PDA

View Full Version : காத்திருக்கிறது காவியம்



இனியவள்
31-07-2007, 01:07 PM
மனதினை பாரம் அழுத்த
கிணற்று நீர் போல் கண்களில்
கண்ணீர் குடி கொண்டது....

எதிர்பாராமல் கிடைத்த உறவு
கண்ணிமைக்கும் நேரத்தில்
காணாமல் போய் விடுமோவென
இதயம் பட படக்க கண்களில்
கண்ணீர் அருவியாய் கொட்டியது....

மரங்களில் இருந்து உதிர உதிர
துளிர்க்கும் இலை போன்று
நீ விலக விலக உன்னில்
என் அன்பு மென்மேலும்
துளிர்க்கின்றது....

உன்னைக் காணாத நொடி
மனதில் இருளை உண்டாக்க
ரீங்காரம் இட்டு வரும்
குறுஞ்செய்தி ஒளிபாய்ச்சுகின்றது....

தொல்லைபேசியாய் இருந்த
அலைபேசி உன்னைக் கண்டபின்
என் மூன்றாம் கையாய் என்னோடு
நிழல் போல் தொடர்ந்தது.....

என் இதயப் புத்தகத்தில்
என் உணர்வுகளை கவியாக்கி
உதிரத்தை மையாக்கி
நரம்புகளைப் பேனாவாக்கி உனக்கென
நான் வடித்த காவியம் காத்திருக்கிறது
உன் பார்வைக்காய்

சராஜ்
31-07-2007, 01:09 PM
அற்புதமான் வரிகள்... நன்றி மேடம் :)

அக்னி
31-07-2007, 01:16 PM
இலைகளின் வாழ்க்கை,
இலையுதிர் காலங்களில்
முடிக்கப்படுவதில்லை...
மரங்களினுள் பொதிந்து
பாதுகாக்கப்படுகின்றது...

இதேபோன்றே..,
உனது உருவத்தின் மறைவும்...
என்னுள்ளே பாதுகாப்பாய்...

குறுஞ்செய்தி காவிவருவது,
வெறும் எழுத்துக்களை மட்டுமல்ல...
எனது உயிரின்..,
வாழ்விற்கான உந்துசக்தியை...

செல்லிடப்பேசியோடு இயைந்த
எனது புலன்கள்...
உன்னை தாங்கிய சந்தணப்பேழையாய்,
செல்லிடப்பேசியையே... என்றும் சுழன்றபடி...

பாராட்டுக்கள் இனியவளே...
காதல் கவிதைக்குள் தகவல் தொழில்நுட்பத் தொடர்புகளையும் புகுத்தியமைக்கு...

அன்று புறாவிடுதூது...
இன்று குறுஞ்செய்தியூடு...
என்றான தகவல் தொழில்நுட்ப பரிணாம வளர்ச்சியில், காதலும் மாற்றம் பெற்று விட்டது...
ஆனால், காதலின் உணர்வுகள், உண்மை மாறாத மட்டும்,
மனிதனை ஆட்டுவிக்கும் மிகப்பெரும் சக்தி காதலே...

lolluvathiyar
31-07-2007, 01:16 PM
என் உணர்வுகளை கவியாக்கி
உதிரத்தை மையாக்கி
நரம்புகளைப் பேனாவாக்கி

அப்பா உங்களிடம் வார்த்தை விளையாடுகிறது. உங்கள் நாவில் நடனமாடுகிறது கவிதை வார்த்தைகள்

இனியவள்
31-07-2007, 03:13 PM
அற்புதமான் வரிகள்... நன்றி மேடம் :)

நன்றி சராஜ்

இனியவள்
31-07-2007, 03:14 PM
பதில் கவிதை பிரமாதம் அக்னி வாழ்த்துக்கள்:icon_good:

வாழ்த்துக்கு நன்றி அக்னி :icon_03:

இனியவள்
31-07-2007, 03:15 PM
அப்பா உங்களிடம் வார்த்தை விளையாடுகிறது. உங்கள் நாவில் நடனமாடுகிறது கவிதை வார்த்தைகள்

நன்றி வாத்தியாரே

ஓவியன்
31-07-2007, 03:18 PM
மனதின் எங்கோ
ஒரு ஓரத்தில்
உன்னாலேயே விதைக்கப்பட்டு
உன் நினைவுகளாலேயே வளார்க்கப்பட்டு
காத்திருக்கிறது அந்த காவியம்.
உனக்காகவே..............................

பாராட்டுக்கள் இனியவள்!. :icon_good:

இனியவள்
31-07-2007, 03:22 PM
நன்றி ஓவியரே

பதில்கவிதைக்கு ஒரு
ஓ...........:icon_good:

அமரன்
31-07-2007, 03:25 PM
படிக்காமலே சொல்வேன்
காத்திருக்கும் காவியம் இனிமை.
இனியவள் எழுதியல்லவா
இனிமையாகத்தானே இருக்கும்.

இனியவள்
31-07-2007, 03:38 PM
நன்றி அமர்