PDA

View Full Version : வெண்ணிலா



இலக்கியன்
02-08-2007, 12:42 PM
http://img473.imageshack.us/img473/33/dcp0491moonstarenniladb5.jpg (http://imageshack.us)


சின்னச் சின்ன கவி
சொல்ல வந்தேன்
வெண்ணிலாவே

உன் வெண்மையினால்
என் உயிர் சிதைந்தது
வெண்ணிலாவே

நச்சத்திரங்கள்
உன்னைப்பார்த்து
கண்சிமிட்டுது
வெண்ணிலாவே

அந்த கண்சிமிட்டை
எப்படித்தான்
தாங்குறாயோ
பதில் சொல்லு
வெண்ணிலாவே

பொறாமை கொண்ட
கருமுகில்கள்
உன்னை மறைக்கிறது
வெண்ணிலாவே

கருமுகில்கள்
மறைக்கும்போதுதான்
உன் உடையை
மாற்றுகிறாயா சொல்லு
வெண்ணிலாவே

வானில் உள்ள
வால் வெள்ளிகள்தான்
வெண்ணிலாவே
உனக்கு காதல்
தூது செய்கின்றதா
சொல்லு வெண்ணிலாவே

உயிரோடு உயிர்
சேர்ந்தால்த்தான்
காதல் வெண்ணிலாவே

காதலிலே தோல்வியுற்றால்
மரணம்தானா பதில்
சொல்லு வெண்ணிலாவே

இலக்கியன்
02-08-2007, 12:44 PM
வெண்ணிலாவை காதலியாக பெண்ணாக பல கவிஞர்கள் கற்பனை செய்து கவிதைகள் புனைந்துள்ளார்கள் இலக்கியன் பார்வையில் வெண்ணிலாப் பெண் எப்படி இருக்கின்றாள்
நன்றி
அன்புடன்
இலக்கியன்

அமரன்
02-08-2007, 12:50 PM
கருமுகில்கள்
மறைக்கும்போதுதான்
உன் உடையை
மாற்றுகிறாயா சொல்லு
வெண்ணிலாவே

அருமையான வரிகள். நல்ல கற்பனை வளம். பாராட்டுக்கள் தொடருங்கள்.

இலக்கியன்
02-08-2007, 12:51 PM
அருமையான வரிகள். நல்ல கற்பனை வளம். பாராட்டுக்கள் தொடருங்கள்.

நன்றி அமரன் உங்கள் வாழ்த்துக்களுக்கு

அமரன்
02-08-2007, 12:53 PM
என்றும் தண்மை
குன்றா தன்மை
வெண்ணிலா..!

சிந்தும் வெண்மையில்
சாந்தமான பெண்மை
வெண்ணிலா....!

விகடன்
02-08-2007, 12:58 PM
வெண்ணிலாக்குப் பாடிய இடத்தில் பெண்ணிலாவையும் பாடிவிட்டீர்கள் போலும்.

அதுதாங்க கருமுகில்கள் மறைக்கும்போது வரும் இருட்டில் உடை மாற்றுவதுதான்.

கவிதை நன்றாக வடிக்கப்பட்டிருக்கிறது.

பாராட்டுக்கள்.

இலக்கியன்
02-08-2007, 01:58 PM
என்றும் தண்மை
குன்றா தன்மை
வெண்ணிலா..!

சிந்தும் வெண்மையில்
சாந்தமான பெண்மை
வெண்ணிலா....!

வெண்ணிலா கண்டு கவியுலாதந்தீர் வாழ்த்துக்கள்

இலக்கியன்
02-08-2007, 01:59 PM
வெண்ணிலாக்குப் பாடிய இடத்தில் பெண்ணிலாவையும் பாடிவிட்டீர்கள் போலும்.

அதுதாங்க கருமுகில்கள் மறைக்கும்போது வரும் இருட்டில் உடை மாற்றுவதுதான்.

கவிதை நன்றாக வடிக்கப்பட்டிருக்கிறது.

பாராட்டுக்கள்.

நன்றி விராடன் வெண்ணிலாவை பெண்ணிலாவாக கவிதந்தேன்

lolluvathiyar
03-08-2007, 02:56 PM
கவிதை அருமை இலக்கியன்.
அனைத்தும் பிரமாதமான வரிகள் பாராட்டுகள்




பொறாமை கொண்ட
கருமுகில்கள்
உன்னை மறைக்கிறது
வெண்ணிலாவே

ம*ரைக்க*விட்டால் ந*ம*க்கேல்லாம் ம*ழை ஏது?



காதலிலே தோல்வியுற்றால்
மரணம்தானா பதில்


தோல்வியுற்றாலும் மரணம் தேட கூடாது.

ஓவியன்
03-08-2007, 03:43 PM
இலக்கியா உங்கள் வரிகளில் வார்த்தைகள் அழகாக விளையாடுகின்றன.....!

அருமையான கவிதை − பாராட்டுக்கள் நண்பரே!.

மனோஜ்
03-08-2007, 03:49 PM
வெண்ணிலா பெண் நிலாவாக மாறி பென் நிலவானது அருமை இலக்கியரே

இனியவள்
03-08-2007, 07:16 PM
வாழ்த்துக்கள் இலக்கியன் அருமையாக
உள்ளது

aren
04-08-2007, 01:47 AM
அருமையான கவிதை வரிகள் இலக்கியன் அவர்களே. உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

சிவா.ஜி
04-08-2007, 04:42 AM
நல்ல அழகுச்செறிவுள்ள வரிகள்.பாராட்டுக்கள் இலக்கியன்.

இலக்கியன்
06-08-2007, 09:05 AM
கவிதை அருமை இலக்கியன்.
அனைத்தும் பிரமாதமான வரிகள் பாராட்டுகள்


ம*ரைக்க*விட்டால் ந*ம*க்கேல்லாம் ம*ழை ஏது?



தோல்வியுற்றாலும் மரணம் தேட கூடாது.


கருத்துக்கு நன்றி வாத்தியார் தோல்வியின் முடிவு மரணமல்ல

இலக்கியன்
06-08-2007, 09:06 AM
இலக்கியா உங்கள் வரிகளில் வார்த்தைகள் அழகாக விளையாடுகின்றன.....!

அருமையான கவிதை − பாராட்டுக்கள் நண்பரே!.

ந*ன்றி ஓவிய*ன்

இலக்கியன்
06-08-2007, 09:08 AM
வெண்ணிலா பெண் நிலாவாக மாறி பென் நிலவானது அருமை இலக்கியரே

நன்றி மனோஜ்

இலக்கியன்
06-08-2007, 09:09 AM
வாழ்த்துக்கள் இலக்கியன் அருமையாக
உள்ளது

உங்கள் கருத்துக்கு நன்றி

இலக்கியன்
06-08-2007, 09:10 AM
அருமையான கவிதை வரிகள் இலக்கியன் அவர்களே. உங்களிடமிருந்து நிறைய எதிர்பார்க்கலாம் என்று தெரிகிறது. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்
நன்றி ஆரென் இயலுமானவரை தரமுயற்சிக்கின்றேன்

இலக்கியன்
06-08-2007, 09:10 AM
நல்ல அழகுச்செறிவுள்ள வரிகள்.பாராட்டுக்கள் இலக்கியன்.

நன்றி சிவா