PDA

View Full Version : காட்சிப்பிழை..



ரிஷிசேது
01-08-2007, 07:19 PM
வெகு சந்தோஷமாயிருந்தது
குழந்தை பிறக்கப்போகிறது
என சொன்னபோது
அதுவும் முதல் குழந்தை
கேட்டவுடன் அதிகம் மகிழ்ந்தாள் என் மனைவி
என்ன பேர் என்ன உடை என
பார்த்துப் பார்த்து .....

என்னவாயிற்று என்
செல்லமே...

நீ
அழுகையினூடே என்னை
உதைத்திருக்கலாம்
என் மேல் உன் பிஞ்சுக்கரம் பரப்பி
கோபமாய் என் மீசை பிடித்திழுத்திருக்கலாம்
நான் உன்னை உயரே வீசிப் பிடிக்கையில்
சிறுநீரால் என் மேல் பனியனை
நனைத்திருக்கலாம்
இப்படி எதுவுமேயில்லாமல்

இறந்தே ஏன் பிறந்தாய்
என் செல்லமே?....

அமரன்
01-08-2007, 07:20 PM
"வலி"மை கவிதை...பாராட்டுக்கள்.

அக்னி
01-08-2007, 07:46 PM
கருவறையில் நின்றும்,
பூமி தொடும் சிசுக்கள்...
கல்லறைப்பூக்களாக,
மலர்வது,
வேதனையின் உச்சம்...

பத்து மாதம் சுமந்த தாய்...
தாயையும் சேர்த்து சுமந்த தந்தை...
பார்த்திருந்த உறவுகள்...
அனைவருமே...
உன் அழுகுரல் கேட்டு,
முறுவலிக்கக் காத்திருக்க,
உன் மௌனத்தால்,
திருகிவிட்டாயே
பல அழுகுரல்களை...

கல்லறைப்பூவைச்
சூட முடியாமல் வாடும்
உள்ளங்கள்,
இன்னொரு பூவைச்
சூடினாலும்,
கருகிய பூவின்
வாசம் விட்டகலுமா..?

உணர்வைச் சுண்டும் கவிக்கு பாராட்டுக்கள்... ரிஷிகேது...

சிவா.ஜி
02-08-2007, 04:26 AM
ஆசைகள் நிராசையாகி,எதிர்பார்ப்புகளெல்லாம் உடைந்து மனம் கலங்கி நிற்கின்ற அந்த தருணங்கள்...விளக்கிச் சொல்லமுடியாத வேதனையை தரும்.
வேதனை வரிகளை அருமையாக எழுதி மனதை பாரமாக்கிவிட்டீர்கள் ரிஷி.

அக்னியின் பதில் கவிதை அற்புதம்.மிக்க பாராட்டுக்கள் அக்னி.

lolluvathiyar
02-08-2007, 05:54 AM
இறந்து பிறந்த குழந்தை இன்னும் உங்கள் கவிதை மூலம் வாழ்ந்து கொண்டிருகிறது

விகடன்
02-08-2007, 06:08 AM
காட்சியமைப்பை மனக்கண்ணில் உருவகித்துப் பார்த்தவண்ணம் கவிதையை வாசித்தேன். ஒரு கணம் கலங்கியே போய்விட்டேன்.
இதைப் போன்ற கொடுமை இருக்கவே முடியாது.

kumarcipla
02-08-2007, 03:17 PM
விமர்சித்த அனைவருக்கும் நன்றி, அதிலும் அக்னியின் கவிதைக்கும், நான் கவிதையை அனுப்பிய 2 நொடிகளில் விமர்சித்த அமரனுக்கும் நன்றிகள்

அக்னி
02-08-2007, 04:54 PM
விமர்சித்த அனைவருக்கும் நன்றி, அதிலும் அக்னியின் கவிதைக்கும், நான் கவிதையை அனுப்பிய 2 நொடிகளில் விமர்சித்த அமரனுக்கும் நன்றிகள்

ஆமாம்... நீங்க யாருங்கோ..? புது பயனர் பெயரில் சாட்சாத் ரிஷிகேதுதானோ..?
ஒன்றிற்கு மேற்பட்ட பயனர் பெயர்கள் வைத்திருக்க மன்றத்தில் அனுமதி இல்லை...
தேவை எனின் தகுந்த காரணம் காட்டி, மேற்பார்வையாளர்கள், நிர்வாகிகள் அனுமதியுடன் வைத்திருக்கலாம்...
அல்லது, அனைத்துக் கணக்குகளும் தடை செய்யப்படும் என்று மன்ற விதிகளில் உள்ளது... நண்பரே...
கவனத்திற்கொள்க...

இளசு
02-08-2007, 10:21 PM
இறைவன் அல்லது இயற்கை..
எத்தனையோ சீற்றங்கள்.. மாற்றங்கள்..
பல புரிந்துகொண்டாலும்
சில ஏற்கமுடியாதவை..

குழந்தைகள் − இறந்தே பிறப்பது, குறைகளுடன் பிறப்பது..
குறை அறிவுடன் ஆனால் முழு உடலுடன் வளர்வது...


ஏன் இறைவா? ஏன் இப்படி?
என்ன உன் பாடம்?
படிப்பிக்கக் கருவிகளாய்
பாவப்பட்ட குழவிகளா?


உரு(லு)க்கும் கவிதை.. பாராட்டுகள் ரிஷிசேது!

இலக்கியன்
03-08-2007, 08:04 AM
வேதனைதரும் கவி மிகவும் நன்றாக உள்ளது ரிஷிசேது

ஓவியன்
03-08-2007, 08:25 AM
அன்பான ரிஷி!

பாரமான கருவைச் சுமந்து உங்கள் வரிகள்........!

பாராட்டி நன்றாக உள்ளது என்றும் சொல்ல முடியாத நிலையில் நான்........!
உங்கள் வேதனைகளுடன் நானும் பங்கெடுக்கிறேன்.

அன்புடன்
ஓவியன்.