PDA

View Full Version : அழகு



theepa
31-07-2007, 10:39 PM
அழகு


கவிதைக்கு பொய் அழகு
காத*லுக்கு க*விதை அழகு..

க*ண்ணுக்கு இமை அழ*கு
பெண்மைக்கு கூந்த*ல் அழகு..

வானுக்கு விண் மீன் அழ*கு
நில*வுக்கு இருட்டு அழ*கு..

குயிலுக்கு குர*ல் அழ*லகு
ம*யிலுக்கு தோகை அழ*கு..

பாட்டுக்கு வ*ரி அழ*கு
பேச்சுக்கு சொல் அழகு..

முக*த்துக்கு சிரிப்பு அழகு
பூவுக்கு இத*ழ் அழ*கு..

க*வ*லைக்கு ஆறுத*ல் அழ*கு
இற*வுக்கு த*னிமை அழ*கு..

உத*ட்டுக்கு உண்மை அழ*கு
ம*ன*சுக்கு வெண்மை அழ*கு..

என*க்கு நீ மட்டும் அழ*கு
உன*க்கு நான் மட்டும் அழகு..

ந*ம*க்கு காதல் மட்டும் அழ*கு..!




அழகா அழகா நீ சிரித்தால் அழகா


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

இலக்கியன்
02-08-2007, 12:19 PM
அழகு


கவிதைக்கு பொய் அழகு
காதலுக்கு கவிதை அழகு..

கண்ணுக்கு இமை அழகு
பெண்மைக்கு கூந்தல் அழகு..

வானுக்கு விண் மீன் அழகு
நிலவுக்கு இருட்டு அழகு..

குயிலுக்கு குரல் அழலகு
மயிலுக்கு தோகை அழகு..

பாட்டுக்கு வரி அழகு
பேச்சுக்கு சொல் அழகு..

முக*த்துக்கு சிரிப்பு அழகு
பூவுக்கு இதழ் அழகு..

கவலைக்கு ஆறுதல் அழகு
இறவுக்கு தனிமை அழகு..

உதட்டுக்கு உண்மை அழகு
மனசுக்கு வெண்மை அழகு..

எனக்கு நீ மட்டும் அழகு
உனக்கு நான் மட்டும் அழகு..

நமக்கு காதல் மட்டும் அழகு..!




அழகா அழகா நீ சிரித்தால் அழகா


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா



மொழியில் தமிழ் அழகு
தமிழுக்கு கவி அழகு
குரலுக்கு குயில் அழகு
குயிலுக்கு குஞ்சு அழகு
நடைக்கு அன்னம் அழகு
அன்னத்துக்கு வெண்மை அழகு
நடனத்துக்கு மயில் அழகு
மயிலுக்கு தோகை அழகு
இசைக்கு யாழ் அழகு
யாழ் மண்ணுக்கு பேச்சு அழகு
கிளிக்கு சொண்டு அழகு
சொண்டுக்கு கொவ்வை அழகு
கொம்புக்கு மான் அழகு
மானுக்கு புள்ளி அழகு
கூந்தலுக்கு பெண் அழகு
பெண்ணுக்கு தாய்மை அழகு
உழைப்புக்கு ஆண் அழகு
ஆணுக்கு தோள் அழகு
எனக்கு நீ அழகு
உனக்கு நான் அழகு

அழகு என்ற தலைப்பில் எழுதிய பழய கிறுக்கல் இது இசைத்தென்றல் நிலாமுற்றம் செண்பகம் யாழ் இணையம் என்பவறில் பதிவு செய்திருந்தேன்

அமரன்
02-08-2007, 12:23 PM
வாவ்...லதுஜாவின் அழகுக்கவியில் மீழ்கி முத்தெடுக்க வந்த எனக்கு முத்துக்குவியலையே தந்துவிட்டார் இலக்கியன். நன்றி இரு கவிச்செம்மல்களுக்கும்.

விகடன்
02-08-2007, 12:36 PM
மன்றத்தில் தமிழ் அழகு.

அழகைப்பற்றி ஆராய்ச்சி நடத்தி அரங்கத்தில் பதித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்
மேலும்,
தொடர்ந்து அழகுப் பதிவுகளை மேற்கொள்ளவிருக்கும் கவிஞர்களுக்கு வாழ்த்துக்கள்

theepa
02-08-2007, 08:40 PM
உங்கள் விமர்சனங்கலுக்கு எனது நண்ரிகள்

ஓவியன்
03-08-2007, 03:49 PM
லதுஜாவின் கவிக்கு இலக்கியனின் பின்னூட்டம் அழகு!

பாராட்டுக்கள் இருவருக்கும் − தொடர்ந்து அசத்துங்க....!

இனியவள்
03-08-2007, 07:38 PM
அழகு அழகு என்று
கூறியே அழகு படுத்தி
விட்டீர்கள் கவியை வாழ்த்துக்கள்
லது


இலக்கியன் உங்கள்
அழகுக் கவிதைக்கு
அழகான வாழ்த்துக்கள்

இன்பா
04-08-2007, 04:03 PM
எல்லாமே அழகுதான்....

உங்கள் கவிதையும் அழகுதான்