PDA

View Full Version : திராட்சை விதைபோல் ஓர் மச்சம்....



ரிஷிசேது
30-07-2007, 06:14 PM
உன் கனுக்காலுக்கு சற்றேமேலே
திராட்சை விதை போல
ஓர் மச்சம்.....

காவிரியில் நீயிறங்க
உயரத்தூக்கிய துணிமுடிவில்
உரசித் தெரிந்தது நல்லழகாய்

தரையில் சொர்கம், ரங்கம்
முட்டிப்பிரியும் முக்கொம்பு
நீ என் கைபிடித்தேரிய
மலைக்கோயில்
முள்ளொடத்து நீ
எழுதிய உன் என் பெயர்கள்
அப்படியேதானிருக்கு
திருச்சியிலே.....

நேற்று இன்று நாளையென
மாறிப்போன பொழுதுகளில்
நீயும் நானும் கூட மாறித்தான் போனோம்
ம்.....

திராட்சை விதை போல்
ஓர் மச்சம்
உன் கனுக்காலிலும்
என் மனதிலும்.....

ஓவியன்
30-07-2007, 06:18 PM
மனதினுள்
மஞ்சம் போட்ட
மச்சக் கன்னி
மனம் மாறாமல்
மாலையோடு
வர வாழ்த்துக்கள் ரிஷி!.

விகடன்
30-07-2007, 06:19 PM
சந்தர்ப்பத்தில் சங்கவித்த கவிதையாக்கும்
நன்றாக உள்ளது. அதிலும் இறுதியாக ஆரம்பத்தை கொண்டு முடித்த விதம்.... சூப்பர்.

அமரன்
30-07-2007, 06:20 PM
திராட்சை விதை போல்
ஓர் மச்சம்
உன் கனுக்காலிலும்
என் மனதிலும்.....

சொல்லாமால் சொல்கிறன பல கதைகள். பாராட்டுக்கள் தோழரே..

அக்னி
30-07-2007, 06:24 PM
திராட்சை விதைபோல ஒரு மச்சம்...
ஆழப்பார்வையில், பதிந்ததோ உங்கள் மனதிலும் பார்வையிலும்...
மச்சகன்னி யாரோ...
மச்சம் போல கருமை என்று எண்ணாதீர்கள்...
மச்சம் போல நிரந்தர அடையாளம் என்று மகிழுங்கள்...

பாராட்டுக்கள்...

ரிஷிசேது
30-07-2007, 06:38 PM
நன்றி அனைவருக்கும்.
ரிஷிசேது

lolluvathiyar
31-07-2007, 06:47 AM
ஐயா மச்சம் இல்லாமல் போச்சோ உங்களுக்கு
இத்தனி ஏக்கம்

ஆதவா
04-08-2007, 11:21 AM
கவிதை மிக அருமை ரிஷி. முடிவு கனக்கிறது. வாழ்த்துக்கள்.