PDA

View Full Version : கவிதையான கணங்கள்ஷீ-நிசி
31-07-2007, 05:11 AM
ஒரே நிமிடத்தில்
உலகின் எல்லா
சந்தோஷங்களையும்
தந்திட முடியுமா??

முடியும்!!!!

ஒரே நிமிடத்தில்
உலகின் எல்லா
சந்தோஷங்களையும்
பெற்றிட முடியுமா??

முடியும்!!!

முதல் முறையாய்
அவள், அவனுடன்
அலைபேசியில்!!!

எட்டாமலே இருக்கும்
வட்ட நிலா -அன்று
சற்றே நட்சத்திரங்களின்
வனமிரங்கி வந்தது!

அவன் நிலைக்கண்டு -தன்
மனமிரங்கி வந்தது

நிலவின் ஒளியை
நீங்கள் அறிவீர்கள்!
நிலவின் ஒலியை
அவன் அறிவான்!

செவிவழியே சென்று!
மூளையை முட்டி,
இதயத்தில் இறங்கியது....

அவள் இதழ்வழி பிறந்த
ஒரு கோடி பட்டாம்பூச்சிகள்...

ஆயிரமாயிரம் மாற்றங்கள்
அந்த கணப்பொழுதில்!!!

அவன் இதயத்தை
திறந்து பாருங்கள்!!

நரம்புகளுக்கு பதிலாய்
இதயத்தில் எங்கெங்கும்
பூக்களின் மெல்லிய காம்புகள்!

வானவில்லை உருக்கி,
ஏழுவண்ணங்களில் பாய்ந்தன!
இரத்தம் முழுதும் புதிதாக!!
சிவப்பு நிறத்திற்கு பதிலாக...

குருதியில் ஓடுகின்ற
அந்த ஏழுவண்ணணுக்களை
சோதித்துப்பாருங்கள்...

உறுதியாய் சொல்கிறேன்!
ஒவ்வொன்றிலும்
அவள் பெயர்
பொறித்திருக்கும்!

மீண்டும்....
சந்திப்போமென்று சொல்லி
மீண்டும்....

எட்டாத உயரத்திற்கு
சிட்டாக சென்றது -அந்த
வட்ட நிலா!

நீலவானில் விழிகளை
நிலைநிறுத்தி.. நிலவின்
நினைவுகளை மீட்டெடுத்தான்...

அந்த ஒற்றைநிமிட
கிளியின் குரல் மட்டும்
இதயத்தின் ஓரத்தில் மீண்டும்
ஒலிக்க ஆரம்பித்தது!

ஷீ-நிசி

இளசு
31-07-2007, 05:16 AM
இல்பொருள் உவமைகளின் ஊர்வலம்..

நிலவின் குரல்
இதயத்தில் பூக்காம்புகள்
ஏழுவர்ண குருதிச் செல்கள்
எல்லாவற்றிலும் அவள் பெயர்..


ஒருத்தி குரலால் ஒரு கோடி வயலின் இசைக்கேட்கும்
ஒரு ரசாயனப் பிரளயம் செய்யும் விந்(த்)தை இது!

அதை எழுத்தில் வடிக்கும் ரசவாதி ஷி−நீசி!
எப்படிப் பாராட்டுவது எனத் தவிக்கிறேன் ஷி−நிசி!

(அங்கே காதல்காலப் பூங்காவில் இன்னும் பாராட்டுமழை... கவனித்தீர்களா?)

சிவா.ஜி
31-07-2007, 05:21 AM
எட்டாமலே இருக்கும்
வட்ட நிலா -அன்று
சற்றே நட்சத்திரங்களின்
வனமிரங்கி வந்தது!

அவன் நிலைக்கண்டு -தன்
மனமிரங்கி வந்தது

நிலவின் ஒளியை
நீங்கள் அறிவீர்கள்!
நிலவின் ஒலியை
அவன் அறிவான்!
ஷீ எங்கிருந்து பிடிக்கிறீர்கள் இந்த கந்தர்வ வார்த்தைகளை?

வனமிரங்கி−மனமிரங்கி
நிலவின் ஒளி−நிலவின் ஒலி

அசத்தலான சொற்பிரயோகங்கள்.
காதல் கொஞ்சுகிறது உங்கள் கவிதையில். உங்கள் காத்லில் நனைந்த இதைப்போன்ற கவிதைகளை காதலர் தினத்தின் அட்டைகளில் அச்சடித்தால்
ஒரே நாளில் அத்தனையும் விற்று விடும்.
மனமார்ந்த வாழ்த்துக்கள் ஷீ.

ஷீ-நிசி
31-07-2007, 05:27 AM
இளசு நீங்க இப்ப இருக்கீங்க என்று தெரிந்தவுடன் நான் இந்த கவிதையை இங்கே பதித்தேன்... இப்பொழுதெல்லாம் உங்களின் பின்னூட்டத்திற்காய் காத்திருப்பது கொஞ்சம் கடினமாகத்தான் உள்ளது.. மிக அழகான அளவான விமர்சனம்....ஒருத்தி குரலால் ஒரு கோடி வயலின் இசைக்கேட்கும்
ஒரு ரசாயனப் பிரளயம் செய்யும் விந்(த்)தை இது!

கவிதையில் இடம் பெற்றிருக்கவேண்டிய வரிகள் ஒரு கோடி வயலின்...

நன்றி இளசு...

ஷீ-நிசி
31-07-2007, 05:28 AM
வனமிரங்கி−மனமிரங்கி
நிலவின் ஒளி−நிலவின் ஒலி


நன்றி சிவா... நான் ரசித்த வரிகளை மிக அழகாக எடுத்து காட்டியுள்ளீர்கள்... மிகவும் நன்றி சிவா.

விகடன்
31-07-2007, 05:33 AM
மீண்டும்....
சந்திப்போமென்று சொல்லி
மீண்டும்....

எட்டாத உயரத்திற்கு
சிட்டாக சென்றது -அந்த
வட்ட நிலா!

ஷீ-நிசி

இன்னும் எத்தனை எத்தனை இதயங்கள் இந்த நிலாவின் ஒளியில் இதம் காண்கின்றனவோ

காதல் கதை ஒன்றை கவியாக தந்து அசத்திவிட்டீர்கள்.

ஷீ-நிசி
31-07-2007, 05:41 AM
உண்மைதான் எத்தனை இதயங்கள் இதம் காண்கின்றனவோ!

நன்றி விராடன்.....

ஓவியன்
31-07-2007, 05:52 AM
ஒருத்தன் தான் காதலிக்குப் பெண்மீது மிக்க கோபத்தில் இருந்தானாம், இனிமேல் அவளுடன் கதைப்பதேயில்லை என்று சவால் வேற...........!, கதைத்தால் நாலு கேள்வி கேட்பேன் நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி என்ற நம்பிக்கையுடன் கழிந்தன நாட்கள்..........!
ஒரு நாள் வந்தது அழைப்பொன்று அந்த கிளியிடமிருந்து, அந்த ஹலோ ஒன்ற ஒரு வார்த்தையில் அவன் எல்லாவற்றையும் மறந்து தொலைத்தான்.........., தான் அவளுடன் கோவிக்க வேண்டுமென்ற வறட்டுக் கொள்கையைக் கூட........!

அவனைப் பொறுத்தவகையில் அத்தனை வலிமை மிக்கது அவளது வார்த்தைகள், அன்று அந்தக் கிளி கேட்டது நீங்கள் என் மேல் கோபம் கொண்டிருப்பீர்களே என* நினைத்தேன் என்று, ஆமாம் கோபமாகத் தானிருந்தேன் உன் அழைப்பு வரும் வரை, வந்த பின் அந்த கோபத்தின் மீதல்லவா கோபம் வருகிறது எனக்கு......!

மனம் கவர்ந்தவளின் வார்த்தைகளுக்காக காத்திருப்பதும் சுகமே, காத்திருந்து கதைத்திருப்பதும் சுகமே, கதைத்ததை பின்னர் அசை போடுவதும் சுகமே உங்கள் கவி வரிகளைப் படிப்பது போலவே....!:natur008:

பாராட்டுக்கள் ஷீ அழகான ஒரு கவிதைப் படைப்புக்கு.........!

ஷீ-நிசி
31-07-2007, 06:43 AM
சுருக்கமாக சொன்னது கதை கவிதையின் சாராம்சத்தை... நன்றி ஓவியன்...

அமரன்
31-07-2007, 06:58 AM
கவிச்செல்வனின் காதல் காலம் நேற்று
கவிதையான கணங்கள் இன்று .
இரண்டுமே வருடின மனத்தை

நிலாச்சாரல் தேடி அலைபவனுக்கு
ஆயிரம் கோடி நிலாக்கள் கூடி
பொழிந்த மழையில் நனைந்த
உன்மத்தம்−நாயகன் கொண்டதிலும்
ஓராயிரமடி அதிகமாக...நன்றி ஷீ.

வர்ணஜாலம் காட்டும் வார்த்தைகளுக்கு
வாழ்த்துச்சொல்ல
என்னிடமில்லை ஒரு வார்த்தை.
பாராட்டுக்கள் கவிச்செல்வனே!

ஷீ-நிசி
31-07-2007, 07:18 AM
நிலாச்சாரல் தேடி அலைபவனுக்கு
ஆயிரம் கோடி நிலாக்கள் கூடி
பொழிந்த மழையில் நனைந்த
உன்மத்தம்−நாயகன் கொண்டதிலும்
ஓராயிரமடி அதிகமாக...நன்றி ஷீ.


கவிதையான விமர்சனம்.... நன்றி அமர்..

அக்னி
31-07-2007, 10:15 AM
அலைகள் காவிவந்த,
குரல் இசைந்தபோது...
நான் இழைக்கப்பட்டேன்...

ஸ்வரங்கள் கற்றுத்தேர்ந்த
சங்கீத வித்வானாய்...
மொழிகள் கற்றுச்சிறந்த
பண்டிதனாய்...
மௌனத்திலேயே
ஆயிரம் கருத்துக்கள்
சுட்டும் பேச்சாளனாய்...
ஆயினேன்,
உன் ஒரு வரி வார்த்தையில்...

உன் சத்தம்
எனக்குள்
சந்தமான வேளையில்,
வானவில்லின் வர்ணம்
குழைக்கும் ஓவியனாய்,
கல்லின் வன்மையில்
செதுக்கும் சிற்பனாய்...
ஆனேன்...

மொத்தத்தில் பித்தனாய் போனேன்...

ஷீ−நிசியின் மென்மை வரிகள்...
மனதுக்குள் பிரவாகிக்கச் செய்கின்றது இனம்புரியாத உணர்வுகளை... இன்பமாக...
மிகவும் ரசிக்க வைத்த வரிகள்...

நரம்புகளுக்கு பதிலாய்
இதயத்தில் எங்கெங்கும்
பூக்களின் மெல்லிய காம்புகள்!

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்...

ஷீ-நிசி
31-07-2007, 10:30 AM
அழகான பின்னூட்டம்... கவித்துவமான வரிகள்.. நன்றி அக்னி!

ஆதவா
04-08-2007, 11:25 AM
இன்னும் அதே சிறப்பான எதுகைகள்.. மனிதரைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி மென்மையான கவிதைகள் படைக்கிறார் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.. கவிதை அருமை ஷீ−நிசி. வாழ்த்துக்கள் (விளக்க விமர்சனமிடமுடியாமைக்கு மன்னிக்கவும். )

அமரன்
04-08-2007, 03:08 PM
இன்னும் அதே சிறப்பான எதுகைகள்.. மனிதரைப் பார்த்துவிட்டு இந்த மாதிரி மென்மையான கவிதைகள் படைக்கிறார் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள்.. கவிதை அருமை ஷீ−நிசி. வாழ்த்துக்கள் (விளக்க விமர்சனமிடமுடியாமைக்கு மன்னிக்கவும். )

நேரில் பார்க்கும்போது அவ்வளவு வன்மையானவராக தெரிகிறாரோ...

ஷீ-நிசி
06-08-2007, 03:43 AM
நன்றி ஆதவா.....

அப்படியெல்லாம் இல்லை அமர்.. நான் ரொம்ப மென்மையானவன்தான்.. :)

பென்ஸ்
06-08-2007, 08:35 AM
நினைவுகளின் "ரீ−வைன்ட்" புத்தானை மீண்டும் தட்டிவிட்டு போய்விட்டீர்கள் ஷீ....

தொலைபேசி ஒலிக்கும் போது எல்லாம்
இது அவளாக இருக்காதா என்று யதார்த்தம் இல்லாத எதிர்பார்ப்பு...
இருந்தும்..
எதிர்பாராத ஒரு நிமிடத்தில் அவள் குரல்...

பேசினானா அவன் ஷீ..!!!???
என்ன பேசினானன்...
பேச முடியாததை , சொல்ல தெரியாமல் கவிதையாய் புலம்பினானா????

அந்த ஒரு நிமிட அவஸ்தை...
மீண்டும் தர வருவாளா...

அவள் ராங்காலாவது தரமாட்டாளா என்று ஏங்க வைக்கவில்லையா????


அட போங்கையா...

இலக்கியன்
06-08-2007, 08:41 AM
அழகான கற்பனை வளம் இனிக்கிறது தமிழ்

ஷீ-நிசி
06-08-2007, 02:35 PM
நினைவுகளின் "ரீ−வைன்ட்" புத்தானை மீண்டும் தட்டிவிட்டு போய்விட்டீர்கள் ஷீ....

தொலைபேசி ஒலிக்கும் போது எல்லாம்
இது அவளாக இருக்காதா என்று யதார்த்தம் இல்லாத எதிர்பார்ப்பு...
இருந்தும்..
எதிர்பாராத ஒரு நிமிடத்தில் அவள் குரல்...

பேசினானா அவன் ஷீ..!!!???
என்ன பேசினானன்...
பேச முடியாததை , சொல்ல தெரியாமல் கவிதையாய் புலம்பினானா????

அந்த ஒரு நிமிட அவஸ்தை...
மீண்டும் தர வருவாளா...

அவள் ராங்காலாவது தரமாட்டாளா என்று ஏங்க வைக்கவில்லையா????


அட போங்கையா...


ஹா! ஹா!.....
அந்த ஒரு நிமிட அவஸ்தை மீண்டும் தர வருவாளா..

கவிதை மொத்தமும் இந்த ஒருவரியில் அடக்கிவிட்டீர்கள் பென்ஸ்!

அழகான அவஸ்தை தான் அது! :icon_give_rose:

ஷீ-நிசி
06-08-2007, 02:35 PM
அழகான கற்பனை வளம் இனிக்கிறது தமிழ்

நன்றி இலக்கியன்!

ஆதவா
06-08-2007, 05:30 PM
ஆயிரமாயிரங் கணங்கள் சிலிர்த்த காட்சிகளை நேரில் கண்டவாறு கவிதை படிக்கையில் நேரிடுகிறது. நிலவை எங்கேயோ வைத்து தாலாட்டி சோறூட்ட உங்களால் நன்றாக செய்யமுடிகிறது. அவள் இதழ்வழி பட்டாம்பூச்சிகளின் கூட்டம் கவிதையை மொய்க்க, இதயம் திறந்து படிக்கிறேன் இந்த கவிதையை.

சில இடங்களில் கூச்செறிகிறது. சில இடங்களில் காதல் நரம்புகள் கிளுகிளுக்கிறது. எங்கோ ஒரு சோதனை ஓட்டத்தில் சென்று உலகசாதனை செய்த கவிதை..

அந்த ஒற்றைநிமிடத்தில் குரல் கேட்ட பொழுதினில் உலகம் அழிந்துவிடக்கூடும்.. அல்லது புது உலகமே பிறந்திருக்கக் கூடும்..

கவிதை முடிவில் புதிய அர்த்தம்.

வாழ்த்துக்கள்.

ஓவியன்
06-08-2007, 05:39 PM
அழகான ஒரு கவிதைக்கு அற்புதமான பின்னூட்டங்கள் இளசு அண்ணா, அமரன், அக்னி, ஆதவன், பென்ஸ் அண்ணாவென.........

அனைவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு அழகான கவிதையை அழகாக உள்வாங்கி ரசித்து என்னையும் உங்கள் வரிகளில் லயிக்க வைத்தமைக்கு.............

ஷீ-நிசி
07-08-2007, 03:28 AM
மீண்டும் ஒரு விரிவான விமர்சனத்திற்கு நன்றி ஆதவா..

நன்றி ஓவியன்!