PDA

View Full Version : சிட்டி செண்டரில் ஓவியன்.........................!ஓவியன்
03-08-2007, 02:15 AM
சிட்டி செண்டரில் ஓவியன்.........!.

இன்று வியாழக் கிழமை அலுவலகத்தில் கொஞ்ச நாளாகவே அதிகரித்திருந்த அலுவலகப் பணிகளிடை இரண்டு நாளாவது சந்தோசமாக நித்திரை கொள்ளலாமே என்ற நம்பிக்கையுடன் எனது தங்ககத்தை நாடி வந்து கொண்டிருந்தேன். அப்போது எனது நண்பர் ஒருவர் கேட்டார் டேய் இண்டைக்கு சிட்டி செண்டருக்குப் போவமே எண்டு.........?:nature-smiley-003:

துபாயிலுள்ள உறவுகளுக்கு துபாயின் தெஹிரா மற்றும் சார்ஜா சிட்டி செண்டர்களைத் தெரியாமல் இருந்திருக்காது அவ்வாறான ஒரு கடைத்தொகுதி இங்கு ஓமானிலும் உண்டு. இருந்தாலும் எங்கள் தங்ககத்திலிருந்து வெகுதொலைவிலே இருந்தமையால் நாம் இது வரை அங்கே விஜயம் செய்யவில்லை. எல்லோரும் நாளைக்குப் போவோம், நாளை மறுநாள் போவோமென நாட்களைக் கடத்திக் கொண்டிருந்தோம். இன்று என்னவோ தலை போனாலும் பரவாயில்லை போயே ஆவதென முடிவெடுத்துவிட்டோம்.

உடனே வீட்டிலிருந்து நண்பர்கள் ஐவர் புறப்பட்டு ஒரு மினி வேனை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு (நம்மிடம் தானே சொந்த வாகனங்கள் இல்லையே...!:D ). சிட்டிசெண்டரை அடைந்தே விட்டோம். போய் அங்கு இறங்கியதும் இது தானா சிட்டி செண்டர் என்று சந்தேகமாக இருந்தது. அங்கே மும்மூரமாக ஒரு கட்டிட வேலை நடந்து கொண்டிருந்தது. பிறகு ஒருவாறாக சிட்டி செண்டர் விஸ்தீரிக்கப் படுவதாகவும், மற்றைய பக்கத்தில் பழைய சிட்டி செண்டர் பகுதிக்கு போகலாம் என்று அறிந்து அங்கே ஒரு வாறாக நுளைந்தும் விட்டோம்.

நானும் ஆதவனைப் போலவே மிக நல்ல பையன்:D என்பதால் என் கண்கள் அங்கே கடைகளில் வியாபாரத்துக்காகவே அழகழகாக அடிக்கி வைத்திருந்த பொருட்களைத் தவிர வியாபாரத்திற்காக நின்றவர்களையோ இல்லை அங்கே வந்து அன்ன நடை பயிலும் அழகிகளையோ பார்க்கவேயில்லை. (அட நம்புறாங்க இல்லையே.....!:D ). துபாயில் இருந்து ஓமானுக்கு வந்த பின்னர் கிட்டத் தட்ட துபாயில் இருப்பது போன்ற(அட எல்லா விடயத்திலும் தாங்க...!:grin: ) ஒரு கடைத்தொகுதியைப் பார்த்த திருப்தி மனமெங்கும்.......:icon_wink1:

ஒரு வாறாக சுற்றிப் பார்த்தலை முடித்த பின்னர் நம் நண்பர்கள் மொத்தமாக வாங்கியது இரண்டு டீசேர்ட்டுகளும் ஒரு ஜீன்ஷூமுமே என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நேரத்தைப் பார்த்தால் இரவு ஒன்பதரை ஆகிவிட்டிருந்தது. பசி வேற வயிற்றைக் கிள்ளவே எங்காவது சாப்பிடலாமா என்று பார்த்தோம், அப்போது சிட்டிசெண்டரின் துரித உணவுக் கடைகள் கண்ணில் படவே அங்கே சென்றோம். அங்கே பல்வேறு துரித உணவுக் கடைகள் ஒரே இடத்தில் அணிவகுத்திருக்க, சாப்பிடுவோமென முடிவெடுத்தோம்.(வீட்டிலே நாங்களாகவே சமைத்துச் சாப்பிட்டுச் சாப்பிட்டு நாக்கு செத்து, இன்றாவது நல்லதாகச் சாப்பிடுவோமே என்ற நப்பாசை வேற......:nature-smiley-003: ). ஆனால் அந்தோ பரிதாபம் வியாழக் கிழமை என்பதாலோ என்னவோ உணவுகளை வாங்கி வந்து இருந்து சாப்பிடும் அந்தப் பகுதியில் ஒரு மேசையாவது வெறுமையாக இருக்கவில்லை. முதலில் ஒரு மேசையை பிடித்து இருந்து கொண்டு பின்னர் உணவுகளை வாங்குவோமெனத் திட்டம் வேறு.

அதன் படி ஒரு மேசை இருப்பதை அதி புத்திசாலியான அடியேன் கண்டு பிடித்து மற்றவர்களுக்குச் சொல்ல, எல்லோரும் அங்கு சென்று அந்த மேசையைக் கையகப் படுத்திக் கொண்டு இருவரை அவ்விடத்திலே இருக்க வைத்துவிட்டுத் தேடித் தேடி ஒவ்வொருவரும் அவரவருக்குப் பிடித்த உணவு வகைகளைத் தேடி வாங்கினோம். வியாழக் கிழமைகளில் அடியேன் மாமிசம் உண்ணுவதில்லையென்பதனால் எங்கே தேடி சைவ உணவு வாங்கி வந்தேன். நான் நாம் கையகப் படுத்திய மேசையின் அருகே வந்தபோது நண்பர்கள் சாப்பிட ஆரம்பித்திருந்தார்கள். நானும் அவர்களுடன் இணைந்து சாப்பிட ஆரம்பித்தேன் ஆனால் சாப்பாட்டில் மனம் போக பக்கத்து மேசைகளிலிருந்த இருந்த பிரமன் செய்த பிழைகள் அனுமதிக்கவில்லை(சாப்பிடவே இல்லைங்க......). அப்போது நண்பன் ஒருத்தன் சொன்னான் டேய் இது நல்லா இருக்கில்லே, அடிக்கடி வருவோமென்று.......!

அப்போது என் முதுகை யாரோ தட்டிய மாதிரி ஒரு உணர்வு........
இங்கே யார் என்னைத் தட்டப் போகிறார்களென பக்கத்து மேசைக்கு மீண்டும் கண்ணை அலை பாய விட மீண்டும் தட்டல்.........!
இதென்னடா வம்பா இருக்கு என்று திரும்பிப் பார்த்தேன், காவலாளிக்குரிய சீருடையுடன் ஒருவர் சிரித்துக் கொண்டு நின்றார், நானும் சிரித்தேன். அப்போது அவர் ஆங்கிலத்தில் உரையாடத் தொடங்கினார்.
வந்தவர் : ஹாய் எப்படி இருக்கீங்க
நான் : ஓ நல்லா இருக்கம், நீங்கள்?:D
வந்தவர் : நான் நலம், இங்கே உங்களுக்கு எல்லாம் வசதியாக இருக்கிறதா?
நான் : அட இவ்வளவு நல்லவங்களா இருக்காங்களே என்று மனதில் நினைத்துக் கொண்டு, ஆம் எல்லாம் நன்றாகவே உள்ளது நன்றிங்க என்றேன்.
வந்தவர் : ஓ நல்லது அப்படியே கொஞ்சம் மேலே பார்க்கலாமே? என்றார்.!

நிமிர்ந்து பார்த்த நான் அதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்து போனேன், இது குடும்பத்துடன் வருவோருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டிருக்கும் பகுதி என்ற வாசகத்தைப் பார்த்து.........!. பாத்தீங்களா தயவு செய்து இந்த இடத்தைவிட்டு எழுந்து வேறு இடம் சென்றால் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது என்று அவர் சொல்ல, நானும் இன்னொரு நண்பனும் எழுந்து சென்று வேறு எங்கேயாவது வெறுமையான இருக்கைகள் இருக்கிறதா என்று தேடினோம். எங்கள் கெட்ட காலத்தின் பயன் எங்களுக்கு அதிஸ்டமளிக்காமற் போக, நாம் அங்கேயே விட்டு வந்த மற்ற மூன்று நண்பர்களிடம் இன்னொரு காவலாளி போய் முன்பு பேசியவரிலும் கடுமையாகப் பேச அவர்கள் சாப்பிட்ட குறையுடன் வேறு இடமும் கிடைக்காமல் வாங்கிய உணவுகளை ஒரு ஏக்க பெருமூச்சுடன் பார்த்துவிட்டு எங்களை நோக்கி வந்தனர். வேறு என்ன செய்வது கைக்கு எட்டியது வாய்க்கு எட்டவில்லையே என்ற ஏக்கத்துடன் மீள ஒரு வாகனத்தைப் பிடித்து வீடு வந்தோம். பசியோ வயிற்றைக் கிள்ள சமைத்துச் சாப்பிட மனதிலும் உடலிலும் வலுவில்லாததால் எப்பதோ வாங்கி வைத்த நூடில்சை சுடுதண்ணீரில் போட்டுச் சாப்பிட்டு விட்டு இங்கே மன்றத்தில் வந்து பதிப்புக்களைப் பதித்துக் கொண்டிருக்கிறேன், என் முதல் முறை சிட்டி செண்டர் நோக்கிய பயணம் இப்படியா முடிய வேண்டுமென்ற அங்கலாய்ப்புடன்..........!

பி.கு - இப்போது நான் ஒரு தீர்க்கமான முடுவெடுத்திட்டனுங்க...........................!
அது தான் வெகுவிரைவில் குடும்பஸ்தனாக ஆவதென்று.......................................! :D

மதி
03-08-2007, 03:46 AM
வாழ்த்துக்கள் ஓவியன்...
இப்படிபட்ட அனுபவங்கள்...சில முக்கிய முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறதே...நன்று.

aren
03-08-2007, 04:24 AM
சுவாரசியமாக இருந்தது உங்கள் சிடிசெண்டர் விஜயம்.

ஆனால் ஒரு சின்ன விஷயத்துக்காக கல்யாணம் செய்துகொண்டு குடும்பஸ்தனாக வேண்டுமா? கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள். இப்பொழுது இருக்கும் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும், பரவாயில்லையா? நாய்படும்பாடு படவேண்டும், பரவாயில்லையா? மானம் என்று ஒன்றும் இருக்காது, பரவாயில்லையா? இதற்கெல்லாம் பரவாயில்லை என்று நீங்கள் பதில் சொன்னால், உங்கள் விதியை யாராலும் மாற்றமுடியாது. அப்புறம் உங்கள் இஷ்டம். விதி யாரை விட்டது.

நன்றி வணக்கம்
ஆரென்

ஓவியன்
03-08-2007, 08:15 AM
வாழ்த்துக்கள் ஓவியன்...
இப்படிபட்ட அனுபவங்கள்...சில முக்கிய முடிவுகளை எடுக்கத் தூண்டுகிறதே...நன்று.
ஆமா அது தாங்க*..........!:nature-smiley-008:
ஹீ!,ஹீ!

ந*ன்றிங்க*....!:grin:

ஓவியன்
03-08-2007, 08:17 AM
சுவாரசியமாக இருந்தது உங்கள் சிடிசெண்டர் விஜயம்.
ஆனால் ஒரு சின்ன விஷயத்துக்காக கல்யாணம் செய்துகொண்டு குடும்பஸ்தனாக வேண்டுமா? கொஞ்சம் யோசித்து முடிவெடுங்கள். இப்பொழுது இருக்கும் சுதந்திரம் அனைத்தும் பறிபோகும், பரவாயில்லையா? நாய்படும்பாடு படவேண்டும், பரவாயில்லையா? மானம் என்று ஒன்றும் இருக்காது, பரவாயில்லையா? இதற்கெல்லாம் பரவாயில்லை என்று நீங்கள் பதில் சொன்னால், உங்கள் விதியை யாராலும் மாற்றமுடியாது. அப்புறம் உங்கள் இஷ்டம். விதி யாரை விட்டது.

அனுபவப் பட்ட நீங்க சொல்லும் போது யோசிக்க வேண்டியிருக்கிறதே..........! :grin:

மிக்க நன்றிகள் ஆரென் அண்ணா!.

விகடன்
03-08-2007, 08:30 AM
என் கண்கள் அங்கே கடைகளில் வியாபாரத்துக்காகவே அழகழகாக அடிக்கி வைத்திருந்த பொருட்களைத் தவிர வியாபாரத்திற்காக நின்றவர்களையோ இல்லை அங்கே
வந்து அன்ன நடை பயிலும் அழகிகளையோ பார்க்கவேயில்லை. (அட நம்புறாங்க இல்லையே.....!:D ).
நான் நம்பிட்டேன். நான் நம்புவான். எனக்குத்தானே தெரியும் ஓவியனின் திறமை. எல்லாரும் நம்பிக்கிக்ங்கப்பா. இல்லையென்றால் ஏமேறுவது நீங்கள்தான் நண்பர்களேபிரமன் செய்த பிழைகள் அனுமதிக்கவில்லை(சாப்பிடவே இல்லைங்க......).
உண்மைதான். உமது கண்ணை நல்ல கண்ணாக படைத்ததுதானே சொல்கிறீர்

நிமிர்ந்து பார்த்த நான் அதிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ந்து போனேன், இது குடும்பத்துடன் வருவோருக்கு மட்டும் ஒதுக்கப் பட்டிருக்கும் பகுதி என்ற வாசகத்தைப் பார்த்து.........!.

இபன் பதுதா மோலை மறந்தாச்சோ?இப்போது நான் ஒரு தீர்க்கமான முடுவெடுத்திட்டனுங்க...........................!
அது தான் வெகுவிரைவில் குடுஸ்தனாக ஆவதென்று.......................................! :D [/COLOR]

நல்ல விடயம். திருமண அழைப்பிதழை மறந்திடாமல் அனுப்பிடுங்கோ.

தொலைந்த வர்ணமா அல்லது புது வர்ணமா

ஓவியன்
03-08-2007, 08:38 AM
[COLOR="blue"]இபன் பதுதா மோலை மறந்தாச்சோ?
அதை இன்னுமொரு பதிவாக பதிக்கட்டா, பரவாயில்லையா..........! :D

நல்ல விடயம். திருமண அழைப்பிதழை மறந்திடாமல் அனுப்பிடுங்கோ.
தொலைந்த வர்ணமா அல்லது புது வர்ணமா
வர்ணம் தீட்டிய பின் புதிது பழையது என்று பார்ப்பதில்லையே விராடா!, வர்ணம் வர்ணமாகவே இருந்தால் போதும்...........! :D

சிவா.ஜி
03-08-2007, 08:40 AM
அய்யோ பாவம்....வேறென்ன சொல்ல....அடுத்தமுறை "குடும்பத்தோடு"சிட்டி செண்டர் சென்று நிம்மதியாக(அப்படி ஒன்று அந்த சமயத்திலும் உங்களிடமிருக்க வாழ்த்துக்கள்)உணவு உண்டு வர வாழ்த்துக்கள்.

ஓவியன்
03-08-2007, 08:42 AM
அய்யோ பாவம்....வேறென்ன சொல்ல....அடுத்தமுறை "குடும்பத்தோடு"சிட்டி செண்டர் சென்று நிம்மதியாக(அப்படி ஒன்று அந்த சமயத்திலும் உங்களிடமிருக்க வாழ்த்துக்கள்)உணவு உண்டு வர வாழ்த்துக்கள்.
ஹீ!,ஹீ!
நன்றிங்க − குடும்பஸ்தர் எல்லாம் குடும்பம்னா பயமுறுத்திறீங்களே.......! :ohmy:

விகடன்
03-08-2007, 08:48 AM
இபன் பதுதா மோலை மறந்தாச்சோ?

அதை இன்னுமொரு பதிவாக பதிக்கட்டா, பரவாயில்லையா..........! :Dஆமாம். அதுவும் ஒரு நல்ல விடயந்தான். இன்னொரு திரியிலேயே போட்டுவிடுங்கள். ஓவறாய் வித்துவிடாதேப்பா.

அமரன்
03-08-2007, 10:14 AM
ஆழ்ந்த அனுதாபங்கள் ஓவியன்.

ஷீ-நிசி
03-08-2007, 10:23 AM
ஒருவேளை உணவுக்காக குடும்பஸ்தன் ஆகவேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவுக்காய் நான் வருத்தப்படுகிறேன் :)

பிரம்மன் செய்த பிழையா.. ஹி ஹி... காவலாளிதானே அது!

mythili
03-08-2007, 10:29 AM
அடப்பாவமே உங்கள் நிலைமை இப்படியா ஆக வேண்டும்?
எப்ப*டியோ சிட்டி சென்ட*ரை பார்த்து விட்டீர்க*ள்...

உங்க*ளை போல*த்தான் நானும் சென்னையில் இருக்கும் ஸ்பென்ச*ர் ப்ளாசா போக*னும் என்று ரொம்ப* நாளா யோசித்து யோசித்து...யோசித்த*ப*டி தான் உள்ள*து...சென்னை வ*ன்து 6 மாத*ங்க*ள் ஆகிவிட்ட*து... :(

அன்புடன்,
மைத்து

ஓவியன்
03-08-2007, 10:30 AM
ஆழ்ந்த அனுதாபங்கள் ஓவியன்.
ம்ஹூம்!
ஒருத்தரும் வாழ்த்த மாட்டேங்கிறாங்களே............! :wub:

ஓவியன்
03-08-2007, 10:33 AM
ஒருவேளை உணவுக்காக குடும்பஸ்தன் ஆகவேண்டும் என்று நீங்கள் எடுத்த முடிவுக்காய் நான் வருத்தப்படுகிறேன் :)
மிக்க நன்றிங்க ஷீ!
அனுபவஸ்தர்களின் அறிவுரைகள் என் முடிவை மாற்றிவிடும் போலுள்ளதே.........! :smartass:

பிரம்மன் செய்த பிழையா.. ஹி ஹி... காவலாளிதானே அது!

:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

pradeepkt
03-08-2007, 10:33 AM
ஹா ஹா படித்தேன் சிரித்தேன்..
அந்தக் குடும்ப இடத்தைத் தேர்ந்தெடுத்தவனே நீதானே... இதெல்லாம் கடைசி வரியை நோக்கிக் கதையை நகர்த்தத் தேர்ந்தெடுத்த களம் போலவே தோணுதே... எனக்கு மட்டுந்தான் இப்படித் தோணுதா மக்களே???

ஓவியன்
03-08-2007, 10:36 AM
அடப்பாவமே உங்கள் நிலைமை இப்படியா ஆக வேண்டும்?
எப்படியோ சிட்டி சென்டரை பார்த்து விட்டீர்கள்...

உங்களை போலத்தான் நானும் சென்னையில் இருக்கும் ஸ்பென்சர் ப்ளாசா போகனும் என்று ரொம்ப நாளா யோசித்து யோசித்து...யோசித்த படி தான் உள்ளது...சென்னை வந்து 6 மாதங்கள் ஆகிவிட்டது... :(

என்னங்க செய்யுறது இப்படித்தான் காத்திருந்து நடக்கும் விடயங்கள் பல காலை வாரிவிடுகின்றன..................!

உங்கள் ஸ்பென்சர் ப்ளாசா விஜயம் விரைவில் கை கூட என் வாழ்த்துக்கள்!.

அமரன்
03-08-2007, 10:37 AM
ம்ஹூம்!
ஒருத்தரும் வாழ்த்த மாட்டேங்கிறாங்களே............! :wub:
ச(சா)ரிப்பா...சம்பவத்திற்கு அனுதாபம்.
முடிவுக்கு வாழ்த்துக்கள். (எந்த முடிவென்று கேட்கவேண்டாம்)

ஓவியன்
03-08-2007, 10:37 AM
ஹா ஹா படித்தேன் சிரித்தேன்..
அந்தக் குடும்ப இடத்தைத் தேர்ந்தெடுத்தவனே நீதானே... இதெல்லாம் கடைசி வரியை நோக்கிக் கதையை நகர்த்தத் தேர்ந்தெடுத்த களம் போலவே தோணுதே... எனக்கு மட்டுந்தான் இப்படித் தோணுதா மக்களே???
நன்றிங்க!!!

அதெப்படிங்க உங்களாலே மட்டும் என்னைச் சரியாகப் படிக்க முடியுது? :icon_blush:

ஓவியன்
03-08-2007, 10:45 AM
முடிவுக்கு வாழ்த்துக்கள். (எந்த முடிவென்று கேட்கவேண்டாம்)

:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

போட்டுத் தள்ளிய திருப்தியுடன்
ஓவியன்....!.

mania
03-08-2007, 10:52 AM
வாழ்த்துகள் ஓவியன்.....(முடிவு எதுவாயிருந்தாலும் )!!!!
அன்புடன்
மணியா...

leomohan
03-08-2007, 10:53 AM
ஷாப்பிங்க் செய்வதற்காகவே குடும்பஸ்தனாக வேண்டி வாழ்த்துக்கள.

mythili
03-08-2007, 10:57 AM
ஹா ஹா படித்தேன் சிரித்தேன்..
அந்தக் குடும்ப இடத்தைத் தேர்ந்தெடுத்தவனே நீதானே... இதெல்லாம் கடைசி வரியை நோக்கிக் கதையை நகர்த்தத் தேர்ந்தெடுத்த களம் போலவே தோணுதே... எனக்கு மட்டுந்தான் இப்படித் தோணுதா மக்களே???

எப்படி ப்ரதீப் அண்ணா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது?

அன்புடன்,
மைத்து

ஓவியன்
03-08-2007, 11:05 AM
வாழ்த்துகள் ஓவியன்.....(முடிவு எதுவாயிருந்தாலும் )!!!!
அன்புடன்
மணியா...

நன்றி மணியா அண்ணா!
நீங்கள் மட்டுமே வாழ்த்திய ஒரே ஒரு குடும்பஸ்தர்! :natur008:
மற்றவங்க எல்லாம் பயமுறுத்துறாங்க - ரொம்பவே அனுபவிச்சிருக்காங்க போல..........! :icon_03:

ஓவியன்
03-08-2007, 11:06 AM
ஷாப்பிங்க் செய்வதற்காகவே குடும்பஸ்தனாக வேண்டி வாழ்த்துக்கள.அடடே என்ங்க இப்படி வாழ்த்திட்டீங்க − நன்றிங்க!. :natur008:

ஓவியன்
03-08-2007, 11:07 AM
எப்படி ப்ரதீப் அண்ணா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது?
அதே!, அதே!
நானும் அதைத்தான் கேட்டேன்.........! :natur008:

mania
03-08-2007, 11:13 AM
நன்றி மணியா அண்ணா!
நீங்கள் மட்டுமே வாழ்த்திய ஒரே ஒரு குடும்பஸ்தர்! :natur008:
மற்றவங்க எல்லாம் பயமுறுத்துறாங்க - ரொம்பவே அனுபவிச்சிருக்காங்க போல..........! :icon_03:

ஹா.....ஹா....ஹா.....யாம் பெற்ற இன்பம்.......
அன்புடன்
மணியா....;) ;)

அமரன்
03-08-2007, 11:14 AM
ஹா.....ஹா....ஹா.....யாம் பெற்ற இன்பம்.......
அன்புடன்
மணியா....;) ;)

அதே...அதே....எனக்கு முதல்லயே புரிந்தது...

மதி
03-08-2007, 11:16 AM
நன்றி மணியா அண்ணா!
நீங்கள் மட்டுமே வாழ்த்திய ஒரே ஒரு குடும்பஸ்தர்! :natur008:
மற்றவங்க எல்லாம் பயமுறுத்துறாங்க - ரொம்பவே அனுபவிச்சிருக்காங்க போல..........! :icon_03:
இதென்ன கதை..தலை ம*ட்டுமா..

pradeepkt
03-08-2007, 11:26 AM
ஷாப்பிங்க் செய்வதற்காகவே குடும்பஸ்தனாக வேண்டி வாழ்த்துக்கள.

குடும்பஸ்தன் ஆனப்புறம் ஷாப்பிங் மட்டும்தானே பண்ணியாகணும்... :music-smiley-019:

pradeepkt
03-08-2007, 11:27 AM
எப்படி ப்ரதீப் அண்ணா உங்களுக்கு மட்டும் இப்படி எல்லாம் தோணுது?

அன்புடன்,
மைத்து

யக்கா... எனக்கு மட்டும் இப்படி எல்லாம் "சரியாவே" தோணுதுன்னு கேக்கணும்...

ஆமா, அதென்ன புதுசா அண்ணா − மரியாதை எல்லாம் பலம்மா இருக்கு???

விகடன்
03-08-2007, 11:47 AM
ஹா.....ஹா....ஹா.....யாம் பெற்ற இன்பம்.......
அன்புடன்
மணியா....;) ;)

இதே கொள்கையுடந்தான் பலர் திரிகின்றீர்கள் போல, போற போக்கைப் பார்த்தால் கலியாணத்தால் கவலையுற்றோர் என்ற சங்கம் ஆரம்பித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. :ohmy:

aren
03-08-2007, 12:12 PM
குடும்பஸ்தன் ஆனப்புறம் ஷாப்பிங் மட்டும்தானே பண்ணியாகணும்... :music-smiley-019:

அதான் உங்கள் வீட்டில் இப்பொழுது நடக்குது போலிருக்கே!!!!! வாழ்த்துக்கள். எல்லாம் நல்லா இருந்தா சரிதான்.

pradeepkt
03-08-2007, 01:21 PM
அதான் உங்கள் வீட்டில் இப்பொழுது நடக்குது போலிருக்கே!!!!! வாழ்த்துக்கள். எல்லாம் நல்லா இருந்தா சரிதான்.

வாழ்த்துகளுக்கு நன்றி சொல்றதைத் தவிர வேற என்ன செய்ய.... :icon_cool1:

தங்கவேல்
03-08-2007, 01:44 PM
விதி யாரை விட்டது. ஓவியன் உங்களுக்காக...அய்யோ பாவம். என்னத்தை சொல்லுவது...

ஓவியன்
03-08-2007, 02:20 PM
விதி யாரை விட்டது. ஓவியன் உங்களுக்காக...அய்யோ பாவம். என்னத்தை சொல்லுவது...
நீங்களுமா.............?
குடும்பஸ்தனாகப் போறன் எண்டதுமே இப்படியா?
அப்ப குடும்பஸ்தனாகினா..............?:mad:

ஓவியன்
03-08-2007, 02:21 PM
குடும்பஸ்தன் ஆனப்புறம் ஷாப்பிங் மட்டும்தானே பண்ணியாகணும்... :music-smiley-019:
ஹீ!,ஹீ!
அண்ணாச்சி வீட்ட இப்போ என்ன நடக்குதுனு புரியுது!. :icon_shades:

ஓவியன்
03-08-2007, 02:23 PM
ஹா.....ஹா....ஹா.....யாம் பெற்ற இன்பம்.......
அன்புடன்
மணியா....;) ;)

அட என்ன மணியா அண்ணா!
இப்படிக் கவுத்திட்டீங்களே...................! :frown:

அக்னி
03-08-2007, 02:25 PM
பி.கு - இப்போது நான் ஒரு தீர்க்கமான முடுவெடுத்திட்டனுங்க...........................!
அது தான் வெகுவிரைவில் குடுஸ்தனாக ஆவதென்று.......................................! :D

குடும்பஸ்தனாவது பரவாயில்லை...
ஒரு வேளை உணவை உண்ண விடாததால், குடுஸ்தனாவது முறையோ..???
குடுக்காரன் என்றால் ஈழத்தில் போதைமருந்துக்கு அடிமையானவர்கள் என்று அர்த்தப்படும்...
ஓவியரே...
என்ன விபரீத முடிவு இது..?
இதற்கு எப்படிப் பாராட்டுவது..?

ஓவியன்
03-08-2007, 02:35 PM
ஓவியரே...
என்ன விபரீத முடிவு இது..?
இதற்கு எப்படிப் பாராட்டுவது..?

வந்துட்டுராரு வி.வீ!
நீர் மட்டும் என் கையில் மாட்டினீர்...................!:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:

அன்புரசிகன்
03-08-2007, 02:54 PM
விரைவில் அந்த அறையில் இருந்து பசியாற வாழ்த்துக்கள்....

அமரன்
03-08-2007, 02:55 PM
விரைவில் அந்த அறையில் இருந்து பசியாற வாழ்த்துக்கள்....

வாங்க இது எந்தவகை வாழ்த்து.?

alaguraj
03-08-2007, 03:19 PM
பி.கு - இப்போது நான் ஒரு தீர்க்கமான முடுவெடுத்திட்டனுங்க...........................!
[B]அது தான் வெகுவிரைவில் குடும்பஸ்தனாக ஆவதென்று.......................................

அதெல்லாம் ச*ரிதான், வாழ்த்துக்க*ள்..........

அப்புற*ம் பொண்ணு பாக்கறதுக்கு முந்தி பொண்ணுகிட்டே ம*ன்ற*த்துக்குள்ள* வ*ந்து அவ*சியம் பார்க்கச்சொல்லி உங்க திற*மைய காட்டி அச*த்துங்க*............

இதெல்லாம் மீறி ஓகே யாயிட்டா இந்த 1 க*ண்டிச*ன் க*ரெக்ட்டா போட்டுருங்க.. அதாவது மன்ற*த்துக்கு டெய்லி விஜ*ய*ம்...அத*ற்கான* போதிய நேர*ம்....2 பேருக்கும்...

சோக*ப்பாட*ல், சோககதை எழுதாம* இருக்க* என*து வாழ்த்துக்க*ள்...

ஓவியன்
03-08-2007, 03:20 PM
விரைவில் அந்த அறையில் இருந்து பசியாற வாழ்த்துக்கள்....அது ஒண்ணும் அறை இல்லைங்கோ!, அது ஒரு பகுதி அவ்வளவே!
நான் மேலே எழுதி இருந்ததைப் பார்க்காம்ற் போனதால் வந்த வில்லங்கமது!.

உங்கள் அன்புக்கு நன்றி அன்பு!.

வாங்க இது எந்தவகை வாழ்த்து.?
ஆமா!,
வந்துட்டாரு டவுட்டுக் கணேசன்! :natur008:

alaguraj
03-08-2007, 03:20 PM
பி.கு - இப்போது நான் ஒரு தீர்க்கமான முடுவெடுத்திட்டனுங்க...........................!
அது தான் வெகுவிரைவில் குடும்பஸ்தனாக ஆவதென்று.......................................

அதெல்லாம் ச*ரிதான், வாழ்த்துக்க*ள்..........

அப்புற*ம் பொண்ணு பாக்கறதுக்கு முந்தி பொண்ணுகிட்டே ம*ன்ற*த்துக்குள்ள* வ*ந்து அவ*சியம் பார்க்கச்சொல்லி உங்க திற*மைய காட்டி அச*த்துங்க*............

இதெல்லாம் மீறி ஓகே யாயிட்டா இந்த 1 க*ண்டிச*ன் க*ரெக்ட்டா போட்டுருங்க.. அதாவது மன்ற*த்துக்கு டெய்லி விஜ*ய*ம்...அத*ற்கான* போதிய நேர*ம்....2 பேருக்கும்...

சோக*ப்பாட*ல், சோககதை எழுதாம* இருக்க* என*து வாழ்த்துக்க*ள்...

அமரன்
03-08-2007, 03:22 PM
மேலே பார்த்தால் வெள்ளிபார்கிறாயா என்று கேட்பார்களே என்றுதானே பார்க்கவில்லை.

ஓவியன்
03-08-2007, 03:23 PM
சோகப்பாடல், சோககதை எழுதாம இருக்க எனது வாழ்த்துக்கள்...

ஹீ!,ஹீ!
அழகு பொண்ணு வந்து மன்றத்தைப் பார்த்தால் அசந்திடுவா என்றா சொல்லுறீங்க − எனக்கென்னவோ அப்ப்டித் தெரியலைப்பா! :natur008:

உம்!, எதற்கும் ஒரு முயற்சி செய்து பார்ப்போம் - நன்றி அழகு!.

ஓவியன்
03-08-2007, 03:26 PM
மேலே பார்த்தால் வெள்ளிபார்கிறாயா என்று கேட்பார்களே என்றுதானே பார்க்கவில்லை.
ஆமா மேலே வெள்ளி மட்டுமா இருக்கு என்ன?
புதன், வியாழன்,சனி,ஞாயிறு, திங்கள், செவ்வாய் எல்லாமே மேலேயே இருக்க................

ஏன் வெள்ளி பார்கிறாயா எண்டு மட்டும் கேட்கிறீங்க?:natur008:

அமரன்
03-08-2007, 03:30 PM
ஆமா மேலே வெள்ளி மட்டுமா இருக்கு என்ன?
புதன், வியாழன்,சனி,ஞாயிறு, திங்கள், செவ்வாய் எல்லாமே மேலேயே இருக்க................

ஏன் வெள்ளி பார்கிறாயா எண்டு மட்டும் கேட்கிறீங்க?:natur008:

வெள்ளிதான்ல நமக்குத்தெரியும்...மற்றதெல்லாம்......

ஓவியன்
03-08-2007, 03:38 PM
வெள்ளிதான்ல நமக்குத்தெரியும்...மற்றதெல்லாம்......

ஆமா உங்களுக்கு ஞாயிறு மற்றும் திங்களும் கூட தெரியுதில்லையா?

கஸ்ரம் தானப்பூ! :natur008:

அமரன்
03-08-2007, 03:40 PM
ஆமா உங்களுக்கு ஞாயிறு மற்றும் திங்களும் கூட தெரியுதில்லையா?

கஸ்ரம் தானப்பூ! :natur008:

திங்கள் துணைக்கோளப்பூ....சூரியன் உடுவாமே.....என்னன்னமோ சொல்றாய்ங்க..நம்பவேண்டி இருக்கே.....

ஓவியன்
03-08-2007, 03:48 PM
திங்கள் துணைக்கோளப்பூ....சூரியன் உடுவாமே.....என்னன்னமோ சொல்றாய்ங்க..நம்பவேண்டி இருக்கே.....

அதில்லைப்பு பிரச்சினை!
இப்போது மேலே பார்த்தால் தெரியுமா இல்லையா என்பதே பிரச்சினை?

திங்களும், ஞாயிறும் தெரியுமா இல்லையா? :lachen001:

மனோஜ்
03-08-2007, 04:31 PM
ஓவியன் சிட்டி சட்டியானது கொடுமைதான்
இனியாவது சட்டி திருவேடு ஆகமாக பாத்துகொங்க ஓகே
வாழ்த்துக்கள் சிக்கரம் திருணம் ஆகி சட்டி சென்டர் சாரி சிட்டி சென்டர் செல்ல

paarthiban
03-08-2007, 04:32 PM
படிக்க ஜாலியாய் இருந்தது. நன்றி

ஓவியன்
03-08-2007, 04:34 PM
ஓவியன் சிட்டி சட்டியானது கொடுமைதான்
இனியாவது சட்டி திருவேடு ஆகமாக பாத்துகொங்க ஓகே
வாழ்த்துக்கள் சிக்கரம் திருணம் ஆகி சட்டி சென்டர் சாரி சிட்டி சென்டர் செல்ல

ம்ஹூம்!
சட்டி சுட்டதடா கை விட்டதா என்று கிண்டலடிக்கிறீங்க என்ன?
என்ன செய்வது நம் நிலமை அப்படி ஆகிப் போச்சே............! :grin:

ஓவியன்
03-08-2007, 04:36 PM
படிக்க ஜாலியாய் இருந்தது. நன்றி

ஆகா நன்றிங்க!

என்னோட வேதனை உங்களுக்கு ஜாலியா இருக்கா? :icon_shok:

அமரன்
03-08-2007, 05:17 PM
அதில்லைப்பு பிரச்சினை!
இப்போது மேலே பார்த்தால் தெரியுமா இல்லையா என்பதே பிரச்சினை?
திங்களும், ஞாயிறும் தெரியுமா இல்லையா? :lachen001:

கன்டிப்பா தெர்யாது...சன்டே.மன்டேன்னாத்தான் தெர்யும்

பாரதி
03-08-2007, 07:18 PM
நல்ல விவரிப்பு ஓவியன்!
இந்த சிட்டி சென்டர் எந்த இடத்தில் இருக்கிறது..? லூலூ, கேயெம் ட்ரேடிங் நிறுவனங்களுக்கு அருகிலா..? துபாயில் உள்ள பெரிய கடைகளைப் பார்த்த பின்னர் அங்கே கடைகளைப் பார்த்ததில் வியப்பு ஏதும் வரவில்லை.

சிட்டி சென்டருக்கு சென்ற பின் உங்களுக்கு இப்படி ஒரு ஞானோதயம் உங்களுக்கு வந்ததற்காகவும், அருமையான பதிவொன்றை தந்ததற்காகவும் பாராட்டுக்கள்.

aren
03-08-2007, 07:24 PM
சிட்டி சென்டருக்கு சென்ற பின் உங்களுக்கு இப்படி ஒரு ஞானோதயம் உங்களுக்கு வந்ததற்காகவும், அருமையான பதிவொன்றை தந்ததற்காகவும் பாராட்டுக்கள்.

இதை ஞானோதயம் என்கிறீர்களா அல்லது விதியின் விளையாட்டு என்று சொல்கிறீர்களா. பாவம் நம்ம ஓவியன்.

பாரதி
03-08-2007, 07:34 PM
இதை ஞானோதயம் என்கிறீர்களா அல்லது விதியின் விளையாட்டு என்று சொல்கிறீர்களா. பாவம் நம்ம ஓவியன்.

ஒரு வேளை உணவில் பிறந்த தீர்வு என்ற வகையில் மட்டுமே பார்த்தால் ... ஹஹஹா....!

ஓவியன்
03-08-2007, 07:38 PM
நல்ல விவரிப்பு ஓவியன்!
இந்த சிட்டி சென்டர் எந்த இடத்தில் இருக்கிறது..? லூலூ, கேயெம் ட்ரேடிங் நிறுவனங்களுக்கு அருகிலா..? துபாயில் உள்ள பெரிய கடைகளைப் பார்த்த பின்னர் அங்கே கடைகளைப் பார்த்ததில் வியப்பு ஏதும் வரவில்லை.

மிக்க நன்றி அண்ணா!
லூலு எங்களுக்கு அருகாமையில் தான் உள்ளது ( நாமிருப்பது அல்−குவைர்) அனால் இந்த சிட்டி சென்ரர் சீப் எயார் போட்டுக்கு அருகாமையில் உள்ளது!.

நாமிருக்குமிடத்திலிருந்து கொஞ்சம் தொலைவு தான், அதனால் தான் இங்கே வந்து 4 மாதமாகியும் இப்போது தான் அங்கே போக முடிந்தது.

ஓவியன்
03-08-2007, 07:40 PM
சிட்டி சென்டருக்கு சென்ற பின் உங்களுக்கு இப்படி ஒரு ஞானோதயம் உங்களுக்கு வந்ததற்காகவும், அருமையான பதிவொன்றை தந்ததற்காகவும் பாராட்டுக்கள். புத்தருக்கு போதி மரத்தடியில் வந்த மாதிரி எனக்கு சிட்டி சென்ரரில் வந்தது எங்கிறீங்களா?
ஆனா பாரதி அண்ணா அனுபவஸ்தரான ஆரேன் அண்ணா இப்படிச் சொல்கிறாரே

இதை ஞானோதயம் என்கிறீர்களா அல்லது விதியின் விளையாட்டு என்று சொல்கிறீர்களா. பாவம் நம்ம ஓவியன்.

இனியவள்
03-08-2007, 07:47 PM
ஹீ ஹீ ஓவியரே உங்களுக்குமா..

வாழ்த்துக்கள் இப்படி இன்னும்
நிறைய அனுபவம் பெற
அனுபவம் தானே வாழ்க்கை...

என்றாலும் இலங்கையில் M.C(magastic city)
பரவாய் இல்லை :sport-smiley-013:

அமரன்
03-08-2007, 07:57 PM
இலங்கையின் மாயநகரை விட அங்கே இருக்கும் ஈர்ப்பு பூனை (கிறெஷ் கட்) ரொம்ப நல்லதல்லவா..!!?

இனியவள்
03-08-2007, 07:59 PM
இலங்கையின் மாயநகரை விட அங்கே இருக்கும் ஈர்ப்பு பூனை (கிறெஷ் கட்) ரொம்ப நல்லதல்லவா..!!?

ம்ம் ஆமாம் அமர்
திருத்த வேலைகள்
நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன..

aren
03-08-2007, 08:00 PM
பாவம் ஓவியன். இந்தத் திரியை ஏன் ஆரம்பித்தோம் என்று இப்பொழுது வருந்துவது நன்றாகவே தெரிகிறது.

ஓவியன்
03-08-2007, 08:03 PM
என்றாலும் இலங்கையில் M.C(magastic city)
பரவாய் இல்லை :sport-smiley-013:

ஹீ!
நன்றிங்கோ இனியவள்!

மஜெஸ்டிக் சிட்டியிலே...............
ம்,ம்,ம்ம்ம்ம்ம்...........!

அதெல்லாம் ஒரு அழகிய நிலாக் காலம்!

அதை ஏன் இப்ப ஞாபகப் படுத்துறீங்கள்.

ஓவியன்
03-08-2007, 08:04 PM
பாவம் ஓவியன். இந்தத் திரியை ஏன் ஆரம்பித்தோம் என்று இப்பொழுது வருந்துவது நன்றாகவே தெரிகிறது.
இல்லை எத்தனை பேர் கல்யாணாம் கட்டி, இப்ப* எவ்வளவு கஸ்ரப் படுறினம் எண்டு தெரியுது.................! :lachen001:

ஓவியன்
03-08-2007, 08:06 PM
இலங்கையின் மாயநகரை விட அங்கே இருக்கும் ஈர்ப்பு பூனை (கிறெஷ் கட்) ரொம்ப நல்லதல்லவா..!!?
என்ன தான் இருந்தாலும் நமக்கு வெள்ளவத்தை ரோலக்ஸ் தான் பெஸ்ட் அமர்!. :lachen001:

அமரன்
03-08-2007, 08:07 PM
என்ன தான் இருந்தாலும் நமக்கு வெள்ளவத்தை ரோலக்ஸ் தான் பெஸ்ட் அமர்!. :lachen001:

5 மணியானால் சும்மா கமகமக்குமில்ல...!கலகலக்குமில்ல...!

ஓவியன்
03-08-2007, 08:10 PM
5 மணியானால் சும்மா கமகமக்குமில்ல...!கலகலக்குமில்ல...!
அதே!
அப்ப*டியே பினால் ராம*கிருஸ்ண* மிச*ன் ப*க்க*மா நடந்து போய் க*ட*ற்க*ரையில் அமர்ந்து ந*ண்ப*ர்க*ளுட*ன் அர*ட்டைய*டிப்ப*தும் ஒரு சுக*ம் தான்!. :smartass:

அமரன்
03-08-2007, 08:12 PM
அதே!
அப்ப*டியே பினால் ராம*கிருஸ்ண* மிச*ன் ப*க்க*மா நடந்து போய் க*ட*ற்க*ரையில் அமர்ந்து ந*ண்ப*ர்க*ளுட*ன் அர*ட்டைய*டிப்ப*தும் ஒரு சுக*ம் தான்!. :smartass:

அப்பப்போ போலிஸ் வந்தால் அதுவும் ஒரு சுகம்தான்..?

ஓவியன்
03-08-2007, 08:14 PM
அப்பப்போ போலிஸ் வந்தால் அதுவும் ஒரு சுகம்தான்..?
நம்மவர்களை அந்தப் பகுதியில் குடுக் காரன் துரத்திய அனுபவம் கூடு உண்டு..........! :icon_blush:

அமரன்
03-08-2007, 09:10 PM
குடும்பஸ்தனாவது பரவாயில்லை...
ஒரு வேளை உணவை உண்ண விடாததால், குடுஸ்தனாவது முறையோ..???
குடுக்காரன் என்றால் ஈழத்தில் போதைமருந்துக்கு அடிமையானவர்கள் என்று அர்த்தப்படும்...
ஓவியரே...
என்ன விபரீத முடிவு இது..?
இதற்கு எப்படிப் பாராட்டுவது..?

குடும்பஸ்தன் என்றால் குடும்பம் மட்டும் கொடுப்பவன்...
குடுஸ்தன் என்றால் மனதைக் கொடுப்பவன் என்பது அர்த்தம்..அதைத்தான் சொன்னாரு ஓவியன்.
உரக்கப் பாராட்டுங்கப்பூ...

அக்னி
03-08-2007, 09:29 PM
வந்துட்டுராரு வி.வீ!
நீர் மட்டும் என் கையில் மாட்டினீர்...................!:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:
அதான் கண்ணில படாம உலாவுறோமில்ல...

நம்மவர்களை அந்தப் பகுதியில் குடுக் காரன் துரத்திய அனுபவம் கூடு உண்டு..........! :icon_blush:
அதுதான் அப்படி ஆக ஆசையோ...

அக்னி
03-08-2007, 09:30 PM
குடும்பஸ்தன் என்றால் குடும்பம் மட்டும் கொடுப்பவன்...
குடுஸ்தன் என்றால் மனதைக் கொடுப்பவன் என்பது அர்த்தம்..அதைத்தான் சொன்னாரு ஓவியன்.
உரக்கப் பாராட்டுங்கப்பூ...

இதென்ன புரூடா... வக்காலத்து... சுத்துமாத்து... .......................................
வேறென்னல்லாம் இருக்கோ எல்லாத்தையும் போட்டுக்குங்க...

அமரன்
03-08-2007, 09:32 PM
இதென்ன புரூடா... வக்காலத்து... சுத்துமாத்து... .......................................
வேறென்னல்லாம் இருக்கோ எல்லாத்தையும் போட்டுக்குங்க...

காதல் கல்யானம்ணாலே இதெல்லாம் இல்லாமலா..

அக்னி
03-08-2007, 09:33 PM
காதல் கல்யானம்ணாலே இதெல்லாம் இல்லாமலா..

காதல்னா இன்னாங்கோ..???

அமரன்
03-08-2007, 09:33 PM
காதல்னா இன்னாங்கோ..???

உங்க "மேலே" உள்ளதுதாங்கோ...

ஓவியன்
03-08-2007, 09:33 PM
அதான் கண்ணில படாம உலாவுறோமில்லே...

ஆனைக்கும் அடி சறுக்கும் தெரியுமில்லே?

ஆனைக்கே சறுக்கும் போது அக்னி எம்மாத்திரம்? :grin:

அன்புரசிகன்
03-08-2007, 09:34 PM
காதல்னா இன்னாங்கோ..???

தாங்கள் சிலநாட்க்கள் மன்றம் வராது நின்றீர்களே... அதற்கு காரணமான ஒரு விடையங்கள் போன்றது... :grin: :grin: :grin:

அமரன்
03-08-2007, 09:36 PM
தாங்கள் சிலநாட்க்கள் மன்றம் வராது நின்றீர்களே... அதற்கு காரணமான ஒரு விடையங்கள் போன்றது... :grin: :grin: :grin:

எனக்கும் உங்களப்பற்றி பல விடயங்கள் புரிஞ்சுபோச்சு...

ஓவியன்
03-08-2007, 09:36 PM
உங்க "மேலே" உள்ளதுதாங்கோ...

அக்னி மேலே என்ன இருக்கும்..............?

அடுப்பு என்றால் அக்னிக்கு மேலே சட்டி இருக்கும்...........! :icon_cool1:

அமரன்
03-08-2007, 09:37 PM
அக்னி மேலே என்ன இருக்கும்..............?
அடுப்னா அக்னிக்கு மேலே சட்டி இருக்கும்...........! :icon_cool1:

அடுப்பிலுள்ள அக்னிமேலே இருப்பதும் "களிமண்"சட்டி....
நம்ம அக்னிமேல இருப்பதும்ம்....

ஓவியன்
03-08-2007, 09:38 PM
அடுப்பிலுள்ள அக்னிமேலே இருப்பதும் "களிமண்"சட்டி....
நம்ம அக்னிமேல இருப்பதும்ம்....
நம்ம அக்னி மேலேயும் களி மண் சட்டியா?

எப்படிங்க........? :grin:

அக்னி
03-08-2007, 09:44 PM
ஆனைக்கும் அடி சறுக்கும் தெரியுமில்லே?

ஆனைக்கே சறுக்கும் போது அக்னி எம்மாத்திரம்? :grin:

வாஸ்தவம்தான்...

அப்புறம்... குட்டி கவிதை ஒன்று...
சிட்டி செண்டரில் ஓவியன்...
குட்டி பார்க்க போனாராம்...
சட்டி ஒன்றைக் காவியே...
எட்டிப் பிடித்த இருக்கையை...
கட்டி இருக்காத கல்யாணத்தால்...
தட்டி பறித்த செக்கியூரிட்டி...
விரட்டி விட்ட ஸ்டோரி...

அருமை...

அமரன்
03-08-2007, 09:44 PM
நம்ம அக்னி மேலேயும் களி மண் சட்டியா?
எப்படிங்க........? :grin:
எப்படியும் உடையணும்தானே...இப்பவே உடைச்சிடுங்களே...!

ஓவியன்
03-08-2007, 09:47 PM
சிட்டி செண்டரில் ஓவியன்...
குட்டி பார்க்க போனாராம்...
சட்டி ஒன்றைக் காவியே...
எட்டிப் பிடித்த இருக்கையை...
கட்டி இருக்காத கல்யாணத்தால்...
தட்டி பறித்த செக்கியூரிட்டி......
நான் உங்க தலையைக் காவிப் போனேனா இல்லையே?
ஏங்க இப்படிப் பொய் சொல்லுறீங்க.................! :D

அமரன்
03-08-2007, 09:47 PM
வாஸ்தவம்தான்...

அப்புறம்... குட்டி கவிதை ஒன்று...
சிட்டி செண்டரில் ஓவியன்...
குட்டி பார்க்க போனாராம்...
சட்டி ஒன்றைக் காவியே...
எட்டிப் பிடித்த இருக்கையை...
கட்டி இருக்காத கல்யாணத்தால்...
தட்டி பறித்த செக்கியூரிட்டி...
விரட்டி விட்ட ஸ்டோரி...

அருமை...

ஸ்டோரி படித்த அக்னி
சீட்டி அடித்து கலக்கிய(து)
கவி அட்டகாசம்.

அக்னி
03-08-2007, 09:47 PM
அடுப்பிலுள்ள அக்னிமேலே இருப்பதும் "களிமண்"சட்டி....
நம்ம அக்னிமேல இருப்பதும்ம்....

களிமண் அக்னியால் சுடப்பட்டாத்தான் சட்டியே...
பலமூட்டுவது அக்னி...
அக்னி எரித்தால் அமரர்...
எரிக்காவிட்டால் அழுகல்...

ஓவியன்
03-08-2007, 09:49 PM
ஸ்டோரி படித்த அக்னிசீட்டி அடித்து கலக்கிய(து)
கவி அட்டகாசம்.

அசத்திட்டீங்க அமர்!
இப்போதெல்லாம் கவிக்கும் பெயர் வைக்கிறாங்களா? :D

அக்னி
03-08-2007, 09:50 PM
ஏங்க இப்படிப் பொய் சொல்லுறீங்க.................! :D

சரி நான் எதுவும் சொல்லல...
ஏங்காதீங்க...

அமரன்
03-08-2007, 09:50 PM
களிமண் அக்னியால் சுடப்பட்டாத்தான் சட்டியே...
பலமூட்டுவது அக்னி...
அக்னி எரித்தால் அமரர்...
எரிக்காவிட்டால் அழுகல்...

அக்னி....படும்வரைதான் சட்டி.
பட்டால் ஓட்டைச் சட்டி...
புரியுதுங்களா களிமண் தியறி

ஓவியன்
03-08-2007, 09:50 PM
களிமண் அக்னியால் சுடப்பட்டாத்தான் சட்டியே...
பலமூட்டுவது அக்னி...
அக்னி எரித்தால் அமரர்...
எரிக்காவிட்டால் அழுகல்...

ஆமா மூட்டுவது தானே அக்னி!:D

அமரன்
03-08-2007, 09:52 PM
அசத்திட்டீங்க அமர்!
இப்போதெல்லாம் கவிக்கும் பெயர் வைக்கிறாங்களா? :D

கவின்னா அக்னி.
அக்னின்னா கவி...
இது மன்றத்திற்கே தெரியுமே...

அக்னி
03-08-2007, 09:53 PM
அடுப்பிலுள்ள அக்னிமேலே இருப்பதும் "களிமண்"சட்டி....
நம்ம அக்னிமேல இருப்பதும்ம்....

நம்ம அக்னி மேலேயும் களி மண் சட்டியா?

எப்படிங்க........? :grin:

எப்படியும் உடையணும்தானே...இப்பவே உடைச்சிடுங்களே...!

:violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010: :violent-smiley-010:
:medium-smiley-100: :medium-smiley-100: :traurig001: :traurig001: :medium-smiley-100: :medium-smiley-100:

அக்னி
03-08-2007, 09:55 PM
அக்னி....படும்வரைதான் சட்டி.
பட்டால் ஓட்டைச் சட்டி...
புரியுதுங்களா களிமண் தியறி
களிமண் தியறி நன்றாக தெரிந்தால் கொஞ்சம் சொல்லித் தாங்களேன்...

ஆமா மூட்டுவது தானே அக்னி!:D
மூட்டுவது மனிதன்...
சாட்டுவது அக்னியை...

வார்த்தைப் பிரிப்புக்கள் அருமையோ அருமை..

ஓவியன்
03-08-2007, 09:56 PM
:medium-smiley-100: :medium-smiley-100: :traurig001: :traurig001: :medium-smiley-100: :medium-smiley-100:

சரி சரி அழாதீங்க உங்களுக்கு ஒரு அறை சொக்லேட் வாங்கித் தாறன்...........! :food-smiley-011:

அக்னி
03-08-2007, 09:57 PM
கவின்னா அக்னி.
அக்னின்னா கவி...
இது மன்றத்திற்கே தெரியுமே...

ஆமா...
அமரனுக்குக் கவிதைன்னாலே என்னான்னு தெரியாது...
நிறைகுடம் (அமரன்), வெறும்குடத்தைப் (அக்னி) பாராட்டுகின்றது...

ஓவியன்
03-08-2007, 09:59 PM
ஆமா...
அமரனுக்குக் கவிதைன்னாலே என்னான்னு தெரியாது...
நிறைகுடம் (அமரன்), வெறும்குடத்தைப் (அக்னி) பாராட்டுகின்றது...

அவர் கவிதைனு சொல்லலையே − கவி என்று தானே சொன்னார்.....! :D

அன்புரசிகன்
03-08-2007, 10:06 PM
கவின்னா அக்னி.
அக்னின்னா கவி...
இது மன்றத்திற்கே தெரியுமே...

அவர் கவிதைனு சொல்லலையே − கவி என்று தானே சொன்னார்.....! :D

அப்போ அக்னியை குரங்கென்கிறீர்களா???

அன்புரசிகன்
03-08-2007, 10:11 PM
எனக்கும் உங்களப்பற்றி பல விடயங்கள் புரிஞ்சுபோச்சு...

அது இன்னான்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்லே...:sprachlos020:

அமரன்
03-08-2007, 10:12 PM
சரி சரி அழாதீங்க உங்களுக்கு ஒரு அறை சொக்லேட் வாங்கித் தாறன்...........! :food-smiley-011:

அப்போ அக்னியை குரங்கென்கிறீர்களா???

அது இன்னான்னு சொன்னா நாங்களும் தெரிஞ்சுக்குவோமில்லே...:sprachlos020:

ஏன்...எதுக்கு.

அசத்திட்டீங்க அமர்!
இப்போதெல்லாம் கவிக்கும் பெயர் வைக்கிறாங்களா? :D
கடசீல தலைப்பு ஆக்கிட்டீங்களே...

அன்புரசிகன்
03-08-2007, 10:14 PM
ஏன்...எதுக்கு.

தெரிஞ்சுக்கத்தான்னு சொன்னோம்லே...:icon_03:

அக்னி
03-08-2007, 10:15 PM
அப்போ அக்னியை குரங்கென்கிறீர்களா???

இப்போ அக்னியை குரங்கு என்று சொல்லாதவரைக்கும்...
தப்பிச்சேன்...

அமரன்
03-08-2007, 10:18 PM
இப்போ அக்னியை குரங்கு என்று சொல்லாதவரைக்கும்...
தப்பிச்சேன்...
இடிக்குறாப்ல இருக்கே...தெரிஞ்சுக்கத்தான்னு சொன்னோம்லே...:icon_03:

அடம்பிடிக்கிறாய்ங்கப்பா...இங்கவேண்டாம் தனிமடல்ல சொல்றேன்.

அன்புரசிகன்
03-08-2007, 10:30 PM
இங்கவேண்டாம் தனிமடல்ல சொல்றேன்.

இன்னும் வரல...

ஓவியன்
05-08-2007, 04:06 AM
இன்னும் வரல... ஒழுங்காக செக் பண்ணிப் பாரும், எப்பவோ வந்திருக்கும்..........! :icon_good:

மன்மதன்
05-08-2007, 01:10 PM
ஆமா ... பார்சல் என்று ஒண்ணு இருக்கிறது உங்களுக்கு தெரியாதா.. ?? நீங்கள் அடுத்த தடவை வியாழன் அன்று போகாதீங்க.. கூட்டம் கொறவா இருக்கிறப்ப போங்க.. சீட் கிடைக்கும் :D

ஓவியன்
05-08-2007, 01:14 PM
ஆமா ... பார்சல் என்று ஒண்ணு இருக்கிறது உங்களுக்கு தெரியாதா.. ?? நீங்கள் அடுத்த தடவை வியாழன் அன்று போகாதீங்க.. கூட்டம் கொறவா இருக்கிறப்ப போங்க.. சீட் கிடைக்கும் :D

அப்போ குடும்பஸ்தனாகத் தேவை இல்லை எங்கிறீங்களா?:icon_blush:

leomohan
05-08-2007, 01:17 PM
குடும்பஸ்தன் ஆனப்புறம் ஷாப்பிங் மட்டும்தானே பண்ணியாகணும்... :music-smiley-019:

குடும்பத்தோடு சென்று படுதா அழகிகளை சைட் அடிக்கலாமே. கல்யாணம் என்பதே தைரியமாக சைட் அடிக்க ஒரு லைசன்ஸ் தானே ஹா ஹா ஹா

விகடன்
05-08-2007, 01:18 PM
குடும்பத்தோடு சென்று படுதா அழகிகளை சைட் அடிக்கலாமே. கல்யாணம் என்பதே தைரியமாக சைட் அடிக்க ஒரு லைசன்ஸ் தானே ஹா ஹா ஹா

அப்படீன்ன லசைன்ஸ் எடுத்தாச்சோ :lachen001:

விகடன்
05-08-2007, 01:22 PM
ஏம்பா ஓவியன். போற போக்கைப் பார்த்தால் தமிழ் மன்றத்தில் "சிட்டி செண்டரில் ஓவியன்.........................! " என்ற திரியில் ஓவியன்!!! என்றொரு திரி ஆரம்பிக்க வேண்டி வந்தாலும் வரும்போல.,..

leomohan
05-08-2007, 01:22 PM
அப்படீன்ன லசைன்ஸ் எடுத்தாச்சோ :lachen001:

இன்னும் லைசன்ஸ் கிடைக்கலை. அதனால ரிஸ்க் எடுக்காம இருக்க முடியுமா. நானும் இதுமாதிரி துபாயில் ஒரு முறை ஒரு மேளாவுக்கு சென்றுவிட்டு குடும்பமாக இருந்தால் தான் விடுவார்கள் என்றார்கள். பிறகென்ன நண்பனின் மனைவிக்கு நான் அண்ணனாகவும், மற்ற நண்பர்கள் தம்பி, மாமா, சித்தப்பாகவும் மாறி உள்ளே நுழைந்த பிறகு, அடப்பாவி பூக்களின் யுத்தம், பர்ப்யூமின் சாரலில் நனைந்து மகிழ்ந்தோம்.

விகடன்
05-08-2007, 01:25 PM
பார்த்துங்க லியோ மோகன்.
இப்பவெல்லாம் சட்டங்கள் மிக மிக இறுக்கி வைத்திருக்காங்க.

ஓவியன்
05-08-2007, 03:17 PM
குடும்பத்தோடு சென்று படுதா அழகிகளை சைட் அடிக்கலாமே. கல்யாணம் என்பதே தைரியமாக சைட் அடிக்க ஒரு லைசன்ஸ் தானே ஹா ஹா ஹா

அதே!,அதே!
ஆனா லைசன்ஸ் எடுத்தவங்க வேண்டாமப்பா லைசன்ஸ் எடுக்காதே :traurig001: ,என்று பயமுறுத்துறாங்களே மோகன்!. :sport-smiley-018:

ஓவியன்
05-08-2007, 03:17 PM
ஏம்பா ஓவியன். போற போக்கைப் பார்த்தால் தமிழ் மன்றத்தில் "சிட்டி செண்டரில் ஓவியன்.........................! " என்ற திரியில் ஓவியன்!!! என்றொரு திரி ஆரம்பிக்க வேண்டி வந்தாலும் வரும்போல.,..

ஆரம்பித்தால் போச்சு..........! :icon_cool1:

விகடன்
05-08-2007, 03:28 PM
ஆரம்பித்தால் போச்சு..........! :icon_cool1:

அப்படியென்றால் ரொம்பத்தான் அடிபட்டுப் போனீர்கள்.
பாராட்டுக்கள்.

கண்மணி
23-07-2008, 11:22 AM
சரி சரி,... குடும்பஸ்தர் ஆன பின்பு ஒரு முறையாவது அண்ணியை இங்க அழைச்சிகிட்டு போனீயளா?

ஓவியன்
23-07-2008, 11:26 AM
சரி சரி,... குடும்பஸ்தர் ஆன பின்பு ஒரு முறையாவது அண்ணியை இங்க அழைச்சிகிட்டு போனீயளா?

ஆகா, விட மாட்டீங்களே.....!!

ஆமாங்க, கண்மணி இருவரும் அதே இடத்திலமர்ந்து சாப்பிட்டதும், ஒரு திருப்தி வந்திச்சு பாருங்க - அதுக்கு ஈடு கிடையாது...!! :)