PDA

View Full Version : காதலின் மாயம்



இனியவள்
31-07-2007, 07:35 PM
காதல்..காதல்..காதல்
மந்திரவார்த்தைகள் கொண்டு
மயக்குகின்றதா இந்த மூன்றெழுத்து
வார்த்தை....

காதல் கொண்டேன்
பயித்தியம் ஆனேன்...

உன்னைக் கண்டேன்
இதயத்தை இழந்தேன்...

கண்டுபழகியவை எல்லாம்
புதிதாய் தோன்ற புதியவை எல்லாம்
பழையதாய் தோன்றுகிறது...

வானத்தில் போட்டி போட்டுப்
பறக்கின்றேன் உன்னை பிடிப்பதற்காய்
கையில் சிக்காத காற்றாய்
பறந்து செல்கின்றாய்...

உளரும் வார்த்தைகள் அனைத்தும்
கவிதையாக மாற
கவிதைகள் அனைத்தும்
உளரல்களாக மாறுகின்றது

நீயின்றி நாட்கள்
முற்றுப் பெற மறுக்கின்றன..

அம்மாவாசையாய் இருந்த
வாழ்வை பெளர்ணமியாக்கி
கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
நட்சத்திரமாய்....

இருட்டைக் கண்டு மிரண்டவள்
இருட்டை ரசிக்கின்றேன்...

பகலில் உன் நிஜத்தோடு வாழ்கின்றேன்
இரவில் உன் நிழலோடு வாழ்கின்றேன்...

உன்னோடு இருக்கும் நேரங்களில்
சந்தோஷம் கை நீட்டி என்னை அரவணைக்க
நீயற்ற தனிமை என்னை பயமுறுத்துகின்றது...

என் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்
உன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்..??

கேள்விக்குறியுடன் ஆரம்பித்த என் காதலை
முடித்து வைப்பாயா முற்றுப்புள்ளி வைத்து....

அன்புரசிகன்
31-07-2007, 07:41 PM
அம்மாவாசையாய் இருந்த
வாழ்வை பெளர்ணமியாக்கி
கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
நட்சத்திரமாய்....


இதுதானா..
என்னுள் நீ
இதுதானா
உன்னுள் என்விம்பம்

அழகான வரிகளுக்குப்பாராட்டுக்கள்...........

அமரன்
31-07-2007, 07:44 PM
எத்தனை புள்ளி வைத்து
வரைந்த கோலமென்றாலும்
அழகில் குறைவதில்லை.

காதலும் அப்படித்தான்..
முற்றுபுள்ளி போட்டாலும்
காற்புள்ளி போட்டாலும்
என்றும் இனிமை.....!

இனியவள் கவிதையும்....

அமரன்
31-07-2007, 07:56 PM
அம்மாவாசையாய் இருந்த
வாழ்வை பெளர்ணமியாக்கி
கண்சிமிட்டுகின்றாய் மின்னும்
நட்சத்திரமாய்....


இதுகூடப் புரியலையா..."அம்மா"வின் ஆசையைக் காட்டி மோசம் செய்வதற்கு அச்சாரமிது.

அக்னி
31-07-2007, 09:32 PM
காதல் என்ற மூன்றெழுத்தில்,
சுகம் என்ற மூன்றெழுத்து நிறைவாகி,
மணம் என்ற மூன்றெழுத்தில் முடிவாகி,
வாழ்வு என்ற மூன்றெழுத்தில் நிலையாகி,
இருந்த என்னை...
பிரிவு என்ற மூன்றெழுத்து,
சோகம் என்ற மூன்றெழுத்தைத் தந்து,
உயிர் என்ற மூன்றெழுத்தைப் பறித்து,
பிணம் என்ற மூன்றெழுத்தாக
ஆக்கியது என்னை...

பாராட்டுக்கள் இனியவள்...

aren
01-08-2007, 12:35 AM
வாவ்!!!! என்று சொல்லவைக்கும் அருமையாக அழகான கவிதை. பாராட்டுக்கள்.

சினிமா காரர்கள் பார்த்தால் இந்த அழகான வரிகளை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஷீ-நிசி
01-08-2007, 04:00 AM
மிக அழகாக இருக்கிறது இனியவளே இந்த கவிதையின் வரிகள்... உங்கள் கவிதைகளில் முன்னேற்றம்.... வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

சிவா.ஜி
01-08-2007, 04:12 AM
அழகான வரிகளுடன் மீண்டுமொரு காதல் சொல்லும் கவிதை.வாழ்த்துக்கள் இனியவள்.

இனியவள்
01-08-2007, 08:25 AM
இதுதானா..
என்னுள் நீ
இதுதானா
உன்னுள் என்விம்பம்

அழகான வரிகளுக்குப்பாராட்டுக்கள்...........

நன்றி அன்பு

என்னுள் உன்
விம்பம் காணுவதென்றால்
எனக்குள் ஓர் பூரிப்பு

இனியவள்
01-08-2007, 08:26 AM
எத்தனை புள்ளி வைத்து
வரைந்த கோலமென்றாலும்
அழகில் குறைவதில்லை.

காதலும் அப்படித்தான்..
முற்றுபுள்ளி போட்டாலும்
காற்புள்ளி போட்டாலும்
என்றும் இனிமை.....!

இனியவள் கவிதையும்....

நன்றி அமர்..

எப்படியோ ஒரு புள்ளியில்
ஆரம்பித்து இன்னொர்
புள்ளியில் முற்றுப் பெறுகின்றது
காதலும் வாழ்க்கையும்

இனியவள்
01-08-2007, 08:27 AM
இதுகூடப் புரியலையா..."அம்மா"வின் ஆசையைக் காட்டி மோசம் செய்வதற்கு அச்சாரமிது.

ஹீ ஹீ அமர்

அதில் இப்படி ஒரு
கருத்தும் இருக்கா
அடடா எனக்கு தெரியாமல்
போய் விட்டது

இனியவள்
01-08-2007, 08:28 AM
காதல் என்ற மூன்றெழுத்தில்,
சுகம் என்ற மூன்றெழுத்து நிறைவாகி,
மணம் என்ற மூன்றெழுத்தில் முடிவாகி,
வாழ்வு என்ற மூன்றெழுத்தில் நிலையாகி,
இருந்த என்னை...
பிரிவு என்ற மூன்றெழுத்து,
சோகம் என்ற மூன்றெழுத்தைத் தந்து,
உயிர் என்ற மூன்றெழுத்தைப் பறித்து,
பிணம் என்ற மூன்றெழுத்தாக
ஆக்கியது என்னை...

பாராட்டுக்கள் இனியவள்...

வாவ் அருமை அக்னி வாழ்த்துக்கள்
மூன்றெழுத்தின் உண்மைகள் அருமை...

நன்றி அக்னி வாழ்த்துக்கு

இனியவள்
01-08-2007, 08:29 AM
வாவ்!!!! என்று சொல்லவைக்கும் அருமையாக அழகான கவிதை. பாராட்டுக்கள்.
சினிமா காரர்கள் பார்த்தால் இந்த அழகான வரிகளை அள்ளிக்கொண்டு போய்விடுவார்கள்.
நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா

இனியவள்
01-08-2007, 08:30 AM
மிக அழகாக இருக்கிறது இனியவளே இந்த கவிதையின் வரிகள்... உங்கள் கவிதைகளில் முன்னேற்றம்.... வாழ்த்துக்கள்! தொடருங்கள்!

நன்றி ஷீ


அழகான வரிகளுடன் மீண்டுமொரு காதல் சொல்லும் கவிதை.வாழ்த்துக்கள் இனியவள்.

நன்றி சிவா...

விகடன்
01-08-2007, 08:33 AM
வரேவாவ்.
இனியவள் கவிதை எழுதுவதில் சிகரத்தை நோக்கி...
பாராட்டுக்கள்.

என் காதலை கண்டு கொண்டேன் உன்னிடம்
உன் காதலை கண்டு கொண்டாயா என்னிடம்..??

கேள்விக்குறியுடன் ஆரம்பித்த என் காதலை
முடித்து வைப்பாயா முற்றுப்புள்ளி வைத்து....

பல காதல் புரிவோரின் நிலை இந்த நிலைதான்.

இலக்கியன்
01-08-2007, 08:36 AM
காதல் கவிதை கிறுங்கவைத்தது வாழ்த்துக்கள் இனியவள்
எழுத்துப்பிழைகள் கொஞ்சம் தலைகாட்டுகின்றது.
இதை ஆக்கபூர்வமான கருத்தாக எடுக்கவும் இனியவள்

இனியவள்
01-08-2007, 09:56 AM
வரேவாவ்.
இனியவள் கவிதை எழுதுவதில் சிகரத்தை நோக்கி...
பாராட்டுக்கள்.

பல காதல் புரிவோரின் நிலை இந்த நிலைதான்.

நன்றி விராடன்

இனியவள்
01-08-2007, 09:58 AM
காதல் கவிதை கிறுங்கவைத்தது வாழ்த்துக்கள் இனியவள்
எழுத்துப்பிழைகள் கொஞ்சம் தலைகாட்டுகின்றது.
இதை ஆக்கபூர்வமான கருத்தாக எடுக்கவும் இனியவள்

நன்றி இலக்கியன்...

ஆக்கபூர்வமான கருத்துக்களை
தலைசாய்த்து ஏற்றுக்கொள்வோம் இலக்கி
கருத்துகளின்றி கலைஞன் என்றும்
வளர்வதில்லை நன்றி

இலக்கியன்
01-08-2007, 03:29 PM
நன்றி இலக்கியன்...

ஆக்கபூர்வமான கருத்துக்களை
தலைசாய்த்து ஏற்றுக்கொள்வோம் இலக்கி
கருத்துகளின்றி கலைஞன் என்றும்
வளர்வதில்லை நன்றி

என்னை ஒரளவு எழுத்துப்பிழைகளின்றி எழுதப்பழக்கியதும்
கருத்துக்களம்தான்
வாழ்த்துக்கள் தொடரட்டும்