ்த்துக்கள்

அன்புரசிகன்
04-08-2007, 08:56 AM
நன்றி அன்பு

அழகிய பதில் கவிதைக்கு வாழ்த்துக்கள்

காமிடி கீமிடி ஏதாச்சும்???

விகடன்
04-08-2007, 09:12 AM
கவிதை நன்றே.
புது புது அத்தியாயங்களை பிறப்பிக்கின்றீர்கள்.
அது காதல் மீது கொண்ட காதலினாலா
அல்லது
கவிதை மீது கொண்ட காதலினாலா ?..... புரியவில்லை.

எதுவாகிலும்,
காதலால் கவிபாடும் இனியவளிற்கு இந்த விராடனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

இனியவள்
05-08-2007, 10:51 AM
கவிதை நன்றே.
புது புது அத்தியாயங்களை பிறப்பிக்கின்றீர்கள்.
அது காதல் மீது கொண்ட காதலினாலா
அல்லதுகவிதை மீது கொண்ட காதலினாலா ?..... புரியவில்லை.
எதுவாகிலும்,
காதலால் கவிபாடும் இனியவளிற்கு இந்த விராடனின் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.

நன்றி விராடன்

காதலின் மேல் கொண்ட
காதலால் கவிதை மீது
காதல் கொண்டு கவிதை
படைக்கின்றேன்

இனியவள்
05-08-2007, 10:52 AM
காமிடி கீமிடி ஏதாச்சும்???

அட உங்களை வைச்சு காமிடி கீமிடி
பண்ண முடியுமா என்ன ;)