PDA

View Full Version : இவ்வுலகில்....!



அமரன்
02-08-2007, 05:17 PM
ஊரெல்லாம் தூங்கியிருக்க
தணலும் கண்களுடன்
கத்திக் கைகளுடன்
காவலிருக்கும் எங்கசாமி...

ஆவேச உருவம் தாங்கி
எல்லையில் இருக்கையில்
மின்னிடும் பலகேள்விகள்
என்மன வானமதில்..!

சோலிகள் முடிக்கவென
எட்டி நடந்து பட்டணம்போய்
வெக்கையுடன் திரும்புகையில்
குளிர்ச்சி தருகிறதே...?

கடாவெட்டி படைப்போர்க்கும்
பொங்கலிட்டு கொடுப்போர்க்கும்
மொட்டையால் பிழைப்போர்க்கும்
நிழல் கொடுக்கிறதே....?

யார்த்தான் வைத்தார்கள்?
எவர்தான் வளர்த்தார்கள்?
தணலும் விழிகளுடன்−இவர்
வீற்றிருக்கும் ஆலவிருட்சமதை...!?


ஊருக்கே மணிஅடித்தேன்
யாருக்கும் தெரியவில்லை...!
தெருவில் ஓடிய கோழியின்
சிறகடிக்கும் சத்தம்
விறைப்பாச் சொன்னது...

உன்னக விருந்துண்டு
தன்னலகு துடைத்து
பன்னீர் எச்சமிட்டு
தன்வழி சென்றபறவைமட்டுமா..
இவ்வுலகில் இருக்கின்றது....!?


(ஏம்பா...இக்கவிக்கு நல்லதலைப்பாக ஒன்று சொல்லுங்கப்பா? தலைப்பு யோசித்தே பதிக்க நாழியாச்சு)

அக்னி
02-08-2007, 06:20 PM
அமரனே...
கவிச்சமர் கருவில் பெருங்கவிதை படைத்துவிட்டீர்கள் போலிருக்கே...
கொஞ்சம் குழப்பம்...
நண்பர்கள் விளக்கம் கண்டு தொடர்கின்றேன்...

அமரன்
02-08-2007, 06:43 PM
ஆமாங்கப்பு...அங்கே பறவையைப் பாவித்தேன்...விருட்சமாக வளர்ந்ததே..கவி.
கருன்னு பெரிசாக ஒன்றும் இல்லைங்க...கவிதையில் இப்போது சின்ன மாற்றம் செய்துள்ளேன்.

விகடன்
02-08-2007, 07:31 PM
க*விதை ந*ன்றாக* உள்ள*து அம*ர்.

கவிதை எழுதிய உங்களுக்கே தலைப்பை வகுக்க குழப்பமாக இருக்கையில் நான் எப்படி அமரன்...

ஓவியன்
02-08-2007, 08:20 PM
அமரா இப்போதெல்லாம் உங்கள் கவிதைகள் அற்புதமாக மின்னுகின்றன, ஆதவாவின் கவி சொல்லும் பாங்கு எனக்கு மிகப் பிடிக்கும்.....................!

கிட்டத்தட்ட அதே பாணியில் கவி சொல்லும் உங்கள் பாங்கும் என்னை மிகக் கவர்ந்துள்ளது!.

உன்னக விருந்துண்டு
தன்னலகு துடைத்து
பன்னீர் எச்சமிட்டு
தன்வழி சென்றபறவைமட்டுமா..
இவ்வுலகில் இருக்கின்றது....!?

உண்மைதான் அமர், பயனைப் பார்த்துத் தான் ஒவ்வொரு காரியங்களும் நடக்குமென்றால் இந்த உலகிலே நல்ல விடயங்களே இல்லாமல் போயிருக்கும்...............!

வயலுக்கு விடும் நீர் நெல்லுக்கு மட்டுமன்றி புல்லுக்கும் பொசியுமாம், அப்படிப் புல்லாக சில புல்லுருவிகள் இந்தக் காதலிலும்.............!
ஆனால் நம்மை நம்பியிருக்கும் நெல்லைப் போன்றவர்களுக்காகவும் வாழ்ந்தேயாகவேண்டும் − அது ஒரு வகையில் வாழ்வின் நியதியும் கூட..............

அருமையான ஓர் கவி படைத்த நண்பனுக்கு 1000 பொற்காசுகள்!.:sport-smiley-018:

பாராட்டுக்கள் அமர்!!!.:nature-smiley-008:

அமரன்
03-08-2007, 08:47 AM
நன்றி விராடன்.
நன்றி ஓவியன்...அழகான பின்னூட்டம். புரிந்துகொண்ட பின்னூட்டம்.

சிவா.ஜி
03-08-2007, 08:59 AM
அமரன் இன்று பதித்த உங்கள் இரண்டு கவியுமே ஆழ்ந்து வாசிக்க வேண்டியவை..அதனால் பின்னுட்டம் பிறகு.
'எல்லைச்சாமி' என்னென்னவோ சொல்கிறார்,புரிந்துகொள்ள வேண்டும்.