PDA

View Full Version : விடியலை மிஞ்சிய கனவுகள்



ஆதவா
01-08-2007, 11:32 AM
பஸ்நிறுத்தத்தில்
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.
---------------
அலைகளை
அறியாத நேரத்தில்
கொஞ்சுகின்றன குயில்கள்
கொஞ்சம் கூட
நாணமில்லாமல்.
------------------
பூக்களை மிதிக்காத
பாதங்கள், மிதிக்கிறது
புன்னகையை.
----------------
துயில் களைந்து
எழுந்தால் தெரிகிறது
கடலின் அலையும்
கரையில் அசிங்கமும்.
−−−−−−−−−−−−
திருந்திய பிறகு
தண்டனை
மும்பை வழக்கு/சஞ்சய் தத்.

அமரன்
01-08-2007, 11:45 AM
சின்னசின்ன சம்பவங்களையும்
கனமான சிந்தனையயும்
குறுங்கவியில் அடக்கிய
திகட்டா விருந்து இது.
சென்னை தந்ததோ...
நன்றி ஆதவா..

சிவா.ஜி
01-08-2007, 12:39 PM
ஆதவா நீங்கள் சென்னை பேருந்தில் பயணிக்கும்போது யார் இடித்தது..?
கடற்கரைக்கு நிச்சயமாய் போயிருக்கிறீர்கள்...இதுவும் கவிதையாகப்போகிறது என்று அந்த அசிங்கத்துக்கும் தெரியவில்லை,அதை செய்தவனுக்கும் தெரியவில்லை.
வெகு சீரியஸான முகத்தோடு நடைப்பயிற்சியில் யாரைப் பார்த்தீர்கள்?
அருமையான அனுபவக்கவிதைகள். அசத்தல்.வாழ்த்துக்கள்.

இனியவள்
01-08-2007, 02:24 PM
ஆதாவா அருமையான குறுங்கவிகள்...

ஓவ்வொரு முத்திலும்
செதுக்கப்பட்ட சிற்பங்கள்..

வாழ்த்துக்கள் தோழரே

விகடன்
01-08-2007, 02:26 PM
எல்லாம் சென்னை சென்று வந்ததினால் வரும் சிதறல்கள் போல ;)

காவிதைகள் விறப்பு.

பாராட்டுக்கள் ஆதவா

ஆதவா
04-08-2007, 10:57 AM
அனைவருக்கும் எனது நன்றிகள்...

ஆதவா
04-08-2007, 10:59 AM
நரம்புகளால் நெய்யப்பட்ட
வீணைக்கம்பிகளை
மீட்டி ராகம் படிக்கிறது
உயர்ரகத்துக் குயில்
நரம்பிழந்த சோகத்தில்
தாழ்ரக காக்கைகள்.

-------------------------
உள்ளங்களின் முடிச்சு
காதலென்றால்
உணர்தலின் முடிச்சு
காமம்.

------------−−−−

பிரம்மாண்ட கோபுரத்தினடி
கூரையில்லா குடிசை
சென்னை(யில்).

--------------

எட்டிப்பார்க்கும்
அலைகளுக்காகவாவது
கட்டிப்பிடிப்பதை
நிறுத்துங்கள்.

----------
உங்கள் முத்தங்கள்
எங்களைத் தூண்டுகிறது
வன்காமத்திற்கு.
------------−

விகடன்
04-08-2007, 11:15 AM
அனைத்துக் கவிதைகளும் அமர்க்களமே கவி.


உள்ளங்களின் முடிச்சு
காதலென்றால்
உணர்தலின் முடிச்சு
காமம்.




என்பதினை நானும் ஆமோதிப்பவன். இல்லை என்பவர், ஏன் ஒரே ஒரு நபருடன் அதுவும் எதிர்ப்பாலினருள் மட்டுமே காதல் என்று சொல்லிக் கொள்ள வேண்டும்?

ஆதவா
04-08-2007, 11:17 AM
விராடன் நீங்கள் சொல்வது சற்றே எனக்கு புரிய மறுக்கிறது.

பாராட்டுக்களுக்கு நன்றிங்க விராடன்

சிவா.ஜி
04-08-2007, 11:46 AM
பார்வையில் பட்டதை பலம்வாய்ந்த வார்த்தைகளில் வார்த்துத் தந்த ஆதவாவுக்கு வாழ்த்துக்கள்.

ஆதவா
04-08-2007, 12:02 PM
நன்றி சிவா..

இனியவள்
04-08-2007, 04:08 PM
வாழ்த்துக்கள் ஆதவா

அருமையான குறுங்கவிகள்

அமரன்
04-08-2007, 04:10 PM
இன்று பதிந்த கவிதைகளில் முதலாவது கவிதையில் கனம் அதிகம் ஆதவா!

ஓவியன்
06-08-2007, 05:35 PM
ஆழமான பல கருத்துக்களை இப்படி அருமையான சின்னஞ்சிறு குறுங் கவியாக வடித்தமை அருமை!. :aktion033:


எட்டிப்பார்க்கும்
அலைகளுக்காகவாவது
கட்டிப்பிடிப்பதை
நிறுத்துங்கள்.

ரொம்பவே இரசித்தேன் ஆதவா உங்களது கலைக் கண்ணோட்டத்தை........! :D

ஆதவா
06-08-2007, 06:32 PM
ஆழமான பல கருத்துக்களை இப்படி அருமையான சின்னஞ்சிறு குறுங் கவியாக வடித்தமை அருமை!. :aktion033:


எட்டிப்பார்க்கும்
அலைகளுக்காகவாவது
கட்டிப்பிடிப்பதை
நிறுத்துங்கள்.

ரொம்பவே இரசித்தேன் ஆதவா உங்களது கலைக் கண்ணோட்டத்தை........! :D


நேரில் கண்ட உண்மை ஓவியன். நான் ரசிக்கவோ ருசிக்கவோ இல்லை. வெட்கப்பட்டு வந்தேன். ஆதவன் என்றாலே ஜொள்ளூ விடுபவன் என்று ஒரு சூழ்நிலை இங்கே நானாக உருவாக்கிக் கொண்டது என் தவறு. ரசிப்பது மனித யதார்த்தம். ருசிப்பது மிருக குணம். எனக்கு ரசிப்பதை கவிதையாக்கி ருசிக்க மட்டுமே தெரிகிறது.

மிகவும் நன்றிங்க ஓவியன்..

இளசு
18-08-2007, 08:01 AM
கவிஞன் கண்டாலே கவிதை..
காண்பவன் கண்டாலே காதல்..


கவியரசரின் இருவரிகளும்
ஆதவனுக்காக அன்றே எழுதப்பட்டவையோ..!

பாராட்டுகள் ஆதவா..

பூக்களை மிதிக்க.. என் முதல் தெரிவு!
அலைகளுக்காகவது அடுத்த தெரிவு!

ஆதவா
18-08-2007, 02:38 PM
கவிஞன் கண்டாலே கவிதை..
காண்பவன் கண்டாலே காதல்..


கவியரசரின் இருவரிகளும்
ஆதவனுக்காக அன்றே எழுதப்பட்டவையோ..!

பாராட்டுகள் ஆதவா..

பூக்களை மிதிக்க.. என் முதல் தெரிவு!
அலைகளுக்காகவது அடுத்த தெரிவு!

மிகவும் நன்றிங்க அண்ணா... எனக்காக மட்டுமா.... இங்கே வாழும் அனைத்து கவிஞர்களுக்காவும் தானே! மிகவும் நன்றிகள்...

பூமகள்
31-08-2007, 10:17 AM
ஆகா... அழகுக் குறுங்கவிகள் ஆதவா..!

எட்டிப்பார்க்கும்
அலைகளுக்காகவாவது
கட்டிப்பிடிப்பதை
நிறுத்துங்கள்.

உண்மை.. நிதர்சனம்.
வெளிப்புற கண்ணியம் காதலர் இடத்தில் காண்பது குறைந்து வருகிறது.
சரியான பன்ச் கவிதை.
ரசித்தேன்.
இனியேனும் திருந்தினால் சரி தான்.

ஆதவா
06-09-2007, 12:43 PM
நன்றி பூமகள் சகோ.

ஷீ-நிசி
06-09-2007, 01:42 PM
பஸ்நிறுத்தத்தில்
நீயும் நானும்
மோதிக்கொண்டோம்
உனக்கு விழுந்தது
புத்தகங்கள்
எனக்கு கவிதைகள்.
---------------
திருந்திய பிறகு
தண்டனை
மும்பை வழக்கு/சஞ்சய் தத்.



எட்டிப்பார்க்கும்
அலைகளுக்காகவாவது
கட்டிப்பிடிப்பதை
நிறுத்துங்கள்.

----------
உங்கள் முத்தங்கள்
எங்களைத் தூண்டுகிறது
வன்காமத்திற்கு.
------------−

அட! ஆதவா இந்த திரி என் கண்ணில் படாமலே போனது...

என்னை கவர்ந்ததை மேற்கோளிட்டுள்ளேன்...

தொடருங்கள் ஆதவா...

(இன்னும் செதுக்கவேண்டும் பல கவிதைகளின் வரிகளை....)

சுகந்தப்ரீதன்
08-09-2007, 11:36 AM
உங்கள் முத்தங்கள்
எங்களைத் தூண்டுகிறது
வன்காமத்திற்கு.

ஆதவா...கலக்கலா எழுதுறீங்க...வித்தியாசமாக இருக்கிறது உங்கள் கவிகளும் எண்ணங்களும்.....வாழ்த்துக்கள்..!

lolluvathiyar
09-09-2007, 12:22 PM
திருந்திய பிறகு
தண்டனை
மும்பை வழக்கு/சஞ்சய் தத்.

அவர் திருந்தினாலும் திருந்தாவிட்டாலும் தீவிரவாதிகளா செத்தவர்கள் பிழைத்து வரபோவதில்லை. அவர்கள் உறவினர்களுக்கு தேவை குற்றவாளி தன்டனை தான் திருந்துவதில்லை