PDA

View Full Version : கணினிக் காதல் - புதிய தொடர்கதை



leomohan
31-07-2007, 12:17 PM
கண்ணனுக்கு அந்த பெரிய கணினி நிறுவனத்தில் மேலாளர் வேலை. முதல் நாள் அலுவலகத்தில்.

28 வயதில் மேலாளர் ஆனதே தாமதம் என்று நினைத்துக் கொண்டிருந்த அவனுக்கு அங்கிருந்த மற்ற மேலாளர்கள் எல்லாம் 35 வயது தாண்டியிருந்ததை பார்த்து ஒரு மன நிம்மதி.

அவனகென்று தனியாக ஒரு அறை கொடுத்திருந்தார்கள். பின்னால் இருந்த ஷோகேஸில் தான் கொண்டுவந்திருந்து பொருட்களை அழகாக அடுக்கி வைத்தான். சிறிய கார்கள் எல்லா மாடல்கள். வெர்கோ என்று தன்னுடைய ராசி பெயரை கொண்ட பல வண்ண கோப்பைகள், சிறிய கிரிகெட் விளையாட்டு மைதானம், அதில் பொம்மை விளையாட்டு வீரர்கள். தன்னுடைய புகைப்படம், பெற்றோர்களின் புகைப்படம் என்று சில நிமிடங்களில் போரடிக்கு அலுவலக காபினை ஒரு பூங்காவாக மாற்றியிருந்தான்.

கணினியில் நுழைந்து மின்னஞ்சலை திறந்து தன் நண்பர்களுக்கும் பெற்றோர்களுக்கும் புதிய வேலை, மற்றும் புதிய செல்பேசி எண், அலுவலக எண்கள் என்று அனைத்தையும் தட்டி விட்டு நிமிர்ந்த போது, ஒரு அழகு பதுமையுடன் அந்த நிறுவனத்தின் மனித வள மேலாளர் தன்னை நோக்கி வருவதை பார்த்தான். வாவ், என்று சொல்லிவிட்டு பிறகு கால் செண்டரில் காதலா வேண்டாமடா என்று சொல்லிக் கொண்டான்.

உள்ள நுழைந்த ராஜாராம், ஹலோ கண்ணன், வாவ், உங்க காபினை கலர்பூஃல்லா மாத்திட்டீங்களே. பலே என்றான்.

மெல்ல புன்னகைத்து அந்த பாராட்டை ஏற்றுக் கொண்டவன், யார் இந்த பெண் என்பது போல் நெற்றி புருவத்தை உயர்த்தினான். நீல சுடிதாரில் அழகாக இருந்தாள். மேல் பூச்சு எதுவுமில்லாத தமிழ் பெண். வட நாட்டின் கலாச்சாரம் உட்புகந்து சுடிதாரில் இருந்தாலும் சுடிதார் அணிந்தால் மேலே துப்பட்டாவும் போடவேண்டும் எனும் அளவுக்கு முழுவதும் நுழையாத கலாச்சாரம். நம்முடைய கலாச்சாரம் ஏர் டைட் தான் என்று மனதில் சொல்லிக் கொண்டான்.

மாலதி, இவர் தான் மிஸ்டர் கண்ணன். இன்னிலேர்ந்து உன் பாஸ். கண்ணன், இவங்க தான் மாலதி, உங்க காரியதரிசி என்றார்.

குறைவாக பேசினாலும் மனதில் பட்டதை சட்டென்று தைரியமாக பேசக் கூடிய இளைஞன் கண்ணன்.

மன்னிக்கனும், மிஸ்டர் ராஜாராம், நான் காரியதரிசி வேண்டும்னு கேட்கலையே.

நீங்க கேட்கலை. ஆனால் இந்த பொஸிஷனுக்கு நம் நிறுவனம் காரியதரிச தரும் என்றார்.

ஆனா இவங்களால என் ஸ்பீடுக்கு வேலை செய்ய முடியாதே என்றான்.

அதுவரையில் பேசாமல் இருந்த பறவை சிறகை படபடவென அடித்தது. சார், என்ன சொல்றாரு இவர் என்றால் மாலதி.

நான் 100 வார்த்தைகள் ஒரு நிமிடத்தில் தட்டச்சு செய்வேன். மேலும் என்னுடைய சிந்தனைகளின் வேகத்திற்கு என்னால் தட்டச்சு செய்ய முடியும். அதுமட்டுமல்லாமல் நான் என்ன அவுட்புட் விரும்பறேன்னு சொல்லி புரியவைக்கறதுக்குள்ள நான் என் வேலையை செஞ்சி முடிச்சிடுவேன். அதனாலே எனக்கு காரியதரிசி வேண்டாம் என்றான்.

மிஸ்டர் கண்ணன், நானும் 100 வார்த்தைகள் தட்டச்சு செய்தவள் தான். பள்ளி நாட்களிலேயே ஷார்ட்ஹாண்ட, டைப்பிங்க் மற்றும் அட்வான்ஸ்ட் கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிருக்கேன், தெரியுமா என்றாள் காட்டமாக.

ஹா ஹா இரண்டு திறமைசாலிகளுக்கும் இடையில் முதல் சந்திப்பே மோதலா என்று ஆர்வமாக பார்த்தார் ராஜாராம்.

மன்னிக்கனும் மிஸ் மாலதி. உங்கள் திறமை மீது எனக்கு எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், என் வேலைகளை நானே செய்து தான் எனக்கு பழக்கம் என்றான் கண்ணன் அமைதியாக.

சரி கண்ணன். இப்போதைக்கு மாலதி உங்கள் செகரெட்டரியாக இருக்கட்டும். விரைவில் அவங்களுக்கு சரியான துறையில் மாற்றம் தருகிறோம் என்று சொல்லி அகன்றார்.

பின்னால் தொடர்ந்து சென்ற மாலதி, என்ன சார், அவரு இவ்வளவு அலட்டலா இருக்காரு என்றாள்.

ஹா ஹா என்று சிரித்துவிட்டு உன்னிடம் பிறகு பேசுகிறேன் என்று சொல்லி விடைபெற்றார் ராஜாராம்.

தொடரும்....

அக்னி
31-07-2007, 12:21 PM
ஆகா... அசத்தலான தொடர்கதை ஒன்றின் ஆரம்பம்...
தொடருங்கள்... தொடர்ந்தும் இணைந்திருப்பேன்...
அளவான வர்ணனைகள், சிறப்பான, இயல்பான கதையின் போக்கு என்று
ஆரம்பத்திலேயே நேர்த்தியாக உள்ளது...
பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

அன்புரசிகன்
31-07-2007, 12:30 PM
சுவாரசியமாகவும் நன்றாகவும் உள்ளது. தயவுசெய்து விரைவாக அடுத்த பாகம் தரவும்.

leomohan
31-07-2007, 12:32 PM
2

மதிய இடைவெளியில் 11 மாடியில் இருக்கும் உணவகத்தை நோக்கி அனைவரும் படையெடுக்கும் வழக்கம். 2000 பேர் வேலை செய்யும் அந்த நிறுவனம் மதிய இடைவெளியில் திருவிழா கோலம் பூண்டிருக்கும்.

மாறிவரும் கலாச்சாரத்திற்கு தகுந்த வாறு Food Court ஒன்று அமைத்து அனைத்து உணவு வகைகளுக்கும் ஒரு Stall தந்திருந்தனர்.

என்ன தான் ஜீன்ஸ் பாண்டு அணிந்த கோக் குடித்துக் கொண்டு திரிந்தாலும் உணவு நேரத்தில் ஒருவனுடைய ஊரை சொல்லிவிடலாம். அதிகப்படியான கும்பல் நம் சங்கீதா சைவத்தில் படையெடுத்தது. கண்ணன் நேராக அந்த மேற்கத்திய உணவகத்திற்கு சென்று ஒரு சிக்கன் பர்கர், வித் டபுள் சீஸ், எஸ்ட்ரா மயோனீஸ் வித் கோக் என்று சொன்னான்.

இரண்டடி தள்ளி இருந்த மேசையில் மாலதி தன் நண்பிகளுடன். இவன் கொடுத்த ஆர்டரை காதில் கேட்டவள், அதான் இத்தனை கொழுப்பு பாரேன். டபுள் சீஸான், எக்ஸ்ட்ரோ மயோனீஸான் என்றாள் நக்கலாக.

உணவு பரிமாறுபவர், டயெட் கோக்கா சார் என்று கேட்க, இல்லை ரெகுலர் கோக் என்றான்.

பார்ரா ரெகுலர் கோக்க வேற என்றாள் மாலதி மீண்டும்.

சில நிமிடங்களில் அவன் கூறியவை தயாராக தட்டை எடுத்துக் கொண்டு தனியாக இருக்கும் ஒரு மேசையை நோக்கி நடந்தான். அவளை கடக்கும் போது, ஆனால் நான் தினமும் 20 கிலோ மீட்டரும் ஓடுகிறேன் மா'ம் என்று சிரித்தபடி சொல்லி நகர்ந்தான்.

அவள் சட்டென்று நாக்கை கடித்துக் கொள்ள, நண்பி அவளை சத்தமாக பேசியதற்கு கோபித்துக் கொண்டாள்.

தன்னுடைய இடத்திலிருந்து அவனை ஒரக்கண்ணால் பார்த்தாள் மாலதி. நல்ல உயரம், மாநிறம், ஸ்மார்ட்டாக தான் இருந்தான். ஆனால் இந்த கொழுப்பு அதிகம் தான் என்று நினைத்துக் கொண்டு தன் உணவின் ஊடே மீண்டும் அவனை பார்க்க முயல அவன் சரியாக இரண்டரை நிமிடத்தில் சாப்பிட்டு முடித்து எழுந்தான்.

ஒரு மணி நேர லஞ்ச் நேரம். ஹாயாக சாப்பிடலாம் என்று பார்த்தால் இந்த பந்தா பார்ட்டி சீட்டுக்கு போகும் போலிருக்கே என்று நினைத்து, வரவேற்பாளினியின் எண்ணை தன் செல்பேசியில் டயல் செய்தாள்.

ரிது, எனக்கு ஒரு புது பாசு வந்திருக்கே. அதான்பா அந்த அல்டாப்பு பேர்வழி, அது என் எக்ஸ்டன்ஷன்ல போன் செஞ்சா செய்யும். அதை என் மொபைல் நம்பருக்கு ஃபார்வெர்ட் செய்துடு என்றாள்.

ஆனால் அவள் எதிர்பார்த்த மாதிரி எந்த போனும் வரவில்லை.

மதிய உணவு முடிந்து நேராக அவனுடைய அறைக்குள் சென்று அமர்ந்தாள்.

சில நிமிடங்கள் அவன் ஏதாவது பேசுவான் என்று காத்திருந்தவள், தானே பேசலாம் என்று நினைத்து, உங்களுக்கு சினிமா பாக்கற பழக்கம் உண்டா என்று கேட்டாள்.

மன்னிக்கனும் மிஸ் மாலதி, அலுவலக நேரத்தில் பர்செனல் விஷயங்கள் பேசுவதை நான் விரும்பவில்லை என்றான் அமைதியாக.

ரொம்ப தான் போ என்று நினைத்துக் கொண்டாள்.

சரி எனக்கு ஏதாவது வேலை தாங்க என்றாள்.

ம்ம் என்று யோசித்து விட்டு ஒரு கப்பூச்சினோ கொண்டு வாங்க என்றான்.

டேய் காஃபி மிஷின் 10 அடி தூரத்தில தான் இருக்கு போய் எடுத்துக்கோ என்று சொல்லத் தோன்றியது. சரி எவ்வளவு தூரம் தான் போறான்னு பார்ப்போம் என்று மனதில் சொல்லிக் கொண்டு ஒரு கோப்பையில் காஃபி என்றே சொல்ல முடியாத அந்த வஸ்துவை கொண்டு வந்து அவன் முன்னால் வைத்தாள்.

ரொம்ப நன்றி. நான் ஏதாவது வேலை இருந்தா கூப்பிடறேன். நீங்க உங்க சீட்டுக்கு போகலாம் என்றான்.

போடா. அவனவன் என்கிட்டே பேசறதுக்கு தவமா இருக்கான். உன் முன்னாடி வந்து உட்கார்ந்தா பந்தா பண்றியா என்று நினைத்துக் கொண்டே கிளம்பினாள்.

தொடரும்...

leomohan
31-07-2007, 12:37 PM
நன்றி அன்புரசிகன், அக்னி. என்னை எப்போதும் உற்சாகப்படுத்துபவர்களின் பட்டியலில் நீங்கள் இருப்பது மிகவும் ஊக்கத்தை தருகிறது. இந்த நேரத்தில் அமரன், ஷீ, ஓவியன், வாத்தியார், விராடன் அவர்களுக்கும் நன்றிகளை சொல்லிக் கொள்கிறேன்.

அக்னி
31-07-2007, 12:38 PM
கப்புச்சீனோ காபியா லியோ...
சுவாரசியமாகப் போகிறதே அப்புறம்...

அன்புரசிகன்
31-07-2007, 12:38 PM
நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் ஒரு அழகான பெண்ணின் மனதில் எப்படியான எண்ணங்கள் தோன்றும் என்ற ஊகமும் தோன்றக்கூடியவாறு கதை இருக்கிறது. தொடருங்கள். எதிர்பார்த்தபடி...........

அக்னி
31-07-2007, 12:43 PM
நகைச்சுவையாகவும் அதே நேரத்தில் ஒரு அழகான பெண்ணின் மனதில் எப்படியான எண்ணங்கள் தோன்றும் என்ற ஊகமும் தோன்றக்கூடியவாறு கதை இருக்கிறது. தொடருங்கள். எதிர்பார்த்தபடி...........

என்ன ஆபீஸில் ஏதாவது படமோட்ட எண்ணமா..? இருக்கும் நாட்டை எண்ணி அடக்கமா, சமத்தா இருக்கோணும் சரியா...

சிவா.ஜி
31-07-2007, 12:47 PM
தேர்ந்த எழுத்தாளரின் கதையை படிக்கும் சுகமே தனி.உங்கள் காட்சி விவரிப்பு,இயல்பான உரையாடல்கள்,கதையை கொண்டு செல்லும் பாங்கு அனைத்தும் அருமை மோகன். ஆவல் கூடுகிறது...தொடருங்கள்.

அன்புரசிகன்
31-07-2007, 12:49 PM
என்ன ஆபீஸில் ஏதாவது படமோட்ட எண்ணமா..? இருக்கும் நாட்டை எண்ணி அடக்கமா, சமத்தா இருக்கோணும் சரியா...

வோய்... நம்மள பாத்து எந்த அழகான பொண்ணும் கதைக்க விரும்பாது...

அதை நிரூபிக்க முடியும்.

நான் இதுவரை தினமும் மன்றம் வருகிறேன். யாரிடமும் போவதில்லையே... :D :D :D :D

leomohan
31-07-2007, 12:51 PM
தேர்ந்த எழுத்தாளரின் கதையை படிக்கும் சுகமே தனி.உங்கள் காட்சி விவரிப்பு,இயல்பான உரையாடல்கள்,கதையை கொண்டு செல்லும் பாங்கு அனைத்தும் அருமை மோகன். ஆவல் கூடுகிறது...தொடருங்கள்.



நன்றி சிவா அவர்களே.

leomohan
31-07-2007, 01:12 PM
3


வாரம் ஒன்றாகியும் அவனிடமிருந்து எந்த பணிக்கும் உதவி கேட்டு அழைப்பு வரவில்லை. மிகவும் சலித்துப்போன மாலதி நேராக மனித வள மேலாளரிடம் சென்று சார், எனக்கு வேலையே இல்லாம சம்பளம் தர உத்தசமா என்று கேட்டாள் காட்டமாக.

ஏன் அப்படி சொல்றீங்க.

பின்னே கண்ணன் தினமும் 9 மணிக்கு வர்றார். 6 மணிக்கு போயிடறார். நாலு நாளாவா என் உதவி தேவைபடாம இருக்கும். வெட்டியா 20,000 சம்பளம் வாங்கறதுல்ல எனக்கு உத்தேசம் இல்லை என்றாள்.

பாருங்க மாலதி, நீங்க ஒரு திறமை சாலி. கண்ணன் மாதிரி ஆளுங்கிட்ட வேலை செஞ்சா தான் உங்க திறமை மெருகேரும். உங்களுக்கு தெரியாது. வந்த மூணாவது நாளே 45 லட்சத்திற்கு ஆர்டர் எடுத்திருக்காரு. நீங்க சொல்ற மாதிரி அவருக்கு 6 மணிக்கு போனாலும் வீட்டிலிருந்தே ஆன்லைனில் அமெரிக்கா எழுந்திருக்கற நேரத்திலேயும் வேலை செய்யறார். அவர் ரொம்ப ஸ்மார்ட்.உங்களை மத்தவங்க கிட்டே போட்டேன்னாலும் உங்களுக்கு போர் அடிக்கும். உங்க திறமைக்கும் வேகத்திற்கும் அவர் தான் சரியான ஆள்.


இவர் என்ன எனக்கு மாப்பிள்ளை பார்க்கிறாரா என்று மனதிற்குள் நக்கலடித்துவிட்டு நேராக கண்ணனின் அறைக்கு சென்றார்.

மிஸ்டர் கண்ணன், நான் பணக்கார வீட்டுப்பொண்ணு. எனக்கு வேலை செஞ்சிதான் வீடு காப்பாத்தனும்னு அவசியம் இல்லை. ஆனாலும் என் திறமையை வீணடிக்கக்கூடாதுங்கறதுக்காக தான் வேலை செய்யறேன்.
நான் பள்ளிக்கூடத்திலேர்ந்து காலேஜ் வரையில் கோல்ட் மெடிலிஸ்ட். அதனால என்னை குறைச்சி இடை போடாதீங்க. என் திறமைக்கு ஏத்த வேலை தாங்க. இல்லாட்டி புது வேலையா இருந்தா கத்துக் கொடுங்க. நிமிஷத்துல கத்துக்கறேன் என்று பொரிந்து தள்ளினாள்.

இங்க பாருங்க என்று தன்னிடம் இருந்த எலெக்ட்ரானிக் உபகரணங்களை அவன் மேசை மேல் கொட்டினாள். மினிட் ரிக்கார்டர், வாய்ஸ் ரிக்கார்டர், பெண் ஸ்கானர் என்று நவீன காரியதரிசிக்கான பல சமாச்சாரங்களை வைத்திருந்தாள்.

அதை பொறுக்கி மீண்டும் அவளுடைய கைப்பையில் வைத்தபடியே,

ஹப்பா ஏன் இப்படி கோபமா இருக்கீங்க. கட்டாயம் உங்களுக்கு வேலை தர்றேன். இப்ப நீங்க உங்க சீட்டுக்கு போங்க என்றான். அவள் என்ன பர்ஃப்யூம் அணிந்திருக்கிறாள் என்று யூகிக்க முயன்றான். இது ஐஐஎம்மில் அவன் கற்றுக் கொண்ட விளையாட்டு. பெண்களின் வாசனை திரவியங்களை நுகர்ந்து பார்த்து அது எந்த நிறுவனத்தால் செய்தது என்று சொல்ல வேண்டும். அதை வைத்து ஒரு பெண்ணின் குணங்களையும் யூகிப்பார்கள்.

சட்டென்று அங்கிருந்து விலகினாள். அவளுக்கு யாரோ நீ ஒன்னாங்கிளாஸ் என்று சொன்னது போல் ஒரு கோபம்.

சரியாக ஒரு பத்து நிமிடத்தில் அவனிடமிருந்து அழைப்பு வந்தது.

என்ன என்று கேட்டாள்.

http://img2.anitec.ca/genius/genius_9361.jpg

எனக்கு ஒரு ஜீனியஸ் டாப்லெட் பெண் மௌஸ் வேண்டும் வாங்கி தர்றீங்களா என்று கேட்டான் பவ்யமாக.

எதுக்கு

ப்ரோபோசல் அனுப்பறதுக்கு சில டிராயிங்க் வரையனும்

மிஸ்டர் கண்ணன், இந்த வேலையாவது எனக்கு தரக்கூடாதா என்று கேட்டாள் சற்று கெஞ்சலாக.

ஓகே. நீங்க என்ன பண்ணுங்க, இரண்டா வாங்கிடுங்க. அப்புறமாக நான் உங்களுக்கு டிராயிங்க் பண்ணறது சொல்லித் தரேன் என்றான்.

அலுவலக கார் ஓட்டுனர் வெற்றியை அழைத்துக் கொண்டு ரிச்சி ஸ்ட்ரீடில் நுழைந்தாள். சென்னையின் கணினித்தெரு என்ற பெருமை ரிச்சிதெருவிற்கு உண்டு.

அங்கிருந்து அவனுடைய செல் பேசியில் அழைத்தாள். கண்ணன், இங்கு ரெண்டு டைமென்ஷன்ஸ் இருக்கு. எது வேண்டும் என்றாள்.

ரெண்டுத்திலேயும் இரண்டு இரண்டு வாங்கிடுங்க என்றான்.

எனக்கு இரண்டு வாங்கறதுக்கு தான் அப்ரூவல் இருக்கு என்றாள் மாலதி.

கவலைபடாதீங்க. மற்ற இரண்டுக்கு நான் காசு தரேன். உங்க கிட்டே இப்ப பணம் இருக்கா என்று கேட்டான்.

20,000 சம்பாதிக்கறேன். என்கிட்டே இரண்டாயிரம் இருக்காதா. நான் என்ன பிச்சைக்காரின்னு நினைக்கிறானா என்று மனதில் நினைத்துக் கொண்டு, இருக்கு என்று சொல்லி துண்டித்தாள்.

அவள் எதிர்பாராத விதமாக, 1800 தான் இருந்தது. கடன் அட்டையை தந்து அவற்றை வாங்கிக் கொண்டு அலுவலகம் வந்து சேர்ந்தாள்.

அவள் தன் மடிக் கணினியை அவன் அறைக்கு எடுத்து செல்ல அவளுடைய கணினியில் மென்பொருட்களை ஏற்றி அந்த மௌஸை இயக்கச் செய்தான்.

பிறகு ஒரு வெள்ளை காகித்ததை எடுத்துக் கொண்டு CVP, RVP, LVP என்று எழுதி, இவை Center Vanishing Point, Left Vanishing Point, Right Vanishing Point, இவை படங்களை வரைய முக்கியமானவை என்று விளக்கினான்.

நொடிகளில் மாலதி அவனை காகிதத்தில் வரைந்து, நானும் ஓவியம் கற்றவள் தான் என்றாள் அவனை ஓங்கி அறைவது போல.

பல அற்புதமான விஷயம். அழகாக வரைந்திருக்கிறீர்கள். நீங்கள் திறமைசாலி தான். ஆனால் ஒரு விஷயம். நான் 24 மணி நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் வேலை செய்பவன். உங்களை இரவில் தொந்தரவு செய்தால் பரவாயில்லையே என்றான், பிறகு நிறுத்தி, அலுவலக வேலைக்காக மட்டும்தான் என்று சொல்லி சிரித்தான்.

பரவாயில்லையே இந்த அலட்டலுக்கு flirt செய்ய தெரிகிறதே என்று நினைத்துக் கொண்டாள்.

வேலைக்காக நீங்க எப்ப வேண்டுமானாலும் போன் செய்யலாம் என்றாள் மாலதி.

எதுக்காக இரண்டு செட் வாங்கிட்டு வர சொன்னீங்க என்றாள் சந்தேகத்துடன்.

நீங்க உங்க வீட்டுக் கணினியில் ஒன்னு இணைச்சிடுங்க. இன்னொன்னு என்னோடு வீட்டுக்கு என்றான்.

அப்பாடா இப்போதாவது வேலைக் கொடுத்தானே என்று நிம்மதி பெருமூச்சுடன் வெளியேறினாள் மாலதி. கண்ணன் அவள் வரைந்த ஓவியத்தை கையில் எடுத்து பார்த்துவிட்டு மனதில் அவளை பாராட்டினான்.

தொடரும்....

அன்புரசிகன்
31-07-2007, 01:22 PM
என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க...

அவள் அவனை பொரிஞ்சு தள்ளுவது காதலின் முதல் படி போல் உள்ளதே... சீமானுக்கு காதல் முதல் நாளே வந்து அதை அடக்கிக்கிட்டார். சீமாட்டி எப்படியோ?

அக்னி
31-07-2007, 01:29 PM
கதையோடு கணினி சாதனங்களையும் புதிதாக அறியக்கூடியதாய் உள்ளது...
அறிவையும் வளர்க்கும் தொடர்கதை தொடரட்டும்...

lolluvathiyar
31-07-2007, 01:55 PM
கதை அருமையா போயிட்டு இருக்கே, ஆனா முனாம பாகத்துல நிரைய டெக்னிகல் வார்த்தை வந்து குழப்பி விட்டது. (எனக்கு இந்த டிராயிங் சமாசாரம் பற்றி தெரியாததால் என்னமோ)
ச*ரி ச*ரி அதெல்லாம் அப்ப*ர*ம் சீக்கிர*ம் மால*தி மேட்ட*ர* சொல்லுங்க* (ஓ சாரி க*தைய* சொல்லுங்க*)

அமரன்
31-07-2007, 08:17 PM
மோகன் இத்தொடரை காலையிலேயே பார்த்தேன். படிக்கமுடியவில்லை..அப்போ படித்திருந்தால் இவ்வளவு சுவாரசியமான கதையின் சுவையை முழுவதுமாக உணர்ந்திருப்பேனா தெரியாது. பொழுதுபோக்குக் கதை என்ற வட்டத்தை விட்டு வெளியேறி கணினி சம்பந்தமான சில விடயங்களையும் உள்ளடக்கி நயமாக கொண்டு செல்கிறீர்கள். பாராட்டுக்கள். மூன்று பாகம் முடிந்தும் கதை எப்படிப்போகும் என்பதை அறியமுடியாதவாறு அமையப்பெற்றுள்ளது. (வழக்கமான காதல் கதையாக இருக்காது என நினைக்கிறேன்.) தேர்ந்த எழுத்தாளர் நீங்கள். பாராட்டுக்கள். அடுத்த பாகத்திற்காக காத்திருக்கின்றேன்.

leomohan
01-08-2007, 08:50 AM
4

இப்போது சகஜமாக தொலைபேசிகள் எந்நேரத்திலும் அவனிமிருந்து அவளுக்கு வந்து சென்றன. வேலை நிமித்தமாக தான். ஆனாலும் வெறும் படங்கள் வரைய மட்டுமே தன்னுடயை சேவையை பயன்படுத்திக் கொள்கிறான் என்று கலக்கம் அவளுக்கு இருந்தது. காரணம் அவள் ஆங்கிலத்தில் அழகாக பேசுவதிலும், எழுதுவதிலும், வாடிக்கையாளர்களிடம் சுருக்கமாக பேசி அழகாக விஷயங்களை விளக்குவதிலும் வல்லவள். அத்திறமைகளுக்கு அவன் வேலை தரவில்லை என்பது தான் வருத்தம். அது மட்டுமல்லாமல் அவனுடைய அலுவலக வாழ்கைக்கும் சொந்த வாழ்கைக்கும் பெரிய திரையே இருந்தது. மற்ற ஆண் நண்பர்களுடன் சகஜமாக பழகிய அவள் அவனை நெருங்க முடியாமல் தவித்தாள்.

சிலர் தம்மை சுற்றி ஒரு பெரிய இரும்புத்திரை அமைத்துக் கொள்கின்றனர். அதை உடைத்து நுழைய விரும்பாத பலருக்கு உறவுகள் ஹாய் ஹலோவோடு நின்றுவிடுவதில் பெரிய துக்கம் இல்லை. ஆனால் அதை உடைத்து உள்ளே நுழைய விரும்புவர்களுக்கு எதிராளி சற்றும் உதவி அளிக்காவிட்டால் வெறுப்பும் ஆற்றாமையும் மிஞ்சுகிறது.

இப்படி அவள் மனதில் எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் போது சட்டென்று நுழைந்தான். வெள்ளை நிற சட்டை கறுப்பு நிற கால்சட்டை கறுப்பு நிற டை. கறுப்பு நிறத்தில் பை. இப்படிப்பட்ட காம்பினேஷனில் யாரும் உடை அணிந்து அவள் பார்த்ததில்லை. வித்தியாசம் தான், ஓகே பா, ஆனா, இது ரொம்ப ஓவரு என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.

அவள் மனதில் ஒரு திட்டம் தோன்ற மாலைக்காக காத்திருந்தாள்.

6 மணிக்கு வழக்கம் போல அவன் வெளியேறினான். இன்றும் ஒரு வேலையும் சொல்லவில்லை. கணினியில் இறங்கி இணையத்தில் ஏறி பெண்களுக்கான கருத்துக்களத்தில் இதுபோல ஒரு விசித்திர மனிதன் என்று அவனை பற்றி எழுதினாள். எழுதிய 15 நிமிடத்தில் வாவ், யாருப்பா அது எனக்கு போன் நம்பர் வாங்கி கொடு என்று நக்கல் பின்னூட்டங்களும் ஆர்வகோளாறுகளும் வந்து குவிந்தன.

சுமார் 7.30 மணிக்கு அலுவலக வாகன ஓட்டுனர் வெற்றியை அழைத்தாள். வெற்றி, உங்களுக்கு கண்ணன் சாரோடு வீடு தெரியுமா என்றாள்.

தெரியும் மேடம். சேத்துபட்டுல தான் இருக்கு

என்னை டிராப்பண்ணுங்க. அப்புறம் நீங்க நைட் ஷிஃப்டு டிராப் பண்ண வர்றப்ப என்னை வீட்டுல விட்டுடுங்க.

சரிம்மா

சிறிது நேரத்தில் சேத்துபட்டில் அந்த பல மாடி கட்டிடத்தின் முன் வண்டி நின்றது.

பத்தாவது தளம் அமுக்கி அந்த அவனுடைய அப்பார்ட்மெண்டின் முன் வந்து நின்றாள். வந்து நின்றவுடனேயே சட்டென்று ஒரு வித்தியாசம் தென்பட்டது. மற்றவர்களுடைய கதவுகள் மரக்கலரில் இருக்க அவனுடைய வீட்டின் கதவு மட்டும் வெள்ளை நிறத்தில். அழைப்பு மணி கறுப்பு நிறத்தில். சுமார் 2 லட்சம் ரூபாய் கொடுத்திருப்பார்கள் இந்த வீட்டை அலங்காரம் செய்ய. டாலரில் வருவதால் வேலை செய்பவர்களுக்கும் கணினி நிறுவனங்கள் பல சலகைகளையும் வசதிகளையும் செய்து தந்திருந்தன. இந்த வீடும் இலவசம் தான் இவனுக்கு.

அரை நிஜாருடன் முண்டா பனியனுமாய் கதவை திறந்த கண்ணன், அடடே மாலதி, வாட் அ சர்ப்ரைஸ் என்று வரவேற்றான்.

உங்களை தொந்தரவு செய்யலையே என்ற படி உள்ளே நுழைந்தாள்.

ஹா ஹா. நான் எந்த நேரம் வேலை செய்வேன்னு எனக்கே தெரியாது. வாங்க, உட்காருங்க என்றான்.

கைபையை சோபாவில் வைத்து வசதியாக அமர்ந்தாள் மாலதி.

என்ன சாப்பிடறீங்க

ஜில்லுன்னு என்ன இருந்தாலும்...

ஒரு வித்தியாசமான டிரிங்க் சாப்பிடறீங்களா

ஓ குளிர்பானத்திலும் வித்தியாசமா, நாசமா போச்சு என்று நினைத்துக் கொண்டே, சரி என்றாள்.

அவன் மிக்ஸியில் எதோ கடமுடவென்று செய்வது காதில் விழ வீட்டை நோட்டம் இட்டாள். இனம்புரியாத எண்ணங்கள் ஓடின. கறுப்பு நிற சோபா, படிக்கும் மேசை, உணவு மேசைகள். வெள்ளை நிற ஜன்னல் திரைகள், வீடு முழுவதும் வெள்ளை நிற வண்ண பூச்சு, கறுப்பு ஜாடிகளில் வெள்ளை மலர்கள், பெற்றோர்களின் கறுப்பு-வெள்ளை புகைப்படம், அவனுடைய புகைப்படம் - கறுப்பு வெள்ளையில் என்று மருந்துக் கூட வேறு நிறங்களை அவளால் பார்க்க முடியவில்லை.

சரி அடுப்பறை எப்படி என்று நினைத்துக் கொண்டே உரிமையோடு உள்ளே நுழைந்தாள். அங்கும் கண்ணுக்கு புலப்பட்டதெல்லாம் கறுப்பு-வெள்ளை தான்.

ஒரு கோப்பையில் காரெட் ஜூஸ் போட்டு கொடுத்தான். காரெட்டில் என்ன பெரிய வித்தியாசம் என்று நினைத்து பருக தொடங்கியவள் அதில் புதினாவெல்லாம் போட்டு ஒரு வித்தியாசமான அதே நேரத்தில் புதிய ஒரு சுவையோடு இருந்ததை கண்டாள்.

எப்படி இருக்கு. டிஃபெரண்ட் இல்லே என்று தன்னையே புகழ்ந்துக் கொள்வது போல பேசினான்.

ஹா ஹா ஆமாம். எதுக்கு உங்க வீடு முழுக்க கறுப்பு வெள்ளையாகவே இருக்கு. பழைய இங்கிலீஷ் படம் பாக்கறது போல இருக்கு

ஹா ஹா என்று சிரித்தான்.

சட்டென்று அவனுடைய படுக்கையறையை எட்டிபார்த்தவள் அங்கும் கறுப்பு வெளுப்பு காட்சிகள். படுக்கை சுத்தமாக இருந்தது. இப்போது தான் வாங்கி வந்தது போல்.

பெட்டை இத்தனை நீட்டா மெயின்டெயின் பண்றீங்களே.

ஹா ஹா. நான் பெட்டில் படுப்பதே கிடையாது. இதோ கௌச்சில் தான் என்று அந்த கறுப்பு நிற சோபாவை காட்டினான். அருகில் ஒரு கறுப்பு பீன் பாக் இருந்தது.


http://www.comparestoreprices.co.uk/images/unbranded/l/unbranded-large-suede-cube-bean-bag.jpg

என்ன கௌச்சில் படுப்பீங்களா. அடப்பாவி என்று நினைத்துக் கொண்டாள்.

எதிர்புறத்தில் கறுப்பு நிற டிரெட்மில். இன்றை ஆரோக்யத்திற்கு மிகவும் அவசியமானது. வெளியில் போனால் காற்று, தூசு. குளிர், வெயில் பிரச்சனைகள். வீட்டில் இருந்தே எத்தனை மைல் வேண்டுமானாலும் ஓடலாம். You need to run to remain in the same place என்று நினைத்துக் கொண்டாள்.

http://www.hydrauliccircuitzone.com/images/landis-single-treadmill.jpg


வலது கைபக்கம் ஷோ கேஸ். பீங்கான் பொருட்கள். வெள்ளை நிறத்திலோ அல்லது நிறமில்லாமலோ இருந்தது. சிறிய பார். அனைத்து விலை உயர்ந்த மதுபானங்கள் இருந்தது.


http://www.mylivingtree.com/7985pic/092/CP794092.jpg

உங்களுக்கு கேம்ஸ்ல ஆர்வம் இருக்கா என்று கேட்டான்.

ஓ. காரம் போர்டுன்னா எனக்கு உயிர் என்றாள்.

ஒரு ரவுண்ட் போடலாமா என்றான். பேசிக் கொண்டே ஒரு சிறிய பெட்டியை சோபாவின் பின்புறத்திலிருந்து எடுத்தான்.

வீட்டில் அவளிடம் இருப்பதை விட சிறிய பலகை. வாடா வா, காரம் போர்ட் காயின்ல சிவப்பு காய் இல்லாமலா இருக்கும் என்று ஆர்வமாக அவன் காய்களை அடுக்குவதை பார்த்தாள். மீண்டும் ஏமாற்றம். வெள்ளை தந்தத்தில் ஸ்டைக்கர், ஆனால் சிவப்பு காயுக்கு பதிலாக பாதி வெள்ளை பாதி கறுப்பு இணைந்த நடுவில் வைக்கும் காய்.

என்ன கண்ணன். எல்லாமே ப்ளாக் அண்ட் வொயிட்டா இருக்கு என்று மீண்டும் கேட்டாள்.

ஹா ஹா என்று மீண்டும் அதே மழுப்பலான சிரிப்பு.

சரி உன்னை வேற மாதிரி பாத்துக்கறேன் என்று மனதில் நினைத்தவாறே சிறிது நேரம் ஆர்வமாக விளையாடினாள். சட்டென்று கொஞ்சம் டிவி போடுங்களேன். நியூஸ் அட் 9 பாக்கனும் என்றாள். தொலைகாட்சியில் அவள் பார்க்க விரும்பாத ஒரே நிகழ்ச்சி செய்திகள் தான்.

அடே உங்களுக்கு நியூஸ் அட் 9 பிடிக்குமா.

அவன் கேள்வியை அலட்ச்சியப்படுத்திவிட்டு தொலைகாட்சியை பார்த்தவளுக்கு மீண்டும் ஒரு ஆச்சர்யம். அது கறுப்பு வெள்ளை தொலைகாட்சி.


கண்ணன் டிவிலே எதாவது பிரச்சனையா. அந்த லோகோ ரெட்கலர் ஆச்சே என்று அப்பாவியாக கேட்பது போல் கேட்டாள்.

அது ரெட் கலரான்னு எனக்கு தெரியாது ஆனால் இது ப்ளாக்-அண்ட்-வொயிட் டிவி என்றான்.

அச்சோ. நீங்கள் வாழ்கையில் பல நிறங்களை மிஸ் பண்றீங்க என்றாள்.

அவன் அமைதியாக இருந்தான்.

வெற்றியிடமிருந்து தொலைபேசி வரவே, அவனிடம் நன்றி தெரிவித்து விடைபெற்றாள். இந்த மனிதன் ஒரு மிஸ்ட்ரி மேன். இவனை பற்றி நல்லா ஆராயனும். இந்த ப்ளாக்-அண்ட்-வொயிட் கதை தெரியெல்லாம் என் மண்டையே வெடிச்சிடும் என்று சொல்லிக் கொண்டாள்.

அன்புரசிகன்
01-08-2007, 09:02 AM
கலர் புல் ஆகா இருந்த அவளின் மனது இப்போ கறுப்புவெள்ளையாக மாறிவிட்டதே...

தொடருங்கள்.

leomohan
01-08-2007, 09:17 AM
5

மறு நாள் காலையில் நேராக அவனுடைய அறைக்குள் நுழைந்தாள் மாலதி.

கண்ணன், எனக்கு மண்டையே வெடிச்சிடும் போலிருக்கு. நான் கேட்ட கேள்விக்கு நீங்க பதில் சொல்லலை. ஏன் வீடு முழுக்க நிறமில்லாம வைச்சிருக்கீங்க என்று கேட்டாள்.

பெர்சனல் விஷயம் ஆபீஸ் நேரத்தில், நோ என்றான்.

ஒரு நிமிஷம் பதில் சொல்றதுல்ல என்னாயிடும்.

சாரி மாலதி. கொள்கையின்னா கொள்கை தான். நாம்ப அப்புறமா பேசலாம்.

அப்புறம்னா எப்போ

லஞ்ச டைம்ல பேசலாம். இல்ல ஆபீஸ் விட்ட பிறகு பேசலாம் என்றான்.

சரி லஞ்ச இன்னிக்கு உங்க கூட என்று சொல்லிவிட்டு சென்றாள்.

சிலர் நம்மை நெருங்கக்கூடாதா என்று நினைக்கிறோம். சிலர் நம்மை நெருங்கிவிட்டார்களோ என்று அஞ்சுகிறோம். சிலர் நெருங்க வேண்டாம் என்று வேண்டுகிறோம். விசித்திரமான உறவுகள். விசித்திரமான மனித எண்ணங்கள். பல்லாயிரம் காதல்கள் இருந்தும் ஒவ்வொன்றும் மனிதனின் கைரேகையை போல் தனித்துவம் வாய்ந்ததாக இருக்கிறதே. இது என்ன விந்தை. இது என்ன மாயம்.

வேலையில் நாட்டம் இல்லை அவளுக்கு. ரகசியங்கள் அதிகம் வைத்திருப்பவள் இல்லை அவள். கொலை மர்ம கதைகளையும் முதலில் முடிவை படித்துவிட்டு பிறகு ஹாயாக கதை படிக்கும் வழக்கம் அவளுக்கு. இவன் கதையிலோ முடிவு பக்கங்கள் கிழிந்து வேறு மாற்று புத்தகமும் கடையில் கிடைக்காத நிலை.

அவன் வழக்கப்படி அந்த பெயர் தெரியாத வஸ்துக்களை ஆர்டர் செய்து கையில் சாஸ் எனும் செயற்கை ரத்தத்தடன் தன் வழக்கமான தனி மேசையில் வந்து அமர்ந்தான்.

அவளும் ஒரு சிக்கன் பிரியாணி வாங்கிக் கொண்டு அவனெதிரில் வந்து அமர்ந்தாள்.

சொல்லுங்க

என்ன

எதுக்கு ப்ளாக் அண்ட் வொயிட்

வெல், கலர்பூல்லா இருந்த என் வாழ்கையின் நிறங்களை ஒரு பெண் எடுத்துக் கொண்டு போய்விட்டாள் என்றான் முடிவாக ஏதோ சொல்வது போல்.

லவ் பெயிலியரா

தெரியலை. ஏன்னா காதல் தோல்விக்கும் காரணம் தெரியனும் இல்லையா. எதுக்காக அவள் என்னோட வாழலைங்கறதுக்கு எனக்கு இன்னிக்கு வரலையும் தெரியலை.

அவ பேரு

சித்ரா

கல்யாணம் ஆயிடுத்தா

ஆமா

புருஷன் பேரு

ஹா ஹா. விமென்ஸ் க்யூரியாசிட்டி. பேரில் என்ன இருக்கு. ஆகாஷ்.

பிள்ளைங்க

ஆமா. இரண்டு. இரண்டும் பெண் குழந்தைகள்.

எப்போ ஆச்சி கல்யாணம். சில வருஷத்துக்கு முன்னால.

எங்கே மீட் பண்ணீங்க அவளை. ம்மமம அவங்களை....

நான் ஐஐடி கான்பூரில் படிக்கும் போது பார்த்தேன். எங்க காதல் நாளு வருஷம் தொடர்ந்து. ஒரு நாள் வந்து நான் வேற எடத்துல கல்யாணம் பண்ணிக்கப்போறேன் சொன்னா.

எதுக்கு. என்ன ப்ராப்ளம்னு கேட்டேன்

தெரியலை. ஐ வாஸ் ராங் அப்படின்னு சொன்னா.

அப்ப நீ எழுதின கடிதங்கள்... கேட்டேன்.

எரிச்சுடுன்னு சொல்லிட்டு போயிட்டா. கல்யாணத்துக்கு கூட அழைப்பு விடுக்கலை என்றான். நினைவுகள் தன் வேலையின் அந்தஸ்தையும் தாண்டி போவதை உணர்ந்து சட்டென்று நிறுத்திக் கொண்டான்.

ஓ ஐஐடி பார்ட்டியா நீ. அது தான் இந்த பந்தா உனக்கு. சே பாவம் டா என்று நினைத்துக் கொண்டாள். அவளுக்கு துக்கம் மனதை அடைத்துக் கொண்டது. அவனுடைய காதல் கதையை கேட்டு அல்ல. வேறு ஏதோ ஒரு குழப்பத்தில்.

சாயங்காலம் என்ன பண்றே என்று கேட்டான். ஆறுதலாக பேச யாராவது இருந்தால் கொட்டி தீர்க்க தயாராகிவிட்டவன் போல்.

வேண்டுமென்றே அவனை சீண்ட வேண்டும் என்று நினைத்து, ஓ சாயங்காலம் எனக்கு ஒரு டேட் இருக்கு என்றாள்.

ஓ அப்படியா, நோ ப்ராப்ளம், மே பீ லேட்டர் என்று சொல்லி விடை பெற்றான்.

கூப்பிட்டவுடன் ஆமா நான் வரேன் என்று சொல்ல அவளுடைய ஈகோவும் இடம் தரவில்லை போலும். அதுபோலவே யார் அந்த டேட் என்ன என்று உரிமையுடன் கேட்டு கீழே இறங்க அவனுடைய ஈகோவும் இடம் தரவில்லை.

சிவா.ஜி
01-08-2007, 09:27 AM
கதை மிக அருமையாக போகிறது மோகன். இந்த கதையிலும் ஒரு ஓவியன் இருக்கிறார்.
என் வாழ்கையின் நிறங்களை ஒரு பெண் எடுத்துக் கொண்டு போய்விட்டாள்
வர்ணங்கள் அவளோடு போய்விட தூரிகையுடன் இங்கே கண்ணன்.
அமர்க்களமான நடை. வாழ்த்துக்கள் மோகன். தொடருங்கள்.

leomohan
01-08-2007, 09:44 AM
நன்றி சிவா. நன்றி அன்புரசிகன்.

lolluvathiyar
01-08-2007, 10:27 AM
பெண்னின் மனதை நிரைய படித்தவர் போல் இருகிறதே.
தொடருங்கள்

leomohan
01-08-2007, 12:10 PM
6

மாலையாக ஆக அவளுக்கு இருப்புக் கொள்ளவில்லை. மாட்டேன் என்று சொல்லியிருந்தாலும் பரவாயில்லை இல்லை வேறு காரணம் சொல்லியிருந்தாலும் பரவாயில்லை டேடுக்கு போறேன் என்று சொல்லி அவனை சீண்டியது தப்புதான். என்னை பற்றி என்ன நினைத்திருப்பான். ஆண்களுடன் சுற்றுபவள் என்றா. அவன் மனதில் என்னை பற்றி என்ன இமேஜ் இருக்கும்.

டேட் கான்ஸல் மீட் பண்ணலாம் எட்டு மணிக்குன்னு ஒரு எஸ்எம்எஸ் அனுப்பலாமா.

ஈகோவிற்கும் அதனையும் மீறிய உணர்ச்சிக்கும் இடையே ஒரு பலத்த போராட்டம் நடந்து ஈகோ துண்டாகி துவண்டு வலுவிழந்து சுக்கு நூறாக நொறுங்கி வீழ்ந்தது.

சட்டென்று கைபேசி எடுத்து கண்ணனுக்கு போன் செய்தாள். கண்ணன், என் டேட் கான்ஸலாயிடுத்து. 8 மணிக்கு மீட் பண்ணலாமா என்று யதார்த்தமாக ஆனால் ஈகோவை விட்டுக் கொடுக்காமல்.

இல்லை மாலதி. சாரி. பெங்களூர்ல இருக்கற என் பிரெண்டுக்கு ஆக்ஸிடெண்ட் ஆயிடுத்து. நான் ஏர்போர்டல இருக்கேன். இன்னும் 20 நிமிஷத்துல ப்ளைட். மே பீ லேடர் என்றான்.

ஆக்ஸிடெண்டா. என்னாச்சு

தெரியலை. அதிகம் விபரம் இல்லை. கோ-இன்ஸிடென்டல்லி என்னுடைய ப்ளட் குரூப் அவன மாதிரியே. அதனால நான் போனா உதவியா இருக்கும்.

சரி கண்ணன். பார்த்துக்கோங்க. நான் ஏதாவது பண்ண முடியும்னா சொல்லுங்க.

ஷ்யூர் என்று சொல்லி விடை பெற்றான்.

சே. முதல்ல ஒத்துக்கிட்டு இருந்திருக்கனும். சரி வரட்டும் பார்த்துக்கலாம் என்று நினைத்துக் கொண்டே தொலைகாட்சி பெட்டியை இயக்கினாள்.

அவள் மனதில் இருந்த உறுத்தல்களுக்கு காரணம் அவளுடைய கொள்கை தான். தன்னை யார் முதல் காதலாக கொள்கிறார்களோ அவனையே காதலிப்பது என்று எடுத்த அவள் முடிவு தான். ஒருவேளை கண்ணன் தன் முதல் காதலை பற்றி சொல்லாமல் இருந்திருந்தால் அவனை காதலித்திருப்பாளோ என்னவோ.
பள்ளியிலும் கல்லூரி நாட்களிலும் ஒரு பெண் விட்டா இன்னொரு பெண், ஒரு ஆண் விட்டா இன்னொரு ஆண் என்பது போல அவள் தோழர்களும் தோழிகளும் நடந்துக் கொண்டதை பார்த்து அவள் பல நாட்கள் நொந்திருக்கிறாள்.

அவளுடைய உயிர் தோழி ரம்யா, கிருஷ்ணனை காதலித்துவிட்டு லண்டனிலிருந்து வந்த மாப்பிள்ளையை மணந்து சென்றாள். காரணம் புரியாமல் கிருஷ்ணனும் பல நாட்கள் தாடி வைத்துக் கொண்டு திரிந்து பிறகு ஒரு நல்ல பெண் அவன் வாழ்கையில் வர இப்போது செட்டிலாகி இருக்கிறான்.

பள்ளிப்பருவதில் வரும் காதல் வேண்டுமானாலும் unqualified ஆக இருக்கலாம். ஆனால் இருபது வயதிற்கு மேல் வரும் காதல், அந்த வயதில் எடுக்கும் முடிவு எப்படி unqualified ஆக இருக்க முடியும் என்று அவள் பல முறை வியந்ததுண்டு.

ஆனால் ஒருவேளை பெண்களும் சரி ஆண்களும் சரி புத்திசாலிகளோ. யதார்த்தவாதிகளோ, அதனால் தான் கடைசி நேரத்தில் கூட அவர்களால் முடிவை மாற்றிக் கொண்டு காதலிக்காத புதியவரை கை பிடிக்க முடிகிறது.

சே சித்ரா அதிர்ஷ்டமில்லாதவள். இந்த மாதிரி ஒரு நல்ல மனிதரை விட்டு அவள் எப்படி அதுபோல ஒரு முடிவை எடுத்தாள். யார் என்ன சொல்வது. ஒருவேளை அவள் இப்போது சந்தோஷமாக இருந்தாலும் ஒன்று சொல்வதற்கில்லை. வருத்தப்பட்டால் தான் அவள் கண்ணனை விட்டது தவறு என்று சொல்லலாம்.

இவ்வாறாக யோசித்துக் கொண்டே சானல்களை மாற்றியபடி வந்தவள் Headlines Todayல் Terrorist Attack in Bangalore Airport, 7 killed Flash News என்று வந்துக் கொண்டிருந்தது. தலையில் இடி விழுந்தது போல் இருந்து சட்டென்று தமிழ் செய்தி சானலுக்கு மாற்றினாள்.

கண்ணன் விமானம் போய் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆயிருக்குமே. அவனுடைய மொபைல் போனில் அழைப்பு விடுத்தாள். அழைப்பு போகவில்லை. சே.

பெங்களூர் விமான நிலையத்தை தற்கொலை படை தீவிரவாதிகள் வண்டியை மோதி அடித்தளத்தை தகர்க்க முயன்றனர். இதில் டாக்ஸிக்காக வெளியில் நின்றிருந்த பிரயாணிகள் 7 பேர் உடல் கூழாகி இறந்தனர். இறந்தவர்களின் அடையாளம் தெரியவில்லை. விசாரனை நடந்து வருகிறது.

http://www.theage.com.au/ffximage/2007/07/01/jeep.jpg
அவளுக்கு தலை சுற்றியது. கீழே கொடுத்திருந்த பெங்களூர் விசாரணை எண்ணுக்கு போனை போட்டு பிரயாணியின் பெயர் கண்ணன், இறந்தவர்கள் பட்டியலில் யாராவது இருக்கிறார்களா என்று கேட்டாள்.

மன்னிக்கவும் மேடம். இன்னும் விவரங்கள் தெரியவில்லை. இரண்டு மணி நேரத்திற்கு பிறகு போன் போடுங்கள் என்றார் மறுபுறத்தில்.

அவளுக்கு அவனை சந்தித்த தினத்திலிருந்து நடந்த நிகழ்ச்சிகள் விரைவாக வந்து சென்றன.

அன்புரசிகன்
01-08-2007, 12:30 PM
உங்கள் எழுத்தாற்றலை என்னவென்று பாராட்ட... மிகவும் ஆவலாக படித்துக்கொண்டிருக்கிறேன்...

தொடருங்கள்...

SathishVijayaraghavan
02-08-2007, 05:36 AM
வழக்கம் போல் அருமையான படைப்பு. நெடு நாட்களுக்குபின் மன்றம் பக்கம் தலை வைக்க வாய்ப்பு கடைத்துள்ளது எனக்கு.

leomohan
02-08-2007, 07:23 AM
நன்றி சதீஷ்ராகவன். நன்றி அன்புரசிகன்.

இதோ அடுத்த பாகங்கள் இன்று....

சிவா.ஜி
02-08-2007, 07:39 AM
விறுவிறுப்பாக செல்கிறது கதை.தொடருங்கள் மோகன் பாராட்டுக்கள்.

leomohan
02-08-2007, 11:58 AM
7

இரண்டு நாட்களுக்கு அவனிடமிருந்து எந்த தகவலும் இல்லை. போன் எடுக்க வில்லை. இறந்தவர்களின் பட்டியலில் அவன் பெயர் இல்லை. என்ன ஆனான் என்று நிறுவனமே பதைபதைத்தது.
அதிகம் அரண்டவள் மாலதி தான். துடித்து போய்விட்டாள். மூன்றாவது நாள் சரியாக 9 மணிக்கு தென்பட்டான் கண்ணன்.
அவன் வந்ததை பார்த்ததும் நிம்மதி பெருமூச்சு விட்டாள். இருந்தாலும் உடனே ஓடிப்போய் பார்க்கவில்லை. வேலை நேரத்தில் பர்சனல் விஷயமா என்று அலட்டுவான். எதற்கு வம்பு. இடைவெளியில் பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டுவிட்டாள்.

சரியாக 12.30 மணிக்கு அவன் உணகவகம் நோக்கி போவதை பார்த்தாள். தானும் பின் தொடர்ந்தாள்.

மேசையில் அவன் அமரும் வரை காத்திருந்தாள். உணவகத்தில் அதிக கூட்டமில்லை.

என்ன கண்ணன். என்னாச்சு உங்களுக்கு. நாங்கெல்லாம் பயந்து போயிட்டோம். போனை எடுக்கலை. போன் பண்ணலை என்ன நினைச்சிகிட்டு இருக்கீங்க மனசுல.

என்னாச்சு மாலதி ஏன் இப்படி டென்ஷனாகறீங்க.

டென்ஷனா பெங்களூர் ப்ளாஸ்ட்ல உங்களுக்கு ஏதோ ஆச்சுன்னு பயந்துகிட்டு இருந்தோம். போன் ஏன் எடுக்கலை நீங்க.

மாலதி, முதல்ல ப்ளைட்லே இருக்கும் போது கால் பண்ணியிருந்தா எடுத்திருக்க மாட்டேன். அப்புறம் வெளியே வந்ததும் இந்த ப்ளாஸ்ட் விவகாரத்துல நான் ஆன் பண்ண மறுந்துட்டேன். அப்புறம் நேரா ஹாஸ்பிடலுக்கு போனேன். அங்க மொபைல் சிக்னல் ஜாமர் வைச்சிருந்தாங்க. அதனால போன் எடுக்காம இருந்திருக்கலாம். அப்புறம் ப்ளட் கொடுத்துட்டு என் நண்பன் பக்கதுலே இருந்தேன். சரியா சாப்பிடலை தூங்கலை. அவன் கண் முழுச்ச பிறகு தான் நான் வர முடிஞ்சுது. இடையே இடையே வெளியே வந்தபோது என் போன் ஆன்ல தான் இருந்தது. நீங்கெல்லாம் இப்படி என்னை பத்தி பயந்துட்டீங்கன்னு தெரிஞ்சிருந்தா நான் கட்டாயம் போன் பண்ணி நான் சேஃப் அப்படின்னு சொல்லியிருப்பேன். சாரி என்று சொல்லி முடித்தான்.

அவள் முகத்தில் கடுகடுப்பு குறையாமல் இருந்தாள்.

நான் தான் சாரி சொல்லிட்டேனே என்று கூறியவாறு தன் இடது கையால் அவள் இடது கையை பிடித்தான்.

ஐயோ இவன் காதலிக்கி ஆரம்பித்துவிட்டானோ. ஐயோ இந்த ரொமான்டிக் லுக் ஏன் விடுகிறான் என்று அவள் யோசித்துக் கொண்டிருக்கும் போது

நாலு வருஷத்ல முதல் முறையா என்னை பத்தி கவலை பட ஒரு உயிர் என்று நாதழுத்தான்.

ஐயோ இது காதலே தான். பிரச்சனை ஆயிடுத்தே என்று நினைத்துக் கொண்டே கைகளை விடுவித்துக் கொண்டாள்.

மனதில் பெரிய போராட்டம் நடந்துக் கொண்டிருந்தது. இவன் ஈகோ பிடிச்சவன். காதலிக்கிறேன்னு சொல்லமாட்டான். ஆனால் சொல்லிட்டானா அதை ஏத்துக்கறதா வேண்டாமான்னு தெரியலையே என்று தன்னிடமே சொல்லிக் கொண்டாள்.

அடுத்த சில நாட்களில் Performance Appraisal நடைபெற இவளை ஒரு முறைகூட சந்திக்காமல் She is Fantastic என்று எழுதி அனுப்பினான் மனிதவள துறைக்கு. அவளை பாராட்டி அவளுக்கு 2300 ரூபாய் சம்பள உயர்வும் கிடைத்தது. அவளை வெகுவாக பாராட்டி தள்ளினார் மனித வள மேலாளர்.


அன்று அவனுக்கு விடுமுறை தந்திருந்தார்கள். ஊழியர்களின் பிறந்தநாளுக்கு அவர்கள் வீட்டுக் பூங்கொத்து அனுப்பவதும், விடுமுறை கொடுத்து அன்று ஆகும் விருந்து செலவுகள் இருவருக்கு நிறுவனம் ஏற்றுக் கொள்வதுமாக மேலும் ஒரு சலுகை இருந்திருந்தது.

சரி மாலையில் அவன் வீட்டிற்கு சென்று பிறந்த நாளுக்கு வாழ்த்தி விட்டு தன் சம்பள உயர்வுக்கு ஒரு நன்றி சொல்லிவிட்டு வரலாம் என்று அவன் வீட்டை சென்று அடைந்தாள் மாலதி.

ஜம்மென்று தயாராகி உட்கார்ந்திருந்தவன், ஏய் நீ வந்தது நல்லதா போச்சு, ஆபீஸ்ல ரெண்டு பேருக்கு டின்னர் ஆஃபர் இருக்கு நீயும் வர்றியா என்று கேட்டான்.

ஓஹோ தாராளமா என்று சொல்லி பிறந்த நாள் வாழ்த்து தெரிவுத்து தன்னுடைய சம்பள உயர்வுக்கு நன்றி சொன்னாள்.

ஹே யூ டிஸர்வ் இட். நான் உனக்கு எந்த உபகாரமும் செய்யலை. உன்னை மாதிரி மின்னல் காரியதரிசகள் இருந்தால் வேலைகள் சுலபமாக சரியாக சரியான நேரத்தில் முடியும் என்று வாய் நிறைய பாராட்டினான்.

அப்படி வாடா வழிக்கு என்று தன் தோளை தட்டிக் கொண்டாள் மாலதி.

ஒரு பிரச்சனை. நான் இந்த டிரெஸ்ல எப்படி வர்றது என்றாள்.

கவலை வேண்டாம், வழியில் புது டிரெஸ் வாங்கிக்கலாம் என்றான்.

ஹாய் சூப்பர் என்று குழந்தையின் குதுகலத்துடன் அவனுடைய வண்டியில் ஏறி அமர்ந்தாள். வண்டி லைஃப் ஸ்டைலில் நிற்க அவனுடைய உடைகளுக்கு ஏற்ற வாரு ஒரு பளப்பள உடையை தேர்ந்தெடுத்துக் கொண்டு அவனுடன் இணைந்து நடந்தாள்.

நீ ரொம்ப அழகா இருக்கே இன்னிக்கு என்றான்.

தாங்கஸ். என்ன இன்னிக்கு ஒரு புகழ் மாலை என்று நினைத்துக் கொண்டாள்.

அந்த இனிமையான பின்னனி இசையில் மணக்கும் உயர்தர உணவகத்தில் பெயர் தெரியாத பல உணவுகளை ஆர்டர் செய்துவிட்டு அவளை பார்த்தான் கண்ணன்.

ஹேய் நான் இன்னிக்கு சில திங்க்ஸ் வாங்கினேன் என்றான்.

என்ன

ஒரு சிவப்பு நிற காரம் காயின். ஒரு கலர் டிவி என்றான்.

வாவ். கலர் வந்துட்டுதா வாழ்கையில என்று கேட்டாள். ஆமா ஒன்னு சொல்லுங்க வீட்ல எல்லாத்தையும் ப்ளாக் அண்ட் வொயிட்ல வெச்சிகிட்டு ஆபீஸ்ல மட்டும் உங்க காபினை அத்தனை கலர்பூஃல்லா வச்சிருக்கீங்க.

அதெல்லாம் சித்ரா வாங்கி கொடுத்தது. அதையெல்லாம் பேசி மூட் அவுட் பண்ணாதே என்றான்.

சரி. உங்க லைஃப்ல திடீர்னு வண்ணங்கள் வலம் வர என்ன காரணமோ என்று கேட்டாள்.

நீ தான் என்றான் ஒற்றை வார்த்தையில்.

ஐயோ. சொல்லிட்டானே. என்ன வம்புடா இது. நம்ம கொள்கை விளக்கம் எடுத்து விடலாமா என்றெல்லாம் குழப்பத்தில் சங்கடமாக சிரித்தாள்.

நீ வந்த பிறகு தான் பல மாற்றங்களை உணர்ரேன் என்றான்.

இப்ப வரபோவுதே அந்த மூன்றெழுத்து கெட்டவார்த்தை சிஷ்யா என்று நினைத்துக் கொண்டாள்.

ஹேய் நான் உனக்காக ஒன்னு வாங்கிட்டு வந்திருக்கேன்.

போச்சுடா சாமி. அது மோதிரம் தான். போச்சி போச்சி இன்னிக்கு பிரபோஸ் பண்ணி தொலைக்கப்போறான். நான் திருதிருன்னு முழிக்கப்போறேன். அது மைன்ட் வாய்ஸ்தான்.

தன் கோட்டுப்பையில் இருந்து ஒரு பேனாவை எடுத்தான்.

சே பேனாவா. இவன் டேஸ்டே தனி தான். அப்ப பயந்த மாதிரி ஒன்னும் இல்லை என்ற நினைத்துக் கொண்டே என்ன பேனாவா என்றாள்.

ஹா ஹா பேனா இல்லை என்று சொல்லிக் கொண்டே அதன் உள்ளே மடித்து வைக்கப்பட்டிருந்த கண்ணாடியை எடுத்தான்.

மாலதி, உன் கான்டாக்ட் லென்ஸை எடுத்துட்டு இந்த கண்ணாடியை போட்டுக்கோ. லென்ஸ் கண்ணுக்கு நல்லதில்லை. அது மட்டுமில்லாமல் கண்ணாடியில் நீ இன்னும் இயற்கையா அழகா இருப்பே.

டோய் நீல சாயம் வெளுத்துப்போச்சி. நான் காண்டாக்ட் லென்ஸ் போட்டிருக்கறது இவனுக்கு எப்படி தெரியும். கேட்டே விட்டாள்.

ஹா ஹா. அன்னிக்கு வீட்ல போட்டோ எடுத்தேன் இல்லையா. அதுல கண் பக்கம் இருந்த வேரியேஷன் வைச்சி கண்டுபிடிச்சேன்

ரொம்ப ஸ்மார்ட்டு தான் என்று நினைத்துக் கொண்டாள்.
http://www.stantonbooks.com/BauschLomb10xTriplet.jpg

ஏய் நான் போஸ்ச் அ லோம்ப்ஸ யூஸ் பண்றேன் பா. நல்ல விலை உயர்ந்த லென்ஸ் என்றாள்.

நீ இதை போட்டுப்பாரேன் என்றான்.

அவள் அதை எடுத்து போட்டுக் கொண்டு இடது புறம் சுவற்றில் இருந்த கண்ணாடியை பார்த்தாள். எனக்கும் அவனுக்கும் 5 வயது வித்தியாசம். ஆனாலும் நான் கண்ணாடி போட்டதில் அவன் வயதுக்கு ஒத்தமாதிரியோ இல்லை அவனை விட வயதானவள் மாதிரியோ தெரியலையே என்று அவன் தேர்வை நினைத்து பாராட்டினாள்.

காலம் மேலும் எந்த சங்கடங்களையும் அந்த காதலுக்கு ஏற்படுத்தாமல் அப்படியே விட்டது அன்று.

மதி
02-08-2007, 01:41 PM
சூப்பர்...கலக்குங்க மோகன்..
சீக்கிரம் அடுத்த பகுதிக்காக ஆவலுடன் காத்திருக்கிறேன்..

leomohan
02-08-2007, 02:33 PM
நன்றி மதி.

வெண்தாமரை
02-08-2007, 02:39 PM
கதை மிகவும் அருமை.. யாதார்த்தமான நடை.. வாழ்த்துக்கள்..

மனோஜ்
02-08-2007, 02:51 PM
நீன்ட நாட்களுக்கு பிறகு தொடங்கிய கதை அருமை தொடர்ந்து தாருங்கள் நன்றி மோகன் சார்

leomohan
02-08-2007, 02:52 PM
8

அடுத்த நாள் ஆர்வம் மிகுதியால் மனிதவள மேலாளரின் கணினியில் புகுந்து நோண்டினாள்.

பெயர் கண்ணன்
தந்தை பெயர் ராசப்பன்
படிப்பு ஐஐடி, ஐஐஎம் அகமதாபாத் - ஓ அங்கிருந்து தான் வந்தது இந்த அலட்டல் எல்லாம்
வேலை முதல் வேலையில் நான்கு வருடம். வேலை விடும்போது சேர்ந்ததை விட பண்ணிரண்டு மடங்கு சம்பள உயர்வு. பிறகு இங்கு சேர்ந்ததும் அதைவிட இரண்டு மடங்கு
பொழுதுபோக்கு காரம், கிரிகெட்

சாதனைகள் புத்தகம் எழுதியது, ஜனாதிபதி பரிசு, மனிதவளத்தை மேன்படுத்துவது எப்படி என்ற கட்டுரை டைமஸ் பத்திரிக்கையில் பிரசுரம்

பலே. அது தான் கத்துக்குட்டிங்க மாதிரி காதலை சொல்லி கன்ஃப்யூஸ் பண்ணாம கண்ணாடி தந்து அசத்திட்டானா. சரிதான்.

அலுவலகத்தில் அன்று எல்லா நண்பிகளும் அவள் கண்ணாடியின் அழகையும் அதை போட்டுக் கொண்டதால் மெருகேறிய அவளுடைய அழகையும் புகழ்ந்து தள்ளினார்கள். ஆண்கள் வந்த ஹிஹி என்று மேசையில் ஜொள்ளு தெளிக்க வழிந்து சென்றார்கள்.

அன்று மதியம் ஒரு சிறிய கூட்டம் கான்பிரன்ஸ் ரூமில் கூடியது. வந்த 6 மாதங்களில் 4 கோடி ஆர்டர் வாங்கி அசத்திய கண்ணனுக்கு பதவி உயர்வு அறிவித்தார்கள். பொது மேலாளராக பதவி உயர்வு. மேலும் ப்ரீதா எனும் இன்னொரு காரியதரிசி உள்நாட்டு வேலைகளில் அவனுக்கு உதவும் மாலதி நிறுவனத்தின் வெளிநாட்டு வேலைகளில் உதவும் நியமித்திருந்தார்கள். மற்ற தொப்பைகளுக்கு என்னடா இவன் வளர்ச்சி அதிகமா இருக்கே என்று எண்ணி சட்டை ஆஸ்திரேலியா வரைபடம் போல் கருகியிருந்தன.

எழுந்து நின்று அனைவருக்கும் நன்றிகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொண்டான். பேச்சு அதிகமா இல்லாததால் செயலில் தான் தம் சக்தியை காட்ட முடியும் என்று சிலர் நினைப்பது சகஜம் தானே.

நேராக சென்று அவனை வாழ்த்தினாள்.

நன்றி மாலதி. இன்னிக்கு சாயங்காலம் என் வீட்ல ஒரு ஸ்பெஷல் ட்ரீட் உனக்கு என்றான்.

அப்படியா என்ன ஸ்பெஷல். வா சொல்றேன் என்றுவிட்டு விடை பெற்றான்.

மாலை சகஜமாக வீட்டினுள் நுழைந்தாள் மாலதி. எப்போது காதலை சொல்லி குழப்புவானோ என்ற பயம் இல்லை அவளுக்கு. காரணம் பல வாய்ப்புகள் கிடைத்தும் அவன் அந்த அபாயாக கோட்டை கடக்கவில்லை.


மறுபடியும் அனைத்தும் வித்தியாசமான உணவு வகைகள். வீட்டினுள் பல நிற மாற்றங்கள்.

சாப்பிட்டுவிட்டு ஷாம்பெயின் பாட்டிலை உடைத்தான்.

கோப்பைகளில் ஊற்றி அவளுக்கும் கொடுத்து டோஸ்டு டூ மை லவ் என்றான். சங்கடமாக நெளிந்தாள்.
http://www1.istockphoto.com/file_thumbview_approve/2415327/2/istockphoto_2415327_celebration_toast_with_champagne.jpg

அவள் சற்றும் எதிர்பாராத விதமாக மே ஐ ஹக் யூ என்று கேட்டான். அவள் பதில் சொல்வதற்கு முன் அவளை அணைத்து அவள் நெற்றியில் முத்தமிட்டான். வேகமாக அவன் உதடுகள் அவள் உதடுகளை நோக்கி செல்ல, சட்டென்று விலகிக் கொண்டாள். தன் கொள்கை விளக்கம் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது போலும் என்று மனதில் நினைத்துக் கொண்டே

கண்ணன், என்ன இது

ஏன் மாலதி. உனக்கு என்னை பிடிக்கலை

நிறைய பிடிச்சிருக்கு.

நான் உன்னை காதலிக்கிறேன்னு நினைக்கிறேன் மாலதி. நீ....

கண்ணன். நீங்க ஒரு அருமையான மனிதர். ஒருவேளை நான் உங்களை தான் காதலிச்சிருப்பேன்னு நினைக்கிறேன். ஆனா நான் காதலிக்கறவருக்கு நான் முதல் காதலா இருக்கனும்னு தான் நான் விரும்பறேன். இது என்னோட கொள்கையும் கூட. ஒருவேளை நீங்கள் உங்கள் முதல் காதலை சொல்லாம இருந்திருந்தா இப்ப நிலைமை வேற மாதிரியா இருந்திருக்கலாம் என்றாள்.

அப்ப உண்மை பேசினதுக்கு இது தான் தண்டனையா

இல்லை கண்ணன். ஒருவேளை நீங்க உண்மை பேசாம இருந்திருக்கனுமோன்னு நினைக்கிறேன்.

என்ன சொல்ல வரே நீ

என்னை மன்னிச்சிடுங்க கண்ணன். உங்களுக்கும் எனக்கும் நடுவில் சித்ராங்கற பெரிய தடுப்பு சுவர் உருவாயிடுத்து

சித்ரா இப்ப எங்கேயுமே இல்லை மாலதி. டோன்டு பீ ஸ்டுபிட்

ஐ வுட் பிரிஃபர் டூ பீ அ ஸ்டுபிட் ராதர் தான் பீயிங் ப்ளையின்ட். சித்ரா உங்க மேல எத்தனை ஆதிக்கம் செலுத்தியிருக்கான்னு நீங்க இந்து நான்கு வருஷம் வாழ்ந்த வாழ்கை பார்த்து நான் தெரிஞ்சிகிட்டேன். நான் வரேன் என்று சொல்லி விடை பெற்றாள்.

மனோஜ்
02-08-2007, 03:03 PM
என் மோகன் சார் கவுத்துடிங்க
தொடருங்கள் வித்தியாசமாக எழுதுவது உங்கள் நடை

leomohan
02-08-2007, 03:04 PM
நன்றி மனோஜ், நன்றி சன்ப்ளவர் அவர்களே.

leomohan
02-08-2007, 03:26 PM
9

அடுத்த இரண்டு நாட்களும் அவளுக்கு அவன் வேலை எதுவும் தரவில்லை. அவளும் போய் என்ன என்று கேட்கவில்லை. ஆனால் அவன் ப்ரீதாவுக்கு வேலை தருவது கடுப்பாக இருந்தது. இதெல்லாம் பழைய டெக்னிக்குடா மச்சி. இதுமாரியெல்லாம் பண்ணா நான் பொஸஸிவாகி உன்னை லவ் பண்ணுவேன்னு நினைக்கிறியா என்று சொல்லிக் கொண்டாள்

மதியம் ராஜாராம் அழைத்து ஒரு கடிதத்தை காட்டினார். மின்னஞ்சலில் கண்ணன் அவருக்கு எழுதியிருந்த கடிதம்.

அன்புள்ள ராஜாராம்,

மாலதியின் திறமை மற்ற துறைகளுக்கும் பயன்பட வேண்டும். அதனால் அவளை வேறு துறைக்கு மாற்றினால் நான் ஆட்சேபம் தெரிவிக்க மாட்டேன். அவர் எங்கு வேலை செய்தாலும் அதனால் அவளுடைய மேலாளருக்கு மிகவும் பயனளிப்பார் என்று நான் நம்புகிறேன்.

கண்ணன்.

படித்ததும் கோபத்தின் உச்சிக்கே போய்விட்டாள். முதலில் வேறு பெண்ணுடன் பேசும் திட்டம். இப்போது தன்னை தவிர்க்கும் திட்டமா. சே இப்படியெல்லாம் கீழே இறங்கி போகனும் இவன் என் காதலை பெற.

சொல்லு மாலதி. உனக்கு எந்த துறைக்கு போகனும்னு.

நான் யோசிச்சு சொல்றேன் சார் என்று சொல்லிவிட்டு அந்த கடிதத்தை எடுத்துக் கொண்டு நேராக கண்ணனுடைய காபினுக்கு சென்று அதை மேசையின் மீது தூக்கி எறிந்தாள்.

இது என்ன கண்ணன். ஏன் இப்படி செய்தீங்க. நான் உங்கள் காதலை ஏத்துக்கலைன்னு தானே என்றாள் காட்டமாக.

அமைதியாக படித்துவிட்டு சிரித்தான். இல்லை சின்னப்பெண்ணே.

இந்த சமாளிக்கறதெல்லாம் வேண்டாம். இரண்டு நாளா எனக்கு வேலை தரலை. நான் அன்னிக்கு உங்க வீட்டுக்கு வந்துட்டு போன பிறகு தான் இந்த மெயிலை எழுதியிருக்கீங்க என்றாள்.

ஹா ஹா என்று சிரித்தான். அவளுக்கு கடுப்பாக இருந்தது.

முதல்ல ஒரு விஷயம். நான் ஏற்கனவே உன்னை வேறு டிபார்ட்மென்டுக்கு சிபாரிசு செஞ்சிட்டதாலே புதுசா எந்த வேலையும் கொடுக்கலை.

இரண்டாவது, இங்கே பாரு என்று தன் மடிக்கணினியை திருப்பி, அவனுடைய பிறந்த நாளுக்கு முன் அவன் ராஜாராமுக்கு எழுதிய அஞ்சலை காட்டினான்.


அன்புள்ள ராஜாராமுக்கு,

திறமையாக நிர்வகிக்கப்படும் உங்கள் நிறுவனத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய துறையின் வெற்றிக்கு நான் மட்டுமே காரணம் என்றால் அது சுயநலமாகிவிடும்.
ஆரம்பத்தில் நீங்கள் காரியதரிசி தந்தீர்கள். காரியதரியின் முக்கியத்துவமும் இப்போது தான் உணர்ந்தேன். உண்மையில் நான் உங்களுக்கு நன்றி சொல்ல வேண்டும்.

மாலதி மிகவும் திறமைசாலி. முதலில் நான் சொன்ன வேலைகளை திறமையாக செய்து வந்தவர் தற்போது என்னுடைய வேலைகளையும் செய்ய துவங்கி மிகவும் திறம்பட செய்துவருகிறார்.

நீங்கள் தொலைபேசியில் சொன்னது போல் எனக்கு பதவி உயர்வு கிடைத்தால் அதில் அவருக்கும் பங்கு உண்டு.
ஆனால் அவர்களுடைய சேவை மற்ற மேலாளருக்கும் பயன்பட்டால் நம் நிறவனமே பயனடையும். இதை பரிசீலனை செய்யுங்கள்.

நன்றி.

இதை படித்ததும் சாதாரணமாக வழியும் மனிதனோ சாதாராணமான காதல் தந்திரங்கள் செய்யும் ஆளோ கண்ணன் இல்லை என்பதை உணர்ந்தாள். சே மற்றவன் போல் நினைத்துவிட்டோமே என்று வருந்தி ஒரு பெரிய பெருமூச்சு விட்டாள்.

எனக்கு கொஞ்சம் டைம் வேணும்

ஓ கவலை படாதே இந்த மாத கடைசி வரையில் நீ என் டிபார்ட்மென்டல தான் இருப்பே

அதுக்கு சொல்லலை. உங்க காதலை பற்றி முடிவெடுக்க.....

பெர்சனல் விஷயம் லஞ்சுல இல்லாட்டி சாயங்காலம் என்று சிரித்தபடியே கூறினான்.

மனோஜ்
02-08-2007, 03:32 PM
என்ன மோன் சார் சிக்கரமா முடிக்கிற ஐடியாவா
இப்பவே இறுதிகட்டமாதிரி இருக்கு
தொடருங்கள்..........

அன்புரசிகன்
02-08-2007, 04:25 PM
மோகன்... சூப்பர்............. உங்க கையை கொடுங்க தலைவா....

அந்தமாதிரி போய்க்கிட்டிருக்கு...

தொடருங்க...

அக்னி
02-08-2007, 04:46 PM
யாராவது BP மாத்திரை இருந்தால் தாருங்களேன்...
இப்பவே உச்சத்திற்குப் போய்ட்ட்ட்டுது...

லியோ... தொடரலியோ...
விறுவிறுப்பான தொடர்...
காதல் தொடர்கதை ஒன்றில், திகில் கதையின் திக் திக் அனுபவம், எனக்கு புதிது என்றாலும், சுவாரசியமாக இருக்கின்றது...
வாழ்த்துக்கள்... தொடருங்கள்...

leomohan
02-08-2007, 07:48 PM
10

அலுவலகம் விட்டு போகும் முன் என்ன ப்ளான் சாயங்காலம் என்று கேட்டான் மாலதியை பார்த்து.

ஒன்னுமில்லையே

8 மணிக்கு மீட் பண்ணலாமா

எனக்கு உடம்பு சரியில்லை வீட்டுக்கு போகனும். பொய்

ஓ என்னாச்சு.

ஒன்னுமில்லை தலைவலி தான்.

சரி டேக் கேர் என்று சொல்லி விடை பெற்றான். ப்ளீஸ் ப்ளீஸ் என்ற கெஞ்சலும் இல்லை கொஞ்சலும் இல்லை. இவன் என்னை காதலிக்கிறானாம்.

சரியாக 6.30 மணிக்கு எப்படி இருக்கு உடம்பு இப்ப என்று கவலையான ஒரு குறுந்தகவல் அவனிமிருந்து அவளுக்கு.

வாடா வாடா மச்சான் என்று சொல்லிக் கொண்டு குளியலறைக்குள் நுழைந்தான். குளித்து முடித்து திரும்பி வரும் முன் 3 மிஸ்ட் கால். மேலும் ஒரு குறுந்தகவல். என்ன கோபமா என் மேல் என்று.

மறுபடியும் 7 மணிக்கு ஒரு போன். இன்னிக்கு என்னை விட மாட்டான் போலிருக்கே.

போனை எடுத்து சொல்லுங்க கண்ணன், ஏதாவது டிராயிங்க் பண்ணனுமா என்றாள் நக்கலாக.

இல்லை மாலதி உன்னை பாக்கனும் போல இருக்கு என்றான்.

அது தான் 6 மணி வரையிலும் பார்த்தீங்களே. நாளைக்கு காலையில் வேற பாக்கபோறீங்க என்றாள் விடாப்பிடியாக.

சரி ஓகே என்று போனை துண்டித்தான்.

மச்சானுக்கு காதல் தலையில் ஏறி பித்தாயிட்டான் போலிருக்கே. இவனை என்ன பண்ணலாம் என்று குழம்பி தவித்தாள்.

ஈகோ, காதல், கொள்கை, கூடவே பிறந்த திமிர் என்று அவளுடைய எல்லா குணங்களும் சேர்ந்து கோ-கோ விளையாடியது.

7.30

கண்ணன், நான் இப்ப பெட்டர். மீட் பண்ணலாம் என்றாள்.

வாவ். கிரேட். தாங்கஸ். எங்கே எப்போ என்று உற்சாக கூக்குரலிட்டான் கண்ணன், மறுபுறம்.

ரொம்ப ஆடாதே மாப்பிள்ளை மனக்குரல்

என்னை வந்து பிக்கப் பண்ணிக்கோங்க.

எங்கே இருக்கே

நுங்கம்பாக்கம்

எந்த ஏரியா

லேக் ஏரியா

கிராஸ்

தெர்ட் கிராஸ்

சரி 15 நிமிஷத்துல அங்கே இருப்பேன் என்றான்.

கண்ணாடி முன் நின்று ஏய் அழகி என்ன பண்ணலாம் இந்த அழகனை என்று கேட்டுக் கொண்டாள். பிம்பம் உள்ளுக்குள் சிரித்து வெளியே அழுதன.

என்னால் இவனை காதலனாக ஏத்துக்க முடியலை. இவனை நிறைய பிடிச்சிருக்கு. ஆனால்...

காரை அவள் முன் நிறுத்தி, இறங்கி சுற்றி வந்து கதவை திறந்து ஒரு மஹாராணியை போல் உள்ளே அமரவைத்தான்.

காதல் வந்துச்சோ

இல்லை

ஏன்

தெரியலை

என்ன முடிவெடுத்திருக்கே

டைம் வேணும்னு கேட்டது மத்தியானத்திலேர்ந்து சாயங்காலம் வரைக்கும் இல்லை. இன்னும் டைம் வேணும்

இப்ப எடுக்காத முடிவு எப்போ எடுக்க போறே.

ஒன்னு சொல்லுங்க கண்ணன். ஆபீஸ்ல பர்சனல் விஷயம் பேசக்கூடாதுன்னு நீங்க ஒரு கொள்கை வச்சிருக்கீங்களே. அதுபோல நான் ஒருவருக்கு முதல் காதலியா இருக்கனும் அப்படிங்கறது என் கொள்கை. கொள்கைகளை மாத்திகிட்டா அது கொள்கையே இல்லை.
அடி சக்கை பாயிண்டை பிடித்துவிட்டேன் என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

ம்ம். நியாயமான லாஜிக் தான் என்றான் அவளை பாராட்டுவது போல்.

வண்டியை அடையார் அஞ்சப்பர் செட்டிநாடு உணவகத்தின் முன் நிறுத்திவிட்டு உள்ளே நுழைந்தனர் இருவரும்.

நான் ஒரு முடிவு எடுத்திருக்கேன் மாலதி.

என்ன

இந்த வேலையை ராஜினாமா பண்ணிடலாம்னு

அவளுக்கு பகீர் என்றது. பெண்களுக்கு ஆண்கள் ஒரு பொம்மை பொருள் போலத்தான். விளையாட பொம்மை வேண்டும். ஆனால் அந்த பொம்மை தன்னை உரிமை கொண்டாடக்கூடாது. பொம்மைகென்று ஒரு எதிர்பார்ப்பு இருக்கக்கூடாது. வித்தியாசமான சிந்தனைகள் தான். பிடிக்கும்போது எடுத்து விளையாடலாம். எப்போது பிடிக்கும் என்று சொல்ல முடியாது. பிடிக்கவில்லை என்றால் வேண்டாம். எப்போது பிடிக்காது என்று சொல்ல முடியாது.


அவள் அமைதியாக இருந்தாள். தான் பயந்ததை காட்டிக் கொள்ள விரும்பவில்லை.

உணவு வகைகளுக்கு ஆர்டர் தந்துவிட்டு மீண்டும் பேசினான்

புனேல ஒரு ஆஃபர் கிடைச்சிருக்கு

அப்ப முன்னாடியே வேலை தேட ஆரம்பிச்சிட்டீங்களா

இல்லை. தானா வந்தது

அப்ப எதுக்கு இப்ப காதலை சொன்னீங்க. நீங்க காதலை சொல்லிட்டு போயிடுவீங்க. நான் உங்க நினைப்பா இங்கே வாடணுமா

முட்டாள். காதலை சொல்லிட்டு டிரெயின் ஏற நான் என் சினிமா கதாநாயகனா. காதலுக்கு அடுத்த படி கல்யாணம் தானே.

ஓ அத்தனை வேகமா

பின்னே ஒருவனுடைய காதலை ஏற்ற பிறகு அவனை திருமணம் செஞ்சிக்கறதை தவிர வேற என்ன இருக்கு ஒரு பெண்ணுக்கு

இல்லை நிறைய இருக்கு

அப்படியா சொல்லேன் கேப்போம்

முதல்ல சில மாதங்கள் காதலிக்கனும். அதுக்கு நடுவில் ஒத்து வரலைன்னா காதல் கல்யாணம்ற படி ஏறாமலே கீழே இறங்கிடலாம் இல்லையா

இந்த காலத்தின் பெண்கள் ரொம் ஸ்மார்ட்டு தான்

அப்ப அந்த காலத்து பெண்களை பத்தி உங்களுக்கு என்ன தெரியும்

ஹா ஹா. அந்த காலத்தை பத்தி தெரியாது. சில வருடங்களுக்கு முன் அந்த காலம்னு இருந்தா காதல் ஒருத்தரோடையும் கல்யாணம் இன்னொருத்தரோடையும் பண்ணிக்கலாம். அதாவது காதல்ல பிரச்சனை வராட்டியும் கூட.

பார்த்தீங்களா கண்ணன். உங்களோட நினைவுகளை சித்ரா முழுக்க முழுக்க ஆக்ரமிச்சிருக்காங்க. என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டு நீங்க என்னை தான் நினைச்சிட்டு இருக்கீங்கன்னு நான் எப்படி நம்பறது. எல்லா நிலையிலும் அவங்களோட கம்பேர் பண்ணி பார்த்துட்டு இருப்பீங்க.

ஓ ஷிட். என்று தன்னையே கடிந்துக் கொண்டான். எதை செய்யக்கூடாதென்று நினைத்தானோ அதை செய்தான். சித்ராவை பற்றி அவள் முன் பேசக்கூடாது என்று முடிவு செய்திருந்தான். முடியவில்லை. அவள் சொல்வத சரிதான். சித்ராவை மனதை விட்டு அகற்ற வேண்டும். அது எப்படி செய்ய முடியும். அதற்கு மாலதியின் உதவி தேவை. அவள் இல்லாவிட்டால் முடியாது.

மெதுவாக தன்னுடைய இருகைகளையும் எடுத்து அவளுடைய இரு கைகளையும் பிடித்தான். அவள் எதிர்க்கவில்லை.

மாலதி, உடம்புல ஊசி குத்திக்கிறோம். அது வலியும் குத்தலும் மறைஞ்சி போயிடறது இல்லையா என்றான்.

இல்லை கண்ணன். சித்ரா ஆணி மாதிரி உங்க மனசுல ஏறி இருக்காங்க. எடுத்தா அந்த இடத்துல ஒரு வடு வந்திடும்.

அந்த வடுவை மறைக்க தான் நீ வேண்டும் மாலதி.

சாரி கண்ணன் உங்க மனசுல படற மொதல் ஆணியா நான் இருக்கனும்.

ஏன் ஆணி அடிச்சி காயப்படுத்தனும்னு நினைக்கிறே

அவனுடைய இந்த கேள்வி அவள் மனதை பாதித்தது. பெண்கள் வெறும் ஆண்களின் மனதில் அடிக்கப்படும் ஆணிகள் தானோ. வலியையும் ஏற்படுத்தி, அதிலே நிலைத்து நின்று வலியை கொடுத்து, எடுக்கும் போதும் அதிகப்படியான வலியை ஏற்படுத்தி, சே, பெண்கள் இவ்வளவு மோசமான ஆயுதங்களா.

கண்ணன் எனக்கு குழப்பமா இருக்கு.

மாலதி, நான் சித்ராவை நேசிச்சது உண்மை தான். ஆனால் நான் அவளை இனி சொந்தம் கொண்டாடக் கூடாது. அது தப்பு. அவளை மட்டும் அல்ல அவளுடைய நினைவுகளையும் தான். ஆனா உன் மேலே எனக்கு வந்திருக்கறது ஒரு புது காதல். இது சித்ராவுக்கு மாத்தா இல்லை.

கண்ணன் நீங்க நல்லா பேசறீங்க.

அவன் அமைதியாக இருந்தான்.

ஒன்னு கேட்கட்டுமா உன்கிட்டே.

கேளுங்க

நான் உன்கிட்டே என் முதல் காதலை பத்தியும் சொல்லாம உன்னை காதலிக்கிறேன்னு சொல்லி, நீயும் அதை ஏத்துகிட்டு பிறகு நான் எப்பவும் சித்ராவை பத்தியே நினைச்சிகிட்டு இருந்தேன்னா பரவாயில்லையா உனக்கு.

இல்லை தான்

அப்புறம்

அவள் மௌனமானாள் இப்போது.

கண்ணன், நான் யாரையும் காதலிக்கலை. காதலிக்க போவதும் இல்லை. உங்களோட நான் சேராட்டா வீட்ல சொல்றவனை தான் கல்யாணம் பண்ணிக்கப் போறேன்.

நீங்க இந்த வேலையை எடுத்துக்காதீங்க. எனக்கு கொஞ்சம் நேரம் கொடுங்க.

அவள் ஈகோ செத்துப்போனது. பெண்மை பளபளத்தது.

நேரம் கொடுத்தா கொள்கையை மாத்திக் போறியா

இல்லை. ஆனால் உங்கள் மனசுலேர்ந்து சித்ரா முழுவதுமா போயிட்டாங்க அப்படிங்கற அளவுக்காவது எனக்கு நம்பிக்கை வரனும் இல்லையா.

அவன் கண்களை மூடிக் கொண்டான். இலக்கில்லாது பயணத்தில் மாட்டிக் கொண்டது போல ஒரு ஆயாசம் ஏற்பட்டது. இது நிறைவேற்போகும் காதல் இல்லை. முற்றிலும் புத்திசாலியான ஒரு பெண்ணுக்கு சொல்லி எதுவும் புரியவைக்க முடியாது. அவள் சொல்வது சரிதான். இந்த சித்ராவை முற்றிலும் அழிக்க வேண்டும் தன் மனதிலிருந்து. சாத்தியாமா. ஒருவேளை மாலதி அதிகம் எதிர்பார்க்கிறாளோ.

leomohan
02-08-2007, 08:45 PM
11

ராஜாராம் நிறுவனத்தின் தலைமை அலுவலர் முன்பு அமர்ந்திருந்தார். சார், மாலதி ரொம்ப திறமையான பெண். அவர் கண்ணனுடன் வேலை செய்ய விரும்பறாங்க. ஆனால் கண்ணன் அவங்களை மத்த டிபார்ட்மென்டுக்கு கொடுத்தா நமக்கு நல்லதுன்னு சொல்றாங்க என்ன செய்யலாம்.

மாலதி, தட் ஸ்வீட் லிட்டில் கேர்ள் என்றார் சிஇஓ

ஆமாம்

வெல், ஐ வுட் லைக் டூ ஹாவ் ஹெர் என்றார் ராஜாராமை பார்த்து கண்ணடித்தபடியே.

அந்த வாக்கியத்தில் தொனித்த விரசத்தை ராஜாராம் ரசிக்கவில்லை. மாலதியை தன் பெண் மாதிரி நினைத்திருந்தார். மற்ற பெண்கள் போல் அனைவரிடமும் வயது வித்தியாசம் இல்லாமல் வழிந்து திரியும் பெண்ணல்ல அவள். பொழுதுபோக்கிற்காக வேலை செய்ய வந்து வேலை செய்யாமல் காலம் ஓட்டும் பெண்ணும் இல்லை அவள். அந்த விரசத்தை அவரால் ரசிக்க முடியவில்லை. அதை தெளிவாக காட்டியும் கொண்டார். அதை உணர்ந்த சிஇஓ, அவங்க ரெண்டு பேரையும் கூப்பிட்டு பேசுங்க இல்லைன்னா என்னோட மீட்டிங்க் அரேன்ஜ் பண்ணுங்க என்றார்.

நன்றி என்று சொல்லி விடை பெற்று வெளியேறினார். ப்ளடி வூமனைசர் என்று மனதில் சொல்லிக் கொண்டார்.

அரை மணியில் மாலதியும் கண்ணனும் அவர் முன்னால்.

மாலதி நீங்க என்ன சொல்றீங்க.

கண்ணன் சாருக்கிட்டே கத்துக் வேண்டியது நிறைய இருக்கு சார். அவருடைய வேகம், தெளிவான சிந்தனைகள், புதுமை, ஒரு வேலையை அணுகும் முறை இப்படி நிறைய. 4 கோடி ஆர்டர் எடுத்ததல என் பங்கும் இருக்குன்னு சொன்னது அவரோட பெருந்தன்மை. இன்னும் ஆறு மாதத்தில் 8 கோடி செய்வோம். அதனால் அவர் கூட வேலை செய்யவே எனக்கு விருப்பம் என்றாள். மெய்யான வார்த்தைகள். கண்ணன் சாராக மாறியது மட்டும் ராஜாராமுக்காக.

மாலதி நீங்க மிகுந்த திறமைசாலி. நீங்க என்கிட்டேர்ந்து என்ன கத்துக்கிட்டீங்களோ தெரியாது நான் உங்க கிட்டேர்ந்து கத்துக்கிட்டது தான் நிறைய. உங்களோட சேவை மற்றவர்களும் கிடைக்கும் என்பதே என் விருப்பம். மெய்யான வார்த்தைகள். நீங்க வாங்க என்று அவளை சொன்னது மட்டும் ராஜாராமுக்கா.

இப்படியாக 15 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்துவிட்டு முடிவாக ஒரு வார்த்தை சொன்னார் அவர். கண்ணன் இன்னும் 3 மாசம் அவங்க உங்களோட வேலை செய்யட்டும். அப்புறம் முடிவு செய்யலாம். நீங்க போகலாம்.

நன்றி என்று கூறி வெளியேவந்தனர் இருவரும்.

மதிய உணவு இடைவேளையில், என்ன கண்ணன் கழற்றிவிட பார்த்தீங்களா. எப்படி பெவிக்கால் மாதிரி ஒட்டிக்கிட்டேன் பாருங்க என்றாள் வெற்றி களிப்போடு.

நல்லா ஒட்டிக்கோ. ஆபீஸ்ல மட்டுமில்லை வீட்டிலேயும் தான். அது தான் நான் விரும்பறேன் என்றான் காதலுடன்.

ரொம்ப ஆசை தான்

ஆசை தான். அதுக்கு தான் சொல்றேன்.

சரி சரி சாப்பிடுவோமா

எப்போ எனக்கு சமைச்சி போடறே

ஹா ஹா. ஓ அந்த வேலையெல்லாம் இருக்கா. அது முடியாதுப்பா. அப்படியே கல்யாணம் பண்ணிகிட்டாலும் நான் தொடர்ந்து வேலை செய்வேன். வீட்ல வேலைக்காரி தான்

ஹப்பா. அப்படியாவது கல்யாணத்தை பத்தி பேசறியே

சட்டென்று தான் பல படிகள் தாண்டிவிட்டதை உணர்ந்து நாக்கை கடித்துக் கொண்டாள். இந்த சகஜமான பேச்சு அவனை நிம்மதியடைய செய்தது. வெகு நாட்களுக்கு பிறகு அவனுடைய காதலில் அவனுக்கே நம்பிக்கை பிறந்து. நெருங்கிட்டடா என்று சொல்லிக் கொண்டான்.

சட்டென்று அவனுக்கு ஒரு யோசனையும் பிறந்தது. அவளிடம் விடை பெற்றுக் கொண்டு அவசரமாக வெளியேறினான். என்னாச்சு இவனுக்கு என்று யோசித்துக் கொண்டிருந்தாள் மாலதி. சில நிமிடங்களுக்கு முன் அவளுடைய பேச்சில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டு அவளே வியந்தாள். கொள்கைகளை தாண்டி காதல் வளர்ந்திருந்தது. நான் கண்ணனை லவ் பண்றேனோ என்று கேட்டு ஆம் என்று அவளே பதிலும் சொல்லிக் கொண்டாள். பிறகு ஏதோ தப்பு செய்தது போல, இல்லை இல்லை இல்லை என்று சொல்லிக் கொண்டாள்.

அன்புரசிகன்
02-08-2007, 09:03 PM
ரொம்ப நன்றாக போகிறது.... இப்போ இது காதலா இல்லையா என்பது தான் அவளுக்கு உள்ள குழப்பம்...

பார்ப்போம்.... தொடருங்கள்.

leomohan
02-08-2007, 09:50 PM
12

நேராக வண்டியை நுங்கம்பாக்கத்தில் உள்ள அந்த ப்ரிவ்யூ தியேட்டரின் முன் நிறுத்தினான். அங்கு தான் அவனுடைய நண்பரின் தந்தை கலைவாணன் வேலை செய்கிறார்.

வணக்கம்

வாங்க வாங்க கம்யூட்டர் சார் வாங்க என்று அன்புடன் வரவேற்றார்.

என்ன எங்கள மாதிரி சினிமாக்காரங்களை தேடிக்கிட்டு திடீர்னு

சார் உங்களுக்கு தெரிஞ்ச நல்ல ஆர்டர் டிசைனர் இருந்தால் வேணும்

என்ன வேலை சொல்லுங்க முடிச்சிடுவோம்

கம்பெனியில வீடு கொடுத்திருக்காங்க. இன்டிரீயர் டிசைன் பண்றதுக்கும் 2 லட்சம் பணம் கொடுத்திருக்காங்க. அட பணமா கொடுங்கடான்னு சொன்னா இல்லை செலவு செஞ்சி அதுக்கான பில் கொடுத்தா தான் தருவோம்னு சொல்லிட்டாங்க. அதனால வீட்டை டிசைன் பண்ணலாம்னு உங்களை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.

ஓ. சூப்பர் ஆளு இருக்காரு, டேய் வேலு, அந்த பரணி சாருக்கு போன் போடு. உங்க அட்ரெஸ் கொடுங்க சாயங்கலாம் 7 மணிக்கு உங்க வீட்ல இருப்பாரு

அவர் கொடுத்த காபியை குடித்துவிட்டு அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றான்.

சரியாக ஏழு மணிக்கு பரணி உள்ளே நுழைந்தார். பல பிரபலமான படங்களில் கலை வேலைகள் புரிந்து பலருடைய வாழ்த்துக்களையும் பெற்றவர். எளிமையான மனிதர்.

கண்ணனின் வீட்டிற்குள் நுழைந்ததும் சார் சூப்பரா டிசை பண்ணயிருக்கீங்க வீட்டை. யார் சார் பண்ணது என்று கேட்டார்.

நானே தான் பண்ணேன்.

சூப்பர் சார். இந்த தீமை நான் அடுத்த படத்துல யூஸ் பண்ணிக்கப்போறேன். அப்படியே பழைய படம் பாக்கற மாதிரி இருக்கு. எல்லாமே கறுப்பு வெளுப்புல. தூள் கிளப்பிட்டீங்க.

சார் நீங்க பாராட்டனது போதும். இப்போது இந்த கறுப்பு-வெள்ளையால என் வாழ்கையே கறுப்பாயிடும் போல இருக்கு. இதை கலர்பூஃல்லா மாத்தி காட்டுங்க.

விடுங்க சார். கலர்பூஃல்லா ஆக்கறது எங்க கைவந்த கலை. ஆனா அதுக்கு முன்னாடி இந்த வீட்டை பல கோணங்கள்ல நான் போட்டோ எடுத்துகணும்.

தாராளமா சார் என்றான்.

அவர் தன்னுடைய டிஜிடல் காமிராவில் அந்த வீட்டை சேமித்துக் கொண்டார்.

பிறகு தான் கொண்டு வந்திருந்த புத்தகத்தை எடுத்து ஒவ்வொரு மாடலாக காண்பித்தார். அனைத்தும் பார்த்துவிட்டு நேராக 13 பக்கத்தை எடுத்து இந்த வீடுமாதிரி என்றான்.

ஓ தாராளமா செஞ்சிடலாம்.

எஸ்டிமேட்

தன் கால்குலேட்டரை எடுத்து சில எண்களை தட்டிவிட்டு 1.75 2.50 லட்சம் உள்ள ஆகும்

இரண்டுல முடிச்சிடுங்க. கம்பெனி அவ்வளவு தான் தரும்.

ஓ. நீங்க ஒரு வாரம் வேற வீட்டுல தங்குங்க. அப்புறம் வந்து பாருங்க உங்க வீடான்னு உங்களுக்கே ஆச்சர்யமாக இருக்கும்.

ரொம்ப தாங்கஸ்.

அட தாங்கஸெல்லாம் எதுக்கு. கலைவாணன் சாருக்காக நாங்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். சினிமாவுக்கு பண்றது வேஸ்டு சார். காசு கிடைக்குது அவ்வளவுதான். ஆனா எங்கள மாதிரி கலைஞர்களுக்கு நாங்க செஞ்சி கொடுத்ததுல மக்கள் வாழ்ந்தா தான் சார் சந்தோஷமே என்று உணர்ச்சிபட கூறி விடை பெற்றார்.

leomohan
02-08-2007, 09:50 PM
13

வீட்டில் இருந்த புகைப்பட ஆல்பம்களை எடுத்து அதில் இருந்த சித்ராவின் புகைப்படங்களை கிழித்து குப்பையில் போட்டான்.

அவள் எழுதிய காதல் கடிதங்களை அவள் எரிக்க சொன்ன பிறகும் பல ஆண்டுகள் பாதுகாத்தவன் அதையும் ஸ்டவ் இயக்கி அப்பளம் பொரிப்பது போல் பொரித்து தள்ளினான்.

நோ ஸ்மாக்கிங் என்ற படத்தை இணையத்திலிருந்து எடுத்து ஸ்மாக்கிங் என்பதை மாற்றி நோ சித்ரா என்று செய்து கலர் ப்ரிண்டரில் பிரண்ட் செய்து எதிரே மாட்டினான்.

பழைய குப்பைகளை தேடி அவள் தந்த பரிசுகள் அவள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் எடுத்து குப்பையில் போட்டான்.

மனம் லேசடைந்திருந்தது.

மறு நாள் அலுவலகத்தில் சென்றவுடன் சுத்தம் செய்யும் ஊழியரை அழைத்து ஒரு பெரிய குப்பை பை கொண்டு வாங்க என்று சொல்லி, அவன் அலங்கரித்து வைத்திருந்த அவள் தந்த அனைத்து பரிசுகளை, சிறிய கார் மாடல்கள், கோப்பைகள், பேனாக்கள் என்று முற்றிலும் சுத்தம் செய்தான்.

எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி. மிஷன் ரிமூவ் சித்ரா போயிக் கொண்டிருக்கின்றதா. பலே என்று நினைத்துக் கொண்டாள்.

மாலதியை உணவு இடைவெளியில் சந்தித்தான். மாலதி நான் ஒரு வாரம் பூனாவுக்கு போறேன் என்றான்.

பூனாவுக்கா என்ன திடீர்னு

அதுவா சும்மா பிரக் தான். ஹாலிடேஸ்.

என்ன வேலைக்கு சேரப்போறீங்களா

சீ பைத்தியம். நீ இல்லாத இடத்துல எனக்கென்ன வேலை

ரொம்ப வழியாதீங்க. எதுக்கு போறீங்க சொல்லுங்க

அதாம்பா சொன்னேன்ல. என் பிரெண்டு ஒருத்தன் இருக்கான். அவனை போய் பார்க்கலாமேன்னு தான்.

சரி. நம்பறேன் என்றாள்.

அவளுடைய கைகளை பிடித்து லேசாக அழுத்தியவாறே, என்னை மட்டும் நம்புமா என்றான்.

பார்க்கலாம் என்றாள் மாலதி, அலட்ச்சியமாக பேசுவது போல்.

புனே வந்தடைந்த கண்ணன் நண்பனின் வீட்டிற்கு சென்று ஓய்வெடுத்தான். பிறகு அருகில் இருந்த ராமகிருஷ்ணர் மடத்திற்கு சென்று தியானம் செய்தான். வரும்போது பல புத்தகங்களை அள்ளி வந்தான். அனைத்தும் மனதை ஒருங்கிணைப்பது, தியானம் செய்வது போன்ற தலைப்புகள்.

என்னடா சாமியாரா ஆகப்போறதா உத்தசமா என்றான்

ஹா ஹா. இல்லைடா. சாமியாரா ஆகாம இருக்கறதுக்காக தான் இதெல்லாம் என்றான்

என்னடா சொல்றே என்று வியப்புடன் கேட்டான் மதியழகன்.

மதி, ஐயாம் இன் லவ்டா.

அடப்பாவி மறுபடியுமா இத்தனை வருஷத்துக்கு அப்புறமா. டெல் மீ ஆல் அபவுட் இட்

கணினிக் காதலின் முதல் அத்தியாத்திலிருந்து அவளை நீலச்சுடிதாரில் பார்த்ததலிருந்து சென்ற அத்தியாயத்தில் பரணி வந்து சென்றது வரை அனைத்தையும் சொல்லி முடித்தான்.

டேய் உனக்கு ஏத்த ஆளுதான்டா அவ. ரொம்ப வித்தியாசமா இருக்கா. ரொம்ப வித்தியாசமா யோசிக்கிறா.. யூ ஸீம் டூ ஹாவ் பஃவுண்ட அ ரைட் சாய்ஸ் என்றான்.

ஆமான்டா நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.

குட் என்று சொல்லி அவன் உறங்கச் செல்ல ஐ மிஸ் யூ லைக் அ ஹெல் என்று ஒரு குறுந்தகவல் அனுப்பிவிட்டு இவனும் உறங்கச் சென்றான் அவள் உறக்கத்தை கலைத்துவிட்டு.

leomohan
02-08-2007, 09:51 PM
14
மறுநாள் அலுவலத்தில் அவனை காண முடியாது என்பதை அவளால் ஏற்க முடியவில்லை. மனம் அவனுடன் பேசத்துடிக்க கண்கள் அவனை பார்க்க துடித்தது. காதலிக்கிறோமா இல்லையா என்ற குழப்பத்தில் இருக்கும் நானே இப்படி தவிக்கிறேனே என்னை தெளிவாக காதலிக்கிறேன் என்று சொன்ன கண்ணனுக்கு எப்படி இருக்கும். அப்படி இருந்தும் ஏன் போன் செய்யவில்லை. ஒரே ஒரு எஸ்எம்எஸ் 36 மணி நேரத்தில் நியாயமா இது. எஸ்எம்எஸ் என்ன தங்க விலையிலா விற்கிறது. அது சரி, இல்லாட்டா ஒரு இமெயில். என்ன பண்றான் பூனேல. ஏதோ ரகசியமா செய்யறானா. நிஜமாகவே வேலையை விட்டுவிடுவானா. பூனே என்ன பெங்களூரோ போய் பார்ப்பதற்கு.

கணினியில் தன் நிறுவனத்தின் இன்டராநெட் தளத்திற்கு சென்று அலுவலகப் புகைப்படங்களில் அவன் இருக்கும் படங்களை தேடினாள். அவளுடைய மனம் எதிலும் லயிக்கவில்லை.

நீண்ட நேரம் யோசித்த பிறகு, இது மாதிரி முடிவில்லாமல் போவது தன் வாழ்கைக்கும் அவனுடைய வாழ்கைக்கும் சரியில்லை. நமக்கு இன்னும் 30 நாட்கள் கொடுத்துக் கொள்வோம். அதற்குள் முடிவுக்கு வராவிட்டால் காதல் இல்லை என்று முடிவு செய்து அவனுக்கும் தெரிவித்து தானும் நிம்மதியாக இருப்போம் என்று முடிவு செய்தாள்.

மூளையால் முடிவெடுக்கக்கூடியதா காதல். இதயம் என்று ஒன்றுக்கு வேலை இல்லையா. எல்லோரும் சித்ரா போலவா. மூளைக்கு மட்டும்தானே இரவு பகல். இதயத்திற்கு எல்லா நேரமும் ஒன்று தானே. மூளைக்கு மட்டும்தானே சரி-தவறு. இதயத்திற்கு எல்லாமே சரி தானே. மூளைக்கு மட்டும்தானே நல்லது கெட்டது. இதயத்திற்கு எல்லாமே நல்லது தானே. மூளைக்கு மட்டும்தானே கொள்கைகளும் கோட்பாடும் இதயத்திற்கு எல்லாமே அன்பும், பாசமும் நேசமும் தானே. மனிதவள பாடத்தில் சொல்லித்தரும் முதல் பாடம் இதயத்தால் யோசிக்காதீர்கள். மூளையால் யோசியங்கள். ஹா ஹா. அன்று இதயம் மட்டும்தான் யோசித்தது. மூளை யோசிப்பது போல் நடித்துக் கொண்டிருந்தது.

அந்த ஒரு வாரம் அவள் வாழ்கையில் மறக்கமுடியாத பாதிப்பு ஏற்படுத்தியிருந்தது. இடையில் அவன் பல முறை பேசினாலும் அது அவளை இன்னும் பலவீனப்படுத்தியிருந்தது. வெறும் நினைவுகளாக புகைப்படத்திலும் ஒலிநாடாக்களிலும் மட்டுமே கண்ணனை காணப்போகிறோமோ என்ற பயம் அவளை வாட்டி எடுத்தது. கண்ணனுடன் நான் இருந்த காலங்கள் தமிழ் திரைப்படம் அல்ல, அதை ஒலிநாடாவில் பதிவு செய்து பார்த்துக் கொள்ள. ரத்தமும், சதையும், வேர்வையும், மூச்சுக் காற்றும், வாசனையும், உடலின் சூடுகளும், அவன் பேசிய பேச்சுக்களும், அவனுடைய பார்வைகளும் இவை அனைத்தும் சேர்ந்த நிஜம். நூற்றுக்கு நூறு நிஜம்.

தளர்ந்து போய் தன்னுடைய அறையில் சாய்ந்தாள். அவன் ஊரில் இல்லாத போது தொலைகாட்சி பெட்டியையும் இயக்க தயங்கினாள். இன்னொரு கெட்ட செய்தி கேட்க அவள் மனம் தயாராக இல்லை. பெண்மை எல்லா நவநாகரீகங்களையும், புரட்சி சிந்தனைகளையும் தூக்கி சாப்பிட்டது.

நான் உனக்காக சமைக்க தயார். வேலை விடத் தயார். நீ என்ன சொன்னாலும் செய்யத் தயார். நீ திரும்பி வா. உன்னை அணைத்துக் கொள்கிறேன். உன் மடியில் எப்போதும் சாயந்துக் கொள்கிறேன். நீ கறுப்பு வெள்ளை டிவி பார்த்தாலும் பரவாயில்லை. ஆயிரம் சித்ராவை திருமணம் செய்துக் கொண்டாலும் பரவாயில்லை.

சே சே. நானா. நான் மாலதி. நான் இத்தனை பலவீனம் இல்லை. நான் புத்திசாலி, தைரியசாலி. சித்ரா இருந்தால் நான் இல்லை. நான் அவனை இன்னும் காதலிக்கவில்லை. காதலிக்கலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். என் இதயத்தால் அல்ல. என் மூளையால் முடிவெடுப்பேன்.

leomohan
02-08-2007, 09:52 PM
15
பூனேயில் இருந்தபோது ஐஐடியின் அலுமினி தளத்திலிருந்து சித்ராவின் சமீபத்திய தொலைபேசி எண் தெரிந்துக் கொண்டான்.

சென்னை வந்ததும் அவளுக்கு போன் போட்டான். போனை எடுத்து அவளுடைய முதல் குழந்தை. மம்மி, வோன் என்றது இனிமையான மழலையில்.

ஹலோ

நான் கண்ணன் பேசறேன்

ஒரு நிமிடத்திற்கு மறுபுறம் அமைதி நிலவியது.

ஓ கண்ணன். சொல்லு. எப்படி இருக்கே
நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்கே

நான் நல்லா இருக்கேன்

போன் எடுத்தது உன் முதல் குழந்தையா

ஆமா

ஸ்வீட் வாய்ஸ்.

எப்படி இருக்கு மதர்ஹூட்

ஓ ரொம்ப நல்லா இருக்கு. குழந்தைகளுடைய சிரிப்பை பார்த்தால் உலகத்தில் வேறு எதுவும் வேண்டாம்னு தோணுது. மனதுக்கு ரொம்ப இதமாக இருக்க

ஆமாம். அது உண்மைதான். உன் ஹ்ஸ்பண்ட் எப்படியிருக்காரு

ஓ அவரு ஒரு ஜெம். என் மேலே உசிரே வைச்சிருக்காரு. வெளியூருக்கெல்லாம் வேலை விஷயமா போனாக்கூட என்னை கூடவே அழைச்சிகிட்டு போயிடறாரு.

நீ சந்தோஷமா இருக்கியா

ஆமாம். கண்ணன் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அவள் குரலில் நடுக்கம் தெரிந்தது.

நீ சந்தோஷமா இருக்கியா

இருக்கேன் சித்ரா. பட் இட் வாஸ் நாட் ஈஸி.

மறுபுறும் மீண்டும் அமைதி.

சித்ரா, நான் உங்க குடும்பத்தை பார்க்க வரலாம்னு இருக்கேன். உனக்கு ஓகேவா

ஓ வாயேன். தாராளமா. சொன்னாலே தவிர அது மிகவும் உறுதியான அழைப்பாக தெரியவில்லை.

சரி இந்த வாரம் வரேன். உன் ஹஸ்பெண்ட் என்னிக்கு வீட்ல இருப்பாருன்னு சொல்லு அப்ப வரேன்.

ஹா. அவர் இல்லாட்டா கூட வராலம் நீ.

அவர் இல்லாதபோதே வந்துவி்ட்டு போய்விடு என்று சொல்வது போல் இருந்தது.

இல்லை. உங்க பேமிலியோட பாக்கனும். மதியழகனை பார்த்தேன் அவன் சொன்னான் யூ ஹாவ் டு ப்யூட்டிபூஃல் கிட்ஸ் அப்படின்னு.

யாரு நம்ம குண்டு மதியா. முதல் முறையாக கல்லூரி காதல் பாஷையில் பேசினாள்.

ஹா ஹா. இப்ப அவன் ஸ்லிம் அண்ட் ஸ்மார்ட் தெரியுமா. மஹாராஷ்ட்ரியனை கல்யாணம் பண்ணிக்கிட்டு வீட்ல தாத்ரே போத்ரேன்னு பேசிகிட்டு இருக்கான்.

உனக்கு கல்யாணம் ஆயிடுச்சா கண்ணன் என்றாள். அவள் குற்ற உணர்ச்சியுடன் பேசியது போல் இவனகுக்கு தோன்றினாலும், அவள் பரிவுடன் தான் பேசினாள்.

இவன் புறம் அமைதி.

நல்லா இருக்கியா கண்ணன்.

கண்கள் பனித்தன. வாய் உலர்ந்தது அவனுக்கு. அந்த நான்கு ஆண்டு அவளுடைய நினைவுகள் வந்து வறுத்தெடுத்தன அவனை. தியானம் யோகம் செய்த ஒருவாரம் டைம் மிஷினில் ரீவொயிண்ட் செய்தது போல வீணாக போனது. குரலை சீர்படுத்திக் கொண்டு பேசினான்.

கல்யாணம் ஆகலை சித்ரா. ஆனா நல்லா இருக்கப்போறேன் என்றான்.

என்ன இது விசித்திரமான பதில்.

நேர்ல பாக்கும் போது சொல்றேன் என்றான்.

அவளுக்கோ இவன் வீட்டில் வந்து பழைய கதை பேசக்கூடாதே என்ற பயம் வந்தது. ஆனால் அப்படி பேசும் ஆள் இல்லை என்பதும் அவளுடைய மூளை சொன்னது.

அவசியம் வா கண்ணன். எனக்கும் உன்னை பார்த்து ரொம்ப நாளாச்சு. வர்ற சனிக்கிழமை ஆகாஷை வீட்டில் இருக்கச் சொல்றேன். லஞ்சுக்கு வா. அதாவது லஞ்சுக்கு முன்னாடியே வா, பேசிகிட்டு இருந்துட்டு சாப்பிட்டு போகலாம் என்றான்.

ஹா. மறக்காம உன்னோட ஸ்பெஷல் ராஜ்மா சாவல் பண்ணிடு என்றான்.

http://www.bevegetarian.com/blog/wp-content/uploads/2007/02/rajma.gif

ஹா ஹா. ஆஃப் கோர்ஸ் என்று இணைப்பை துண்டித்தாள்.

அவன் மனம் லேசடைந்தது. என்ன பேசவேண்டும், என்ன செய்ய வேண்டும் என்று மீண்டும் மனத்திரையில் ஓட்டினான். இழந்த ஒரு வார யோகம், தியானத்தின் பலன் மீண்டும் வந்தது. ரெட் புல் குடித்தது போல உயிர்த்தெழுந்தான்.
http://www.zefrank.com/theshow/gallery/d/15206-1/red+bull.jpg

அக்னி
02-08-2007, 10:01 PM
கதை 15 அத்தியாயங்கள் தாண்டியும் கதையின் விறுவிறுப்பும் குறையவில்லை...
எமது எதிர்பார்ப்பும் குறையவில்லை...
உங்கள் எழுத்துத் திறமை அமோக வரம்...
தொடருங்கள்...
வாழ்த்துக்கள்...

அன்புரசிகன்
03-08-2007, 07:12 AM
மீண்டும் மீண்டும் நிரூபித்துவிட்டீர்கள். அக்னி கூறியது போல் இன்னமும் விறுவிறுப்புக்குறையவில்லை...

தொடருங்கள்.

leomohan
03-08-2007, 09:56 AM
நன்றி அக்னி, அன்புரசிகன் அவர்களே.

leomohan
03-08-2007, 03:55 PM
16
சனிக்கிழமை காலையில் சித்ராவின் வீட்டுக்கு ஒரு பூங்கொத்து, இரண்டு பெரிய பார்பி பொம்மைகளுடன் இனிப்பு பெட்டியுடன் சென்றடைந்தான் கண்ணன்.

அன்புடன் வரவேற்றனரர் சித்ராவும் அவளுடைய கணவனும். சித்ரா அன்று முழுவதும் அவனுடைய கண்களை நேராக சந்திக்க முடியாமல் தவித்தாள்.

ஆகாஷ் 6 அடிக்கு மேல் உயரம். மாநிறமாக இருந்தாலும் நல்ல ஸ்மார்ட்டாக இருந்தான் சித்ராவின் அருகில் அமர்ந்து அவளுடைய கைகளை தன் கையில் வைத்துக் கொண்டே பேசினான் காமத்தினால் பிடிப்பதல்ல கைகள். அது ஒரு ஆறுதல். அவள் அருகில் இருக்கிறாள் எனும் ஆறதல். அவள் மேல் அவன் கொண்ட காதலின் அடையாளம். அவள் அருகிலே இருக்க வேண்டும் எனும் ஆவல். இரண்டு குழந்தைகளுக்கு பிறகும் அவள் மேல் மிகுந்த அன்பாக இருந்தார்.

காதலின் அடையாளமாக இரண்டு அழகான குழந்தைகள். ஒன்றை மடியில் வைத்துக் கொஞ்சிக் கொண்டே, சித்ரா நீ பண்ண குற்றத்திற்கு உன்னை ஜெயிலில் போடனும் என்றான் சட்டென்று.

ஆகாஷ் புரியாமல் பார்த்தார். சித்ராவிற்கு கண்களில் கலக்கம் தெரிந்தது.

ஏன் என்றாள் நடுக்கத்துடன்.

பின்னே என்ன. க்ளானிங் மனுஷங்க மேல பண்ணக்கூடாதுன்னு சட்டம் இருந்தும் இரண்டு குழந்தைகளும் உன்னை போலவே அச்சு வார்த்து வச்சிருக்கியே என்றான்

ஹா ஹா வென்று அனைவரும் சிரித்து மகிழ்ந்து சூழ்நிலையை லேசாக்கினர்.

பிறகு கல்லூரி காலத்து நண்பர்கள், அவர்களுடைய வாழ்கை, வேலை, குடும்பம் என்று அனைவரும் பேசி தீர்த்தினர்.

ஆகாஷ், சித்ரா காலேஜ்ல செம குண்டு தெரியுமா

ஓஹோ அப்படியா பயங்கரமா என்னை ஏமாத்திட்டியா என்றான் ஆகாஷ் கிண்டலாக

ஐயோ கண்ணன் பழைய குப்பைகளை கிளரவேண்டாம் என்றாள் சங்கடமாக நெளிந்து. அவள் சொன்னதில் நம் காதல் கதையும் சேர்த்து தான் என்று சொல்லாமல் சொன்னாள்.

பிறகு உணவு பரிமாறப்பட்டது. பிறகு அவனுக்கு பிடித்த பின்னகோலாடோ ஐஸ் க்ரீமும் வந்தது. அவனுக்கு பிடித்த உணவு வகைகளை நினைவில் கொண்டு சமைத்திருந்தாள்.

அப்பா எப்படி இவ்வளவு சூப்பரா சமைக்க கத்துக்கிட்டே.

ஓஹோ, கண்ணன், ஆகாஷ் ஒரு சாப்பாட்டு பிரியர். என் கையால தான் சாப்பிடுவாரு. வெளியூருக்கு போனால் கூட நான் கூடவே வரணும் அவருக்கு.

ஏய், சீ அது சாப்பாட்டுக்கு மட்டும் இல்லை டார்லிங்க். உன்னை விட்டு இருக்க முடியாதுன்னு தான் என்றான் ஆகாஷ் செல்லமாக.

அப்ப நீ கல்யாணத்துக்கு அப்புறம் வேலைக்கு போகலியா என்று கேட்டான் அதிர்ச்சியுடன். ஏனென்றால் சித்ரா ஒரு காரியர் ஒரியண்டட் பெண்ணாக இருந்தாள். வருடதிற்கு ஒரு குழந்தை, வீடு சமையல் என்றெல்லாம் அவள் பேசுவதே அவனுக்கு வியப்பாக இருந்தது. ஏய் நீ ஒரு ஐஐடி ஐஐம் என்ன இப்படி என்று கேட்க தோன்றியது.

ஹா ஹா வேலையா. இந்த பிஞ்சு குழந்தைகளோட கண்களை பார்த்தா உலகமே மறுந்து போயிடுது. அவங்களோட இருந்து அவங்க செய்யற சேஷ்டைகளை பாக்கறது ஒரு பெரிய சுகம் கண்ணன் என்றாள் முற்றிலும் மாறிய ஒரு பெண்ணாய்.

அவளுடைய முதல் பெண் மெதுவாக அவனிடம் வந்து அங்கிள் இந்தா போட்டுக்கோ என்று தன்னுடைய முத்துமாலையை அவனிடம் தந்தது.

ஓ சோ ஸ்வீட் என்று வாங்கிக் கொண்டு, மீண்டும் சித்ராவிடமே திருப்பி தந்தான்.

கண்ணன், நீ அதை வைச்சிக்கோ. இதுதான் என் குட்டி ராணி உனக்கு கொடுத்த கிஃப்டு என்றான்.

என்ன அழகான பெண். பேசாம 18 வருஷம் வெயிட் பண்ணட்டுமா என்றான் ஹாஸ்யமாக.

உன் குறும்பு இன்னும் மாறவில்லை கண்ணன். அப்ப நான் என்ன உனக்கு மாமியாரா என்றாள் சித்ரா.

மகிழ்ச்சியான குடும்பம். அன்பான குடும்பம். அந்த குடும்பத்தில் அவனுக்கு எங்கும் இடமில்லை. சித்ரா அவனை நேரிடியாக கண்களில் பார்த்தாள் கடைசியாக. அதில் காதல் இல்லை, தன்னை ஏமாற்றியவள் தானே இவள் என்று கோபம் இல்லை, துரோகி எனும் நெருப்பு இல்லை. அவள் சகஜமானாள். அவன் லேசானான்.

ஆகாஷின் காதல், அன்பு, பாசம் அவளை உலகத்தையே மறக்கச் செய்திருந்தது. இருக்கட்டும் சந்தோஷமாக இருக்கட்டும். என் மனதில் வராமல் இருக்கட்டும் என்று நினைத்துக் கொண்டான்.

அனைவரிடமும் விடை பெற்றுக் கொண்டான்.

கண்ணன், நேரம் கிடைக்கும் போது வந்துட்டு போங்க, நீங்க வந்துட்டு போனதுல்ல நேரம் போனதே தெரியலை. நல்லா பேசறீங்க. குழந்தைகளும் தே ஹாட் அ குட் டைம் என்றான் ஆகாஷ்.

அவனக்கும் நன்றி கூறி விடைபெற்றான். மனம் இலகானது. சந்தோஷத்தில் பறந்தது. ஒரு பெரிய பாரம் விலகியது போல் இருந்தது. தலை முடி வெட்டி வந்தது போல் சுகமாக இருந்தது. நமக்கு முன் நான்கு பேர் இருந்து நம்மை தவிக்கவிட்டு பிறகு கன்வீனியன்ஸ் அறைக்குள் நுழைந்தது வந்தது போல் இருந்தது. வாய் புண்போது நாக்கால் அந்த புண்ணை சீண்டியது போல் ஒரு கிளர்ச்சி இருந்தது. ரெட் புல் குடித்தது போல் அல்ல அதில் குளித்து போல் இருந்தது.

leomohan
03-08-2007, 04:16 PM
17

அன்று அலவலத்தில் உற்சாகமாக இருந்தான் கண்ணன். மதிய உணவு இடைவெளியில் மாலதியை சந்திப்பதை தவிர்த்தான்.

அவள் அவனுடைய அறையில் ஏற்பட்ட மாற்றத்தை கண்டிருந்தாள். அவனுடைய முகத்தில் ஏற்பட்ட மாற்றத்தையும் கண்டிருந்தாள். அவனை காணாத அந்த மதிய இடைவெளியையும் அவள் தூரத்திலிருந்து ரசித்தாள்.

மாலையில் அலுவலக வாசலிலேயே அவளை பிடித்து இழுத்து காரில் ஏற்றிக் கொண்டான்.

ஏய் என்ன என்னை கிட்நாப் பண்றியா என்றாள் அவள்.

ஆமா என்றான்

எங்கே போறோம்

என் வீட்டுக்கு

அந்த போரிங்க கறுப்பு வெள்ளை பட்டினத்தார் மாளிகைக்கா

ம் உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப அதிகம் தான். வந்து பாரு இப்போ

வாசல் கதவு நிறம் மாறியிருந்தது. கதவை திறந்தவளின் கண்களால் நம்ப முடியாது அளவிற்கு அந்த சிறிய பஃளாட் சொர்க்கமாக மாறியிருந்தது. நிறங்களின் சிதறல்கள், புதிய பார்த்திராத வண்ணங்கள், வாசனையின் சீறல்கள், தூரிகையின் கீறல்கள், விளக்குகளின் கோடுகள், வெளிச்சங்களின் ஊடல்கள் என்று அவளை இனம் புரியாத ஒரு உணர்ச்சிக்கு தள்ளியது.

மாலதி, என் லைப்பில் கலர் கொண்டு வந்த சின்னப் பெண்ணே, சித்ரா இஸ் அவுட் அன்ட் யூ ஆர் இன். பெர்மனெட்லி. அவளுடைய போட்டோஸ், லெட்டர்ஸ், அவ கொடுத்த பரிசு பொருட்கள் எல்லாத்தையும் அளிச்சிட்டேன். அது மட்டுமில்லை நேத்து போய் அவளை பார்த்தேன்.

என்ன நேத்து போயி அவளை பார்த்தீங்களா என்றாள் குழப்பமாக.

ஆமா. அவள் கோடம்பாக்கத்தில் தான் இருக்கிறாள்.

அழகான குடும்பம், அன்பான கணவன். நாங்க பழைய கதை எதுவும் பேசலை. ஆனால், அவ மனசுல எனக்கோ என் மனசுல அவளுக்கோ எந்த இடமும் இல்லைங்கறது போனதுக்கு பிறகு தான் தெரிஞ்சது. மனசு லேசாயிடுத்து.

ஏய் இத்தனை நாள் பாக்காம இருந்தே அவளை நினைச்சிகிட்டு இருந்தீங்க. இப்ப பார்த்துட்டு வேற வந்துட்டீங்களா, காரியம் உருப்பட்ட மாதிரி தான் என்றாள் சலிப்புடன்.

முட்டாள் பெண்ணே. நான் அவளை இத்தனை வருஷம் பாக்காம இருந்துது தான் தப்பு. கடைசியா என்னை விட்டுப்போன காதலியா தான் என் மனசுல அவ சுத்திகிட்டு இருந்தா. ஆனா ஒரு குடும்ப பெண், குடும்ப தலைவி, இரண்டு பெண்களின் தாயார் இப்படி பார்த்த பிறகு தான் என் மனசுக்கு ஆறுதல் ஆச்சு.

அவ இன்னும் அழகா இருக்காளா

பக்கத்து வீட்டு ஆன்ட்டி அழகா இருந்தா என்ன இல்லாட்டி நமக்கென்ன. நம்மை பத்தி பேசுவோம் வா என்று அவளை படுக்கை அறைக்கு அழைத்து சென்றான்.

படு என்றான்

ஏய் என்ன அசிங்கமா பேசறே

லூசு, நான் என்ன நாசரோ இல்லை மன்சூர்அலிகானா உன்னை ரேப் பண்ண மாட்டேன். படு. இந்த பெட்ல யாரும் இதுவரை படுக்கலை. சோ உனக்கும் பெட்டுக்கும் இதுதான் பர்ஸ்ட் ஆபேர் போதுமா.

அவள் மெதுவாக சிரித்துவிட்டு படுத்தாள்.

கண்ணை மூடிக்கோ

ஏய் ஏதாவது வம்பு பண்றதா இருந்தா சொல்லிடு. நான் இன்னும் உன் பிரபோஸலை ஏத்துக்கலை. அதனால் கிஸ்-விஸ் பண்ணி குழப்பிடாதே

ஓஹோ க்ளியூபாட்ரா. சினிமா பாத்து நல்லா கெட்டுப் போயிருக்கே. கண்ணை மூடு

அவள் கண்களை தனது வலது கையால் மூடிக்கொண்டே விளக்கை அணைத்தான்.

பிறகு தன் கைகளை மெதுவாக எடுத்தப்படியே, மேலே பாரு என்றான்.

அவள் பிரமிப்பில் ஆழ்ந்தாள்.

ரேடியம் பயன்படுத்தி மேற்கூரையில் நட்சத்திரங்கள், கோள்கள், நிலா என்று ஒரு வானவெளியை வீட்டினுள் கொண்டு வந்திருந்தார் பரணி. பகலில் வெளிச்சை எடுத்து இரவில் காட்டும் அற்புதமான காட்சி.

அவள் பல நூறு மாடி கட்டிடத்தின் மேல் உட்கார்ந்து ஆகாயத்தை பார்ப்பது போல் உணர்ந்தாள். மனம் இனம்புரியாத இன்பத்தை அடைந்திருந்தது.

மெதுவாக அவள் அருகில் படுத்து அவளுடைய வலது கையை எடுத்து மேலே பாரு அந்த இரண்டு நட்சத்திரம் தெரியுதா. அதில் ஒரு நட்சத்திரம் நான் இன்னொன்னு நீ. அதோ அந்த ஆண் நட்சத்திரம் அந்த பெண் நட்சத்திரம் மேல் பைத்தியமாதிரி காதலிக்கு தான். ஆனா அந்த பெண் நட்சத்திரம் அவனை பாடாய் படுத்து தாம் என்று சொல்லி எழுந்து அமர்ந்தான்.


அவள் மெதுவாக அவனருகில் வந்து அமர்ந்தாள். அவன் வலது கையை எடுத்து வைத்துக் கொண்டாள், அந்த நட்சத்திரமும் அவனை பைத்தியமாதிரி தான் லவ் பண்ணுதாம். இந்த வானத்துல ரொம்ப சூட்டை கிளப்பிகிட்டு இருந்த அந்த சூரியன் இல்லைன்னு தெரிஞ்சதும் அந்த நட்சத்திரதுக்கு டான்ஸ் ஆடனும் போல இருக்காம் என்றான்.

ஓ தாராளமா என்று சட்டென்று ஹாலில் நுழைந்து ஒரு மென்மையான பாடலின் சிடியை நுழைத்து தட்டி விட்டான்.

மென்மையான இருவர் மென்மையான அந்த பாடலின் பின்னனியில் தாங்கள் மட்டும் தான் உலகம் என்பது போல் ஆடினார்கள். அங்கு பல கடினங்களுக்கு பிறகு ஒரு காதல் முதல் முறையாக இன்னொரு காதலை ஏற்றிருந்தது.

leomohan
03-08-2007, 04:34 PM
18
மறு நாள் மதிய உணவு இடைவெளியில் கண்ணன் சொன்னான்.

மாலதி, நான் வீட்ல பேசிட்டேன். நிச்சயதார்த்ததிற்கு நல்ல நாளு பாக்க சொல்லிட்டேன்.

பார்த்தாச்சு. அடுத்த வியாழக்கிழமை. எங்க வீட்டிலேயும் பேசிட்டேன்.

வாவ். பலே. என்று அவள் தலையை தட்டினான். இது தான் நல்ல காரியதரிசிக்கு அழகு. பாஸ் நினைக்கிற காரியத்தையும் செஞ்சிமுடிக்கிறது.

ஹலோ வீட்ல நான் தான் பாஸ் என்றாள்.

சரி பாஸ் சரி. நாம் செய்ய வேண்டிய காரியம் இன்னொன்னு இருக்கு. நானும் நீயும் சேர்ந்து சித்ராவீட்டுக்கு போயிட்டு வந்துடலாம். அவளை இன்வைட்டும் பண்ணிடலாம். உன் குடும்பம், என் குடும்பம், சில க்ளோஸ் நண்பர்கள். போதும் இல்லையா என்றான்.

சரி. ஆனா அவளை ஏன் போய் பாக்கனும்.

என்னை கல்யாணம் பண்ணிக்கிற மிஸ் சென்னை காட்டி வர வேண்டாமா என்றான்.

சரி, சாயங்காலம் ஸ்ரீநிவாஸா சில்க்ஸ் போயிட்டு அவளை போய் பார்க்கலாம். நிச்சயதார்ததிற்கு புடவை எடுக்கனும்.

ஓகே என்றான்.

மாலையில் புடவைகளை வழக்கம்போல படித்த பெண்களும் படிக்காத பெண்களும் பணக்கார பெண்களும் ஏழை பெண்களும் கடைகளில் அடித்து துவைப்பது போல் அவளும் துவைத்துக் கொண்டிருந்தாள்.

என்னம்மா இன்னும் எத்தனை நேரம்.

என்ன கலர் எடுக்கறதுன்னே தெரியலை பா என்றாள் குழப்பத்துடன்.

நீலம் எடு. எனக்கு பிடிச்ச கலர்

ஓகே என்று கடைசியாக வாங்கி முடித்தாள்.

நேராக வண்டியை சித்ராவின் வீட்டின் முன் நிறுத்தினான்.

சித்ராவுக்கு தன் வருங்கால மனைவியை அறிமுகப்படுத்தினான்.

சித்ரா கண்களால் இவனை பார்த்து நம்ம கதை தெரியுமா என்பது போல் கேட்டாள். இல்லை என்றான். சித்ரா உள்ளே சென்று பலகாரம் எடுத்துக் கொண்டிருந்தபோது, உங்க கதை எனக்கு தெரியும்னு இவங்களுக்கு தெரியுமா என்று கேட்டாள் மாலதி, இல்லை என்றான். பெண்கள்.

கண்ணன், அருமையான தேர்வு தான். மாலதி, கண்ணனை எனக்கு ரொம்ப வருஷமா தெரியும். ஹி இஸ் அ ஜெம். நீங்களும் மிகவும் அதிர்ஷ்டசாலிதான் என்றாள்.

மெதுவாக சிரித்துவிட்டு எனக்கு தெரியும் என்று சொல்லிக் கொண்டாள்.

ஏய் நீ நிச்சியத்திற்கு வாங்கிய புடவை காட்டலாமே என்று கண்ணன் மாலதியிடம் சொல்ல அவளும் பெட்டியை திறந்து காட்டினாள்.

வாவ். அருமையான செலெக்ஷன் மாலதி. எனக்கு ரொம்ப பிடிச்ச கலர் ப்ளூ என்றாள் சித்ரா. ஆல் த பெஸ்ட் என்று வாழ்த்தி வழியனுப்பினாள்.

காரில் வந்து உட்கார்ந்த மாலதி, இந்த நிச்சயம் கான்ஸல் என்றாள்.

என்ன

ஆமா இந்த கல்யாணம் நடக்காது

என்னாச்சு உனக்கு. பைத்தியமா

பைத்தியம் இல்லை. முட்டாள்

நீங்க என்ன சொன்னீங்க. உங்களுக்கு பிடிச்ச கலர் ப்ளூன்னு. அவளுக்கு தான் ப்ளூ பிடிச்சிருக்கு.

அதனால

அதனால என்ன. அவளக்கு பிடிச்சது தான் உங்களுக்கு பிடிச்சிருக்கு. இன்னும் உங்க மனசுலேர்ந்து அவ போகலை

என்ன முட்டாளு மாதிரி பேச டார்லிங்க. மை என்டயர் ஹார்ட் இஸ் ரிஸவர்ட் ஃபார் யூ.

வேண்டாம் கண்ணன். உனக்கும் எனக்கும் நடுவில சித்ரா வந்தா நான் என்னை விபச்சாரியாக நினைக்கத் தோன்றும்.

இடியட் என்று கத்திக் கொண்ட இடக்கையால் அவளை ஓங்கி அறைவது போல சென்று நிறுத்திக் கொண்டான். ஓங்கி வண்டியின் ஹார்னை அழுத்தினான்.

அமரன்
03-08-2007, 04:45 PM
முட்டாள் பெண்ணே. நான் அவளை இத்தனை வருஷம் பாக்காம இருந்துது தான் தப்பு. கடைசியா என்னை விட்டுப்போன காதலியா தான் என் மனசுல அவ சுத்திகிட்டு இருந்தா. ஆனா ஒரு குடும்ப பெண், குடும்ப தலைவி, இரண்டு பெண்களின் தாயார் இப்படி பார்த்த பிறகு தான் என் மனசுக்கு ஆறுதல் ஆச்சு.

புதிய சிந்தனை. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நடையில் அமைந்த கதை. பாராட்டுக்கள். (ஆமா பரணி யாருங்க)

leomohan
03-08-2007, 09:18 PM
புதிய சிந்தனை. எதிர்பார்ப்பை அதிகரிக்கும் நடையில் அமைந்த கதை. பாராட்டுக்கள். (ஆமா பரணி யாருங்க) பரணி வீட்டை மாற்றி அமைத்து தந்த Interior Decorator

அன்புரசிகன்
03-08-2007, 09:28 PM
இன்னும் எதிர்பார்ப்பைத்தூண்டிக்கிட்டே போகிறது. ...

தொடருங்கள் மோகன்..


(ஆமா பரணி யாருங்க)

உங்கள் கேள்விக்கான பதில் இதோ...


12

கம்பெனியில வீடு கொடுத்திருக்காங்க. இன்டிரீயர் டிசைன் பண்றதுக்கும் 2 லட்சம் பணம் கொடுத்திருக்காங்க. அட பணமா கொடுங்கடான்னு சொன்னா இல்லை செலவு செஞ்சி அதுக்கான பில் கொடுத்தா தான் தருவோம்னு சொல்லிட்டாங்க. அதனால வீட்டை டிசைன் பண்ணலாம்னு உங்களை பாத்துட்டு போகலாம்னு வந்தேன்.

ஓ. சூப்பர் ஆளு இருக்காரு, டேய் வேலு, அந்த பரணி சாருக்கு போன் போடு. உங்க அட்ரெஸ் கொடுங்க சாயங்கலாம் 7 மணிக்கு உங்க வீட்ல இருப்பாரு
------------
அவர் கொடுத்த காபியை குடித்துவிட்டு அவருக்கு நன்றி சொல்லி விடைபெற்றான்.

சரியாக ஏழு மணிக்கு பரணி உள்ளே நுழைந்தார். பல பிரபலமான படங்களில் கலை வேலைகள் புரிந்து பலருடைய வாழ்த்துக்களையும் பெற்றவர். எளிமையான மனிதர்.
------------
அட தாங்கஸெல்லாம் எதுக்கு. கலைவாணன் சாருக்காக நாங்க என்ன வேண்டுமானாலும் செய்வோம். சினிமாவுக்கு பண்றது வேஸ்டு சார்.

அக்னி
03-08-2007, 09:29 PM
அற்புதமாக இருக்கிறது...
நான் கனவில் காணும் எனது படுக்கையறையை, கதையில் கொண்டுவந்துவிட்டீர்கள்...
1996 இல் என்று நினைக்கின்றேன்...
Colombo இல் Planetarium Theatre போனதிலிருந்து, மனதில் பதிந்துவிட்ட,
அழகிய கனவுக்கூரை...

தொடருங்கள்... பாராட்டுக்கள்...

leomohan
03-08-2007, 09:59 PM
19
அவஸ்தையான நேரம். கோடம்பாக்கம் பாலத்தில் போக்குவரத்து நெரிசலில் சிக்க வண்டியை நிறுத்த வேண்டி வந்தது.
சட்டென்று கதவுகளை திறந்து இறங்க முற்பட்டாள் மாலதி.
கதவுகளையும் கண்ணாடி ஜன்னல்களையும் சென்டரல் லாக் செய்து நிறுத்தினான் அவளை.

பேசாம உட்காரு

என்ன இறக்கிவிடுங்க நான் ஆட்டோ எடுத்து போயிக்கிறேன்.

பேசாம உட்காரு.....

சரி. என்னை வீட்ல விடுங்க

அவன் எதுவும் பேசவில்லை. பேசும் மனநிலையிலும் அவன் இல்லை. அவனுக்கு ஈகோ இல்லை அவளிடம் மீண்டும் பேசி சமாதானப்படுத்த. ஆனால் அவன் செய்ய விரும்பவில்லை. ஒவ்வொருமுறையும் அவளை சமாதானப்படுத்துவது காதலில் உடைந்த கண்ணாடியை பெவிகால் போட்டு ஒட்டி ஒன்றாக இருப்பது போல் செய்யும் முயற்சிக்கு சமமமாகும். அவன் அமைதியிலும் அவன் கோபம் தெரிந்தது.

அவளும் அமைதியாக இருந்தாள். அவள் மனதில் எந்த எண்ண ஓட்டங்களும் இல்லை. கோபம் இல்லை. சற்றே ஏமாற்றம் இருந்தது. சித்ராவின் அளவுக்கு அவன் மீது தன்னால் பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லையே என்ற வருத்தம் இருந்தது. அவள் ஈகோ அவளை துளைத்தது. நீல நிறம். சே. இன்று அவள் வீட்டிற்கு போகாமலேயே இருந்திருக்கலாம். அவளை பார்க்காமலேயே இருந்திருக்கலாம். அவளுக்கு நீலம் நிறம் பிடிக்கும் என்ற விஷயம் எனக்கு தெரியாமலேயே இருந்திருக்கலாம். எல்லாம் கண்ணனால் வந்தது. எதுக்காக அவன் என்னை அவள் வீட்டுக்கு அழைச்சிகிட்டு போயிருக்கனும். எல்லாம் அவன் தப்பு. அவன் தப்பு தான். இப்போது பேசி பிரயோஜனமில்லை. இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டியது தான்.

நெரிசல் சீராக 15 நிமிடத்தில் வீட்டை வந்து அடைந்தனர்.

என்னை எங்க வீட்ல டிராப் பண்ணச் சொன்னேன்.

பேசாம வா

அவள் அமைதியாக அவனை பின் தொடர்ந்தாள்.

ஹாலில் உள்ள சோபாவில் அவள் அமர்ந்தாள். வீட்டை சுற்றிப் பார்த்தாள், அவர்களுடைய புதிய வாழ்கைக்காக மீண்டும் வடிவமைக்கப்பட்ட வீடு. அழகாக இருந்தது. அவளுடைய சிறிய புகைப்படத்தை தன் உணவு மேசை மீது வைத்திருந்தான்.

அவளை உட்கார வைத்துவிட்டு அவன் புத்தக அலமாரியை திறந்து எதையோ தேடினான். கோபமாக அவனுக்கு கிடைக்காத புத்தகங்களை எடுத்து வீசினான். பிறகு கிடைத்தது அவன் தேடிய அவன் பள்ளிப் பருவத்து ஆண்டு மலர் புத்தகம். அவனுடைய பதினோராவது வகுப்பில் பள்ளியின் சிறந்த மாணவனாக அவனை தேர்ந்தெடுத்திருந்தார்கள். அந்த வருட ஆண்டு மலரில் அவனுடைய பேட்டியும் வெளியாகி இருந்தது.

அதை எடுத்துக் கொண்டு, தான் அவளிடம் காட்ட வேண்டிய பக்கத்தை திறந்து அவள் முகத்தின் முன் நீட்டினான்.

இதப்பாரு மாலதி, இது தான் என்னுடைய கடைசி முயற்சி உன் மேல் நான் வச்சிருக்கற அன்பையும் காதலையும் புரிய வைக்கறதுக்கு. இதுக்கும் நீ சமாதானம் ஆகலைன்னா நீ உன் வழி நான் என் வழி. நாளைக்கே வேலையை ராஜினாமா செய்துட்டு வேற வேலை தேடிக்கிறேன். நீ யாரை வேண்டுமானாலும் கல்யாணம் பண்ணிக்கோ. ஆனால் ஒன்னு இன்னிக்கு நீ சமாதானம் ஆயிட்டா இனிமே சித்ராவை பத்தி பேசவே கூடாது. குறிப்பா நீ சாவற வரையிலும் என்னோட இருப்பேன்னு சொன்னா இதை காண்பிக்கறேன் என்று விரலை பக்கத்தின் நடுவில் வைத்து அவள் கண்களுக்கு நேராக நீட்டினான்.

ஆண்டு மலரில் அவனுடைய பேட்டி பதிவாகி இருந்தது. அவனுடைய புகைப்படம், அவனுக்கு பிடித்த பொருட்கள், நடிகர், நடிகை, பாடம், நாடு, நிறம், உணவு என்று எல்லாம். அதில் நிறத்திற்கு எதிராக நீலம் என்று இருந்தது.

பாரு மாலதி, இது என்னோட 11th ஸ்டான்டர்ட் ஸ்கூல் புக். அந்த நேரத்துல சித்ராவோ பத்ராவோ வேறு யாருமே இல்லை. எந்த ஆணியும் என் மனசுல இல்லை. இதை நீ புரிஞ்சிக்கறதும் ஏத்துக்கறதும் உன் இஷ்டம். ஆனா ஒன்னு இதை நீ ஏத்துக்கிட்டா கடைசி வரையிலும் என்னை விட்டு போகமாட்டேன் சத்தியம் பண்ணித் தரணும். இல்லைன்னா நம்ம கல்யாணமே வேண்டாம் என்று கோபமாக சொல்லிவிட்டு அப்ஸல்யூட் வோட்காவை திறந்து ஒரு கோப்பையில் ஊற்றி உணவு மேசைக்கு அருகில் சென்றமர்ந்து குடிக்க துவங்கினான்.

http://www.barnonedrinks.com/press/images/absolutpears.jpg
அவள் மெதுவாக அந்த புத்தகத்தை கையில் எடுத்துப்பார்த்தாள். சித்ரா அவன் வாழ்வில் ஐஐடி மத்தியில் தான் நுழைந்தாள். அவனுக்கும் அவளுக்கும் நீல நிறம் பிடித்திருந்தது ஒரு கோஇன்ஸிடென்ட்.

மெதுவாக அவனருகில் சென்று அமர்ந்தாள். அவன் அமைதியாக சுவற்றை பார்த்த வண்ணம் குடித்துக் கொண்டிருந்தான். அவள் முன் அவன் குடித்ததே இல்லை. பெரும்பான்மையான பானங்கள் வெறும் அழகக்கு மட்டுமே வைத்திருந்தான். அல்லது வருபவர்களுக்கு தர மட்டுமே. அலுவலக பார்ட்டியிலும் சற்றே அருந்துவான். அவன் இன்று குடிப்பது அவளுக்கு வியப்பாக இருந்தது. அதற்கு தானும் காரணமோ என்ற குற்ற உணர்வும் இருந்தது.

மெதுவாக அவனது வலது கையை பிரித்து அதில் தன்னுடைய வலது உள்ளங்கையை பதித்து ஐ பிராமிஸ் என்றாள்.

அவன் அவளை திரும்பி நோராக கண்களில் பார்த்தான். அந்த கண்களில் உண்மை இருந்தது. தெளிவு இருந்தது. மன்னிப்பு கோரும் கெஞ்சல் இருந்தது.

அவனை எழுப்பி நிற்க வைத்து அவனை இறுக அணைத்தாள் மாலதி. கார்க் உடைந்த பீயர் பாட்டிலை போல காதல் பெருக்கெடுத்து ஓடியது அங்கு. சந்தேகம், பயம், பாதுகாப்பின்மை, பொஸஸிவ்நெஸ் போன்ற கார்க்குகள் உடைந்த காதல் வாயு அதிவேகத்துடன் வெளியேறியது. அந்த அணைப்பு இன்னும் இறுகியது. அவனுக்கு மூச்சு முட்டும் போலிருந்தது. அவள் எதுவும் பேசவில்லை. மன்னிப்பு கேட்கவில்லை. மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியம் இல்லை. காதலில் இருவருக்கும் ஒருவருக்கு ஒருவர் பல்வேறு உறுதியளிப்பதும் நம்பிக்கை அளிப்பதும் கடமையாகிவிடுகிறது. அவன் அவனுடைய கடமையை செய்துவிட்டான். அவள் அவளுடைய கடமையை செய்துக் கொண்டிருந்தாள். அப்பழுக்கில்லாத அணைகள் இல்லாத அன்பை அள்ளித் தந்துக் கொண்டிருந்தாள். பெயர்கள் அவர்கள் வாழ்கையிலிருந்து மறைந்தன. கல்வி, அங்கீகாரம், அந்தஸ்து, ஊர், பெயர், சித்ரா, ஆகாஷ், ப்ரீதா, ராஜாராம், சிஇஓ என்று அனைவரும் மறைந்து அந்த புதிய சொர்கத்தின் செயற்கையாக பரணியால் தோற்றுவிக்கப்பட்ட வான்வெளியில் இரண்டு நட்சத்திரங்கள் ஒன்று தானோ எனும் அளவிற்கு பின்னி பிணைந்து அன்பு எனும் பரிசுகளை அள்ளித் தந்துக் கொண்டிருந்தன.

காற்றுக்கு என்ன வேலி
கடலுக்கு என்ன மூடி
கங்கை வெள்ளம் கூண்டுக்குள்ளே அடங்கிவிடாது
மங்கை உள்ளம் துள்ளும் போது விலங்குகள் ஏது

பழைய பாடல் நிஜமாகி கொண்டிருந்தது.

முற்றும்.

leomohan
04-08-2007, 05:58 AM
நன்றி அக்னி, நன்றி அன்புரசிகன்.

மதி
04-08-2007, 06:25 AM
அற்புதம் கலக்கிட்டீங்க...
ஒரு எக்ஸ்பிரஸ் நாவலை படித்த அனுபவம்..

அன்புரசிகன்
04-08-2007, 06:29 AM
நேர்த்தியாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். அதற்குப்பாராட்டுக்கள். அடுத்து சரியான வளிமுறைகளைத்தேடி கதையை முடித்திருக்கிறீர்கள். அதற்கு இரட்டிப்புப்பாராட்டுக்கள்.

சூப்பர் கதைக்கு நன்றிகள் கோடி....
இன்னும் இருந்தால் எடுத்துவிடுங்கள்.

சிவா.ஜி
04-08-2007, 06:36 AM
கலக்கிட்டீங்க மோகன். சரளமான நடை,எதார்த்தமான உரையாடல்கள்,எடுத்துக்கொண்ட கதாப்பாதிரங்களின் இயல்பை எந்த விதத்திலும் மாற்றாமல் அவர்களுடைய குனாதியசங்களை கடைசிவரை கொண்டு சென்ற விதம் எல்லாமே அருமை. வெறும் காதல் கதை என்று சொல்ல முடியாத வகையில் அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த பூரணமான தொடர்.மிக ரசித்தேன்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மோகன்.

leomohan
04-08-2007, 06:42 AM
அற்புதம் கலக்கிட்டீங்க...
ஒரு எக்ஸ்பிரஸ் நாவலை படித்த அனுபவம்..

நன்றி மதி.

leomohan
04-08-2007, 06:42 AM
நேர்த்தியாக கதையை நகர்த்தியிருக்கிறீர்கள். அதற்குப்பாராட்டுக்கள். அடுத்து சரியான வளிமுறைகளைத்தேடி கதையை முடித்திருக்கிறீர்கள். அதற்கு இரட்டிப்புப்பாராட்டுக்கள்.

சூப்பர் கதைக்கு நன்றிகள் கோடி....
இன்னும் இருந்தால் எடுத்துவிடுங்கள்.

நன்றி அன்புரசிகன்.

leomohan
04-08-2007, 06:43 AM
கலக்கிட்டீங்க மோகன். சரளமான நடை,எதார்த்தமான உரையாடல்கள்,எடுத்துக்கொண்ட கதாப்பாதிரங்களின் இயல்பை எந்த விதத்திலும் மாற்றாமல் அவர்களுடைய குனாதியசங்களை கடைசிவரை கொண்டு சென்ற விதம் எல்லாமே அருமை. வெறும் காதல் கதை என்று சொல்ல முடியாத வகையில் அனைத்தும் சரியான விகிதத்தில் கலந்த பூரணமான தொடர்.மிக ரசித்தேன்.வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் மோகன்.

மிக்க நன்றி சிவா.

அன்புரசிகன்
04-08-2007, 06:51 AM
இனி எப்போது அடுத்த தொடர்கதை??? ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..

leomohan
04-08-2007, 07:11 AM
இனி எப்போது அடுத்த தொடர்கதை??? ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்..

நல்ல கரு கிடைத்தால் விரைவில். எந்த மாதிரி கதை வேண்டும் உங்களுக்கு.

இனியவள்
04-08-2007, 07:38 AM
வாழ்த்துக்கள் மோகன் அண்ணா..

நல்ல கதை முழுவதும் படித்து விட்டுப்
பின்னூட்டம் இடலாம் என்று இருந்தேன்

தொடர்ந்து எழுதுங்கள்...:nature-smiley-003:

leomohan
04-08-2007, 07:51 AM
நன்றி இனியவள்.

lolluvathiyar
04-08-2007, 08:24 AM
சூப்பர் மோகன் என்று ஒரு வார்த்தையால் சொன்னால் போதாது
சில நாள் இந்த கதை படிக்காமல் விட்டுவிட்டேன். தினமும் சிறிதுசிறிதாக படித்த வந்த இன்று ஒட்டுமொத்தமாக படித்து கதை முடிந்து விட்டது என்று சற்றே ஏமாற்றம் ஆனால் மாலதியை கன்னனையும் தொடர விட்டு விட்டீர்கள்.
உங்கள் எழுத்து நடை அருமை. மனங்களில் விளையாடி விட்டீர்கள்.

எனக்கு ஒரு சிறு ஆதங்கம்
உங்கள் கதையின் கதாபாத்திரங்கள், சூல்நிலைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மெத்த படித்த உயர் நிலையில் இருகிறார்கள்.
எங்களை போன்ற சற்றே மீடியம் சைஸ் மக்களின் வாழ்கையை யின் பழக்க வழக்கங்களையும் வைத்து இன்னொரு அருமையான காதல் கதை படைக்குமாரு கேட்டுகொள்கிறேன்.
நன்றி

leomohan
04-08-2007, 08:59 AM
சூப்பர் மோகன் என்று ஒரு வார்த்தையால் சொன்னால் போதாது
சில நாள் இந்த கதை படிக்காமல் விட்டுவிட்டேன். தினமும் சிறிதுசிறிதாக படித்த வந்த இன்று ஒட்டுமொத்தமாக படித்து கதை முடிந்து விட்டது என்று சற்றே ஏமாற்றம் ஆனால் மாலதியை கன்னனையும் தொடர விட்டு விட்டீர்கள்.
உங்கள் எழுத்து நடை அருமை. மனங்களில் விளையாடி விட்டீர்கள்.

எனக்கு ஒரு சிறு ஆதங்கம்
உங்கள் கதையின் கதாபாத்திரங்கள், சூல்நிலைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மெத்த படித்த உயர் நிலையில் இருகிறார்கள்.
எங்களை போன்ற சற்றே மீடியம் சைஸ் மக்களின் வாழ்கையை யின் பழக்க வழக்கங்களையும் வைத்து இன்னொரு அருமையான காதல் கதை படைக்குமாரு கேட்டுகொள்கிறேன்.
நன்றி

நன்றி வாத்தியார்.

எடுத்துக் கொண்ட கதையை கருதி அதுபோன்ற ஒரு பின்புலம் தேவைபட்டது. சராசரி மனிதனுக்கு வீட்டினுள் கனவுலம் சித்தரிக்க இயலாது அல்லவா.

ஆனாலும் இதற்கு முந்தைய கதைகளில் மெல்லக் கொல்வேன் - ஒரு சராசரி குடும்பத்தின் வாழ்கை பின்னனியாக, கறுப்பு வரலாறு - கல்லூரி மாணவர்களின் வாழ்கை, என் கைப்பிடித்தவன் - ஒரு நடுத்தர குடும்பத்து பெண்ணின் காதல் என்று பல தளங்களில் எழுத முயற்சிக்கிறேன்.

இந்த கதை இவ்வாறு அமைந்துவிட்டது. எதிர்காலத்தில் உங்கள் கருத்தை நினைவில் கொண்டு எழுதுகிறேன். மிக்க நன்றி

அன்புரசிகன்
04-08-2007, 09:02 AM
நல்ல கரு கிடைத்தால் விரைவில். எந்த மாதிரி கதை வேண்டும் உங்களுக்கு.

என்னமாதிரி என்றல்ல. நீங்கள் இப்போது தந்த கணிணி காதல் போல் விறுவிறுப்பான சுறுசுறுப்பான கதைகள் எனக்கு ரொம்ப பிடித்தவை...


உங்கள் கதையின் கதாபாத்திரங்கள், சூல்நிலைகள், பழக்க வழக்கங்கள் அனைத்தும் மெத்த படித்த உயர் நிலையில் இருகிறார்கள்.
எங்களை போன்ற சற்றே மீடியம் சைஸ் மக்களின் வாழ்கையை யின் பழக்க வழக்கங்களையும் வைத்து இன்னொரு அருமையான காதல் கதை படைக்குமாரு கேட்டுகொள்கிறேன்.
நன்றி

பிறகென்ன.. வாத்தியாரே ஒரு கரு தந்துள்ளார். இதனுடன் உங்கள் தனித்தன்மையையும் புகுத்தி ஒரு கதை.... முடிந்தால் நேரம் அமையும் போது தாருங்கள். காத்திருக்கிறேன்... இது இந்த ரசிகனின் அன்புக்கட்டளை...

leomohan
04-08-2007, 09:37 AM
கதை மிகவும் அருமை.. யாதார்த்தமான நடை.. வாழ்த்துக்கள்..

நன்றி வெண்தாமரை

அக்னி
04-08-2007, 01:03 PM
எனக்கு கதைப்புத்தகங்கள் வாசிப்பது என்றால், வாசித்து முடிக்கும்வரை, வேறு எதுவுமே ஒழுங்காக நடக்காது...
ஆனால், புலம்பெயர்ந்த பின் கதைப்புத்தகங்கள் கண்ணில்படுவதே அரிதாகிவிட்டது.
தமிழ்மன்றம் எனது ஏக்கத்தை நிவர்த்தி செய்தது...

தொடரை வாசிக்கும் போதெல்லாம்...
முடிவென்ன என்று ஒரு புறம் அலைபாயும் மனது...
முடிந்துவிடுமோ என்று ஏங்கும் மனது...
என்ற இரு நிலைகளிலும், மனதை இருத்திய எழுத்தாற்றால், உங்கள் கதைக்கு...
வாழ்த்துக்கள்...

பி.கு:−
நேரம் கிடைக்கையில், துப்பறியும் கதைகள், அல்லது திரில்லர்...
போன்று ஏதாவது ஒன்றும் எழுதுங்கள்...

leomohan
04-08-2007, 01:18 PM
நன்றி அக்னி.

அவசியம்.


இதற்கு முன் எழுதிய கடைசி பேட்டி, மெல்லக் கொல்வேன், கறுப்பு வரலாறு போன்ற புதினங்களை படித்தீர்களா. அனைத்தும் இம்மன்றத்தில் உள்ளன. படித்து கருத்திடுங்களேன். நன்றி.

அக்னி
04-08-2007, 03:48 PM
நன்றி அக்னி.

அவசியம்.


இதற்கு முன் எழுதிய கடைசி பேட்டி, மெல்லக் கொல்வேன், கறுப்பு வரலாறு போன்ற புதினங்களை படித்தீர்களா. அனைத்தும் இம்மன்றத்தில் உள்ளன. படித்து கருத்திடுங்களேன். நன்றி.

நிச்சயமாக மோகன்...
விடுமுறை நாட்கள் நெருங்குகின்றன...
மன்றத்தில் முக்குளிக்க வேண்டியதுதான்...

leomohan
08-08-2007, 06:50 AM
இந்த புதினத்தை மின்புத்தக வடிவில் இங்கு (http://mkmohan.etheni.com/KaniniKathal.pdf) காணலாம்.

kalaianpan
09-08-2007, 03:24 PM
மிஹவும் மிகவும் சுவையான கதை... தமிழ் மன்றத்திற்கு வந்து முதலாவதாக படித்தது... நன்றி.

leomohan
09-08-2007, 05:56 PM
மிஹவும் மிகவும் சுவையான கதை... தமிழ் மன்றத்திற்கு வந்து முதலாவதாக படித்தது... நன்றி.

நன்றி கலைஅன்பன். உங்களுக்கு நல்வரவு.

kalaianpan
09-08-2007, 06:11 PM
நான் முதலில் வாசித்தது உஙகளது கதை.
நான் ரெம்பவும் வருந்தினேன் .....
இப்படி ஒரு மன்றத்தை இதுவரை நெருங்காமல் இருந்ததற்காக....
ஆரம்பமே ஆசையைத்தூண்டியது......

உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்.

:icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b:

மனோஜ்
09-08-2007, 07:05 PM
மோகன் சார் கலக்கலா கலர் புல்லா கதைமுடித்ததற்கு நன்றிகள்
தொடர்ந்து நல்ல தொடர் கதைகளை தாருங்கள் எதிர்பார்புடன்...

SathishVijayaraghavan
14-08-2007, 12:26 PM
ஆரம்ப பகுதிகள் படிக்கையில் இன்னும் ஒரு இராஜகோபாலன் தோண்றபோகிரான் என்று நினைத்தேன்... ஆனால் இவன் வித்தியாசமானவன் என்று போகபோக தெரிந்து கொண்டேன்... நல்ல கதை... சுவாரசியமான சம்பங்கள்... பாரட்டுக்கள்...

leomohan
14-08-2007, 12:44 PM
நான் முதலில் வாசித்தது உஙகளது கதை.
நான் ரெம்பவும் வருந்தினேன் .....
இப்படி ஒரு மன்றத்தை இதுவரை நெருங்காமல் இருந்ததற்காக....
ஆரம்பமே ஆசையைத்தூண்டியது......

உங்கள் ஆக்கங்கள் தொடர வாழ்த்துக்கள்.

:icon_b: :icon_b: :icon_b: :icon_b: :icon_b:

இப்ப வந்சாச்சுல்ல புகுந்து விளையாடுங்க.

leomohan
14-08-2007, 12:45 PM
மோகன் சார் கலக்கலா கலர் புல்லா கதைமுடித்ததற்கு நன்றிகள்
தொடர்ந்து நல்ல தொடர் கதைகளை தாருங்கள் எதிர்பார்புடன்...

மனோஜ் உங்களுடைய கருத்தில்லாமல் என் கதை நிறைவேறாது. உங்கள் ஊக்கத்திற்கு என்றென்றும் கடன் பட்டிருக்கிறேன்.

leomohan
14-08-2007, 12:45 PM
ஆரம்ப பகுதிகள் படிக்கையில் இன்னும் ஒரு இராஜகோபாலன் தோண்றபோகிரான் என்று நினைத்தேன்... ஆனால் இவன் வித்தியாசமானவன் என்று போகபோக தெரிந்து கொண்டேன்... நல்ல கதை... சுவாரசியமான சம்பங்கள்... பாரட்டுக்கள்...

நன்றி சதீஷ். ராஜகோபலானை மறந்துவிட்டேன். அதனால் கவலை வேண்டாம். ஹா ஹா.

leomohan
27-11-2007, 05:45 AM
இந்த புதினத்தை மின்னூலாக ஏற்றியிருக்கிறேன் மின்னூல் பகுதியில் காணலாம்.

மேலும் இந்த தொடுப்பிலும் காணலாம் Http://www.esnips.com/web/leomohan