PDA

View Full Version : அழைக்கின்றேன்



இனியவள்
03-08-2007, 06:24 PM
என் வாழ்க்கைப் பந்து
உன்னைச் சுற்றியே
சுழன்று கொண்டிருக்கின்றது
சூரியனைச் சுற்றும் பூமிபோல்....

உன் கண்களிரண்டும் கவிபாட
கரங்களிரண்டும் இசை மீண்ட
உன் தேன்குரல் சிந்துகின்றது
அழகிய பாடலை....

தேன் இருக்கும் பூவை நோக்கி
படையெடுக்கும் வண்டுகள் போல்
அன்பிருக்கும் உன்னை நோக்கி
படையெடுக்கின்றன என் ஜம்புலங்களும்...

இயற்கையால் உன்னை நேசித்து
இயற்கையை மாற்றுகின்றேன்
உனக்காக..

இரவை பகலாக்கி பகலை இரவாக்கி
சூரியனை நிலவாக்கி வெண்ணிலாவை
சூரியன் ஆக்குகின்றேன் உனக்காக....

என் கால்தடங்கள் உன் பெயரை
விட்டுச்செல்ல என் மூச்சுக் காற்று
அவற்றை சேகரித்து அனுபுகின்றன
என் செல்களுக்கு.....:wub:

காதல் கொண்டேன் நான் காதல்
கொண்டேன் உன் அன்பின் மேல்
நான் காதல் கொண்டேன்...

கண்கள் இழந்தேன் நான் கண்கள்
இழந்தேன் உன் கண்கள் கண்டு
நான் கண்கள் இழந்தேன்....

இதயத்தை இடமாற்றிக் கொண்டேன்
நான் இடமாற்றிக் கொண்டேன்
உன் இதயத்தை எனக்குள்
இடம் மாற்றிக் கொண்டேன்...

துணைக்கு அழைக்கின்றேன் நான்
துணைக்கு அழைக்கின்றேன் உன்
நினைவுகளை நான் துணைக்கு
அழைக்கின்றேன்....

அமரன்
03-08-2007, 06:50 PM
காலையில் இருந்து ஆளைக் காணவில்லை என நினைத்தேன். இதுதானா சங்கதி...

அழகான வர்ணனைகள். உவமான உவமேயங்களை இயற்கையிலிருந்தே எடுத்திருகின்றார் கவிக்குயில். அதிகமாக காதல் வயப்பட்டு என்ன செய்கிறார் பாருங்கள்.


இரவை பகலாக்கி பகலை இரவாக்கி
சூரியனை நிலவாக்கி வெண்ணிலாவை
சூரியன் ஆக்குகின்றேன் உனக்காக
காதல்கள்தான் இயற்கையை சீரழிக்கின்றனவோ....!!!? கவிதையின் கரு சொல்லவே தேவையில்லை. எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருள். சிலருக்கு அது பருகும் பொருள். பாராட்டுக்கள்.


என் வாழ்க்கைப் பந்து
உன்னைச் சுற்றியே
சுழன்று கொண்டிருக்கின்றது
சூரியனைச் சுற்றும் பூமிபோல்....

பூமியே...!
உன்னைச் சுற்றி வரும்
துணைவன் யாரோ...?

அவனைப் பார்க்கையில்
எட்டத்தான் போகிறன
என்கால்கள்
என்னைக் கேட்காமலே..?

அய்யனாருக்கு
கிட்டத்து உறவா அவன்..?

இனியவள்
04-08-2007, 09:29 AM
நன்றி அமர் வாழ்த்துக்கு

இனியவள்
04-08-2007, 09:30 AM
பூமியே...!
உன்னைச் சுற்றி வரும்
துணைவன் யாரோ...?
அவனைப் பார்க்கையில்
எட்டத்தான் போகிறன
என்கால்கள்
என்னைக் கேட்காமலே..?
அய்யனாருக்கு
கிட்டத்து உறவா அவன்..?


அருகில் இல்லாத போது
கிட்டப் போகத் துடிக்கும்
கால்கள் அவன் அருகில்
இருக்கும் போது தூரப்
போக துடிப்பதன் காரணம்
என்னவோ விடை அறிய
முயன்றேன் மெளனமே
விடையாகக் கிடைக்க
மெளனத்தை பரிசளித்தேன்....