PDA

View Full Version : இனி அவன் இரைப்பறவைЕ.!



роЕрооро░ройрпН
03-08-2007, 08:28 AM
குழிகள் நிரப்பிய வீதிக்கரையில்
பழக்கமான பல முகங்கள்
வழிமீதிருந்த அவர்தம் விழிகளில்
வாரும் பேருந்தின் சோகங்கள்.

இளமையில் முதுமையான
வெண்ணிறச் சிட்டுக்கள்
அவர்களைத் தொடரும்
கனவுநிறை சொற்கட்டுக்கள்.

மூன்று சக்கரத்துடன்
பறக்கும் ரயில்கள்
அதன் பின்னிருக்கையில்
அலுவலக மயில்கள்.

மொட்டுக்கள் விரித்த-கல்லூரி
மலர்களின் ரம்மியங்கள்
அதைப் பருகிச் சிலாகிக்கும்
தெருவோர ரோமியோக்கள்.

இவை
பட்டணக் கூட்டுப்புழு நான்
தினம் காணும் காட்சிகள்
இன்று
எல்லாம் இருந்தும்
என்னமோ ஒரு வரட்சி.

சிட்டாய்ப் பறந்த எண்ணக்குதிரை
சடுதியாய் நின்றது
எதிரே இருந்த குப்பைத்தொட்டி
கண்களுக்குத் தெரிந்தது.

தோலே சட்டையாக
சிரசெல்லாம் சடையாக
தொட்டிலுக்குள் உயிர் தேடும்
தொட்டில் குழந்தை எங்கே?

தெருநாய்க்கு பிஸ்கட் போட்ட
பால்மண வள்ளலுக்கு-தினம்
விரட்டியடிக்கும் அவனைத் தெரியவில்லை.

நடைபாதை மன்னர்களுக்கு
செங்கம்பளம் விரிக்கும்
செம்மாரி வள்ளலுக்கும்-அவன்
போன இடம் தெரியவில்லை.

கையேந்திக் கிட்டவருமவனை
தட்டிக் கழித்து திட்டுக்கொடுக்கும்
வெள்ளை மாந்தர்களுக்கும்-அவன்
கொள்ளைபோனது தெரியவில்லை.

பூ சுமக்கும் கூடையும்
வாசமில்லா கொண்டையுமாய்
பூமன பூங்குயில் கூவியது

திருட்டுப் பட்டம் கட்டி
காவல்(ள்) பிடித்துசென்றது..!

இடப்பக்க வலப்பக்கம் சொன்னது
இனி அவன் சிறைப்பறவைЕ!

இடபக்க இடப்பக்கம் சொன்னது
இனி அவன் இரைப்பறவைЕ.!

роЗро▓роХрпНроХро┐ропройрпН
03-08-2007, 08:33 AM
மொட்டுக்கள் விரித்த-கல்லூரி
மலர்களின் ரம்மியங்கள்
அதைப் பருகிச் சிலாகிக்கும்
தெருவோர ரோமியோக்கள்.

உங்களுக்கும் அனுபவம் உண்டோ இதேபோல

அழகான சொற்பிரயோகம் வாழ்த்துக்கள்

роЕрооро░ройрпН
03-08-2007, 08:37 AM
அனுபவங்களும் கற்பனையும் கலந்ததுதானே கவிதை. நன்றி இலக்கியன்.

роУро╡ро┐ропройрпН
03-08-2007, 08:47 AM
தொட்டில் குழந்தையா, தொட்டி குழந்தையா அமர்?

தொட்டில் என்றால் குழந்தைகளைத் தாலாட்டுமிடம், தொட்டியென்றால் குப்பைத் தொட்டி..........!
கொஞ்சம் விளங்குகிறது, ஆனால் சரிவரக் கருவைப் பிடிக்க முயலவில்லை.

மீண்டும் ஒருமுறை முயற்சிக்கிறேன் அமர் − மன்னிக்க.....

lolluvathiyar
03-08-2007, 02:49 PM
அமர் எனக்கு தர்மம் செய்யும் குணம் இல்லை. அது மட்டுமல்ல தர்மம் செய்வது பிடிக்காது. உங்கள் கவிதையின் கருவில் நான் (என் குணத்தால்) முரன் படுகிறென். ஆனால் வரிகளை கையாண்ட உங்கள் திறமையை பாராட்டாமல் இருக்க முடியாது

роЕрооро░ройрпН
03-08-2007, 04:27 PM
நான் தர்மம்பண்ணுமாறு சொல்லவில்லை வாத்தியாரே...! திட்டாமல் குட்டலாம் அல்லது தட்டலாம் என்பதையே சொன்னேன். தவிர கவிசட்டையின் ஒரு சின்ன நூல்தான் அந்த வரிகள். அதனால் அதை பெரிதாக சொல்லவில்லை. நன்றி.

ஓவியன் தொட்டில் குழந்தை என்று எங்கோ படித்திருக்கின்றேன். நண்பர்கள் சொன்னால்தான் தெரியும். உங்கள் பின்னூட்டத்திற்காக காத்திருக்கின்றேன்.

роЗройро┐ропро╡ро│рпН
03-08-2007, 06:31 PM
வாவ் அமர் அருமை....

தினமும் கண்டு பழகிய முகம்
காணாவிடில் தேடுவது மனித
இயல்பு....

அன்னத்திற்காய் அலைந்தவன்
இன்று அரசாங்க விருந்தாளி
சிறைக் கூடத்தில்

அருமை அமர் வாழ்த்துக்கள்

роЕрооро░ройрпН
03-08-2007, 09:33 PM
நன்றி இனியவள். அவனுக்கு மட்டுமா இரைகிடைத்தது....!?

aren
04-08-2007, 01:53 AM
ஒரே வார்த்தையில் சொல்லவேண்டுமானால் "அருமை".

அழகான கவிதை வரிகள், வார்த்தைகள் எப்படித்தான் உங்களுக்க்கெல்லாம் இப்படி வந்து விழுகின்றதோ தெரியவில்லை.
எனக்கெல்லாம் யோசித்து யோசித்து மண்டையே காய்ந்துவிடும் போலிருக்கிறது.

பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

роЪро┐ро╡ро╛.роЬро┐
04-08-2007, 04:27 AM
தோலே சட்டையாக
சிரசெல்லாம் சடையாக
தொட்டிலுக்குள் உயிர் தேடும்
தொட்டில் குழந்தை எங்கே?
என்ன சொல்ல வருகிறீர்கள் அமரன். நேற்று தொட்டியையே தொட்டிலாய் கொண்ட அந்த தெருவளர்ந்த மனிதன் இன்று இங்கு இல்லையே என்றா?
திருட்டுப் பட்டம் கட்டி
காவல்(ள்) பிடித்துசென்றது..!
ஓர் எழுத்து கூட்டலில் காவலரின் குணம் காட்டிய பாங்கு அசத்துகிறது அமரன்.குலைக்கும் அவர்கள் அந்த இனம்தான்.
கடைசி வரிகளில் அவன் இதுநாள்வரை உணவுக்காக அலைந்தது இனி தேவையில்லை என்பதையும் சிறைச்சாலை இனி அவனுக்கு இரையிடும்சாலை என்பதையும் அழகாக வரிகளால் வடித்திருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள் அமரன்.

ро╡ро┐роХроЯройрпН
04-08-2007, 05:08 AM
ரம்மியமான பொழுதில் காணும் ஒவ்வொரு காட்சியையும் விவரித்துதொட்டிக்குள் உயிர் தேடும் என்று ஒரு பதத்தையும் வைத்து எழுதினீர்களே கவிதை. என்ன வென்று வர்ணிப்பது. எனக்குத் தெரிந்தவரையில்,
அருமையான கற்பனையும் கவி வடிவமும் என்றுதான் சொல்ல இயலும்.


தொடர்ச்சியாக தேவையற்ற தமது செழிப்பை மற்றவர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு செலவு செய்யும் மாந்தர்கள் மீதான பழிப்பு அனைத்து நன்றே.

பாராட்டுக்கள்

роЕрооро░ройрпН
04-08-2007, 09:24 AM
நன்றி ஆரென் அண்ணா. தொடர்ந்து எழுத அதுவாகவே வந்துவிடும். உங்களுக்கும் வருங்காலத்தில் அமையும் அண்ணா.
----------------------------------------------------------−−−−


தொடர்ச்சியாக தேவையற்ற தமது செழிப்பை மற்றவர்களுக்கு காண்பிக்கும் பொருட்டு செலவு செய்யும் மாந்தர்கள் மீதான பழிப்பு அனைத்து நன்றே.

ஆகா விராடன். சில வரிகளை என்ன நினைத்து எழுதினேனோ அதை அப்படியே பிடித்துக்கொண்டு விட்டீர்கள். நன்றி.

роЕрооро░ройрпН
04-08-2007, 09:32 AM
ஒரு அநாதைச் சிறுவன் (தொட்டில் குழந்தை திட்டம்) நான் இருந்த குப்பைத் தொட்டிக்குள்(அதுதான் அவனுக்கு தாலாட்டு தொட்டில்) தினமும் என்னமோ தேடுகிறான். உயிர்வாழ உணவு தேடுகிறானா? அல்லது தன் உயிருறவை தேடுகிறனா? பல காட்சிகளில் என்னுள் எழுந்த கேள்வி. அதை மனதில் வைத்து வந்த வரிகள் அவை...

உணவு தேடுகிறதா
உறவைத்தேடுகிறதா
குப்பையை கிளரும் குழந்தை.

சிறைச்சாலை அவனுக்கு இரையிடும் சாலை மட்டுமல்ல..அவன் பலருக்கு இரையாகப் போகும் சாலையும்கூட...நன்றி சிவா ஆழ்ந்து படித்துள்ளீர்கள்.