PDA

View Full Version : அம்மா

இலக்கியன்
01-08-2007, 08:53 AM
அன்புக்கு
இலக்கணமும் நீ தான்

தமிழ் பண்புக்கு
புததகமும் நீ தான்

கற்புக்கு
கண்ணகியும் நீ தான்

பொறுமைக்கு
பூமியும் நீ தான்

கண்டிப்பதில்
கிட்லறும் நீ தான்

அன்புக்கு அன்னை
திரேசாவும் நீ தான்

படி என்று சொல்லவதற்கு
ஆசானும் நீ தான்

வீட்டில் இரட்சியத்துக்கு
அரசியும் நீ தான்

அன்போடு பேசும்
தோழியும் நீ தான்

பூமியில் வாழும் உயிர் உள்ள
தெய்வமும் நீ தான்

http://www.elakkiyan.net.tc/

சிவா.ஜி
01-08-2007, 09:03 AM
ஆதிக்கவிதையை அம்மாவுக்குப் படைத்து
ஆரம்பித்துள்ளீர்கள். அருமையான ஆரம்பம்.
வாழ்த்துக்கள் இலக்கியன்.
இன்னும் படையுங்கள்.

இனியவள்
01-08-2007, 09:09 AM
வாழ்த்துக்கள் இலக்கியன்

அன்னைக்கு ஓர் கவிதை நன்று

இலக்கியன்
01-08-2007, 09:16 AM
ஆதிக்கவிதையை அம்மாவுக்குப் படைத்து
ஆரம்பித்துள்ளீர்கள். அருமையான ஆரம்பம்.
வாழ்த்துக்கள் இலக்கியன்.
இன்னும் படையுங்கள்.

பழய கிறுக்கல் ஒன்றை இணைத்தேன் மன்றத்தில்
நன்றி உங்கள் கருத்துக்கு சிவா ஜி

இலக்கியன்
01-08-2007, 09:21 AM
வாழ்த்துக்கள் இலக்கியன்

அன்னைக்கு ஓர் கவிதை நன்று

நன்றி உங்கள் கருத்துக்கு இனியவள்

அமரன்
01-08-2007, 10:27 AM
அம்மா..
ஒவ்வொரு குழந்தையும் முதலில் சொல்லும் வார்த்தை.
வடிவங்கள் வேறுபடலாம்..அர்த்தம் ஒன்றுதான்.
அம்மாவுக்கும்
சொல்ல எத்தனித்து செப்பி நிற்கும் சொல்லுக்கும்.
மன்றம் வந்த குழந்தை அம்மாவுக்கு கவிபடைத்து என்னைக் கவர்ந்துவிட்டார். தப்பு நம்மைக் கவர்ந்துவிட்டார். தொடருங்கள் இலக்கியன்.
உங்கள் கவியில் தன்னை மறந்து நிற்கும்
அன்பு நண்பன்

lolluvathiyar
01-08-2007, 10:31 AM
பழய கிறுக்கல் ஒன்றை இணைத்தேன்

பழைய கிருக்கலே இப்படி பேசுகிறதென்றால் உங்கள் புதிய கவிதைகள் எத்தனை உனர்ச்சிகளை கொட்டும்

விகடன்
01-08-2007, 10:38 AM
அன்புக்கு அன்னை
திரேசாவும் நீ தான்

கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் மேற்படி வரிகள் மட்டுமே கவிதைக்கு களங்கமாக.

அன்னை தெரசா எப்படிப்பட்ட அன்பிற்கு இலக்கணமானவராகவேனும் இருக்கட்டும். ஆனால் ஆம்மாவின் அன்புடன் ஒப்பிட உலகில் எந்த அன்பையும் வைத்துக்கொள்ள முடியாது.
வேணுமென்றால் தெரசாவைப் பற்றி எழுதும்போது அவரது அன்பை அம்மாவின் அன்பைப் போல என்று உவமகிக்கலாம்.

மற்றுப்படி உங்கள் கவிதைக்கு எனது மனம் நிறைந்த :aktion033: :aktion033: :aktion033:

இலக்கியன்
02-08-2007, 11:48 AM
அம்மா..
ஒவ்வொரு குழந்தையும் முதலில் சொல்லும் வார்த்தை.
வடிவங்கள் வேறுபடலாம்..அர்த்தம் ஒன்றுதான்.
அம்மாவுக்கும்
சொல்ல எத்தனித்து செப்பி நிற்கும் சொல்லுக்கும்.
மன்றம் வந்த குழந்தை அம்மாவுக்கு கவிபடைத்து என்னைக் கவர்ந்துவிட்டார். தப்பு நம்மைக் கவர்ந்துவிட்டார். தொடருங்கள் இலக்கியன்.
உங்கள் கவியில் தன்னை மறந்து நிற்கும்
அன்பு நண்பன்

அமரன் மிகவும் அழகு தமிழில் பின்னூட்டம் தந்தீர்கள்
நன்றி

இலக்கியன்
02-08-2007, 11:49 AM
பழைய கிருக்கலே இப்படி பேசுகிறதென்றால் உங்கள் புதிய கவிதைகள் எத்தனை உனர்ச்சிகளை கொட்டும்

உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி லொள்ளுவாத்தியார்

இலக்கியன்
02-08-2007, 11:56 AM
கவிதை நன்றாக இருக்கிறது. ஆனால் மேற்படி வரிகள் மட்டுமே கவிதைக்கு களங்கமாக.

அன்னை தெரசா எப்படிப்பட்ட அன்பிற்கு இலக்கணமானவராகவேனும் இருக்கட்டும். ஆனால் ஆம்மாவின் அன்புடன் ஒப்பிட உலகில் எந்த அன்பையும் வைத்துக்கொள்ள முடியாது.
வேணுமென்றால் தெரசாவைப் பற்றி எழுதும்போது அவரது அன்பை அம்மாவின் அன்பைப் போல என்று உவமகிக்கலாம்.

மற்றுப்படி உங்கள் கவிதைக்கு எனது மனம் நிறைந்த :aktion033: :aktion033: :aktion033:

மிக்க நன்றி உங்கள் கருத்துக்கு விராடன்
அம்மா என்பவள் பத்துமாதம் சுமந்து தொப்பிள் கொடியூடாக உணவும் தன் இரத்ததை பாலக ஊட்டியவள். அந்த தாய்க்கும் சேய்க்கு ஒரு உறவு இருக்கும். ஆனால் அன்னை திரேசா எங்கோ பிறந்து கல்கத்தா வந்து தொழுநோயாளர் அணைவருக்கும் தாயாக இருந்தார். அந்த அன்பும் சொற்களில் அடங்காதவை
நன்றி
அன்புடன்
இலக்கிய*ன்