PDA

View Full Version : திசைமாறிய பாதைகள். 1,2,3,4வெண்தாமரை
01-08-2007, 12:49 PM
திசைமாறிய பாதைகள். 1

--------------------------------------------------------------------------------

எனது அருமை தோழி பெயர்: மகாலெட்சுமி. பெயருக்கு ஏற்றாற்போல் மகாலெட்சுமிதான்.. சுருக்கமாக மகா என்று அழைப்போம். பத்தாம் வகுப்பு வரைதான் படிப்பு. ஆனால் நிறைய புத்தசாலிதனம்.. விரைவில் புரிந்துகொள்ளும் கற்பூறபுத்தி. சுமாரான நிறம். அழகான கண்கள். படபடவெடன பேசும் சுபாவம்.. ஆனால் அத்தனை பேச்சிலேயும்
ஒரு சுவாரஸ்யம்.. யாருக்கும் அவளுடன் பேசி கொண்டே இருக்கலாமா? என தோன்றும்.மொத்ததில் கம்பம் வடித்த கவிதை நீ என்று கூட சொல்லலாம். இப்போது பரந்து விரிந்து கிடக்கும் நவீன யுகத்தில் உண்மையான காதல் சாத்தியமா? சாட்டிங் உலக நட்பு வளையம் அதில் அவளும் சிக்கினாள்.. உண்மையாக விரும்பி இப்போது அவனை தவிர வேறு யாரையும் மனதில் நினைக்காமல் வாழவும் முடியாமல் சாகவும்

முடியாமல் தவிக்கும் ஒரு பேதையின் கதை. பெண்ணாய் பிறந்தாலே பாவம்தான் போல.. அவளது குடும்பம் சுத்த பட்டிகாடு.. அம்மா அப்பா யாவரும் படிக்காதவர்களே..அவளுக்கு 3 அண்ணன்கள்..கடைசியாக அவள்தான்.. அவர்களுக்கு பெண் குழந்தை என்றாலே பிடிக்காது.. பிறந்துவிட்டாள். என்ன செய்ய பெத்த கடமைக்கு வளர்ந்துதானே ஆகவேண்டும். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் என்ற பேதமை இருந்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துகொள்வில்லை.. 10-வகுப்பு முடிந்ததது. 10-ம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் வாங்கி அவளுக்கு டாக்டர் ஆக வேண்டும் ஆசை. ஆனால் அவளது பெற்றோர்
முட்டுகட்டை.. இதே நேரத்தில் அவளுக்கு முந்திய அண்ணன் பத்தாம்வகுப்பு தான் ஆனால் பெயில்.. அழுதாள்புரண்டாள் முடியாது என்றனர்.. அவளது அண்ணைனை டுட்டோரியல் வகுப்பில் சேர்த்தனர்.. போக மாட்டேன் என்றவனை வலுகட்டாயமாக அனுப்பினார்.. ஏக்கமே
வடிவாக நின்றாள்.அதிலேயும் தோல்விதான்.. இப்படி 2 தடவை அனுப்பியும் அவன் தேறவேயில்லை.
அப்போதுதான் நீ வீட்டில் இருக்க வேண்டும் கம்புயூட்டர் சென்டரில் டைப் பண்ண போ என்றார் அவளது அம்மா. இதுதான் நல்ல தருணம் என்று சரி சொன்னாள்.. வேலைக்கு சேர்ந்த 2 மாதத்தில் கம்ப்யூட்டரை நன்றாக கையாள கற்றுக்கொண்டாள்..

அவளை வேலைக்கு சேர்;த்திருக்கும் முதலாளியோ சிறுவயது முதலே நன்றாக இவளை அறிந்தவர் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் அவளை பார்த்துக் கொண்டார். அவளது அத்தனை செலவுகளையும் செய்தார். தன் மகளை போல வளர்த்தார். இப்போது அவள் ஒரு டிகிரி

முடிக்காத சாப்ட்வேர் இன்ஜீனியர். அவளது திறமை அவளிடம்.. ஆனால் புயல் வீசிக்கொண்டுதான் இருக்கிறது இன்னமும்.. விவரம் தெரிந்த நாளில் இருந்து தாய் பாசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்ததால். தனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் முதலாளியை அப்பா என்றே அழைத்தாள்.
இந்த தருணத்தில் சாட்டிங் போவது பொழுதுபோக்கு ஒரு 3 வருடங்களுக்கு முன்னால் சாட்டிங்கில் அவனை சந்தித்தாள். பாத்ததும் பிடித்து போய்விட அவன் அவளிடம் கேட் வார்த்தை நாம கல்யாணம் பண்ணிக்கொள்ளாலாமா? இவளும் சரி என்று சொல்லவில்லை. முடிந்தால் என்னை தேடி வந்து என் அப்பாவிடம் முறைப்படி பெண் கேள் என்றாள்.. அவனும் சரி என்றாள். இவள் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள்.. ஆனால் அது விளையாட்டு அல்ல விதி என்று பிறகுதான் தெரிந்ததது. வானில் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாக இருந்தவள் அவனைப் பார்த்ததும் விட்டில் பூச்சியாகி விட்டாள்.. மறுநாள் காலையில் அலுவலக வாசலில் அவன் பிரமிக்கும் ஆச்சர்யம்.. நீங்க எப்படி இங்க என வார்த்தைகள் வராத நிலை..

ஆம்; அலுவலக வாசலில் நின்று கொண்டு அவளது செல்பேசிக்கு தகவல் கொடுக்கிறான் நான் உன் ஊரில்தான் இருக்கிறேன். அதுவும் உன் அலுவலக வாசலில்தான். அதுவும் விளையாட்டுக்கு என எண்ணுகிறாள். பின்னர் செல்பேசியை அவனுடன் பேசியபடியே வெளியே
வருகிறாள்.. ஆமாம் அவனேதான்.. அவன் அவன் என்கிறேன்.

யார் அந்த அவன்........................................? ???

ஆமாம் சிங்காரசோலையாம் சென்னையை பிறப்பிடமாக கொண்டவன்.. பெயர்:ஜீவா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). உயரம்: 6.25 படிப்பு: பாலிடெக்னிக் முடித்து தொலைநிலைக்கல்வியில் இளநிலை பயில்பவன்.. 3-வருடத்திற்கு முன்னால் இராணுவத்தில் பணிபுரிந்தவன்.. உடன் பிறந்தோர்: ஒரு

அண்ணன்.. பெற்றோர்கள்: அம்மா வீட்டு அதிகாரி அப்பா - மளிகை கடை வைத்திருப்பவர்.. இத்துடன்

அவர் வேறு மதத்தை சார்ந்தவர். அம்மா இளநீர் என்றால் அப்பா வெந்நீர் ரொம்ப கண்டிப்பானவர். இனி இவர்களைப்பற்றி.. சாட்டிங்கில் தன்னைப்பற்றி முழு விபரங்களையும் சொன்னாள்.. அத்தோடு தன் நிலைமையையும் எடுத்துரைத்தாள்.. நேரில் வந்தவனை பார்த்தவளுக்கு கண்ணீர் தான் வந்தது.. பார்த்ததும் கதறி அழுதுவிட்டாள்.
உடனே கண்ணீரை துடைத்துவிட்டான்.. கண்ணீரை துடைத்துவிட்டு உன் அப்பா எங்கே என்றான்.. இப்போது வந்துவிடுவார்.. உட்காருங்கள் என்று பக்கத்தில் இருந்த நாற்காலியை காட்டினாள்.. அப்புறம் அம்மா அண்ணன்கள் பற்றி தனது வாழக்கையை பற்றி சொன்னாள்.. அவன் தன்னை உண்மையாக நேசிப்பதாக நினைத்து.... பின்னர்

அவளது அப்பா வந்தார்.. இயல்பான உரையாடல் பின்னர் அவனிடம் நீ அவளை உண்மையாக விரும்புகிறாயா. பழகி கொஞ்ச நாளில் இவளை உனக்கு பிடித்துவிட்டதா என்றார்.. அப்படி என்ன குணங்கள் உனக்கு பிடித்துவிட்டது. என்றார்.

அதற்கு அவன் உங்கள் பெண்ணின் எளிமை எனக்கு பிடித்திருக்கிறது. அழகு பிடித்திருக்கிறது. அப்புறம் பண்பு பிடித்திருக்கிறது.. என்றான்.. சரி உங்கள் வீட்டில் இது தெரியுமா என்றார். இல்லை இனிமேல்தான் சொல்ல வேண்டும்.. சரி நீங்கள் வீட்டில் சொல்லி ஒரு முடிவு வரும்வரை நீங்கள் இருவரும் அதுவரை நண்பர்களே! என்று சொல்லிவிட்டு சென்றார்.. பின்னர் அவள் அவனிடம் நீங்கள் உங்கள் வீட்டில் சொல்லி என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்னை
விட்டு விட மாட்டீர்களே! என்றாள்.. அதற்கு மாட்டேன்.. இது உன் மீது சத்தியம் என்று சத்தியம் செய்தான்.. அத்துடன் எனக்கு நேரமாகி விட்டது நான் புறப்படுகிறேன் என கூறி நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு சென்றான்.. பின்னர் அவர்கள் நண்பர்களாக அல்ல காதலர்களாக கோலம் மாறினார்கள்..
நேரம் போதவில்லை..

தொடரும்.........

திசைமாறிய பாதைகள் - 3

--------------------------------------------------------------------------------

அப்புறம் என்ன அவன் நிழல் மறையும் வரை டாட்டா காட்டி கொண்டிருந்தாள்.. அவனது வந்தது ஞாயிற்றுக்கிழமை ஆனதால் அவனை என்னால் பார்க்க முடியவில்லை. ஒரிரு தடவை புகைப்படத்தில் பார்த்ததோடு சரி. மறுநாள் நான் அலுவலகம்
வந்தததும் ரொம்ப பெருமையாக சொன்னாள். அவர் வந்தார்.. நான் அதற்கு எவர் அவர் என்ன அவர் இப்போது அவர் உன் நண்பன்.. தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதே.. சைபர் சாட் மிகவும் மோசமானது.. அதில் சிக்கினால் உயிரைதான் விடவேண்டும். நீ என் தோழி இல்லை சகோதரி உன் நன்மைகாகத்தான் சொல்கிறேன்

கேள்.. அவளோ கேட்கவில்லை. நாளுக்குநாள் தொலைபேசி வழி தகவல் அதிகரித்தன.

வேலையில் கவனம் குறையஆரம்பித்தாள்.. வேலையும் இடத்தில் அவப்பெயர் வேலையை சரியாக செய்யவில்லை என்று.. அப்போதுதான் ஒரு நாள் தன்னுடைய செல்பேசியை என்னிடம் கொடுத்தாள். நானே சார்ஜ் செய்து வைத்து இருந்தேன். மாலை 5.30 - மணிக்கு போன் வந்தது.. யார் என்று கேட்டேன். உடனே அந்த குரல் நான்தான்டி உன் மிலிட்ரி என்றான். ஓகோ அப்படியா? என்று கேட்டு அவள் இல்லை நான் அவள் தோழி என்றேன். சரி என்று கட் செய்ய பார்த்தான். உடனே நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா? என்றேன்..

கேளுங்கள் என்றான். நீங்கள் அவளை உண்மையாக விரும்பினால் உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லி பெண் கேளுங்கள் அதைவிட்டுவிட்டு வெட்டிதனமாக தினமும் 10-தடவை போன் பண்ணி அவள் மனதையும் கெடுத்து உங்கள் மனதையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என திட்டினேன். சாரி மேடம் என்று போனை கட் செய்தான்.

அப்பாடா இனி இவள் சந்தோசமாக இருப்பாள் என எண்ணினேன்.. ஆனால் இல்லை.. புத்திகெட்டவள்.. பால் எது சுண்ணாம்பு எது என வித்தியாசம் தெரியவில்லை. அவளுக்கு பரிந்து பேசிய என்னிடமே எரிந்து விழுந்தாள்.. கேட்தற்கு அவரை நான் கணவராக நினைத்துதான் பழகி வருகிறேன் என்றாள் பார்க்கணுமோ.. அடிப்பாவி அவன் யாரு எந்த ஊரு? எப்படி ஒன்றும் தெரியாமல் இவ்வளவு தூரம் மனசில் ஆசையை வளர்த்துகிட்டியே..பாவி என்றேன். என் சொல் அவளை காயப்படுத்தியதோ என்னவோ தெரியவில்லை மறுநாள் அவன் அம்மா போன் பண்ணினார்கள்.. அந்த நேரம் அவன் இராணுவத்தில் இருந்தான்.. இவளை வந்து பார்த்த 2 -வது நாள் அவனுக்கு டியுட்டி போட்டுவிட்டார்கள்.. அதுவும் கா~;மீரில்...

அவனது அம்மா போன் பண்ணினார்கள்.. இவளிடம்தான் பேசினார்கள்.. அவள் பெயர் என்ன என்று கேட்டார்கள். மகாலெட்சுமி என்றாள்.. உடனே பெயரே சரியில்லையே என்றார் அவர்..உடனே குடும்பத்தை பத்தி கேட்டார்கள்.. அப்புறம் நிறைய கண்டி~ன் நாங்க முறையான --- (மதப்பிரச்சனை கருதி தவிர்க்கிறேன்) குடும்பம் நீ எங்கள் வீட்டிற்கு வந்தால் மதமாற வேண்டும்.. நாங்க பன்றிகறியை சாப்பிடுகிற (-----) சாதி என்றார்.

அத்தோடு நிச்சயதார்த்தம் எங்கள் வீட்டில் நடக்க வேண்டும் என்றும்.. அதற்கு உன் குடும்பத்தார் சம்மதம் வேண்டும் எனவும் திருமணத்திற்கு பின் அவர்கள் எங்கள் சாதியை குற்றம் சொல்லி பேசக்கூடாது எனவும் கட்டளை பிறப்பித்தனர். அத்தோடு அவன் அண்ணனுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் உங்கள் திருமணம் என்றார்.. இப்போதும் நான் கேள்விப்பட்டவரை அவன் அண்ணனுக்கு பெண்பார்க்கும் படலம் தொடர்கிறது.

இதை அத்தனையும் என்னிடம் கொட்டி தீர்த்தாள்.. அவள் அப்பாவோ என் மகள் மதம் மாற நான் சம்மதிக்க மாட்டேன்.. அத்தனை ஆச்சாரத்தோடு வளர்ந்தவள். உங்கள் நாங்க ஒன்றும் குறைந்து போகவில்லை என்று வாதாடினார்.. முடிவில் காதலித்தவன் அவன் அவனை பேசச்சொல் என்னிடம் என்றார். பேசினான். முடிவில் சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல் எங்கள் அம்மா அப்பா

ஆசையப்படுவது சரிதானே.. ரிசிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள நான் என்ன அவளை போன்று அனாதையா என்று கேட்டான்.. கேட்டகேள்வியிலேயே உடைந்து போய்விட்டாள்.. இதுதான் வார்த்தையின் வலிமை என்பதா..

என்ன சொன்னாய் என் கணவா.... இதுநாள் வரையில் நாம பழகி 1- வருடம் ஆகிறது.. இந்த ஒரு வருடத்தில் மனைவி மாதிரிதான் உன்னுடன் பழகினேன்.. இப்போது என் தலையில் இடி இறக்கி வைத்துவிட்டாயே என்றாள். நான் வேண்டுமென்றால் உன் அப்பாவை தூக்கி எறிந்துவிட்டுவா.. என்றான்.. ஒரு பக்கம் பெத்தபாசம்... ஒரு பக்கம் வளர்த்த பாசம் இடையில் இவன்... என்ன செய்வாள் இவள்..

வான் மேகம் காற்று கடல்அலை ஆகாயம்
இத்தனையும் இணைத்து கவிதை எழுத ஆசை
ஆனால் முடியவில்லை என்னால் எனென்றால் உன் முன்னால் அத்தனையும் அழகில்லாமல் இருக்கின்றன.
என் அழகே நீதான்.. என் விருப்பம் நீதான்

இப்படிக்கு

ஜீவா (உன் ஜீவன்)

அவன் முதன் முதலில் ரோஜாமலரில் கொய்ந்த கொடுங்கவிதை.. இன்னும் அவள் நெஞ்சில் ஈராமாய்...........


பதில் நாளை..............

தொடரும்..........திசை மாறிய பாதைகள் - 4

சரி உங்கள் இ~;டம் ஆனால் ஒன்று மட்டும் .... உண்மை உன்னை நினைத்து என் மனதை அழுக்காக்கி கொண்டேன். உன்னை திருமணம் செய்து என் உடம்பை அழுக்காக விரும்பவில்லை..என்று போனை கட் செய்தாள்..
அவள் மீண்டும் பழைய மகா வாக மாற நிறைய காலம் எடுத்தது.. சில நேரங்களில் அவன் நினைவுகள் துவட்டி எடுத்தாலும் 2 சொட்டு கண்ணீரோடு கரைவிடும். அடிக்கடி என்னிடம் சொல்லும் வார்த்தை எனக்கு வரபேற கணவவருக்கு நான் உண்மையா இருக்க நினைக்கிறேன்..

ஒரு முறை நாங்கள் அனைவரும் அலுவலகத்திலிருந்து ஊட்டிக்கு சுற்றுலா சென்றோம். அதிகாலை பொழுது மெல்ல ஆதவன் கண்விழிக்கும் நேரம்.. புற்களில் பனித்துளிகள் மிதந்து நிற்கும் காலைப்பொழுது. அற்புதமான இயற்கையை ரசித்து கொண்டிருந்தாள்.. அப்போது தீடிரென ஒரு பெரும் சத்தம். நாங்கள் தங்கி இருந்த ஓட்டல் அறையை விட்டு வெளியே வந்தோம் .. பலமான விபத்து நிறைய பேர் அடிப்பட்டு இரத்தவெள்ளத்தி;ல் இருந்தார்கள்.. அதில் அவனும் ஒருவன்.. உயிருக்கு போராடும் நிலைமையில்.. ஓடோடி சென்றாள். அவனை பார்க்க தடுத்தேன்.. நிற்கவில்லை..

மருத்துவமனைக்கு சென்றாள். அவன் இரத்தமும் இவள் இரத்தமும் ஒரே வகையானதால் இரத்தம் கொடுத்தாள்.. உயிர்ப்பிழைத்தான்.. மருத்துவமனை பதிவேட்டில் தன்னை யார் என்றும் காட்டிக்கொள்ளவில்லை.. நேரடியாக தங்கும் விடுதிக்கு வந்தாள்.

என்டி அவன் உனக்கு இன்னும் பாசம் போகவில்லை.. நீ இன்னும் அவனை விரும்புகிறாய் என்றேன். என்ன சொல்லற நீ.. என்றாள்.. மருத்துவமனை சென்று பார்த்தேன்.. இரத்தம் கொடுத்தேன்.. ஆனால் நீ சொல்ற மகாவா இல்ல.. என்றாள்.

என்ன புதிர் போடுற.. என்றேன்... உனக்கு ஒண்ணு தெரியுமா மகா? என்னை வளர்த்தவர் சொன்னது..

இன்னா செய்தாரை ஒருத்தல் அவர் நாண
நன்னயம் செய்து விடல்..

திருக்குறள்.. இதன் அர்த்தம் தான் நான் இப்போது செய்தது.. ஒரு சுத்தமான மனிதாபிமானம்.. ஒண்ணு தெரியுமா இந்த இடத்தில் நீயா இருந்திருந்தாலும் அப்படிதான் செய்து இருப்பாய்.. என்றாள்...

மாட்டேன் கண்டிப்பாக மாட்டேன்.. என்றேன்.. தப்புடா... நீ அவனுக்கு தண்டனை கொடுக்கணும்னு சொல்லிட்டு இருப்பேல்ல இதுதான் அவனுக்கு தண்டனை.. வார்த்தை வலியை விட அதிகம்.. என்று சொல்லி முடிக்கவும்.. மே ஐ கமீன் என்ற ஒரு

குரல் எஸ் கமீன் என்றேன். அவன் உடனே நான் எங்க வந்த என்றேன். உடனே அவள் வேண்டாம் அவரை ஒண்ணும் சொல்லாதே.. என்றேன். நான் மகாவோட பேசணும் என்றான்..

என்ன விசயம் சொல்லுங்கள்.. என்றாள்.. நாங்க ஊருக்கு போகணும் நேரம் ஆச்சு என்றாள்.

உடனே அவன் என்னை மன்னித்துவிடு மகா என்றான்.. உணர்ச்சினா என்னன்ணு தெரியுமா உங்களுக்கு? சரி அதவிடு காதல்னா என்னன்ணு தெரியுமா? தெரியுமா. என்தவறு உங்களை போன்றவரை நல்வலர் என் நினைத்தது என் தவறு என்

தவறுக்கு நீங்கள் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்? வழி விடுங்கள்.. மறுபடியும் என் வாழ்க்கையில் வந்து குழப்பம் விளைவிக்காதீர்கள்.. நீ இன்னும் அதை மறக்கவில்லையா என்றான்.?? மறப்பதா.. மன்னிக்கவும்.. உங்களுக்கு இரத்தம்; கொடுத்தது கூட உங்களுக்கு நான் கொடுத்த தண்டனை.. மறக்க கூடாது..நீங்களும் உங்கள்

அம்மாவும்.. இனிமேலாவது என்னை நிம்மதியாக வாழ விடுங்கள்.. ப்ளீஸ்.. என சொல்லி விட்டு வேகமாக அந்த அறையை விட்டு வெளியே வந்துவிட்டாள்...

இனி இவள் நிம்மதியாக இருப்பாளா?? நிம்மதி இழப்பாளா??தொடரும்..........

அன்புரசிகன்
01-08-2007, 12:59 PM
ஆனாலும் அவள் சொன்னது சரியே...

ஒருவரிற்கு வார்த்தைகளால் கொடுக்கப்படும் தண்டனைகள் மறக்கப்பட முடியாதவை...

தொடருங்கள்...

அன்புரசிகன்
08-08-2007, 05:14 PM
வெண்தாமரை... எங்கே மீதி? தொடரும் என்றுபோட்டுவிட்டு போய்விட்டீர்கள்... எப்போது தொடர்வீர்கள்?

மனோஜ்
01-09-2007, 05:11 PM
கர்பனை கதையாத உண்மைகதையா என்று குழும்ப வைத்துவிட்டிர்கள் அருமை தொடருங்கள்

ஓவியா
01-09-2007, 05:32 PM
பெண்களின் நற்குணங்களை அறியாமல் அல்லாடும் ஆண்களுக்கு இதெல்லாம் ஜுஜுபி.

சைப*ர் காத*லை ப*ற்றி என்னிட*ம் கேட்டால் நான் என்ன* சொல்லுவேன்!!!!!!! சைப*ர் காத*ல் ஒரு சைப*ர்.

அருமையான கதை. பாராட்டுக்கள்.

மிதி கதையை எதிர்ப்பார்க்கிறேன்.