PDA

View Full Version : அமெரிக்காவை மிஞ்சுது இந்தியா



namsec
01-08-2007, 07:38 AM
உலக பொருளாதார வளர்ச்சி அமெரிக்காவை மிஞ்சுது இந்தியா

'உலக பொருளாதார வளர்ச்சியில், சீனா மற்றும் இந்தியா, முன்னணி இடத்தைப் பிடித்து வருகின்றன' என்று சர்வதேச நிதியம் தெரிவித்துள்ளது.உலக பொருளாதார வளர்ச்சியில், அமெரிக்கா மற்றும் பிற வளர்ச்சி அடைந்த நாடுகளை பின்னுக்கு தள்ளி விட்டு, சீனாவும், இந்தியாவும் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கின்றன என்று சர்வதேச நிதியத்தின் (ஐ.எம்.எப்.,) நிர்வாக இயக்குனர் ரோட்ரிகோ ரேடோ தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: நடப்பு ஆண்டில், உலக பொருளாதார வளர்ச்சிக்கு, அமெரிக்காவை விட, சீனா, முதல் முறையாக, அதிக அளவில் பங்களித்துள்ளது. இந்த நிலைமை இனியும் தொடரும். உலகளாவிய வளர்ச்சியில், சீனாவும் இந்தியாவும் அதிக முக்கியத்துவம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இந்த ஆண்டு சீனா 11 சதவீதத்திற்கு மேலும், இந்தியா ஒன்பது சதவீதமும் வளர்ச்சி அடையும். அடுத்த ஆண்டில், இந்த இரண்டு நாடுகளின் வளர்ச்சியும் சம அளவில் இருக்கும்.இந்த ஆண்டு வளர்ச்சி குன்றிய அமெரிக்க பொருளாதாரம், இனி படிப்படியாக முன்னேறி, தனது பழைய நிலையை அடையும். ஐரோப்பா மற்றும் ஜப்பானின் எதிர்காலம் நன்றாக உள்ளது. இவ்வாறு ரோட்ரிகோ தெரிவித்தார்.

நன்றி தினமலர்

pradeepkt
01-08-2007, 10:45 AM
நல்ல சேதிதான்...
ஆனால் இன்னும் பல காரணிகளைக் கொண்டே இந்த மிஞ்சும் தத்துவத்தைச் சொல்ல முடியும்...

மீனாகுமார்
01-08-2007, 04:10 PM
வளர்வது சரிதான்.. ஆனால் அவற்றின் ஏற்கனவே இருக்கும் அளவு SIZE யாதோ ?? அமெரிக்கா ஐநூறும் நாம் வெறும் பத்தும் இருந்தால் எப்படி இருக்கும் ?? அப்படியே மக்களின் அளவுகளையும் எண்ணிப்பாருங்கள்....

நம் வளர்ச்சியை குறை கூறவில்லை.. ஆனால் இது போதுமா என்று எண்ணிப்பாருங்கள் என்று தான் கூறுகிறேன்...

விகடன்
01-08-2007, 04:35 PM
இதனால்த்தான் அமெரிக்கா செய்யும் உதவிகளை சற்று தளர்த்தியிருக்கிறதோ