PDA

View Full Version : படைப்பின் பேதம்......!



ஓவியன்
31-07-2007, 06:30 PM
படைப்பின் பேதம்......!

எம் வீதியும்
வீடுகளும் சொல்லும்
எம் சினேகத்தின்
வீரியம்............!

என் வீட்டு மாமரமும்
உன்வீட்டு பல்கனியும்
ஒரே சேர வளர்ந்தன
நம் சினேகம்.....!

ஒன்றாய்த் திரிந்து
ஒன்றாய் படித்து
ஒன்றாய் வளர்ந்தோமே
அப்பொதெல்லாம் அறிந்ததில்லை
எம்முள் பேதம்....!

என்னைப் பெண்ணென்று
உலகிற்கு உணர்த்தவென
நாளொன்று வந்தது
நாட்கள் நகர நகர.....!

முளைத்த மாஞ்செடி
பூத்துக் கனிய.....
வளர்த்தவரே போட்டனர்
முள்ளாய் வேலிகள்.....!

தடை போட்டு
அடை பட்டன
நம் சினேகத்துடன்
எம் உள்ளமும்....!

வேலியைத் தாண்ட
எனக்குப் பயம்
வேலிக்குள் வர
உனக்கும் பிடிக்கா(து)....!

வேலிக்குள் நானும்
வெளியே நீயும்
வேலியையே முறைத்தபடி
வாழ்ந்தே பழகிவிட்டோம்....!.

விகடன்
31-07-2007, 06:36 PM
பருவ நிலை மாற்றத்துடன் நட்பின் போக்கை நாணயமாக கூறிவிட்டீர்கள்.
பாராட்டுக்கள் ஓவியன்

இளசு
31-07-2007, 06:38 PM
சமுதாய வயலில் மனிதன் வகுத்த
வரப்புகள் பல வசதிக்காக..சில வம்புக்காக..

இயற்கையே போட்ட சில வேலிகள் உண்டு..
தாவர வேலியாய் இயற்கை அமைத்ததை
இரும்பாய், மின் பாயும் மரணக்கோடாய் மாற்றிய
பெருமை மனிதனுக்கே உண்டு!

அறிவின் முன்னேற்றமும் குயுக்தியும் உடன்பிறந்தவை..
ஒன்றிற்கு கொடுத்த விலை மற்றொன்று!


ஓவியனின் வருத்தத்தில் ஆதிகால நியாயமுண்டு!

அமரன்
31-07-2007, 07:19 PM
ஓவியன்..முதலில் கையைக் கொடுங்க...இதுபோன்ற கவிதைகளையே நான் அதிகம் விரும்புவேன்...இதுபோன்ற கவிதைகளையே உங்களிடமும் எதிர்பார்க்கின்றேன். நான் கவிதையின் கருவைச் சொல்லவரவில்லை..சொன்ன விதத்தை சொல்கிறேன்.

முளைத்த மாஞ்செடி
பூத்துக் கனிய.....
வளர்த்தவரே போட்டனர்
முள்ளாய் வேலிகள்.....!

இதுபோன்றவரிகள் என்னை அதிகம் கவர்பவை. சொல்ல நினைப்பதை நேரடியாகச் சொல்லாது கொஞ்சம் மறைத்து அதே நேரம் புரியக்கூடியது போல சொல்லவேண்டும். அப்படி எழுதும்போது புரிந்துகொள்ளாத அளவுக்கு சில வரிகள் அமைந்துவிடும்..தொடர்ந்து இதுபோன்ற வரிஅமைப்புடன் கூடிய கவிதைகளை உங்களிடம் எதிர்பார்க்கின்றேன்.


அநேகமாக நடக்கக் கூடிய ஒன்று. நடக்கின்ற ஒன்று. இந்நிலை இப்போது மாறி வருகிறது. மாறியதால் வரும் பல வகையான பிரச்சினைகளை பார்க்கும்போது வேலி தேவையானது என எண்ணத்தோன்றும். வருமுன் காப்போம் எனும் வகையான வேலியாகவே இதுஅறிமுகப்படுத்தப்பட்டிருக்கும்.

மணிகள் தாங்கிய பசுமை வயல்களுக்கு வேலி இருப்பது சொந்தக்காரனுக்கு கொண்டாட்டம் சுவைக்க நினைப்பவனுக்கு திண்டாட்டம். இந்த வகையில் வேலிகள் சரியானவை. இந்த வேலிகளால் நித்தமும் வேகுபவன் யார் தெரியுமா....ருஷிக்கநினைக்கா ரசிக்க நினைக்கும் ரசிகன். அவன் நிலை பரிதாபகரமானது. அப்படியானவர்களுக்காக வேலிகளை அதிகம் உயர்த்தாது இருப்பது சரியானதாக இருக்கும் என்பது எனது கருத்து.

சுருக்கமாக சொல்லின் பயிரை நாசம்செய்யாது ரசிக்கக்கூடிய அளவில் வேலி இருக்கவேண்டும். பாராட்டுக்கள் தோழா! பரிசு 1000 இ-பணம்.

பார்த்திபன்
31-07-2007, 07:19 PM
கவிதை அருமை அண்ணா...

பாராட்டுக்கள்....

இனியவள்
31-07-2007, 07:39 PM
ஓவியரே வாழ்த்துக்கள் :icon_08:

அழகிய கவிதையை அழகாய்
தத்தெடுத்து தந்தமைக்கு பாராட்டுக்கள்

அக்னி
31-07-2007, 09:40 PM
பருவம் வரும் பருவத்தில்,
எம் மனங்களில் இருக்குமா
தெளிவு...?
தெளிவு பெறும் நேரம்வரை,
எம்மிடையே இருக்கட்டும்
வேலி...
ஆனால்,
நீயும் நானும்
தெளிவாகும் போது,
இடைவெளி அதிகரித்துவிடும்
என்பது என்னவோ உண்மைதான்...

பாராட்டுக்கள் ஓவியரே...

ஷீ-நிசி
01-08-2007, 04:16 AM
காலமாற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால் இழந்தவைகள் அதிகம் ஒரு பெண்ணுக்கு... பெரியவள் என்ற அங்கிகாரம் கொடுத்துவிட்டு சிறுவர்களின் சுதந்திரம் கூட பறிக்கப்படும்.. ஆனால் காலம் இன்று அப்படியில்லை.

இளசு சொன்னதுபோல, ஆதிகால நியாயமுண்டு.. நிகழ்காலத்தில் பெண்கள் சுதந்திரத்தை கையில் எடுத்துக்கொண்டனர்.. எடுத்துகொள்ளமுடியாத மறுக்கபடுகிற பெண்களுக்கு உங்கள் கவிதை மிக அழகிய ஓர் உந்துதலாயிருக்கும்.. அமரன் சொன்னதுபோல சில வரி அமைப்புகள் கவிதையை அழகுபடுத்துகின்றன... தொடருங்கள் தோழரே!

சிவா.ஜி
01-08-2007, 04:31 AM
தோழமையிலும் பேதம் பார்ப்பவர்கள் இன்றும் இருக்கத்தான் செய்கிறார்கள்.ஒரு தோழனும் தோழனும் நட்பாய் பழக தடை எதுவுமிருப்பதில்லை. அதுவே தோழனும்,தோழியுமாகும்போது பார்வைகள் வித்தியாசப்படுகின்றன. வேலிகள் போடப்படுகின்றன.தோழமைக்குள் இருப்பவர்களுக்குத் தெரியாத பேதம்,வெளியிருந்து பார்ப்பவர்கள் பார்வையில் வந்துவிடுகிறது.
எடுத்துக்கொண்ட கருவுக்கு நீங்கள் கொடுத்திருக்கும் உரு அழகு.
வார்த்தைகள் கவிமயமாய் உள்ளன.
உடலின் பருவ மாற்றம் உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதை நயம்பட எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஓவியன்.

lolluvathiyar
01-08-2007, 10:37 AM
வேலி தேவைதான் விரும்பா காதலை தவிர்க்க*
ஆனால் அதிக உயரம வச்சா
நட்புகள் கூட காதலாகளா மாறிடும்

சாராகுமார்
01-08-2007, 02:17 PM
ஆண் பெண் நட்பை அழகாக கவிதையாக படைத்து அல்ல ஒவியமாக வரைத்துள்ளீர்கள் வள்ளல் ஒவியன் அவர்களே.

ஓவியன்
02-08-2007, 01:21 AM
பருவ நிலை மாற்றத்துடன் நட்பின் போக்கை நாணயமாக கூறிவிட்டீர்கள்.மிக்க நன்றிகள் விராடா!.

ஓவியன்
02-08-2007, 02:06 AM
சமுதாய வயலில் மனிதன் வகுத்த
வரப்புகள் பல வசதிக்காக..சில வம்புக்காக.!

உண்மைதான் அண்ணா!, நம் முன்னே உள்ள வேலிகளில் வசதிகக்காக வகுத்தவையும் உண்டு வம்புக்காக வகுத்தவையும் உண்டு வேறு பிரித்தறிய வேண்டியது நம் கடமை.............!

அழகான பார்வைக்கு மிக்க நன்றிகள் அண்ணா!.

ஓவியன்
02-08-2007, 02:11 AM
ஓவியன்..முதலில் கையைக் கொடுங்க...இதுபோன்ற கவிதைகளையே நான் அதிகம் விரும்புவேன்...இதுபோன்ற கவிதைகளையே உங்களிடமும் எதிர்பார்க்கின்றேன். நான் கவிதையின் கருவைச் சொல்லவரவில்லை..சொன்ன விதத்தை சொல்கிறேன்.

சுருக்கமாக சொல்லின் பயிரை நாசம்செய்யாது ரசிக்கக்கூடிய அளவில் வேலி இருக்கவேண்டும். பாராட்டுக்கள் தோழா! பரிசு 1000 இ-பணம்.

மிக்க நன்றி அமரா!

உண்மையில் நான் எடுத்துக் கொண்டு கவியாக்கிய கரு வேறு, அந்த கருவிற்கு நான் பாவித்த சொற்கள் பண்பட்டவர் சொற்களாயிருக்கவே கொஞ்சம் மாற்றினேன், கொஞ்சம் மாற்றியவுடன் கருவே மாற தலைப்பை மாற்றி இங்கே பதித்தேன்.

உங்கள் கருத்திலே எனக்கும் உடன்பாடுண்டு, வேலிகள் தேவையானவைதான் − தேவையான அளவிற்கு.................!

என்னடா திடீரென ஐ−கேஸ் எகுறுதே என்று பார்த்தேன் உங்கள் வேலையா அது.....................! :D

மிக்க நன்றிகள் அமரா உங்கள் அழகான விமர்சனத்திற்கு..........!:)

ஓவியன்
02-08-2007, 02:15 AM
கவிதை அருமை அண்ணா...

பாராட்டுக்கள்....
மிக்க நன்றி பார்த்தி!

உங்கள் கவிதைகளும் தொடந்து இந்தப் பகுதியில் வந்தால் நான் மிக்க சந்தோசப் படுவேன்.

ஓவியரே வாழ்த்துக்கள் :icon_08:

அழகிய கவிதையை அழகாய்
தத்தெடுத்து தந்தமைக்கு பாராட்டுக்கள்
நீங்கள் சொன்ன திருத்தத்தை கவிதையில் செய்துள்ளேன், இப்போது மேலும் அழகா இருக்கிறது.
மிக்க நன்றி இனியவள்.!:)

விகடன்
02-08-2007, 03:19 AM
ஆண் பெண் நட்பை அழகாக கவிதையாக படைத்து அல்ல ஒவியமாக வரைத்துள்ளீர்கள் வள்ளல் ஒவியன் அவர்களே.

இது ரொம்ப ஓவர்

ஓவியன்
02-08-2007, 03:28 AM
ஆனால்,
நீயும் நானும்
தெளிவாகும் போது,
இடைவெளி அதிகரித்துவிடும்
என்பது என்னவோ உண்மைதான்....

உண்மைதான் அக்னி!, என் நண்பி ஒருவரும் இதே கருத்தை எனக்கு ஒரு தடவை கூறினார்.

அழகான பின்னூட்டக் கவிதைக்கு நன்றிகள் கோடி நண்பா!.

ஓவியன்
02-08-2007, 03:32 AM
காலமாற்றத்தில் ஏற்படும் மாற்றத்தினால் இழந்தவைகள் அதிகம் ஒரு பெண்ணுக்கு... பெரியவள் என்ற அங்கிகாரம் கொடுத்துவிட்டு சிறுவர்களின் சுதந்திரம் கூட பறிக்கப்படும்.. ஆனால் காலம் இன்று அப்படியில்லை.

உண்மைதான் ஷீ!
ஆனால் இரண்டு சாராரான பெண்களும் இன்னமும் இருக்கிறார்கள், ஆதலால் அந்தக் கருத்தை எடுத்துக் கொண்டேன்...........

மிக்க நன்றிகள் உங்கள் விரிவான பார்வைக்கு ஷீ!.

ஓவியன்
02-08-2007, 03:36 AM
உடலின் பருவ மாற்றம் உறவிலும் தாக்கத்தை ஏற்படுத்திவிட்டதை நயம்பட எழுதியுள்ளீர்கள். வாழ்த்துக்கள் ஓவியன்.

நன்றி சிவா!

நான் சொல்ல நினைத்தது தெளிவாக உங்கள் வரிகளில்.........

நன்றிகள் கோடி......!

ஓவியன்
02-08-2007, 03:39 AM
வேலி தேவைதான் விரும்பா காதலை தவிர்க்க*
ஆனால் அதிக உயரம வச்சா
நட்புகள் கூட காதலாகளா மாறிடும்

நகைச்சுவை என்றாலும் உங்கள் கருத்து யதார்த்தமானது − நன்றிகள் வாத்தியாரே!.

ஓவியன்
02-08-2007, 03:42 AM
ஆண் பெண் நட்பை அழகாக கவிதையாக படைத்து அல்ல ஒவியமாக வரைத்துள்ளீர்கள் வள்ளல் ஒவியன் அவர்களே.
மிக்க* ந*ன்றிக*ள் சாரா குமார், உங்க*ளைப் போன்றோருக்காக*வே இன்னும் நிறைய* எழுத*லாம்.


இது ரொம்ப ஓவர்
ஹீ!,ஹீ!
உண்மையைத் தானே அவங்க சொன்னாங்க.........!
மனசுக்குப் பிடிக்காவிட்டாலும் மற்றவங்க உண்மையைச் சொல்லும் போது ஏற்றுக் கொள்ள வேண்டும் விராடா! :sport-smiley-018: