PDA

View Full Version : ஆடிப்பெருக்கு!



சிவா.ஜி
03-08-2007, 04:51 AM
அதிசயமாய்
அவ்வப்போது
காவிரியில் வெள்ளம் வரும்!
இந்த ஆடியில்,ஓடி வரும்
அன்னையின் மடியில்
கூடிக் குதூகலிப்போம்!
ஆடிப்பட்டம் தேடி விதைக்க
தண்ணீர் தந்து,உழவரின்
கண்ணீர் போக்கும்
காவிரித்தாயை
கைகுவித்து வணங்குவோம்!
ஆடிப்பெருக்கு−உள்ளத்தில்
ஆனந்தப்பெருக்கு!

ஷீ-நிசி
03-08-2007, 05:23 AM
ஆடிப்பெருக்கு.... ஆனந்தம் அறியமுடிகிறது உங்கள் கவிதையில்... வாழ்த்துக்கள் சிவா....

சிவா.ஜி
03-08-2007, 05:27 AM
நன்றி ஷீ−நிசி.

அமரன்
03-08-2007, 09:08 AM
ஆடி....தமிழர்களின் முக்கியமான மாதங்களில் ஒன்று. ஆடியில் நெல் விதைப்பு ஆரம்பமாகும். தையில் நெல்லுமணிகள் வீட்டை நிறைக்கும். அம்மாதத்தில் தைப்பொங்கல். நெல் அறுவடை முடிந்ததும் தானிய விதைப்பு. அவை ஆடிமாதத்தில் அறுவடை. ஆடி முதாலாந்தேதி தானியங்களாலான கூழ் என்னும் சாப்பாடு செய்து கொண்டாடுவர்கள். இது ஈழத்து பழக்கம். தமிழர்களுக்கே ஆடியும், தையும் பண்டிகை மாதங்கள்தான் போலும்.

சிவா...உங்கள் வரிகளில் உங்கள் ஆனந்தம் புரிகிறது. வழக்கம்போலவே வார்த்தைகளில் விளையாடிவிட்டீர்கள். பாராட்டுக்கள்.

இலக்கியன்
03-08-2007, 09:27 AM
ஆடிப்பெருக்கு ஆனந்தமானவரிகள் தொடரட்டும்

pradeepkt
03-08-2007, 10:22 AM
அப்படியே காவிரியாத்து நினைவுகள் அலை மோதுதுங்க...
நன்றி...

mythili
03-08-2007, 11:33 AM
ஆடிபெருக்கு கவிதை எனக்கும் புரியும்படி எளிமையாக நன்றாக இருந்தது.

அன்புடன்,
மைத்து

இனியவள்
03-08-2007, 07:30 PM
வாழ்த்துக்கல் சிவா

ஆடிப்பெருக்கால் விளைந்த*
கவி ஆனதப் பெருக்கை
விளைத்துச் செல்கின்றது
படிப்போர் மனதினில்

அன்புரசிகன்
03-08-2007, 07:36 PM
கைகுவித்து வணங்குவோம்!
ஆடிப்பெருக்கு−உள்ளத்தில்
ஆனந்தப்பெருக்கு!

பிறந்திடவேண்டும் ஆனந்தம்
வாழ்வினில் அனைவருக்கும்

வாழ்த்துக்கள் பராசக்தி ஹீரோவுக்கு...

சிவா.ஜி
04-08-2007, 04:10 AM
அமரன்,இலக்கியன்,ப்ரதீப்,மைதிலி(எவ்ளோ சீனியர் நீங்கள்லாம்),இனியவள் மற்றும் அன்பு அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளுடன் ஆடி வாழ்த்துக்கள்.

ஓவியன்
04-08-2007, 04:21 AM
கவிஞர் தேசிகவினாயகம் பிள்ளையின் கவி வரிகள் ஞாபகம் வருகிறது சிவா.ஜி!

ஆடிப் பிறப்புக்கு
நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம்
தோழர்களே...............!

கூடிப் பனக்கட்டி
கூழும் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம்
தோழர்களே................!

வரிகள் அத்தைனையும் அழகு பாராட்டுக்கள் சிவா..........!

சிவா.ஜி
04-08-2007, 04:34 AM
ஆஹா அழகான கவி தேசியவினாயகம் பிள்ளை அவர்களின் கவிதை வரிகளை இங்கு காணக்கொடுத்ததற்கு மிக்க நன்றி ஓவியன்.

விகடன்
04-08-2007, 05:22 AM
எதிர்பார்ப்புக்களுடன் ஏரோடிகள்.

அழகான த்துவக் கவிதை. பாராட்டுக்கள் சிவா.

சிவா.ஜி
04-08-2007, 05:25 AM
மிக்க நன்றி விராடன் பாராட்டுக்களுக்கு.

M.Jagadeesan
21-01-2013, 10:48 AM
ஆடிப்பெருக்கின் ஆனந்தமெல்லாம்
கன்னடத்தானின் கையிலிருக்கு !