PDA

View Full Version : சிங்கத்தைக் கொன்ற தைரியப் புலிகள்அதிரடி அரசன்
01-08-2007, 03:14 PM
சிங்கத்தைப் பிடிச்சிக் கொல்றது ஒன்னும் அவ்வளவு கஷ்டம் இல்லை நண்பர்களே. நம்பாளுங்க என்ன செய்றாங்கன்னு பாருங்களேன்.

ரஜினிகாந்த் :
சிங்கத்தின் முன்னால் நின்று கர்ஜிக்கிறார். ஏஏநான் எப்போ வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா வருவேன்தெரியுமில்ல பாஷா.ம்ம்ம்ம்மாணிக் பாஷா. சொல்லிவிட்டு அவர் எஸ்கேப் ஆகிவிட, பயந்துபோன சிங்கம் அவர் எப்போ வருவாரோ, எப்படி வருவாரோ என்ற பயத்தில் இருந்தே செத்துப்போனது. ஆனால் கடைசிவரை தலைவர் வரவேயில்லை என்பது வேறுவிஷயம்.

மணிரத்னம் :
சிங்கத்தை ஒரு இருட்டறையில் தள்ளுகிறார். அது வெளியே செல்ல முயற்சிக்கிறது. உடனே ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்துகிறார். அந்த வெளிச்சத்தில் மெல்ல சிங்கத்தின் காதுகளுக்கு மட்டும் கேட்குமாறு ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டும் முணுமுணுக்கிறார். சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கிறார். டார்ச்சர் தாங்காத சிங்கம் தற்கொலை செய்து கொள்கிறது.

சாப்ட்வேர் எஞ்சினியர் :
ஒரு பூனையைப் பிடித்துக்கொண்டு வருகிறார். ப்ளாக்பாக்ஸ் டெஸ்டிங்க், ஒயிட் பாக்ஸ் டெஸ்டிங், யூனிட் டெஸ்டிங், சிஸ்டம் டெஸ்டிங் என எல்லா வகை டெஸ்டிங்கும் பண்ணிப்பார்க்கிறார். கடைசியில் தான் பிடித்துக்கொண்டுவந்தது சிங்கம்தான் என அடித்துக் கூறுகிறார். அதற்கு முன்னூத்தி சொச்சம் பக்கங்கள் உள்ள உதவிக் கையேட்டையும் கொடுக்கிறார். அது சிங்கமல்ல என ஒருவர் கம்ப்ளைண்ட் செய்ய, நம்மவர் கூலாக சொல்கிறார். அப்படியா! அடுத்த வெர்சனில் அதை சிங்கமாக மாற்றிவிடுவோம். உங்களுக்கு ப்ரீ அப்கிரேட் செய்துதருகிறோம்

இந்தியப்போலிஸ் :
இவர் ஒரு விலங்கைப் பிடித்துவிடுவார். அதை உருட்டி, மிரட்டி, கொன்னுடுவேன் என டார்ச்சர் செய்து, முட்டியைப் பெயர்த்தெடுத்துவிடுவார். குத்துயிரும் கொலையுயிருமாகக் கிடக்கும் அந்த விலங்கு இறுதியில் தான் சிங்கம் தான் என ஒத்துக்கொண்டுவிடும். வேறுவழி :-)

விஜயகாந்த் :
சிங்கத்தை உட்கார வைத்துக்கொண்டு அடுக்குகிறார் : தமிழ்நாட்டுல பதிமூணு ஜூ இருக்கு. அதுல ஏழு கவர்மெண்டு. ஆறு தனியார். முன்னூத்தி இருபத்தெட்டு குகைங்க அதுல இருக்கு. அதுல எழுநூறு சிங்கங்கள் இருக்கு. 1996ல இருந்தது ஆயிரத்து முன்னூறு சிங்கங்கள். இப்போ 2006ல இருக்கறது..அவர் பேசி முடிக்கவில்லை, சிங்கம் நாண்டுக்கிட்டு சாகிறது.

மேனகா காந்தி :
ஆபத்திலிருக்கும் சிங்கத்தைக் காப்பாற்றி தன் வீட்டுக்குக் கொண்டுவந்து விடுவார். அதோடு நில்லாமல் அதற்குப் பசியெடுக்கும் போது வேளாவேளைக்கு காய்கறிகளும் பழங்களும் கொடுத்து அதைக்கொல்லாமல் கொல்லுவார்.


ரவிசாஸ்திரி :
சிங்கத்தைக் கிரிக்கெட் விளையாடக் கூப்பிடுவார். அது பவுலிங் போட இவர் பேட்டிங் செய்வார். சுமார் இருநூறு பந்துகள் போட்டபின் ஒரு ரன் எடுத்துவிடுவார். சிங்கம் இவர் காலடியில் சரண்டர் ஆகிவிடும்.

ஜார்ஜ்புஷ் :
ஒரு கிழட்டுச் சிங்கத்தைக் கொன்றுவிடுகிறார். எல்லோரையும் கடிச்சிக் குதறிக்கிட்டு இருந்த சிங்கத்தைக் கொன்னுட்டேன் என எக்காளமிடுகிறார். இறந்துபோன சிங்கத்தை டெஸ்ட் செய்கிற டாக்டர்கள், அதற்குப் பிறவியிலேயே பல் கிடையாது என அறிவிக்கின்றனர்.


:medium-smiley-029:

அமரன்
01-08-2007, 03:21 PM
எல்லாம் சரிங்கப்பு எதுக்குங்க சார்சுபுஸ்சை நம்மாளு ஆக்கினீங்க...ஒவ்வொன்றும் அதிரடிதாங்க..

அதிரடி அரசன்
01-08-2007, 06:04 PM
கோவிந்தா இந்தி நடிகர்

சிங்கத்து முன்னாடி ஒரு நாள் முழுக்க ஆடிட்டே இருந்தாரூ.....அவ்லோதான் சிங்கம் அங்கேயே தூக்கு மாட்டிக்கிட்டு செத்து போச்சி...

சிவா.ஜி
02-08-2007, 04:08 AM
இவிங்கல்லாம் ஏதாவது செஞ்சாதான் சிங்கம் சாகும் நம்ம வீராசாமியப் பாத்தாலே சிங்கம் செத்துபோய்டும்.

ஷீ-நிசி
02-08-2007, 04:46 AM
இவிங்கல்லாம் ஏதாவது செஞ்சாதான் சிங்கம் சாகும் நம்ம வீராசாமியப் பாத்தாலே சிங்கம் செத்துபோய்டும்.

ஹா ஹா இத மறந்துட்டீங்களே அதிரடி!:natur008:

மன்மதன்
02-08-2007, 05:31 AM
அசத்தலான அதிரடியான காமெடி அ.அரசரே..!!

இதயம்
02-08-2007, 05:39 AM
இவிங்கல்லாம் ஏதாவது செஞ்சாதான் சிங்கம் சாகும் நம்ம வீராசாமியப் பாத்தாலே சிங்கம் செத்துபோய்டும்.

ஏன் சிங்கத்திற்கும், கரடிக்கும் ஆகாதோ..?!!:icon_hmm:

pradeepkt
02-08-2007, 06:25 AM
அ.அ.
ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சும்மா உங்க பதிவுகளைப் படிச்சாலே அதிருதுங்க...
ஹி ஹி நாம கொஞ்சம் சத்தம் போட்டுச் சிரிக்கிறோம் பாருங்க.. அப்புறம் அதிராம என்ன செய்யும்??? :)

lolluvathiyar
02-08-2007, 07:33 AM
சிங்கம் அசிங்கமாயிடுச்சு

அதிரடி அரசன்
02-08-2007, 08:05 AM
நம்ம வீராசாமி

என்ன பாக்குர சிங்கம்
என் பக்கத்துல வந்தா ஆயிடுவ அசிங்கம்
ஆனாலும் நீயோ ஒரு பெண் சிங்கம்
அதனால எனக்கு வந்துடும் பங்கம்......

இப்படி பேசிக்கிட்டு இருக்கும் போதே சிங்கம் காலி.......

ஓவியன்
02-08-2007, 01:52 PM
இதே விடயத்தை நம்ம ராஜா அண்ணா ஏற்கனவே தனது பார்வையில் தந்திருக்கார்...........

இந்த திரியில்.................

http://www.tamilmantram.com/vb/showthread.php?p=197586#post197586


ஒரு சிங்கத்தை எவ்வாறு கொல்வது ?
பல்வேறு முறைகள்
ரஜினிகாந்த் முறை:
1) இதோ தாக்கப்போறேன், இதோ அடிக்கப்போறேன் என்று எச்சரித்துக்கொண்டே இருக்கவேண்டும். சிங்கம், பயத்திலேயே வாழ்ந்து பயத்தாலேயே இறந்துவிடும்
2) இல்லையென்றால், ரஜினி முகத்தில் போட்டிருக்கும் மேக்கப்பை எடுத்து சிங்கத்தின் மீது போட்டுவிட்டால் போது, எடை தாங்காமல் உயிரைவிட்டுவிடும்
கமலஹாசன் முறை:
சிங்கத்தின் அருகே சென்று நாயகன் ஸ்டைலில் கதறி அழவேண்டும். துக்கம் தாங்காமல் செத்துவிடும் சிங்கம்
இல்லாவிட்டால் கமல் முத்தம் கொடுக்கப் போகிறார் என்று வதந்தியைக் கிளப்பி விடலாம்.. சிங்கம் அதிர்ச்சியில் செத்து விடும்.
ஜெயலலிதா முறை:
இரவு 2 மணிக்கு, போலீஸ் கமிஷனர் முத்துக்கருப்பனைக்கொண்டு தூங்கிக்கொண்டிருக்கும் சிங்கத்தைக் கொல்வதுதான்.
அல்லது ஹெலிகாப்டரில் அடிக்கடி காட்டுப் பக்கம் சுற்றி வந்தால், ஹெலியின் நிழலுக்கு காலில் விழுந்து விழுந்து களைத்துப் போய் செத்துவிடும்.
கருணாநிதி முறை :
முதலில் சிங்கத்தை உடன் பிறப்பாக்க வேண்டும். ஆக ஒரு மாதம் தொடர்ந்து, 'என் சிங்கமே, என் உடன் பிறப்பே ' என்ற ரீதியில் கடிதங்கள். பிறகு, ஜெயலலிதாவின் வழக்கமான அட்டகாசத்தை காரணமாக வைத்து, 'சிங்கமே, என் உடன் பிறப்பே.. நீ எனக்காக தற்கொலை செய்து கொள்ளாதே ' என்ற ரீதியில் கடிதம் வந்ததும், தலைவர் தன்னை தற்கொலை செய்து கொள்ள சொல்கிறார் என்பதை தெளிவாகப் புரிந்து கொண்டு, சிங்கம் தற்கொலை செய்து கொள்ளும். அவ்வளவுதான்.
மணிரத்னம் முறை:
சிங்கத்துக்கு சூரிய வெளிச்சமே காட்டக்கூடாது. ஒரே ஒரு மெழுகுவர்த்தியை கொளுத்தி வைத்து இருட்டறையில் அதனிடம்
செத்துடு...
மொத்தமா செத்துடு..
ரத்தம் வராம செத்துடு
என்று ஓரிரு வார்த்தைகளுக்கு மேல் போகாமல் சுகாசினி டப்பிங்கில் பேசிக்கொண்டே இருக்கவேண்டும். எரிச்சலில் தற்கொலை செய்துகொண்டுவிடும்.
பாலச்சந்தர் முறை:
ஒரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள். நமது சிங்கமும், பெண் சிங்கமும் காதலில் விழும். இன்னொரு பெண் சிங்கத்தை காட்டுக்கு அனுப்புங்கள், அப்புறம் இன்னொரு பெண் சிங்கத்தை. அப்புறம் ஒரு ஆண் சிங்கத்தை. முதல் ஆண் சிங்கம் இரண்டாவது பெண் சிங்கத்தை காதலிக்கும். முதல் பெண்சிங்கம் இரண்டாவது ஆண் சிங்கத்தை காதலிக்கும். சரி, இப்போது உங்கள்ளுக்குள் என்ன உறவுமுறை என்று கேளுங்கள்...
குடும்பமே கூட்டமாக் தற்கொலை செய்துகொள்ளும்.
பாரதிராஜா முறை:
நெப்போலியனை அனுப்பி திருப்பாச்சி அருவாளால் ஒரே போடு. அவ்வளவு தான். தீர்ந்தது.
இல்லாவிட்டால் அவர் மகன் ஆணழகன் மனோஜ் நடிக்க ஒரு படம் தயாரிக்கிறியா..? என்று கேளுங்கள்.. சிங்கம் வாழ்க்கையை முடித்துக் கொள்ளும்.
சங்கர் முறை:
சிங்கத்தை ஆஸ்திரேலியா அல்லது அமெரிக்காவுக்கு அனுப்பி அங்கே சுவிட்ஸர்லாந்து ஆல்ப்ஸ் மலை செட்டிங் போட்டு, நல்ல அழகான லொகேஷனில் கம்ப்யூட்டர் அனிமேஷனில் எலும்பு தனி சதை தனியாக பிரிக்க வேண்டியதுதான்.
அல்லது சிவாஜி ரிலீஸ் எப்போ என்று கேளுங்கள்.. சிங்கம் பரலோகப் பிராப்திதான்...!

அதிரடி அரசன்
02-08-2007, 02:36 PM
தவருக்கு வருந்துகிரேன் ஓவியரே

மனோஜ்
02-08-2007, 02:58 PM
சிங்கம் சுவிங்கம் ஆகிவிட்டது

உதயசூரியன்
02-08-2007, 03:02 PM
என்னது இது மறு ஒளிபரப்பா...

வாழ்த்துகள்
வாழ்க தமிழ்

அதிரடி அரசன்
02-08-2007, 03:28 PM
என்னது இது மறு ஒளிபரப்பா...

வாழ்த்துகள்
வாழ்க தமிழ்

என்னங்க நீங்கலே இப்படி சொல்ரிங்க.... தினமும் வரும் உங்கலையே பாக்குரோம்... மறு ஒளிபரப்ப பாக்க மாட்டிங்கல? (சும்மா ஜோக்குக்கு சொன்னேன்) :nature-smiley-008: