PDA

View Full Version : நாகரீக உலகம்



aren
03-08-2007, 06:20 PM
ரயில்வண்டி வந்து
பிளாட்பார்மில் நிற்கிறது
இறங்கவேண்டியவர்கள்
இறங்கி
ஏறவேண்டியவர்கள்
ஏறி

வயதானவர் ஒருவர்
கையில் கைத்தடியுடன்
மெதுவாக நடந்துவந்து
ஏற முயற்சிக்க
கதவு மூடுகிறது
கதவு கையில் படுகிறது
தடி தடுமாறுகிறது
தடாலென்று
பெரியவர் கீழே

சுற்றுமுற்றும்
மக்கள் கூட்டம்
பெரியவர்கள்
சிரியவர்கள்
இளைஞர்கள்
பெண்கள்
கூட்டம்

அனைவரின் கண்களும்
பெரியவரின் மேல்
கால்களோ
கைகளோ
ஓடிவரவில்லை
உதவிடுவதற்கு

ஒரு வயதான
மூதாட்டி
குனிந்தாள்
தன் கையைக்
கொடுத்தாள்
அவரை கஷ்டப்பட்டு
தூக்கினாள்
மெதுவாக
சாய்வாக நிறுத்தினாள்

பெரியவரின்
கண்களில்
நட்பாக ஒரு
புண்ணகை

வயதான மூதாட்டி
கூட்டத்தைப்
பார்த்தாள்

அவள் சொல்லவேண்டிய
வார்த்தைகள்
வாயிலிருந்து வரவில்லை!!!!!

அமரன்
03-08-2007, 06:33 PM
நம்மில் எத்தனை பேர் இதேபோல்...நான் கடந்து வந்த சம்பவங்களே எத்தனை...என்ன காரணம் சொன்னாலும் நியாயப்படுத்த முடியாது. மூதாட்டிக்கு தெரிந்திருக்கிறது முதுமையின் "வலி"மை...பாராட்டுக்கள் அண்ணா. நல்ல கரு.

வரிகள் பல இடங்களில் மின்னுகின்றன. உதாரணம் இவ்வரிகள்.


அவள் சொல்லவேண்டிய
வார்த்தைகள்
வாயிலிருந்து வரவில்லை!!!!!

பல இடங்களில் நாம் ஒலிக்கும் வார்த்தைகளை விட ஒளிக்கும் வார்த்தைகள் ஆழமானது. அடிவரை ஊடுருவிச் செல்லக்கூடியது. அதை உணர்த்தும் இவ்வரிகளும் ஆழமானவை.


குளோரின் தண்ணியும்
ஃபேர் அன்ட் லவ்லியும்
புறத்தை பளபளக்க..
அகத்தில் மட்டும்
எத்தனை அழுக்கு....

உதட்டின் ஈரத்தை
நிலைநிறுத்த சாயம்.
மனதை ஈரமாக்குவது
அவர்களுக்கு கசாயம்
என்னே ஒரு
வேடிக்கை விநோதம்.

புறகண்ணை மூடிய
குளிர் கண்ணாடிகள்
அகக்கண்ணையும் மூடியதா
நவநாகரிக உலகில்.....!

ஓவியன்
03-08-2007, 07:00 PM
நம் வாழ்க்கையில் பல இடங்களில் சந்திக்கும் அன்றாட நிகழ்வொன்று......

நம் நடத்தைகளுக்கு நாமே பல்வேறு வியாக்யானங்கள் விடைகள் வைத்திருந்தாலும், அந்த மூதாட்டி போன்றோரின் முன்னே வெட்கித் தலை குனிந்தேயாகவேன்டும் எம் இவ்வாறான செயற்பாடுகளுக்காக..........

அருமையான ஒரு கருவைத்தாங்கிய அழகான வரிகள் அருமை அண்ணா!

அழகான கவிக்கு அழகான பின்னூட்டமிட்ட அமருக்கும் பாராட்டுக்கள்!.

இனியவள்
03-08-2007, 07:03 PM
உதவ வேண்டிய துடிப்பான
இளைஞர்கள் வேடிக்கை பார்க்க
துடிப்புக்கள் உடலை விட்டுச் சென்றாலும்
உள்ளத்தை விட்டுச் செல்லாதா மூதாட்டி
உதவி நீங்கள் எல்லாம் இந்த பூலோகத்தில்
வாழ அருகதையற்ற ஜென்மங்கள் என
மெளனத்தில் உணர்த்தி விட்டுச்செல்லகின்றாரோ....


வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா

சிவா.ஜி
04-08-2007, 04:37 AM
அனுபவித்தவர்களுக்குத்தான் வலியும் வேதனையும் உணரமுடியும்.அந்த மூதாட்டி சொல்லாமல் சொல்லி கூட்டத்துக்கு கொடுத்த சாட்டையடி அபாரம். கவிதை வரிகளுக்கும்,கருவுக்கும் பாராட்டுக்கள் ஆரென்.

ஆதவா
04-08-2007, 11:38 AM
தலைப்பே சொல்லுகிறது பல அர்த்தங்கள்.. இன்னும் உள்ளார்கள் என்பதைவிட இவர்கள் இனி திருந்தப்ப்போவதில்லை என்பதுதான் நிசம். கவிதை மிக எளிமை. வாழ்த்துக்கள் அண்ணா.

விகடன்
04-08-2007, 11:43 AM
வெக்கத்தை விட்டுச் சொல்கிறேன். நானும் அந்த விடுப்புப்பார்க்கும் கூட்டத்தில் ஒருவனாகத் தானிருந்திருப்பேன்.


சொல்லாமலே ஆயிரம் விடயங்கலைச் சொல்லும் அந்த மூதாடீயின் பார்வையினை சொல்லிய விதம் அருமை அரேன்.

aren
04-08-2007, 01:13 PM
நம்மில் எத்தனை பேர் இதேபோல்...நான் கடந்து வந்த சம்பவங்களே எத்தனை...என்ன காரணம் சொன்னாலும் நியாயப்படுத்த முடியாது. மூதாட்டிக்கு தெரிந்திருக்கிறது முதுமையின் "வலி"மை...பாராட்டுக்கள் அண்ணா. நல்ல கரு.

வரிகள் பல இடங்களில் மின்னுகின்றன. உதாரணம் இவ்வரிகள்.



பல இடங்களில் நாம் ஒலிக்கும் வார்த்தைகளை விட ஒளிக்கும் வார்த்தைகள் ஆழமானது. அடிவரை ஊடுருவிச் செல்லக்கூடியது. அதை உணர்த்தும் இவ்வரிகளும் ஆழமானவை.


குளோரின் தண்ணியும்
ஃபேர் அன்ட் லவ்லியும்
புறத்தை பளபளக்க..
அகத்தில் மட்டும்
எத்தனை அழுக்கு....

உதட்டின் ஈரத்தை
நிலைநிறுத்த சாயம்.
மனதை ஈரமாக்குவது
அவர்களுக்கு கசாயம்
என்னே ஒரு
வேடிக்கை விநோதம்.

புறகண்ணை மூடிய
குளிர் கண்ணாடிகள்
அகக்கண்ணையும் மூடியதா
நவநாகரிக உலகில்.....!

நன்றி அமரன் அவர்களே. உங்கள் கவிதை வரிகள் என்னுடைய திரியில் இணையும்பொழுது என் திரியே பளபளக்கிறது. உங்களுக்கு நன்றிகள் பல.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-08-2007, 01:14 PM
நம் வாழ்க்கையில் பல இடங்களில் சந்திக்கும் அன்றாட நிகழ்வொன்று......

நம் நடத்தைகளுக்கு நாமே பல்வேறு வியாக்யானங்கள் விடைகள் வைத்திருந்தாலும், அந்த மூதாட்டி போன்றோரின் முன்னே வெட்கித் தலை குனிந்தேயாகவேன்டும் எம் இவ்வாறான செயற்பாடுகளுக்காக..........

அருமையான ஒரு கருவைத்தாங்கிய அழகான வரிகள் அருமை அண்ணா!

அழகான கவிக்கு அழகான பின்னூட்டமிட்ட அமருக்கும் பாராட்டுக்கள்!.


நன்றி ஓவியன் அவர்களே. உங்கள் வார்த்தைகள் என்னை இன்னும் எழுதவேண்டும் என்று சொல்கின்றன. ஆனால் பாவம் நீங்களெல்லாம் படித்தே தீரவேண்டும் என்பது உங்கள் விதி போலிருக்கிறது.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-08-2007, 01:17 PM
உதவ வேண்டிய துடிப்பான
இளைஞர்கள் வேடிக்கை பார்க்க
துடிப்புக்கள் உடலை விட்டுச் சென்றாலும்
உள்ளத்தை விட்டுச் செல்லாதா மூதாட்டி
உதவி நீங்கள் எல்லாம் இந்த பூலோகத்தில்
வாழ அருகதையற்ற ஜென்மங்கள் என
மெளனத்தில் உணர்த்தி விட்டுச்செல்லகின்றாரோ....


வாழ்த்துக்கள் ஆரென் அண்ணா

நன்றி இனியவள் அவர்களே. இந்த மாதிரி ஜென்மங்கள் இன்னும் நம் உலகில் இருக்கின்றன என்பதே உண்மை.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-08-2007, 01:18 PM
அனுபவித்தவர்களுக்குத்தான் வலியும் வேதனையும் உணரமுடியும்.அந்த மூதாட்டி சொல்லாமல் சொல்லி கூட்டத்துக்கு கொடுத்த சாட்டையடி அபாரம். கவிதை வரிகளுக்கும்,கருவுக்கும் பாராட்டுக்கள் ஆரென்.

நன்றி சிவா.ஜி அவர்களே.

ஏதோ எனக்குத் தெரிந்ததை எழுதினேன். கரு நன்றாக இருப்பதால் கவிதை மாதிரி உங்கள் கண்களுக்குத் தெரிகிறதோ என்னவோ. உங்கள் மாதிரியானவர்கள் கையில் இந்த கருவைக் கொடுத்திருந்தால் மாணிக்கமாக கவிதை மின்னியிருக்கும் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-08-2007, 01:20 PM
தலைப்பே சொல்லுகிறது பல அர்த்தங்கள்.. இன்னும் உள்ளார்கள் என்பதைவிட இவர்கள் இனி திருந்தப்ப்போவதில்லை என்பதுதான் நிசம். கவிதை மிக எளிமை. வாழ்த்துக்கள் அண்ணா.


நன்றி ஆதவன் அவர்களே. ஏதோ நீங்களெல்லாம் சொல்லிக்கொடுப்பதால் ஏதோ நான் கொஞ்சம் எழுத முயற்சிக்கிறேன். அவ்வளவே.

நன்றி வணக்கம்
ஆரென்

aren
04-08-2007, 01:22 PM
வெக்கத்தை விட்டுச் சொல்கிறேன். நானும் அந்த விடுப்புப்பார்க்கும் கூட்டத்தில் ஒருவனாகத் தானிருந்திருப்பேன்.


சொல்லாமலே ஆயிரம் விடயங்கலைச் சொல்லும் அந்த மூதாடீயின் பார்வையினை சொல்லிய விதம் அருமை அரேன்.

நன்றி விராடன் அவர்களே.

நீங்கள் மட்டும் அங்கே பார்த்துக்கொண்டிருப்பீர்கள் என்று இல்லை. நானும் அங்கே பார்த்துக்கொண்டுதான் இருந்திருப்பேன் என்று நினைக்கிறேன்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆதவா
05-08-2007, 08:14 AM
நன்றி ஆதவன் அவர்களே. ஏதோ நீங்களெல்லாம் சொல்லிக்கொடுப்பதால் ஏதோ நான் கொஞ்சம் எழுத முயற்சிக்கிறேன். அவ்வளவே.

நன்றி வணக்கம்
ஆரென்

புனைவதில் மெய்யும்
சொல்வதில் பொய்யும்
நினைவுகளை நைய்யும்
புலவர் பெருமக்களே!
உங்களோடு ஒருவர்
ஓராயிரங்கவிகளோடு...

namsec
05-08-2007, 08:23 AM
இளவயது பெண் விழுந்தால்
உதவிக்கு குறைவில்லை

இளவயது ஆண் விழுந்தால்
அவன் குடித்துவிட்டு
விழுகிறான் என்று ஏசுவார்கள்
ஆனால் உதவிடார்

கருனையில்லா உலகமிது கண்டுகொள்............

ஷீ-நிசி
06-08-2007, 02:50 PM
சமூகத்தில் இதுபோன்று சோகங்கள் நிறையவே!

போகிற பாதையில் அடிபட்டு கிடப்பவனை கண்டும் காணாமல் போகும் கூட்டத்தில் நானும் ஒருவன் தான்..

மனதின் மூலையில் உதவி செய்யலாமே என்று பளீரென்று மின்னல் வெட்டினாலும், போகவேண்டிய காரியம் பொளேரென்று மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைத்து, மின்னலென கடக்கவைக்கிறது என்னையும்...

வாழ்த்துக்கள் ஆரென்!

அக்னி
06-08-2007, 05:58 PM
தடக்கிய தடிகள்...
மீண்டும் ஊன்ற வந்து,
ஊக்குவிக்க...
தள்ளாடிய முதுமைக்கு,
இன்னொரு முதுமை,
கைகொடுக்க...
வேடிக்கை பார்க்கும்
தலைகொண்ட முண்டங்கள்...
கட்டப்பட்ட மனங்களோடு
என்றும்,
நடப்பட்ட கம்பங்களாய்...

எளிமையான கவியில், மூதாட்டியின் சுழன்ற பார்வையில் சுழன்றதோ, சாட்டையும் பலமாக...
பாராட்டுக்கள்...

aren
06-08-2007, 08:40 PM
புனைவதில் மெய்யும்
சொல்வதில் பொய்யும்
நினைவுகளை நைய்யும்
புலவர் பெருமக்களே!
உங்களோடு ஒருவர்
ஓராயிரங்கவிகளோடு...

ஏன் ஆதவன் இப்படி பயமுறுத்துறீங்க. ஓடுறாங்க பாருங்க, நம் மக்கள் அனைவரும்.

aren
06-08-2007, 08:41 PM
இளவயது பெண் விழுந்தால்
உதவிக்கு குறைவில்லை

இளவயது ஆண் விழுந்தால்
அவன் குடித்துவிட்டு
விழுகிறான் என்று ஏசுவார்கள்
ஆனால் உதவிடார்

கருனையில்லா உலகமிது கண்டுகொள்............


நீங்கள் சொல்வது நிதர்சனமான உண்மை. இந்த உலகத்தில்தான் நாமும் தினமும் தலை நிமிர்ந்து வாழ்த்துகொண்டிருக்கிறோம் எதற்கென்று புரியாமல்.

aren
06-08-2007, 08:43 PM
சமூகத்தில் இதுபோன்று சோகங்கள் நிறையவே!

போகிற பாதையில் அடிபட்டு கிடப்பவனை கண்டும் காணாமல் போகும் கூட்டத்தில் நானும் ஒருவன் தான்..

மனதின் மூலையில் உதவி செய்யலாமே என்று பளீரென்று மின்னல் வெட்டினாலும், போகவேண்டிய காரியம் பொளேரென்று மனிதாபிமானத்தை குழி தோண்டி புதைத்து, மின்னலென கடக்கவைக்கிறது என்னையும்...

வாழ்த்துக்கள் ஆரென்!

நன்றி ஷீ. இதை ஒப்புக்கொள்கிறீர்களே அதற்காகவே என்னுடைய பாராட்டுக்கள். நானும் அதைத்தான் செய்திருப்பேன் என்று நினைக்கிறேன். நாமும் இந்த நாகரீக உலகத்தில்தானே இருக்கிறோம்.

aren
06-08-2007, 08:44 PM
தடக்கிய தடிகள்...
மீண்டும் ஊன்ற வந்து,
ஊக்குவிக்க...
தள்ளாடிய முதுமைக்கு,
இன்னொரு முதுமை,
கைகொடுக்க...
வேடிக்கை பார்க்கும்
தலைகொண்ட முண்டங்கள்...
கட்டப்பட்ட மனங்களோடு
என்றும்,
நடப்பட்ட கம்பங்களாய்...

எளிமையான கவியில், மூதாட்ட்யின் சுழன்ற பார்வையில் சுழன்றதோ, சாட்டையும் பலமாக...
பாராட்டுக்கள்...

உங்களுடைய அழகான பின்னூட்டம் இதற்கு மெருகு சேர்க்கிறது. என்னுடைய நன்றிகள்.

இலக்கியன்
07-08-2007, 08:12 AM
நியமானவரிகள் வாழ்த்துக்கள்