PDA

View Full Version : மண(ன)முறிவு!



சிவா.ஜி
04-08-2007, 05:18 AM
அந்தி சூரியனில்
அஸ்தமனத்தை நான் கண்ட
அதே வேளையில்
பூமியின் மறுபக்கம்
யாரோ ஒருவன்
அதே சூரியனின்
உதயத்தைக் காண்கிறான்!
காலைவணக்கம்
நான் சொன்ன நேரத்தில்
மாலைவணக்கம் மறுபக்கம்!
இது உலகின் சுழலில்
உருவாகும் முரண்!

உன்னுடையது எந்த வகை?

செய்திகளை தமிழில்
படிப்பது சுகமென்று நானுரைக்க,
ஆங்கிலத்தில் படித்து
அறிவை வளரென்று நீயுரைக்க,
பிடிக்காத உணவை
நான் புறந்தள்ள
மிகப்பிடித்ததென
மேலும் உண்கிறாய்!
எனக்குப்பிடித்த என் பெற்றோர்
உனக்குப் பிடிக்கவில்லை!
என் விருப்பம்
உன் வெறுப்பு
ஒன்றாய் வாழ்ந்தும்
ஒன்றாத உணர்வுகள்!

இத்தனை வேறுபாடுகள்
நமக்குள் இருந்தும்....
ஒத்தக்கருத்தாய்
ஒரு முடிவில் ஒன்றுபட்டோம்,
உனக்கும் எனக்கும்
முதலும் கடைசியுமாய்
ஒரே சிந்தனை.....
மணமுறிவு!

விகடன்
04-08-2007, 05:25 AM
முரண்பாடுகளின் மத்தியில் தித்தித்த வரப்பிரசாதமாய் மணமுறிவு.

பாராட்டுக்கள்.

சிவா.ஜி
04-08-2007, 05:26 AM
அருமையான ரத்தினச்சுருக்க விமர்சனம். நன்றி விராடன்.

ஷீ-நிசி
04-08-2007, 06:37 AM
ஹா! ஹா! பிரமாதம்!

ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இரண்டுமுறை நேரம் காட்டுமாம்...

கருத்துவேறுபாடுகளால் நாங்கள் பிரிகிறோம் என்று உரைக்கும் தம்பதிகள் கூட மணமுறிவு என்ற ஒரு விஷயத்தில் ஒத்துதானே போகிறார்கள்..

அழகிய முரண்! அழகிய கவிதை! வாழ்த்துக்கள் சிவா!

சிவா.ஜி
04-08-2007, 06:45 AM
நன்றி ஷீ−நிசி. ஓடாத கடிகார உதாரணத்துடன் அருமையான பின்னூட்டம்.மிக்க நன்றி.

இனியவள்
04-08-2007, 08:30 AM
வாழ்த்துக்கள் சிவா...


மனமுறிவு வித்திட்டது
அழகிய குடும்பத்தின்
முறிவுக்கு

அமரன்
04-08-2007, 08:47 AM
யப்பா..என்னே ஒரு சிந்தனை. முரண்களின் அஸ்திவாரத்தில் கட்டிய கண்ணாடிமாளிகை ஒன்றுபட்டு உடைக்கப்படுகிறது. பாராட்டுக்கள் சிவா.

சம்பிரதாயங்கள் சேர்க்க
சட்ட தாயங்கள் பிரிக்க
பட்ட காயங்களுக்கு மருந்து
கொடுப்பார்தான் யாருமில்லை.

சிவா.ஜி
04-08-2007, 08:49 AM
நன்றி இனியவள்.அழகான பதில் குறுங்கவி படைத்துவிட்டீர்கள்.

சிவா.ஜி
04-08-2007, 08:51 AM
அருமையான பதில் கவிதை. நல்ல சொற்கட்டு. இதை இன்னும் விரிவாக்குங்கள் அமரன்.பாராட்டுக்களுக்கு நன்றி.