PDA

View Full Version : நண்பர்கள் தினம்



இனியவள்
31-07-2007, 03:36 PM
அழுதால் அழுவதற்கும்
சிரித்தால் சிரிப்பதற்கும்
காதலுக்கு மட்டுமா முடியும்
சுற்றத்தை சாட்டி கரம்பிடித்தவளை
கைநழுவிச் செல்லும் காதலில்
கூட இல்லை நட்பின் கண்ணியம்....

தோளோடு தோள் சாய்ந்து
வாழ்க்கை என்னும் புத்தகத்தின்
கடைசிப் பக்கம் வரை கூடவே
வந்து மரணத்தில் கூட மரணிக்காதது
நட்பு.....

நட்பென்னும் உலகத்திற்கு
தெரியவில்லை ஆண் பெண்
பேதம்...

சாடுகின்றது சமுதாயம்
ஆண் பெண் பேதம் காட்டி
நெருஞ்சி முள்ளாய்
தைக்கின்றது வார்த்தைகள்...

ஆண் பெண் சந்திப்புக்களுக்குக்கு
காதல் என்னும் சாயம் பூசி
மனதில் இருக்கும் நட்பெனும்
பந்தத்துக்கு களங்கம் கற்பிக்க
நினைக்கும் சமுதாயம் என்று
மாற்றமடையுமோ அன்று
தான் உண்மையான்
நண்பர்கள் தினம் உலகில்...

அமரன்
31-07-2007, 03:44 PM
நட்பு என்றுமே கசப்பதில்லை
அவ்வாறே இனியவள் கவிதைகளும்..
இனியவளின்
நட்புக்கவிதைஎப்படிக் கசக்கும்.

இருபாலாருக்கும் இடையிலான
சுவர்கள் உடையும்பொது...
உங்கள் கனவு நனவாகும்.

பாராட்டுக்கள் தோழியே..

இன்னும் பல நட்புக்கவிகள் இங்கே.
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=7734

இனியவள்
31-07-2007, 04:02 PM
நன்றி அமர்

aren
31-07-2007, 04:05 PM
நட்பு நிச்சயம் சாகாது. அதற்கு ஆயுள் கெட்டி.

நட்பைப் பற்றிய உங்கள் கவிதை வரிகள் பிரமாதம்!!!!

நன்றி வணக்கம்
ஆரென்

இனியவள்
31-07-2007, 04:08 PM
நட்பு நிச்சயம் சாகாது. அதற்கு ஆயுள் கெட்டி.
நட்பைப் பற்றிய உங்கள் கவிதை வரிகள் பிரமாதம்!!!!
நன்றி வணக்கம்
ஆரென்

நன்றி ஆரென் அண்ணா

விகடன்
31-07-2007, 04:10 PM
உண்மைதான் இனியவள்
களங்கமற்ற நட்பையும் களங்கப்படுத்தி வைக்கும் சமுதாயம்.
இணங்க மறுத்தாலும் இழக்க வைத்திடும் வசைச்சொற்கள்

அக்னி
31-07-2007, 04:12 PM
நட்பு...
தாயிடம், தந்தையிடம்,
சகோதரரிடம், மற்ற உறவுகளிடம்,
பகிரமுடியாத மனங்கள்,
நட்பிடம் பகிர்ந்து கொள்ளும்
ஒவ்வோர் கணங்களையும்...
ஆனால்,
ஆணும் பெண்ணும்
நட்பாகும் போது,
காதல் என்று சாயம்பூசி,
மாற்றும் உலகு...
நிச்சயம்
ஓர் நாள் மாறும்...
நீயும் நானும்,
இன்று பெறும் தெளிவு,
நாளைய தலைமுறைக்கு
இந்த தொற்றுநோயை,
கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து...

அழகிய கவிக்குப் பாராட்டுக்கள்...

மனோஜ்
31-07-2007, 04:32 PM
கவிதைகள் நட்பை உயர்த்துவது அருமை

விகடன்
31-07-2007, 04:39 PM
கவிதைகள் நட்பை உயர்த்துவது அருமை

இல்லை மனோஜ்
உயரிய நட்பை அழகு படுத்துகின்றன கவிதைகள்

இனியவள்
31-07-2007, 05:04 PM
உண்மைதான் இனியவள்
களங்கமற்ற நட்பையும் களங்கப்படுத்தி வைக்கும் சமுதாயம்.
இணங்க மறுத்தாலும் இழக்க வைத்திடும் வசைச்சொற்கள்

ம்ம் ஆமாம் விராடன்

வசைச் சொற்கள்
பூமாலையாய் மாற
வீருநடை போடுகின்றது
வெற்றியெனும் சிகரத்திலே
நட்பு

இனியவள்
31-07-2007, 05:05 PM
அக்னி அழகான கவி
மறுக்க முடியா யதார்த்தம்
வாழ்த்துக்கள் அக்னி :nature-smiley-002:

lolluvathiyar
02-08-2007, 05:58 AM
ஆகா இனியவளை சில சமயம் காதலை தான்டியும் கவி படைப்பீரோ பாராட்டுகள்


களங்கம் கற்பிக்க
நினைக்கும் சமுதாயம் என்று
மாற்றமடையுமோ

அது மாறாது அப்படி இருப்பதுக்கு பெயர் தான் சமுதாயம்

இலக்கியன்
02-08-2007, 02:08 PM
நட்பு என்பது கண்ட இடத்தில் வளரும் காட்டு மரங்கள் அல்ல பண்பட்ட இதயங்களில் மலரும் பூக்கள்
வாழ்த்துக்கள் இனியவள்

வெண்தாமரை
02-08-2007, 02:15 PM
நட்பு என்பது சகாவரம்.. அது எடுத்து காட்டிய என் அருமைத்தோழி இனியவளுக்கு இனிப்பான வாழ்த்துக்கள்..

இனியவள்
02-08-2007, 02:28 PM
ஆகா இனியவளை சில சமயம் காதலை தான்டியும் கவி படைப்பீரோ பாராட்டுகள்
அது மாறாது அப்படி இருப்பதுக்கு பெயர் தான் சமுதாயம்

நன்றி வாத்தியாரே

எல்லாம் படைப்போம் நேரம் காலம்
வரவேண்டாமா வாத்தியாரே:spudnikbackflip:

இனியவள்
02-08-2007, 02:29 PM
நட்பு என்பது கண்ட இடத்தில் வளரும் காட்டு மரங்கள் அல்ல பண்பட்ட இதயங்களில் மலரும் பூக்கள்
வாழ்த்துக்கள் இனியவள்

நன்றி இலக்கியன்

இனியவள்
02-08-2007, 02:32 PM
நட்பு என்பது சகாவரம்.. அது எடுத்து காட்டிய என் அருமைத்தோழி இனியவளுக்கு இனிப்பான வாழ்த்துக்கள்..

நன்றி தோழியே