PDA

View Full Version : சுகமான சுமை



இனியவள்
31-07-2007, 06:01 PM
மனதில் உன்னைச்
சுமக்கின்றேன் தாயாய்....

இதயத்தில் உன்னைச்
சுமக்கின்றேன் காதலியாய்...

வாழ்வில் உன்னைச்
சுமக்கின்றேன் மனைவியாய்....

என் ஆயுள் முழுவதும்
நான் ஒரு சுமைதாங்கியே
உனக்கு....

தாங்கும் சுமைகளனைத்தும்
உன்னுடையவை என்பதால்
பாரமாய் இருப்பதிற்கு பதில்
இலவம்பஞ்சாய் இன்னும்
சுமக்கக் கேட்கின்றது...

என்றும் நீ
சுகமான சுமை
எனக்கு......

அமரன்
31-07-2007, 07:32 PM
சுமையைக் கூட இவ்வளவு
சுகந்தமாக சொல்ல முடியுமா?
முடியுமென நிருபணமாகியுள்ளதே...
பாராட்டுக்கள் இனியவள்.

theepa
31-07-2007, 08:53 PM
ம்ம்ம் காதலில் சுமை குட சுகமானது எண்டு கவிதை மூலம் சொல்லி உள்ளிர்கல் தோழியே நிச்சயமா அது உன்மையானது பாராட்டுக்கள்

அக்னி
31-07-2007, 09:03 PM
மனதில் உன்னைச்
சுமக்கின்றேன் தாயாய்....

பிரசவித்தபின் அறுக்கப்படுவது
தொப்புள் கொடி ஆனாலும்,
சேய் தாயின் இரத்தத்தால்
போசிக்கப்படுவதுபோல,
மணமானாலும்,
உன் காதலால் என்னை,
தொடர்ந்தும்
போசித்திடு...

இதயத்தில் உன்னைச்
சுமக்கின்றேன் காதலியாய்...

உன் இதயத்தின் நான்கறைகளிலும்
வாழும் எனக்கு அவை சிறையல்ல...
வாழ்நாள் முழுதும் கிடைக்க வேண்டும்
என்று, ஏங்கவைக்கும் உறைவிடம்...

வாழ்வில் உன்னைச்
சுமக்கின்றேன் மனைவியாய்....
என்னைச் சுமக்கும் உன்னையும்
நானே சுமப்பேன்,
என்றும் உன் கணவனாய்...

என் ஆயுள் முழுவதும்
நான் ஒரு சுமைதாங்கியே
என் ஆயுள் முழுதும்,
என்னைத் தாங்கும் தொட்டில் நீயே...
சுமை உனக்கு என்றாலும்,
சுகம் எனக்கு அல்லவா...

தாங்கும் சுமைகளனைத்தும்
உன்னுடையவை என்பதால்
பாரமாய் இருப்பதிற்கு பதில்
இலவம்பஞ்சாய் இன்னும்
சுமக்கக் கேட்கின்றது...
என் மனதில் நீ இருப்பதால்,
உனது பாரமே எனது பாரம்...
இலவம் பஞ்சிலும் மென்மை
அன்றோ உன் உணர்வுகள்...

என்றும் நீ
சுகமான சுமை
எனக்கு......
என்றும் உன்னில் பாதுகாக்கப்படும்
கரு நான்...

பாராட்டுக்கள் இனியவள்...

இனியவள்
01-08-2007, 08:39 AM
சுமையைக் கூட இவ்வளவு
சுகந்தமாக சொல்ல முடியுமா?
முடியுமென நிருபணமாகியுள்ளதே...
பாராட்டுக்கள் இனியவள்.

நன்றி அமர்..

இனியவள்
01-08-2007, 08:40 AM
ம்ம்ம் காதலில் சுமை குட சுகமானது எண்டு கவிதை மூலம் சொல்லி உள்ளிர்கல் தோழியே நிச்சயமா அது உன்மையானது பாராட்டுக்கள்

நன்றி லது

இனியவள்
01-08-2007, 08:40 AM
அக்னி பதில் கவிதை அருமை வாழ்த்துக்கள்

நன்றி

மனோஜ்
01-08-2007, 08:43 AM
சுமைகள் சுவையானால்
சுமப்பது இனிமை
சுமைகள் வெறுப்பானால்
சுட்டிடும் வாழ்வு

சிறப்பான கவிதை இனி

வெண்தாமரை
01-08-2007, 08:47 AM
வாழ்க்கையில் எல்லாமே சுமைதான்
அந்த சுமையையும் சுகமாய் மாறும் என்று சொல்லிய இனியவளுக்கு வாழ்த்துக்கள்..

இனியவள்
01-08-2007, 10:01 AM
சுமைகள் சுவையானால்
சுமப்பது இனிமை
சுமைகள் வெறுப்பானால்
சுட்டிடும் வாழ்வு

சிறப்பான கவிதை இனி

நன்றி மனோஜ் அண்ணா

இனியவள்
01-08-2007, 10:02 AM
வாழ்க்கையில் எல்லாமே சுமைதான்
அந்த சுமையையும் சுகமாய் மாறும் என்று சொல்லிய இனியவளுக்கு வாழ்த்துக்கள்..

நன்றி சூரியகாந்தி

ஓவியன்
04-08-2007, 05:21 PM
சுமையின் சுமை
சுமப்பவரிலும்
யாருக்காகச் சுமக்கிறோம்
என்பதிலேயுமே தங்கியுள்ளது!.

பாராட்டுக்கள் இனியவள்!.

இனியவள்
04-08-2007, 05:29 PM
சுமையின் சுமை
சுமப்பவரிலும்
யாருக்காகச் சுமக்கிறோம்
என்பதிலேயுமே தங்கியுள்ளது!.

பாராட்டுக்கள் இனியவள்!.

நன்றி ஓவியன்

யாருக்காக சுமக்கின்றோம்
எதற்காக சுமக்கின்றோம்
என்பதிலும் அடங்கும்

இன்பா
05-08-2007, 05:44 AM
தன் இதயம் தனக்கு சுமையாகுமா...?

விகடன்
05-08-2007, 06:15 AM
சுமக்க மறுப்பிருந்தாலும் இன்னாருடையதென்பாதால் விரும்புவதும்
சுமையைக்கூட சுகமாக கருதுவதும் கவிதைக்கு மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் சிறப்பே

பாராட்டுக்கள் இனியவள்

இனியவள்
05-08-2007, 09:37 AM
தன் இதயம் தனக்கு சுமையாகுமா...?

சில சமயம் சுமையாகும் வரிப்புலி அவர்களே

இனியவள்
05-08-2007, 09:38 AM
சுமக்க மறுப்பிருந்தாலும் இன்னாருடையதென்பாதால் விரும்புவதும்
சுமையைக்கூட சுகமாக கருதுவதும் கவிதைக்கு மட்டுமில்லை நிஜ வாழ்க்கையிலும் சிறப்பே
பாராட்டுக்கள் இனியவள்

நன்றி விராடன்..

ம்ம்ம்

தொழிலாளி சுமக்கும்
சுமையில் அவனுக்கு
ஒரு சுகம் அதில்
தனது குடும்பம்
நலம் பெறும் என்பதில்
சுமக்கும் சுமையைப்
பொருத்து இருக்கின்றது..