PDA

View Full Version : இதயம்



aren
04-08-2007, 02:29 AM
அனலாக இருந்தாலும்
மென்மையாக இருப்பான்
ஆண்மகன் அழகான
பெண்ணைப் பார்த்ததும்

தலையை கோதிவிடுவான்
மயங்கிவிடாதே
அனைத்தும்
கல்யாணம் வரைதான்

தாகம் என்றதும்
குளிரான பானம்
நொடிப்பொழுதில்
அது காதலிக்கும் வரையில்
கல்யாணத்திற்கு பின்
நீயே நீர்நிலைக்கு
நடக்க வேண்டும்

பெண்ணே ஜாக்கிரதை
உன் இதயம்
விலைமதிப்பற்றது

எளிதாக கொடுக்காதே
பார்த்து பரிசளிக்கவும்!!!!!

aren
04-08-2007, 02:31 AM
இனியவள் அவர்களின் சுமைதாங்கி கவிதைக்கு பின்னுட்டம் இடலாம் என்று எழுதினேன், அதையை தனியாக பதித்துவிட்டேன் கொஞ்சம் முரண்பாடாக இருந்த காரணத்தினால்.

நன்றி வணக்கம்
ஆரென்

விகடன்
04-08-2007, 03:01 AM
பார்த்த அநுபவமோ?
பரிதவித்த அநுபவமோ?
கவிதை சிறப்பு.


பாராட்டுக்கள்

சிவா.ஜி
04-08-2007, 04:17 AM
ஒரு பேதைப்பெண்ணுக்கு,நல்ல பாதையறிய உரைக்கப்பட்ட அழகான அறிவுரைகள். ஆரென் அவர்களின் கவிதை வரிகளில் அறிவுரையும் ஆனந்தமாக இருக்கிறது.

இனியவள்
04-08-2007, 07:47 AM
விலைமதிக்க முடியாத
பாசத்திற்கு விலைபேசுபவர்கள்
இருக்கும் வரை
விலைமதிப்பில்லா இதயத்திற்கு
ஏது இங்கு மதிப்பு

இதயம் இல்லாதனிடம் இதயத்தைக்
கொடுத்து இதயமில்லாதவள் ஆகிவிட்டால்

வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா

leomohan
04-08-2007, 07:56 AM
கல்யாணம் வரைதான்.......................

ஹா ஹா. யதார்த்த கவிதை நன்று ஆரேன்.

அமரன்
04-08-2007, 08:36 AM
யதார்த்தமா கவிதை. பல குடும்பங்களில் நடைபெறுகின்ற நிஜம்.

கண்ணே மணியே
கனியமுதே என
கல்கண்டு வார்த்தைகள்
காதல் காலங்களில்.

கல் கண்ட நாயாக
அவ்வார்த்தைகள்
கல்யாணம் தந்த
கலிகாலத்தில்
.

பாராட்டுக்கள் அண்ண

ஓவியன்
04-08-2007, 08:40 AM
பெண்ணே ஜாக்கிரதை
உன் இதயம்
விலைமதிப்பற்றது

எளிதாக கொடுக்காதே
பார்த்து பரிசளிக்கவும்!!!!!

ஆகா அண்ணா!

ஆண்கள் இதயமும் தானே விலைமதிப்பற்றது, அதனையும் பார்த்துத் தானே பரிசளிக்க வேண்டும்..........

வரிகள் அருமை அண்ணா!.

aren
05-08-2007, 02:49 AM
பார்த்த அநுபவமோ?
பரிதவித்த அநுபவமோ?
கவிதை சிறப்பு.


பாராட்டுக்கள்

நன்றி விராடன் அவர்களே.

பார்த்த அனுபவங்கள் நிறையவே உள்ளன. பரிதவிக்கவிட்ட அனுபவங்கள் இல்லை.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
05-08-2007, 02:50 AM
ஒரு பேதைப்பெண்ணுக்கு,நல்ல பாதையறிய உரைக்கப்பட்ட அழகான அறிவுரைகள். ஆரென் அவர்களின் கவிதை வரிகளில் அறிவுரையும் ஆனந்தமாக இருக்கிறது.

நன்றி சிவா.ஜி அவர்களே.

காதல் என்று வந்துவிட்டால் இதயம் தானாகவே பரிசாக கொடுக்கப்பட்டுவிடுகிறது எதையுமே நினைக்காமல். பின்னர் வருத்தப்பட்டு என்ன பயன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியா
05-08-2007, 03:04 AM
அனலாக இருந்தாலும்
மென்மையாக இருப்பான்
ஆண்மகன் அழகான
பெண்ணைப் பார்த்ததும்

தலையை கோதிவிடுவான்
மயங்கிவிடாதே
அனைத்தும்
கல்யாணம் வரைதான்

தாகம் என்றதும்
குளிரான பானம்
நொடிப்பொழுதில்
அது காதலிக்கும் வரையில்
கல்யாணத்திற்கு பின்
நீயே நீர்நிலைக்கு
நடக்க வேண்டும்

பெண்ணே ஜாக்கிரதை
உன் இதயம்
விலைமதிப்பற்றது

எளிதாக கொடுக்காதே
பார்த்து பரிசளிக்கவும்!!!!!


ஒரு வருடதிற்க்கு மூன் நான் கண்ட ஆரேனுக்கும், தற்போதைய ஆரேனுக்கும் அதிகமே வித்தியாசம். பெருமை கொள்கிறேன் அண்ணா.

முதலில் ஒரு சபாஷ், கவிதை பக்கமே வராத உங்களின் கவித்திறமை இப்படி அருவி போல்கொட்ட நாங்கள் அனைவரும் சிட்டுக்குருவிபோல் அதில் சிறகடிக்கின்றோம்........காண மகிழ்ச்சியாக உள்ளது.

கவிதை நன்று, பெண்ணை கரும்பு என்று கூறி என்னை விரும்பு என்று மயக்கி பின்னோருநாள் சக்கையாக்கி குப்பைக்கு அனுப்பிம் கட்டெறும்பு காளைகளுக்கி இது அப்படியே பொருந்தும். சபாஷ்.