PDA

View Full Version : பாவம் அவனை விட்டு விடுங்கள்!lenram80
01-08-2007, 02:46 AM
நீ வெட்கப்பட்டால் கதிரவன் கூட கனிந்து நிலவாக மாறும்!
நீ கோபப்பட்டால் நிலவு சூடாகி சூரியனாகிப் போகும்!

மழை பெய்கையில் இனிமேல் குடை பிடிக்காதே!
கொஞ்ச துளிகளாவது உன்னைத் தொட்டு மோட்சம் அடையட்டுமே!
உன் மேல் விழப்போகிறோம் என்று ஆனந்த கூத்தாடி வரும் அந்த துளிகள்
குடையைப் பார்த்ததும், அழுது, கண்ணீர் துளிகளாக மாறுகிறதே!
ஓ! அந்த குடையை அரிக்கத் தான் அமில மழை பெய்கிறதோ?

உன் குடை மேல் விழும் துளிகளைப் பார்த்தே
அடுத்துள்ள துளிகள் விடும் பெருமூச்சு தான் 'சூறாவளி' என்றால்,
உன் மேல் விழும் துளிகளைப் பார்த்தால்...
என்ன நடக்கும்?
எந்தெந்தப் புயல் எப்படியெப்படி கரையைக் கடக்குமோ?
யார் கண்டார்?

ஒருமுறை நீ காயவைத்த துணிகளை
அந்தி மழை நனைத்து விட்டதாம்!
அதனால் தான் நேற்று மின்னலை
தூதனுப்பி மன்னிப்புக் கேட்டதோ?
இல்லை,
'எப்படிடா அந்த தேவதையின் துணிகளை நனைத்தீர்கள்?'
என்று சக துளிகளுக்குள் நடக்கும் யுத்தம் தான் 'இடி'யோ?

ஒருநாள் ஒரு மேகத்தை என்னிடம் காட்டி
"அங்கே பாருடா! ஒரு தேவதையின் கையில் பூ இருப்பது மாதிரி தெரியுது' என்றாய்!
நானும் உற்று உற்றுப் பார்த்தேன்! ஒன்றும் தெரியவில்லை!
இன்னும் உற்றுப் பார்த்தேன்!
என்னை பயமுறுத்தும் ஒரு பயங்கர உருவமாக அது தெரிந்தது!
உன்னோடு பேசுகிறேனாம்! சேர்ந்து சுற்றுகிறேனாம்!
அதனால் தான் என்னை அப்படி பயமுறுத்துகிறதாம்!
என்னை கொஞ்சம் அதனிடம் சிபாரிசு செய்யேன்!
எனக்கும் அந்த மேகம் அழகாக தெரிந்து விட்டு போகட்டும்!

என்று உன்னோடு பேச ஆரம்பித்தேனோ
அன்றிலிருந்து அனைவரும் எனக்கு எதிரிகள்!
மனிதர்கள் பொறாமைப்படுவதை ஏற்றுக்கொள்ளலாம்!
ஆனால், இயற்கையை என்ன செய்வது?

என்னை மட்டும் இந்த சூரியன்
விரட்டி விரட்டி சுடுகிறதே!
எல்லோர் மீதும் வெளிச்சத்தையும்
என் மீது மட்டும் வெயிலையும் தூவுகிறதே!

அந்த மழையை நான் என்ன செய்தேன்?
எல்லோர் மீதும் பன்னீரையும்
என் மீது மட்டும் வெந்நீரையும் கொட்டுகிறதே!

பக்கத்தில் போகும் பேருந்து கூட
என் மேல் சேறு வாரி இறைக்கிறதே!

முள் குத்தாமலிருக்க செறுப்பு போட்டால்
செறுப்பே என்னைக் கடிக்கிறதே!
செறுப்புக்குக் கூட என் மேல் அப்படி ஒரு வெறுப்பா?

என்ன, ஒரே ஒரு நன்மை என்றால்
எல்லோரோடும் சேர்ந்து இப்போது
நீருக்கும் என்னை பிடிக்காமல் போனதால்,
எப்பொதும் பிடிக்கும் ஜலதோஷத்திற்குக் கூட என்னைப் பிடிக்கவில்லை!
அதனால் ஜலதோஷமே எனக்குப் பிடிப்பதில்லை!

உன்னோடு பேசியதற்கே இப்படி
கங்கணம் கட்டிக்கொண்டு பழி வாங்கினால்,
உன்னை காதலித்தால் இவைகள் என்னை என்ன செய்யும்?

உடனே,
அனைத்தையும் அழைத்து ஒரு அமைதி மாநாடு நடத்து!
"பாவம் அவனை விட்டு விடுங்கள்!" என்று சின்ன வேண்டுகோள் விடு!
என்னை இவைகளிடமிருந்து தப்பிக்க விடு!
நீ சொல்லி அவைகள் கேட்காமல் போகுமா?
என் மேல் உள்ள வெறுப்பு அத்தோடு சாகுமா?
உன்னோடு சேராமல் என் உடம்பு வேகுமா?

விகடன்
01-08-2007, 03:16 AM
வ*சீக*ரிக்க*க்கூடிய* சொற்பிர*யோக*ங்க*ள் தாராள*மாக* பாவித்திருக்கிறீர்க*ள். அதிலும் முக்கியமாக


ஒருமுறை நீ காயவைத்த துணிகளை
அந்தி மழை நனைத்து விட்டதாம்!
அதனால் தான் நேற்று மின்னலை
தூதனுப்பி மன்னிப்புக் கேட்டதோ?
இல்லை,
'எப்படிடா அந்த தேவதையின் துணிகளை நனைத்தீர்கள்?'
என்று சக துளிகளுக்குள் நடக்கும் யுத்தம் தான் 'இடி'யோ?என்பது சிறப்பே.
கவிதை தூக்கல். பாராட்டுக்கள்.

அமரன்
01-08-2007, 08:21 PM
நான் வழக்கமாக பார்க்கும் மழை.இடி.மின்னல்.வெய்யில்.பேரூந்து போன்றவற்றையே நீங்களும் பார்கின்றீர்கள். உங்களுக்கு மட்டும் எப்படி இப்படிதோன்றுகிறது. இயற்கையை ரசிப்பது என்பது ஒரு கலை. அதில் கற்பனையைக் கலந்த உங்கள் கவிதை கலை தரும் இனிமையை விஞ்சிநிற்கிறது. பாராட்டுக்கள் ராம்.

theepa
01-08-2007, 09:02 PM
அப்பப்பா என்ன நண்பரே கலக்குரிங்க பாராட்டுக்கள் எங்கலையெல்லாம் பருசு வாங்க விடமாட்டிங்கபோல போர போக்க பார்த்தால் எல்லா பரிசையும் நீங்கலே தட்டிக்கொண்டு போய்டுவீங்க போல எங்கலுக்கும் கொஞ்சமூன்டு மிச்சம் வைய்யுங்கோ

இலக்கியன்
02-08-2007, 12:05 PM
அழகான சொற்பிரயோகம் வாழ்த்துக்கள்

lenram80
02-08-2007, 03:12 PM
நன்றி விராடன், அமரன், தீபா & இலக்கியன்

மனோஜ்
02-08-2007, 03:22 PM
இயற்கை உங்கள் கவிதையில் உயிர் பெற்றது அருமை லெனின்

அக்னி
02-08-2007, 06:12 PM
சின்னச் சின்ன விடயங்களை எடுத்து,
நேர்த்தியான அலங்கரிப்பில் ஜொலிக்கவைத்துள்ளீர்கள் கவிதையாக...
வார்த்தைகளின் பொருத்தப்பாடு,
கற்பனையின் வீச்சம்,
யாவுமே, கவிதையில் ஈர்ப்பைத் தருகின்றது...
வாழ்த்துக்களும், பாராட்டுக்களும்.. லெனின் அவர்களுக்கு...

உன்னுடன் பேசியதால்,
என்னைக் கவர வந்த எமனும்,
என்னைத் தவிர்த்தான்..,
உன் முகம் வாடாதிருக்க...

lenram80
03-08-2007, 02:42 AM
மிக்க நன்றி மனோஜ் & அக்னி அவர்களே.....

இளசு
03-08-2007, 06:21 AM
லெனின்

அதீத பணிப்பளுவால் கொஞ்சநாட்களாய் கவிதைப்பக்கம் ஆழ்ந்து வாசிக்க அமைந்த நேரங்கள் குறைவு அண்மையில்..

உங்கள், மற்றும் நண்பர்களின் பல நல்ல படைப்புகள் இங்கே கொட்டிக்கிடப்பதைப் பார்வையிட்டபின்னும் அள்ளிப்பருக அவகாசமில்லா அவசர தினங்கள்... புரிந்து மன்னிப்பீர்கள்தானே?

−−−−−−−−−−−−−−−−−−−−−−−


காதல் வயப்படும் வயது அப்படியா.. அல்லது
காதலால் நோய் எதிர்ப்பு வேதிகள் அதிகம் உற்பத்தியா..
எது எப்படியோ..
காதல் வைரஸ் வந்தவர்களுக்கு
சாதா வைரஸ் வருவதில்லை!

இந்த அறிவியல் உண்மையையும்...
நிலா நெருப்பை அள்ளி வீசுகிறது என்ற
காதல் தேசிய கீதத்தின் புதுப் பார்வையாய்
பயமுறுத்தும் மேகப்படம் என்ற போன்ற புதிய கற்பனைகளையும்
சரியாகக் கலந்து ' காதல் பானம்' எங்களைப் பருகவைத்து
மயக்கிவிட்டீர்கள்... மயங்கிவிட்டேன்!

பாராட்டுகள்!


ஆக்கபூர்வமாய் ஏதேனும் சொல்லவேண்டும் என்றால் −
இன்னும் சொற்கட்டைச் செதுக்கினால்
வடிவம் குறைந்து, வனப்பு அதிகரிக்கும்..−
இப்போது சற்றே பூசினாற்போல் இருக்கும்
வனிதை போல் இருக்கும் இக்கவிதை!

இனியவள்
03-08-2007, 07:42 PM
வாழ்த்துக்கள் லெனின்

மழைத்துளிகளும் அவளை
தொட்டுச் செல்ல தவம் கிடக்கின்றன போலும்

அழகிய சொல்வளம் இன்னும்
செழிர்க்க வாழ்த்துக்கள்

இன்பா
05-08-2007, 06:00 AM
அப்பா... கலக்கிட்டீங்க லெனின்

பாராட்டுக்க*ள் & வாழ்த்துக்க*ள்
நன்றி