PDA

View Full Version : ரணங்களின் வடிக்கால்

இனியவள்
31-07-2007, 04:05 PM
உணர்வுகள் தகர்த்தெறியப்
படுகையிலே இதயம்
விம்மியழுகிறது...

இதயத்தின் அழுகையில்
உதயம் ஓர் அழகிய
கவிதை...

வார்த்தைகளை ஜாலமாக்கி
எண்ணத்தைக் கருவாக்கி
கண்ணீரை மையாக்கி
எழுதுகிறது புதுக்கவிதையை
மனம்.....

ரணங்களின் வடிக்காலாக
கவிதை.....

aren
31-07-2007, 04:09 PM
ரணக்களின் வடிகாலாக
கவிதை
எப்படி ரசனையுடன்
வந்து விழுகிறது
அதற்கு வலி தெரியாது
என்பதாலா
அல்லது
ரணத்தை குளிர்விக்கும்
திறன் படைத்தது
என்பதாலா!!!

கவிதை வரிகள் அருமை இனியவள் அவர்களே. உங்களுக்கு எப்படித்தான் வார்த்தைகள் இப்படி தானாகவே வந்து விழுகின்றதோ தெரியவில்லை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

அமரன்
31-07-2007, 04:11 PM
கவிதைகளின் வரிகளல்ல
என் கதையின் வலிகள்...
உணர்வுகள் ஜாலக்கவிதையில்
சொன்னது இனியவள்.

புரியவிலை எனக்கு
வரிகளின் வகைகள்.
சுகமா...? சுமையா..?

எப்படியாகிலும் இது
சுகமான சுமைக்கவி....
பாராட்டுக்கள் இனியவள்.

ஓவியன்
31-07-2007, 04:14 PM
ரணங்களின் வடிகால்.....................!
என்னே ஒரு பொருத்தமான உவமானம்!

இந்தக் கவிதைகள் மட்டும் இல்லையென்றால் ரணங்களின் வேதனையை ஆற்றாமல் பலர் பைத்தியங்களாகவே போயிருப்பர்........!

பாராட்டுக்கள் இனியவள், பின்னூட்டிய ஆரென்(அண்ணா) வரிகளும் அமர் வரிகளும் சுப்பர்!.

அக்னி
31-07-2007, 04:18 PM
ரணங்களின் வடிகாலாக
கவிதை பிறந்தது...
தோற்ற காதலின் உதாரணமாக,
நம் காதல் ஆனபோதிலிருந்து....

அழகிய கவிதைகள் தந்த ஆரென், அமரன், மற்றும் இனியவள் அனைவருக்குமே பாரட்டுக்கள்...

விகடன்
31-07-2007, 04:42 PM
ரணங்களின் வடிகாலாக என்று ஆரம்பித்திருக்கும் இனியவளின் கவிதைப்படி வலியை மறைக்கும் குணம் கவிதைக்கு உண்டு என்பதா?

இனியவள்
31-07-2007, 05:10 PM
ரணக்களின் வடிகாலாக
கவிதை
எப்படி ரசனையுடன்
வந்து விழுகிறது
அதற்கு வலி தெரியாது
என்பதாலா
அல்லது
ரணத்தை குளிர்விக்கும்
திறன் படைத்தது
என்பதாலா!!!

கவிதை வரிகள் அருமை இனியவள் அவர்களே. உங்களுக்கு எப்படித்தான் வார்த்தைகள் இப்படி தானாகவே வந்து விழுகின்றதோ தெரியவில்லை. பாராட்டுக்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

ஆஹா அருமை ஆரென் அண்ணா வாழ்த்துக்கள்
அழகிய கருத்தை அழகாய் கவியாய் வடிவமைத்தமைக்கு...

அண்ணா வன்மையாக கண்டிக்கின்றேன் உங்களை இனியவள் அவர்களே என்று அழைப்பதற்கு:violent-smiley-034:

நன்றி அண்ணா வாழ்த்துக்கு :icon_08:

இனியவள்
31-07-2007, 05:11 PM
கவிதைகளின் வரிகளல்ல
என் கதையின் வலிகள்...
உணர்வுகள் ஜாலக்கவிதையில்
சொன்னது இனியவள்.

புரியவிலை எனக்கு
வரிகளின் வகைகள்.
சுகமா...? சுமையா..?

எப்படியாகிலும் இது
சுகமான சுமைக்கவி....
பாராட்டுக்கள் இனியவள்.

நன்றி அமர்

பதில் கவிதைகளில் இனிமை
அதற்கு வாழ்த்துக்கள் அமர் :icon_08:

இனியவள்
31-07-2007, 05:12 PM
ரணங்களின் வடிகாலாக
கவிதை பிறந்தது...
தோற்ற காதலின் உதாரணமாக,
நம் காதல் ஆனபோதிலிருந்து....
அழகிய கவிதைகள் தந்த ஆரென், அமரன், மற்றும் இனியவள் அனைவருக்குமே பாரட்டுக்கள்...

தோல்விகள் எல்லாம்
தோல்விகளல்ல அக்னி

நன்றி பாராட்டுக்கு

இனியவள்
31-07-2007, 05:13 PM
ரணங்களின் வடிகாலாக என்று ஆரம்பித்திருக்கும் இனியவளின் கவிதைப்படி வலியை மறைக்கும் குணம் கவிதைக்கு உண்டு என்பதா?

நிச்சயமாக விராடன்

வலியில் இருந்து
ஊற்றெடுக்கும் சில
கவிகள் மயிலிறகாய்
வருடிச் செல்கின்றன
இதமாய் மனதினை

இனியவள்
31-07-2007, 05:14 PM
ரணங்களின் வடிகால்.....................!என்னே ஒரு பொருத்தமான உவமானம்!
இந்தக் கவிதைகள் மட்டும் இல்லையென்றால் ரணங்களின் வேதனையை ஆற்றாமல் பலர் பைத்தியங்களாகவே போயிருப்பர்........!
பாராட்டுக்கள் இனியவள், பின்னூட்டிய ஆரென்(அண்ணா) வரிகளும் அமர் வரிகளும் சுப்பர்!.

நன்றி ஓவியன்

ஷீ-நிசி
01-08-2007, 04:24 AM
நண்பர்கள் உரைத்ததுபோல, ரணங்களின் வடிகால் நல்ல வித்தியாசமான வரி... கவிதைக்கு எந்தளவிற்கு நேரம் எடுத்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு கவிதையின் வார்த்தைகள் செதுக்கப்படும்...
(நீங்க மேக்கப் போட்டுக்கறமாதிரிதான்...:)) வாழ்த்துக்கள் இனியவளே!

சிவா.ஜி
01-08-2007, 04:49 AM
இதயத்தின் அழுகையில்
உதயம் ஓர் அழகிய
கவிதை...
அழுகையில் எப்படி அழகிய கவிதை உதயமாகும்....?
சாத்தியமே இந்த காதல் இலக்கணத்தில் இது சாத்தியமே.
வடிகால் இல்லையென்றால் வேதனைகள் வாழ்(ல்)வை அடைத்து விடும்.
அழகான கவிதை அருமை இனியவள்.

இனியவள்
01-08-2007, 08:23 AM
நண்பர்கள் உரைத்ததுபோல, ரணங்களின் வடிகால் நல்ல வித்தியாசமான வரி... கவிதைக்கு எந்தளவிற்கு நேரம் எடுத்துகொள்கிறோமோ அந்த அளவிற்கு கவிதையின் வார்த்தைகள் செதுக்கப்படும்...
(நீங்க மேக்கப் போட்டுக்கறமாதிரிதான்...:)) வாழ்த்துக்கள் இனியவளே!

நன்றி ஷீ

எங்கை போனாலும் மேக்கப்பை மட்டும் விடுறாங்கள் இல்லையே

இனியவள்
01-08-2007, 08:24 AM
இதயத்தின் அழுகையில்
உதயம் ஓர் அழகிய
கவிதை...
அழுகையில் எப்படி அழகிய கவிதை உதயமாகும்....?
சாத்தியமே இந்த காதல் இலக்கணத்தில் இது சாத்தியமே.
வடிகால் இல்லையென்றால் வேதனைகள் வாழ்(ல்)வை அடைத்து விடும்.
அழகான கவிதை அருமை இனியவள்.

நன்றி சிவா...

lolluvathiyar
02-08-2007, 06:16 AM
வார்த்தைகளை ஜாலமாக்கி
எண்ணத்தைக் கருவாக்கி
கண்ணீரை மையாக்கி

எப்படி பாராட்டுவது இந்த வரிகளே சொல்லிவிட்டதே உன்மையை