PDA

View Full Version : சிற்றிதழ் எழுத்தாளர் ஆக.. எடக்கு முடக்கு சிந்தனைகள்..



rambal
31-05-2003, 03:39 PM
சிற்றிதழ் எழுத்தாளர் ஆக.. எடக்கு முடக்கு சிந்தனைகள்..

சிற்றிதழ்கள் என்பது இலக்கியத்தரம் வாய்ந்தவை எனும் கருத்தோடு ஒட்டி அமைந்த
எழுத்தாளர்களின் கொட்டாரம்... அந்த வகை எழுத்தாளர்களாக எப்படி ஆவது என்பது பற்றிய
எடக்கு முடக்கு சிந்தனை இது..

1. பெயர் குதர்க்கமாக இருக்க வேண்டும். (ஞாநி.. ஆத்மாநாம்.. யாது.. இது போன்று)

2. லத்தீன் அமெரிக்கா, பல்கேரியா, ருவாண்டா போன்ற நாடுகளில் உள்ள எழுத்தாளர்கள்
கொஞ்சப் பேரை (பெயர்களை மட்டும்) தெரிந்திருத்தல் முக்கியமானது..

3. எதற்கெடுத்தாலும் வாயில் நுழையாத ஸ்பானிஸ் எழுத்தாளர் இப்படிச் சொன்னார்.. அப்படிச் சொன்னார்..
என்று ஏகத்திற்கு சொல்ல வேண்டும்.. (யாருக்கும் ஸ்பானிஸ் தெரியாது என்ற நம்பிக்கைதான்)

4. முக்கியமாக தாடி வைத்துக் கொள்ளவேண்டும்.. (குறைந்த பட்சம் கண்ணாடி அணிந்திருத்தல் அவசியம்)

5. உள்ளூர் இலக்கியம் பேசுவதென்றால் மலையாள இலக்கியம் பற்றிப் பேச வேண்டும்..
இல்லை எனில் தலித் இலக்கியம் பற்றிப் பேச வேண்டும்..

6. எழுதுவது என்றால் யாருக்கும் புரியக்கூடாது எனும் வகையில் எழுத வேண்டும்.. (ஜீனியஸ் என்று சொல்ல வேண்டும் அல்லவா)

7. யாராவது எழுத்தை விமர்சித்தால் இது இந்த இசம் என்று சொல்ல வேண்டும்.. அதுதான் ஏகத்திற்கு
விதவிதமாக சரவணபவன் ரசம் போல் இசங்கள் இருக்கிறதே..(சர்ரியலிசம், எக்ஸ்டென்சியலிசம்..)

8. முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டியது என்னவெனில், வேறொரு சிற்றிதழில் எழுதும் மற்றொரு
எழுத்தாளரை சகட்டுமேனிக்கு விமர்சிக்கவேண்டும்..

9. புத்தகங்களை வித்யாசமான முறையில் வெளியிடவேண்டும்..
ரயிலில் இருந்து தூக்கி எறிதல்.. விபச்சாரி கையில் முதல் பிரதி கொடுத்து..
குப்பைத் தொட்டியில் தூக்கி வீசி.. (குப்பைத் தொட்டிகள் கண்டனத்தீர்மனாங்கள் நிறைவேற்றி வழக்கு போடப் போவதாக ஒரு தகவல்)

10. பேட்டி எடுக்க வந்தால்.. நான் ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதே என் தாய் என்னிடம் பாப்லொ நெருதா பற்றி விவாதித்தாள்.. என்று புழுக வேண்டும்..

மேற்கூறிய தகுதிகளை வளர்த்துக் கொண்டால் நீங்களும் சிற்றிதழ் எழுத்தாளராக ஜொலிக்கலாம்..

Dinesh
01-06-2003, 07:56 AM
சிற்றிதழ் எழுத்தாளராவதற்கு இப்படியெல்லாம் கூட வழிகளா?
யாராவது இப்படி நினைத்து உண்மையிலேயே செய்துவிடப்போகிறார்கள்
ராம்பால் அவர்களே!
அவ்வளவு சிறப்பாக(!) ஆலோசனைகளை கூறியுள்ளீர்கள்.. வாழ்த்துக்கள்.
தொடருங்கள் உங்களின் எடக்கு முடக்குகளை...

தினேஷ்.

பாரதி
01-06-2003, 06:07 PM
உண்மையில் எடக்கு முடக்குதான்.

karikaalan
02-06-2003, 12:44 PM
இது சிந்தனை இல்லையே! இருப்பதை அப்படியே படம் பிடித்திருக்கிறீர்கள், ராம்பால்ஜி! வாழ்த்துக்கள்.

===கரிகாலன்

pulikesi
22-05-2008, 02:54 PM
சுப்பரப்பு

அறிஞர்
22-05-2008, 03:14 PM
இனி மன்றத்தில் பல புதிய எழுத்தாளர்களை காணலாம்..

கண்மணி
22-05-2008, 04:06 PM
ஊன்றிய ராம்பாலுக்கும் தோண்டிய புலிகேசிக்கும், தூண்டிய அறிஞருக்கும் நன்றிகள்

அமரன்
22-05-2008, 06:52 PM
ஊன்றிய ராம்பாலுக்கும் தோண்டிய புலிகேசிக்கும், தூண்டிய அறிஞருக்கும் நன்றிகள்

யுனிக்கோட்டில் தந்த விராடனை விட்டுட்டீங்களேக்கா...

மலர்
26-05-2008, 05:18 PM
இனி மன்றத்தில் பல புதிய எழுத்தாளர்களை காணலாம்..
நோ கமெண்ட்ஸ்........ :D :D :D
நல்லா கோட் பண்ணி காட்டணும்... அப்போ தான் கல்லு பாம் எல்லாம் பறந்து வரும்......

மலர்
26-05-2008, 05:21 PM
யுனிக்கோட்டில் தந்த விராடனை விட்டுட்டீங்களேக்கா...
ஒருவேளை
விராடன் அண்ணன் கதைச்சேது விளங்கே இயலாம விட்டு விட்டாங்களோ.... :D :D :D
நல்ல நகைச்சுவை.......:rolleyes: :rolleyes:
யுனிக்கோடாக மாற்றி சிரிக்க தந்த அண்ணனுக்கு நன்றிகள்.... :icon_b: :icon_b:

தீபா
21-06-2008, 05:11 AM
அட,
இப்படியுமா?
வாழ்த்துகள் ராம்