PDA

View Full Version : சர்கம்சிஷன் எச் ஐ வி தொற்றலைக் கட்டுப்படĬ



சுட்டிபையன்
01-08-2007, 02:56 PM
(Circumcision) எச் ஐ வி தொற்றலைக் கட்டுப்படுத்துகிறது..?!


உலகெங்கும் பல மில்லியன் மனிதர்களைத் தாக்கியுள்ள எச் ஐ வி எனும் எயிட்ஸ் நோய்க்கான வைரஸின் தொற்றுகை (Circumcision) செய்யப்பட்ட ஆண்களில் குறைத்துள்ளதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இருந்த போதும் இந்த ஆய்வு முடிவுகள் இன்னும் பல தடவைகள் உறுதிப்படுத்தப்பட வேண்டிய நிலையில் இருக்கின்றன.

இது செய்யப்பட்ட ஆண்களின் பாலுறுப்பின் முற்பகுதியில் உள்ள கலங்கள் உணர்வு குறைந்து போவதும் குருதி இழப்ப ஏற்படுவதைத் குறைக்கும் வகையில் தடிப்பாவதும் எச் ஐ வி வைரஸ் தொற்றுவதைத் குறைத்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கருத்துக் கூறி உள்ள போதும், இவை இன்னும் சரி வர நிரூபிக்கப்படவில்லை.

மேற்குறிப்பிட்ட ஆய்வு முடிவை நடைமுறைச் சாத்தியமாக்குவதில் சில சிக்கல்கள் இருப்பதுடன் இவ்வாய்வு முடிவு மீண்டும் பாதுகாப்பற்ற பாலியல் உறவுகளுக்கு மனிதர்களை இட்டுச் செல்லின் அது எச் ஐ வி பெருக்கத்தையே அதிகரிக்கச் செய்துவிடும் என்றும் அபாய எச்சரிக்கை செய்யப்படுகிறது.

http://news.bbc.co.uk/1/hi/health/6176209.stm


http://news.bbc.co.uk/1/hi/health/6176209.stm

விகடன்
04-08-2007, 11:35 AM
செய்துகொண்டோர் சந்தோஷப்பட வேண்டிய செய்தியோ இல்லையோ கவலைப்படத் தேவையில்லை.

lolluvathiyar
04-08-2007, 12:04 PM
நம்ப முடியவில்லை.
சுன்னத் செய்தாலும் ஏய்ட்ஸ் பரவியே தீரும்.

இதயம்
04-08-2007, 12:31 PM
முதலில் ஒரு சிறு திருத்தம்: ஆங்கிலத்தில் Circumcision என்றழைக்கப்படும் இந்த ஆண் பாலுறுப்பின் முன் தோல் நீக்க நிகழ்வு அரபு வார்த்தையான சுன்னத் என்ற பெயரை கொண்டு தவறாக அழைக்கப்படுகிறது. இது பற்றிய விளக்கத்தை நான் ஏற்கனவே இஸ்லாம் மார்க்கம் - ஒரு பார்வை-ல் எழுதியிருக்கிறேன். அதன் சுட்டி கீழே...

http://www.tamilmantram.com/vb/showpost.php?p=213097&postcount=26

இஸ்லாமில் அந்த நிகழ்வுக்கு பெயர் "ஹத்னா" என்பது தானே தவிர சுன்னத் அல்ல..! அரபு மொழியில் சுன்னத் என்றால் ஒரு செயல் செய்தால் சிறப்பு, செய்யாவிட்டால் குற்றமில்லை என்று பொருள் படும். இஸ்லாம் மார்க்கத்தில் ஹத்னா செய்தால் சிறப்பு என்பதால் அதை சுன்னத் என்று அழைக்க தொடங்கி, இறுதியில் அதுவே அதன் பெயராகிவிட்டது.

ஹத்னா செய்வதால் எயிட்ஸ் வராது என்பதெல்லாம் வடிகட்டிய பொய். அப்படி அது உண்மையாக இருந்தால் எயிட்ஸ் பீதியால் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டிருக்கும் உத்தமபத்தர்கள்(!) ஹத்னா செய்து கொண்டு ஊர் மேய தொடங்கியிருப்பார்கள்.!!! ஹத்னா செய்வது பால்வினை நோய்கள், பாலின உறுப்புகளில் சுகாதாரமில்லாமல் வரும் நோய்களுக்களுக்கான வாய்ப்பை தடுக்கிறதே தவிர எயிட்ஸை தடுப்பதில்லை. அதே போல் ஹத்னா செய்வதன் இன்னொரு முக்கிய நோக்கம் உடலுறவு இன்பத்தை முழுவதுமாக துய்க்கவும் அது வழி ஏற்படுத்துகிறது. ஹத்னா செய்வதன் மூலம் உயிர்த்திரவம் எளிதில் வெளிப்படாமல் தடுத்து உடலுறவு இன்பத்தை வெகுநேரம் நீடிக்க வைக்கிறது.

மற்றபடி ஹத்னா செய்வது எயிட்ஸை முழுமையாக தடுக்கிறது என்பதெல்லாம் உண்மை இல்லவே இல்லை.

தங்கவேல்
10-08-2007, 07:45 AM
ஹத்னாவா, அட சாமி. யாராவது அதை பார்த்து இருக்கீங்களா ? உரலில் உட்காரவைத்து கத்தியால அறுக்கும் போது.. பையன் கத்துவான் பாருங்க.. வாழைப்பழத்தை வாயில் அமுக்கி, அப்பப்பா... கொடூரம்ய்யா கொடூரம்.. ஒரு முறை என் நண்பனுக்கு நடந்ததை பார்த்து நடு நடுங்கி போயிட்டேன்.

lolluvathiyar
10-08-2007, 08:04 AM
உரலில் உட்காரவைத்து கத்தியால அறுக்கும் போது.. பையன் கத்துவான் பாருங்கஅப்பப்பா... கொடூரம்ய்யா கொடூரம்..

அதை ஏன் தங்கவேல் கொடுமைனு சொல்லனும்
காது குத்தும்போது கூட குழந்தைகள் அழுகும் அல்லவா
அதுக்கெல்லாம் நடுங்கலாமா

அறிஞர்
10-08-2007, 03:22 PM
ஹத்னாவா, அட சாமி. யாராவது அதை பார்த்து இருக்கீங்களா ? உரலில் உட்காரவைத்து கத்தியால அறுக்கும் போது.. பையன் கத்துவான் பாருங்க.. வாழைப்பழத்தை வாயில் அமுக்கி, அப்பப்பா... கொடூரம்ய்யா கொடூரம்.. ஒரு முறை என் நண்பனுக்கு நடந்ததை பார்த்து நடு நடுங்கி போயிட்டேன்.


அதை ஏன் தங்கவேல் கொடுமைனு சொல்லனும்
காது குத்தும்போது கூட குழந்தைகள் அழுகும் அல்லவா
அதுக்கெல்லாம் நடுங்கலாமா

இந்த பதிவில் இது போன்ற கருத்துக்களை தவிர்க்கலாமே... கூறப்பட்ட எண்ணத்திற்கு ஏற்ப பதிவு கொடுங்களேன்..

ஜோய்ஸ்
10-08-2007, 03:37 PM
விருத்தசேதனம் செய்வதால் மட்டும் உயிர்க்கொல்லி நோயான எய்ட்சை தடுக்க முடியாதுதான்.இது வெறும் கட்டுக்கதை.நன்பர் இதயம் சொல்லியிருப்பது முற்றிலும் சரியான வாதம்.

தங்கவேல்
11-08-2007, 12:59 AM
வாத்தியார் நீங்கள் சொல்லுவது உண்மைதான். மறுக்கமுடியாது. கருத்து பரிமாற்றம் என்று வரும்போது சிலவற்றை சொல்லலாம் அல்லவா. அறிஞர் அவர்களே, உண்மையில் நடந்ததைத்தான் எழுதினேன். இதில் மற்றவர்கள் புண்பட ஒன்றும் இல்லை என நம்புகிறேன். சரி. எனக்கு இந்த காதுகுத்து, ஹத்னாவில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இதை செய்யாமாலே எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். மதங்களை நம்புவதை விட, மனிதர்களை நம்பினால் போதும் என்று நினைப்பவன். எந்த ஒரு மதமும் மனிதன் துன்பப்படும்போது காப்பாற்ற வராது. இதயமுள்ள மனிதன் தான் வருவான். இத்துடன் முடித்து விடுகிறேண்.

சக்திவேல்
11-08-2007, 04:26 AM
இதை வயது வந்தோருக்கான பகுதிக்கு மாற்றி சற்று விளக்கமாக சொல்லுங்களேன், ஓரளவுக்கு புரிந்த்தும் புரியாமலும் இருக்கு. எதை அறுப்பார்கள்?

இதயம்
11-08-2007, 04:30 AM
வாத்தியார் நீங்கள் சொல்லுவது உண்மைதான். மறுக்கமுடியாது. கருத்து பரிமாற்றம் என்று வரும்போது சிலவற்றை சொல்லலாம் அல்லவா. அறிஞர் அவர்களே, உண்மையில் நடந்ததைத்தான் எழுதினேன். இதில் மற்றவர்கள் புண்பட ஒன்றும் இல்லை என நம்புகிறேன். சரி. எனக்கு இந்த காதுகுத்து, ஹத்னாவில் எல்லாம் நம்பிக்கை இல்லை. இதை செய்யாமாலே எத்தனையோ கோடிக்கணக்கான மக்கள் வாழ்கிறார்கள். மதங்களை நம்புவதை விட, மனிதர்களை நம்பினால் போதும் என்று நினைப்பவன். எந்த ஒரு மதமும் மனிதன் துன்பப்படும்போது காப்பாற்ற வராது. இதயமுள்ள மனிதன் தான் வருவான். இத்துடன் முடித்து விடுகிறேண்.

தங்கவேல் அவர்கள் ஹத்னா பற்றி எழுதியதில் எந்த தவறும் இல்லை. காரணம், அவர் பார்த்து உணர்ந்ததை மட்டும் எழுதியிருக்கிறார். அதன் பயனை அனுபவித்திருந்தால் அதைப்பற்றியும் நிச்சயம் எழுதியிருப்பார். தங்கவேல் அவர்கள் சொன்ன ஹத்னா செய்யப்படும் முறையெல்லாம் பழங்கதை. இப்போது அதற்கென்று விழா எடுக்கும் முறையெல்லாம் வழக்கொழிந்து விட்டது. குழந்தை பிறந்த சில நாட்களிலேயே ஆஸ்பத்திரியில் வைத்து சிறு ஆபரேஷன் மூலம் டாக்டர் ஹத்னா செய்து விடுகிறார்கள். மனிதர்களின் நன்மைக்காக செய்யப்படும் இது போன்ற விஷயங்கள் அது செய்யப்படும் போது கிடைக்கும் துன்பத்தையும் சகிக்க தயாராக இருக்க வேண்டும்.

ஹத்னா என்பதின் மேல் நம்பிக்கை வைக்க இது மதச்சடங்கு அல்ல, மருத்துவ நன்மை..! இதனால் ஏற்படும் நன்மையை கருதியே இஸ்லாம் இதை செய்ய வலியுறுத்துகிறது. இதைச்செய்யாமலும் ஒருவன் சிறந்த முஸ்லீமாக இருக்க முடியும். ஆனால், அதனால் ஏற்படும் நன்மைகளை அவன் இழப்பான். அவ்வளவு தான்..! இன்றைய காலகட்டங்களில் எல்லாவகையான மதத்தை சேர்ந்தவர்களும் அதன் நன்மையை மனதில் கொண்டு வயது வந்த பிறகும் ஹத்னா செய்து கொள்கிறார்கள். எனக்கு தெரிந்து ஃபிலிப்பினோக்கள் இதை அதிகம் செய்து கொள்கிறார்கள். பிறப்புறுப்பில் அடைப்பு போன்ற பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு மருத்துவர்கள் முதலில் ஹத்னா செய்யவே வலியுறுத்துகிறார்கள். எனவே ஹத்னாவை மதரீதியாக அணுகுவதை விட மருத்துவ ரீதியாக அணுகுவதே சிறப்பானது.

இதயம்
11-08-2007, 04:35 AM
இதை வயது வந்தோருக்கான பகுதிக்கு மாற்றி சற்று விளக்கமாக சொல்லுங்களேன், ஓரளவுக்கு புரிந்த்தும் புரியாமலும் இருக்கு. எதை அறுப்பார்கள்?

வெங்கட்..! மருத்துவ ரீதியான ஹத்னா பற்றி சொல்ல, மருத்துவ பகுதியில் இட்டதே சிறப்பு, பொருத்தமும் கூட. இதை பண்பட்டவர் பகுதிக்கு மாற்றி, நிறைய நண்பர்கள் ஹத்னா என்ற பயனுள்ள விஷயம் பற்றி அறிந்து கொள்வதை தடுக்க வேண்டாம்.

சக்திவேல்
11-08-2007, 04:45 AM
சரி இதுகுறித்த விளக்கமான தளமுகவரியின் சுட்டியாவது தாருங்களேன். படித்து தெரிந்துகொள்கிறேன்.

இதயம்
11-08-2007, 04:53 AM
சரி இதுகுறித்த விளக்கமான தளமுகவரியின் சுட்டியாவது தாருங்களேன். படித்து தெரிந்துகொள்கிறேன்.

ஹத்னா செய்யப்படும் முறை, அதன் பயன்கள், அதனால் தடுக்கப்படும் நோய்கள் என்று அதன் அதிகபட்ச பயன்களை விளக்க என்றே ஒரு தளம் இருக்கிறது. அது http://www.circinfo.net/ படித்து பயனடையுங்கள்.

ஹத்னா பற்றி மேலதிக விபரமறிய இங்கே (http://www.google.com/search?hl=en&safe=off&rlz=1B2GGFB_enSA227SA227&q=benefits+of+circumcision&btnG=Search) சொடுக்குங்கள்..!

சக்திவேல்
11-08-2007, 12:22 PM
தகவலுக்கு நன்றி இதயம் அவர்களே.