PDA

View Full Version : தகவல் தொ.நு.வில் இந்தியாவின் பிற்போக்கான மீனாகுமார்
02-08-2007, 11:38 AM
தகவல் தொழில்நுட்பத்தில் இந்தியாவின் பிற்போக்கான நிலை

இந்தியா சுதந்திரத்திற்க்குப்பின் நல்லதொரு பொறியியல் வல்லுநர்களை உருவாக்கியிருக்கலாம். அதனால் பல இந்திய பொறியியல் வல்லுநர்கள் இடம் பெயர்ந்து பல நாடுகளுக்குச் சென்றிருக்கிறார்கள். பிற நாடுகளின் முன்னேற்றத்திற்காக இப்போதும் கடுமையாக உழைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். இவையெல்லாம் நமக்கு முதலில் பன்னாட்டு தொடர்புகளைத் தந்தாலும், இதன் எதிர்காலம் என்ன என்று நாம் யோசிக்க வேண்டும்.

இந்தியாவில் தொடங்கப்பட்ட நிறுவனங்கள் விப்ரோ, இன்போஸிஸ், ஹச்.சி.எல் அனைத்தும் அடுத்தவர்களுக்கு சேவை புரிவதையே தொழிலாகக் கொண்டுள்ளனர். எவ்வளவு காலம் தான் இதையே செய்து கொண்டிருக்க போகிறார்கள் என்று தெரியவில்லை. நாம் கஷ்டப்பட்டு உழைத்திருந்தாலும், பல்வேறு வகையான பொருட்களைத் தயாரிப்பதற்க்கு உதவியிருந்தாலும், அந்த பொருட்களின் சொந்தக்காரர்களாக (Product Ownership) அவர்களே விளங்குகிறார்கள். எவ்வளவுதான் உழைத்திருந்தாலும் நம்மிடம் பொருட்களின் சொந்தம் இல்லாத வரை நாம் வெறும் கூலிக்காரர்களாகவே திகழ்வோம்.

அன்றைய காலத்திலிருந்து சிலர் பிறருக்கு அடிமைகளாகவே இருந்து வந்தனர். அடிமைத் தனம் அவர்களாலேயே ஒழிக்கப்பட்டபின் மலிவான கூலிக்காரர்களாக இருந்து வந்தனர். கரும்புத் தோட்டத்திலும் வாழைத் தோட்டத்திலும் கூலி வேலை செய்வதற்காகவும், பிற நாட்டுடன் போர் புரியவும் எண்ணற்ற இந்தியர்களை பல நாடுகளுக்கு அழைத்துச் சென்றது ஆங்கிலேய அரசு. அன்றைக்கு இருந்த நிலையிலும் இன்றைய நிலையிலும் ஒரே ஒரு மாற்றம் தான். அன்று அவர்கள் கூட்டிச் சென்றார்கள். இன்று நாமே செல்கிறோம். அவ்வளவு தான். ஆனால் நாம் இன்னும் மலிவான கூலிக்காரர்களாகவே உள்ளோம். சில பன்னாட்டு நிறுவனங்களில் பெரிய பதவிகளில் இந்தியர்கள் வகிக்கறார்கள் என்பதும் உண்மை. இது அவர்கள் தங்களின் உழைப்பால் முன்னுக்கு வந்தார்கள் என்பது மிகவும் உண்மை. இதில் தேசப்பற்றுள்ள சிலர் அந்த நிறுவனங்கள் இந்தியாவிலும் வருவதற்க்கு மிக முக்கிய பங்காற்றியிருக்கிறார்கள் என்பதும் மறுக்க முடியாத உண்மை. ஆனால் பெரும்பான்மையாக பார்க்கும் பொழுது நாம் இன்னும் கூலிக்கார்ரகளாகவே உள்ளது புலப்படும்.

தகவல் தொழில்நுட்ப துறையில் இன்றைய முக்கிய பொருட்களின் சொந்தக்காரர்களாக பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்களும் ஐரோப்பிய நிறுவனங்களுமே உள்ளன. முதலில் எந்தத் துறையை எடுத்தாலும் அதில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு (Research and Development) அதிகமான அளவில் பணம் முதலீடு செய்து ஒவ்வொரு துறையிலும் ஸ்டான்டர்டுகளை (Standards) உருவாக்கி அதற்க்கு ஏற்றார்போல் பல்வேறு பொருட்களைத் தயாரித்து சந்தையில் விட்டு வணிகம் செய்து வருகிறார்கள். கீழே உள்ள சுட்டி இதற்கு சான்று.

http://www.baselinemag.com/article2/0,1540,2048864,00.asp

நம் நாட்டு நிறுவனங்கள் பணத்தை வெளிநாட்டிலிருந்து கொண்டுவருவதற்க்கான வழிகளை மட்டுமே கையாண்டு வருகிறார்கள். பெற்ற பணத்தை முதலீடு செய்யவோ புதுப்புது பொருட்களை உருவாக்கவோ தயங்குகிறார்கள். இது நம் வளத்திற்க்கும் வளர்ச்சிக்கும் நல்லதன்று. இன்னும் ஒரு சில இந்திய நிறுவனங்கள் பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முடக்குகிறார்கள். இவர்கள் இதே இடங்களை நாளை அமெரிக்க நிறுவனங்களுக்கு விற்காமல் இருந்தால் சரி.

உதாரணத்திற்க்கு கீழே உள்ள சுட்டியில் உள்ள செய்தியைப் படியுங்கள்.

http://www.businessweek.com/globalbiz/content/jul2007/gb20070725_335895.htm?campaign_id=rss_topStories

வெப் 2.0 க்கு யார் அடிக்கல் நாட்டுவது என்று போர். நான் இதை இந்தியாவிலிருந்து எதிர்பார்த்தேன். மிகுந்த ஏமாற்றம். வெப் 3.0, 4.0 ஆவது இந்தியாவிலிருந்து வந்தால் தான் இந்தியா உண்மையிலேயே தொழில்நுட்பத்தில் முன்னேறுகிறது என்று கூறலாம். இந்தியாவிலிருந்து இதுவரை எந்த பொருளும் வந்ததாக எனக்குத் தெரியவில்லை. என் நண்பர் ஒருவர் கூறினார் இன்போஸிஸ் பேங்கிங் சொல்யூசன்ஸ் இந்தியாவிலிருந்து வந்தது என்று.

நீங்கள் நம்பினால் நம்புங்கள். வெளிநாடுகளில் படிப்பைப் பாதியில் விட்டவன், கல்லூரியில் தோல்வியடைந்தவன், மேலும் ஒன்றுக்கும் உதவாதவன் (அதாங்க.. நம்ம ஊரில் சொல்லுவாங்களே... மாடு மேய்க்க கூட லாயக்கில்லாதவன்னு.. அதேதான்.. ஆனா.. மாடு மேய்க்குறதும் கஸ்டமான வேலைதான்.. அத செஞ்சு பார்த்தா தானே தெரியும் ? ) எல்லாம் இப்போ கணினி சம்பந்தப்பட்ட வேலைகளில் நுழைந்து பொறியியல் துறையில் பங்காற்றுகிறானோ இல்லையோ... மேலாளர் போன்ற பெரிய பதவிகளுக்கு எளிதாக வந்து தன் கீழ் இருக்கும் படித்த வல்லுனர்களை வேலை வாங்கிக் கொண்டும் இருப்பது உண்மை. அவர்களெல்லாம் சிறு சிறு, புதுப்புது பொருட்களைச் செய்ய ஆரம்பித்து விட்டார்கள் மெதுவாக. கடினப்பட்டு ஐஐடியில் படித்தவனும் வேறு பல்கலைக்கழகங்களில் படித்தவனும் இன்னும் கூலிகளாகவே இருப்பது வேதனைக்குரியது.

இந்தியாவில் நிறைய புதிய இந்திய நிறுவனங்கள் தொடங்கிட வேண்டும். இந்தியாவில் நிறைய ஆராய்ச்சிகளும் வளர்ச்சிகளும் உருவாகிட வேண்டும். இந்தியாவில் தொழில்நுட்பம் மேன்மை பெற்று முன்னிலை அடைந்திட வேண்டும். புதுப்புது பொருட்கள் இந்தியாவில் தான் முதலில் இந்தியர்களால் உருவாக்கப்பட வேண்டும். ஏற்கனவே நிறைய சம்பாதித்த நிறுவனங்கள் பணத்தை முடக்கி வைக்காமல் போதிய பணத்தை ஆராய்ச்சி மற்றும் வளர்ச்ச்சியிலி முதலீடு செய்திடுவாரா ? தம்முடைய பிற்போக்குத்தனத்தை மாற்றிடுவாரா ? கடல் கடந்து சென்ற இந்திய வல்லுநர்களில் சிலராவது தாயகத்துக்கு திரும்பி தம் அனுபவத்தைப் பயன்படுத்தி புது நிறுவனங்கள் உருவாக்கிடுவாரா ?

இன்னொரு செய்தி. இந்தியர்களே பல்வேறு காப்புரிமைகளை அமெரிக்க நிறுவனங்களுக்கும் பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களுக்கும் வாரி வழங்கியிருக்கின்றனர். இப்போதும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். இந்த காப்புரிமைகள் இந்தியாவில் பதிந்திட வேண்டும். மேலும் இந்தியாவில் இதற்கு உண்டான இயங்குதளம் (Infrastructure) வலுவாக அமைந்திட வேண்டும்.

இவையெல்லாம் இந்தியர்களே... உங்கள் கைகளில்... வெறுமனே உங்கள் வேலையை மட்டும் செவ்வனே செய்துவிட்டு போகாமல் உலகில் என்ன நடக்கிறது என்பதையும் உணர்ந்து, மேன்மை இந்தியாவை உருவாக்கிட ஆவன செய்வீர்.

உழைக்கும் இள நெஞ்சங்களே...
நீங்கள் தான் நாளை உலகை ஆள வேண்டும் !!!

உதயசூரியன்
02-08-2007, 03:10 PM
மனதுக்கு இது சரின்னு தான் படுது..
உங்களின் ஆதங்கத்தை வரவேற்க்கிறேன்

வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்

மயூ
02-08-2007, 03:22 PM
மீனாக்குமார்... உங்கள் ஆதங்கம் புரிகின்றது....
சிலவேளைகளில் இன்னமும் சில தசாப்தகாலத்திற்குள் இந்தியா ஐரோப்பாவை முந்தலாம்!

தங்கவேல்
03-08-2007, 12:47 AM
மீனாகுமார், இந்தியாவில் அதற்கான கட்டமைப்பு கிடையாது. எவரும் உதவவும் மாட்டார்கள். அடிமைகள் அடிமைகளாகவே இருக்க விரும்புகிறார்கள். ஒரு அரசாங்க நிறுவனத்துக்கு பொருள் சப்ளை செய்ய ( கிட்டதட்ட இந்திய மதிப்பு ரூபாய் 280,44,00,000 ) ஆர்டர் எடுத்து, கான்ட்ராக்ட் சைன் செய்து அனைத்து வேலைகளும் முடிந்தபிறகு, இந்தியாவில் கோலோச்சும் ஒரு மிகப்பெரிய கம்பெனி அதன் கனடா கிளையின் மூலமாக எனக்கு மிரட்டல் விட்டு பின்பு ஒரு அரசியல் வாதியால் 10 கோடி கமிஷன் கேட்டு அந்த ஆர்டரையே கேன்சல் செய்ய வைத்து விட்டார்கள்.

எந்த ஒரு காரியத்துக்கும் நாம் இங்கு கமிஷன் வெட்டியாக வேண்டும். இல்லையெனில் ரவுடி ஆக இருக்க வேண்டும். இது தான் இ ந்தியா உருப்படாமல் போவதற்கு காரணம்.

மீனாகுமார்
03-08-2007, 09:18 AM
உண்மை தான் தோழரே. இது மிகவும் வேதனையளிக்கிறது. இந்தியாவில் உள்ள நல்ல நல்ல அமைப்புகளும் இப்போது குண்டர்களின் பிடியில். தம் 5000 ரூபாய்க்கு இந்தியாவின் 500 கோடியை அழிக்க துணிந்தவர்கள் இவர்கள். உங்கள் அனுபவமே இதற்க்கு ஒரு சான்று. இது போல் எத்தனையோ தினம் தினம் நடக்கிறது.

எல்லா அமைப்புகளுக்கும் இப்போது இரு புத்தகங்கள். வெள்ளைப்புத்தகம். கறுப்புப்புத்தகம். வெள்ளைப்புத்தகம் அரசாங்க கணக்குக்கு. கறுப்புப்புத்தகம் மார்க்கெட் விலைக்கு. நிறைய அமைப்புகள் இதிலேயே ஊறி ஊறி, எது சரி, எது தவறு என்று திருத்த முடியாத அளவுக்குச் சென்று விட்டது.

ஈராண்டுகளுக்கு முன்னர் நான் சென்னையில் பிரச்சனை ஏதும் இல்லாத நிலம் வாங்க முயற்சி செய்தேன். ஒரு வருடம் நாயா பேயா அலைந்த பின்னர்தான் கி்ட்டியது. அதற்க்குள் விலை இரண்டரை மடங்காயிற்று. என்ன செய்ய.

களைகள் மிகவும் பெரிதாக வளர்ந்து விட்டன. பயிரே தெரியாத அளவிற்க்கு. எப்படித்தான் இந்தக் களையை களைவதோ தெரியவில்லை. மிகவும் வேதனையளிக்கிறது.

lolluvathiyar
04-08-2007, 12:01 PM
அருமையான தகவல் மீனாகுமார், நீங்கள் விளக்கியது போல இந்தியாவில் ஓனர்சிப் இல்லை. ஆராய்ச்சி இல்லை.
முக்கியமாக ஹார்ட்வேர் மூல பொருள் தாயாரிப்பு இல்லை (கனினி மட்டும் அல்ல அனைத்து பொருள்களிலும்)

100 கோடி மக்கள் தொகை உள்ளவர்கள் நாம் தைரியமாக*
சிப் (Mirocprocessers, IC)தொழிற்சாலை அமைக்கலாம். அப்படி அமைத்தால் திற்ன் உள்ள கனினியில் விலை 5000 க்குள் வரும். டிவி 1000 க்கு வரும். ரேடியோ 100 ரூக்கு வரும்
(இது உன்மை நாம் இறக்குமதி செய்து கொண்டிருக்கும் போது ஒரு பிளாப்பியின் விலை 100 ருபாய், இன்று அதே சொந்தமாக தயாரித்தவுடன் 10 ருபாய்)

முக்கியமாக ஆப்ரேடிங் சிஸ்டம், ஆபீஸ் சாப்ட்வேர்கள் நாமே அமைத்து பயன் படுத்த வேண்டும். அவை எல்லாம வெறும் 100 ரூபாயில் கிடைக்க வேண்டும்.

இதே பானியை அனைத்து துரைகளிலும் கையாண்டால் பிறகு நாம் தான் வல்லரசு
இதை செய்யும் போது கன்டிப்பாக விவசாயத்தை மறக்க கூடாது. இல்லாவிட்டால் பிச்சைகாரர்கள் ஆகிவிடுவோம்.