PDA

View Full Version : மூச்சுக்காற்று



பார்த்திபன்
01-08-2007, 10:41 AM
என் வீட்டு
"குக்கர்" கூட
எரிய மறுக்கின்றது.
எங்கும் வியாபித்திருக்கும் உன்
மூச்சுக்காற்றை - அதன்
தீ
தீண்டிவிடுமென்பதால்...

ஆனால்
நீயோ................


(இன்று காலை சமையலறையில் "கா(G)ஸ்" தீர்ந்தபோது தோன்றியது....)

அமரன்
01-08-2007, 10:47 AM
அழகான கற்பனை. ஆரம்பக்கவியே அசத்தல் ரகம். சின்ன சின்ன சம்பவங்கள் எம்மக் கடந்துசெல்கையில் அவற்றை கவித்துவமாக பார்ப்பது எத்தனைபேர். நீங்கள் அப்படிப்பார்த்திருகின்றீர்கள். ஒரு கவிஞனுக்குரிய முக்கிய தகுதி இது. தொடருங்கள் பார்த்தி. இது குறுங்கவிதைப்பகுதியில் இருக்கவேண்டும். மாற்றப்படும்.

(ஒரு அன்பான வேண்டுகோள் பின்குறிப்பை அகற்றிவிடுங்கள்)

பார்த்திபன்
01-08-2007, 10:53 AM
நன்றி அண்ணா...
பின்குறிப்பு அகற்றி ஆகிவிட்டது...

சிவா.ஜி
01-08-2007, 11:06 AM
முதல் முயற்சி அருமை பார்த்திபன். ஒரு சிறு திருத்தம்.குக்கர் எரியாது அதற்கு பதில் அடுப்பு என்பதே நன்றாகத்தான் இருக்கும் என்பது என்னுடைய கருத்து. வாழ்த்துக்கள்.

அக்னி
01-08-2007, 01:13 PM
வெளிவந்த உன் மூச்சுக்காற்றிலேயே,
தீ பற்றும் சக்தி அதிகம் என்றால்,
நீ உள்ளெடுக்கும் சுவாசக்காற்றில்,
உன் உள்ளிருக்கும் நான்,
உன் உடல் சூட்டின் ஆதாரத்தில்,
தினமும் கருகலாமோ...
அதற்காக மூச்சை நிறுத்திடாதே,
உன் உயிரே நான்...
உடனே மரித்துவிடுவேன்...
காதல் பந்தத்தில்,
தீப்பந்தமும் ஒளி தருமே
அன்றி,
என்னைச் சுட்டெரிக்காது...

பாராட்டுக்கள் பார்த்திபன்...

வெண்தாமரை
01-08-2007, 01:17 PM
பர்ர்த்திபன் கவிதை அருமை ஆனால் பற்றுவது குக்கர் அல்ல.. கியாஸ் அடுப்பு.. அக்னி கொடுத்த பதில் கவிதை அழகு..

இனியவள்
01-08-2007, 01:26 PM
பார்த்திபன் வாழ்த்துக்கள்

அழகிய குறுங்கவி

பார்த்திபன்
01-08-2007, 01:30 PM
வெளிவந்த உன் மூச்சுக்காற்றிலேயே,
தீ பற்றும் சக்தி அதிகம் என்றால்,
நீ உள்ளெடுக்கும் சுவாசக்காற்றில்,
உன் உள்ளிருக்கும் நான்,
உன் உடல் சூட்டின் ஆதாரத்தில்,
தினமும் கருகலாமோ...
அதற்காக மூச்சை நிறுத்திடாதே,
உன் உயிரே நான்...
உடனே மரித்துவிடுவேன்...
காதல் பந்தத்தில்,
தீப்பந்தமும் ஒளி தருமே
அன்றி,
என்னைச் சுட்டெரிக்காது...

நன்றி அண்ணா...
என் கிறுக்கலை உங்கள் கவி தூக்கி சாப்பிட்டுவிட்டது.
அருமையான படைப்பிற்கு பாராட்டுக்கள்...

அக்னி
01-08-2007, 01:36 PM
நன்றி அண்ணா...
என் கிறுக்கலை உங்கள் கவி தூக்கி சாப்பிட்டுவிட்டது.
அருமையான படைப்பிற்கு பாராட்டுக்கள்...

அக்னி போதும்... அண்ணா வேண்டாம் பார்த்திபன்...
உங்கள் கவியை உண்டதால்தான் எனது கவி வளர்ந்தது...
ஆதலால், புகழுக்குரியவர் நீங்களே...

பார்த்திபன்
01-08-2007, 01:39 PM
மிக்க நன்றி
சிவா அண்ணா..
sunflower..
சகோதரி இனியவள்..

ஒத்துக்கறேன் குக்கர் எரியாது
அடுப்பில் நெருப்புத்தான் எரியும்னு...
யாம் அறிந்தும் அறியாமலும் செய்த குற்றத்தை
பொறுத்தருள்க....

பார்த்திபன்
01-08-2007, 01:40 PM
ஆகட்டும் அக்னி...

இப்ப ஓ.கே வா??

அக்னி
01-08-2007, 01:43 PM
ஆகட்டும் அக்னி...

இப்ப ஓ.கே வா??

டபிள் ஓ.கே...

சிவா.ஜி
01-08-2007, 01:47 PM
மிக்க நன்றி
சிவா அண்ணா..
sunflower..
சகோதரி இனியவள்..

ஒத்துக்கறேன் குக்கர் எரியாது
அடுப்பில் நெருப்புத்தான் எரியும்னு...
யாம் அறிந்தும் அறியாமலும் செய்த குற்றத்தை
பொறுத்தருள்க....

இந்த மன்றத்தில் குற்றம்,பொறுத்தருள்வதெல்லாம் கிடையாது. அரவணைப்பும்,ஆதரவுமே உண்டு. மேலும் மேலும் மின்ன வேண்டுமென்பதால்,இது ஒரு தூசி துடைப்புத்தான்.

ஓவியன்
02-08-2007, 02:59 AM
அடுப்பு எரியாவிட்டாலும்
என் மனதை தினம் உன்
நினைவுகளால் எரிப்பவளே!
காஷூம் தீர்ந்துவிடலாம்,
ஆனால் நான் கொண்ட
உன் நினைவுகள்......................!

அழகான கற்பனை பார்த்தி!

இங்கே துணிந்து இறக்கிவிட்டீர்கள், பிறகென்ன சக்கை போடு போடப் போகின்றன உங்கள் கவிதைகள்!.

மனதார வாழ்த்துகிறேன் − நிறைய எழுதுங்கோ....!:sport-smiley-018:

விகடன்
02-08-2007, 03:18 AM
பாராட்டுக்கள் பார்த்தி
இன்னும் வேண்டும் அனுபவக் கட்டுரைகள்.

உங்கள் குக்கப் பரவாயில்லை. என் நிலையோ....

குக்கர் கூட விசிலடிக்கிறது!
என்மேல் நீ வைத்திருக்கும் காதலைப் பார்த்து.