PDA

View Full Version : ஏதேனும் செய்யலாம்



ரிஷிசேது
30-07-2007, 05:39 PM
குழந்தைகளின்
கனவுகளை விற்றுக்கொண்டிருகிறான்
பலூன்காரன்.

மரங்களெல்லாம்
போன்சாயாய் முடங்கிப்போயிற்று
கட்டிடக்காட்டுக்குள்...

தண்ணீர் தேடி
அலையுமொரு கூட்டமாய் மாறிப்போனது
மனித மிருகங்கள்...

நிலவுக்குள் கால்வைப்பது
செவ்வாய்க்குள் நுழைவது
இவைகளை விட முக்கியம்
இப்போது -குப்பனுக்கும் சுப்பனுக்கும்
வேளைக்கு உணவும், வேலைக்கு படிப்பும்

மதங்களின் வழியோ
இறைவழியோ -இறைமறுப்போ
எதாகிலும் பரவாயில்லை
எழுத்தருவித்ததலும் -முடிந்தால்
தினமொரு ஏழைக்கு உணவளித்தலும்
கொள்கையாயின் -ஒரு வேளை
நாம் திருப்தியாய் இறக்கலாம்.

கணவான்களே, நண்பர்களே
நம் வாழ்வு மிக வேகமானது
ஏதேனும் செய்யலாமே-
முடிந்தவரை...

அக்னி
30-07-2007, 05:46 PM
பசியில் உண்ட காற்று,
சுரந்தது மார்பிலும்...
அருந்திய அரும்பும்
அழுதது...
வயிற்றில் எரியும் தீயில்,
கருகும் மனங்கள்...

வாழ்த்துக்கள் ரிஷிகேது...
தனியொருவனுக்கு உணவில்லையெனின் ஜெகத்தினை அழித்திடுவோம்
என்று முழங்கிய பாரதியின் வரிகள்...
மொழிகள் தாண்டி, நாடுகள் தாண்டி முழங்கவேண்டும்...

அமரன்
30-07-2007, 05:52 PM
ரிஷி..
சந்திரனில் செவ்வாயில் நீருண்டா? ஒருசாரார் ஆராய.. தண்ணி தேடுகிறனர் இன்னொரு சாரார்..கேட்டால் பூமியில் இல்லை.அதனால் அங்கே தேடுகின்றோம் என்பர். பூமியில் தண்ண்னீருக்கு வழிசெய்ய கல்வியைப்பயன்படுத்த நினைப்பதில்லை. பிரபல்யம் என்னும் போதையா..? இல்லை வியாபார முதலைகளின் மூளையா?

இது ஒரு சாம்பிள். ஒருசாரார் அறிவுஜீவிகளாக காட்டிக்கொள்ள இன்னொரு சாரார் சீவநதிக்கே திண்டாடுகிறனர். அப்புறம் எங்கே கல்வி..இதற்கெல்லாம் என்ன காரணம்? இதை இல்லாதொழிக்க வேண்டாம் குறைக்க என்ன செய்யலாம்? யாருக்கும் தெரியாது அல்லது தெரிந்தும் செய்வதில்லை சொல்வதில்லை....!
பாராட்டுக்கள் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டிய விடயத்தை சொல்லியுள்ளீர்கள்.

ஓவியன்
30-07-2007, 06:00 PM
நம் வாழ்வு மிக வேகமானது
ஏதேனும் செய்யலாமே-
முடிந்தவரை...

எவ்வளவு நிதர்சனமான வார்த்தைகள் ரிஷி!!!!

கனவுகளுடன் வாழ்ந்து, கனவுகளுக்காய் வாழ்ந்து கனவுகளுடனேயே ஓடிக் கொண்டிருக்கின்றோம்-மனிதத்தைத் தொலைத்துவிட்டு..............!

கொஞ்சம் வெளியே வந்து பார்த்தால், கால்வயிறு நிரப்பக் கஞ்சி இல்லாமல் எத்தனை எத்தனை பேர் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள்............!
காலுக்குச் செருப்புத் தேடும் நாங்கள் எங்கே காலே இல்லாமல் பரிதவிக்கும் அவர்களெங்கே....................?

சிந்திக்க வேண்டும் எல்லோருமே - சிந்திக்க வைக்கும் வரிகளைத் தந்தமைக்குப் பாராட்டுக்களும் நன்றிகளும் ரிஷி!.

விகடன்
30-07-2007, 06:01 PM
மொத்தத்தில் மரமொன்றை நடுவதன் மூலம் உங்கள் தவிப்பை தணித்துவிடலாம் ரிஷி.

சிவா.ஜி
31-07-2007, 04:49 AM
நிலவுக்குள் கால்வைப்பது
செவ்வாய்க்குள் நுழைவது
இவைகளை விட முக்கியம்
இப்போது -குப்பனுக்கும் சுப்பனுக்கும்
வேளைக்கு உணவும், வேலைக்கு படிப்பும்

மதங்களின் வழியோ
இறைவழியோ -இறைமறுப்போ
எதாகிலும் பரவாயில்லை
எழுத்தருவித்ததலும் -முடிந்தால்
தினமொரு ஏழைக்கு உணவளித்தலும்
கொள்கையாயின் -ஒரு வேளை
நாம் திருப்தியாய் இறக்கலாம்.
மிக சத்தியமான வார்த்தைகள் ரிஷி. அட்ச்சரங்கள் லட்சம் பெறும் என்பதற்கு பொறுத்தமான வரிகள். வாழ்த்துக்கள் ரிஷிசேது.

ஆதவா
04-08-2007, 11:24 AM
அருமையான வரிகள் ரிஷி−

முன்னமே படித்தும் விமர்சனமிடமுடியவில்லை. முதல் வரிகளும் கடைசிவரிகள் நெஞ்சில் இருந்து நீங்கவில்லை.

இலக்கியன்
06-08-2007, 08:45 AM
நிலவுக்குள் கால்வைப்பது
செவ்வாய்க்குள் நுழைவது
இவைகளை விட முக்கியம்
இப்போது -குப்பனுக்கும் சுப்பனுக்கும்
வேளைக்கு உணவும், வேலைக்கு படிப்பும்

நியமானவரிகள் தொடரட்டும் உங்கள்கவிகள்

lolluvathiyar
06-08-2007, 12:48 PM
தானம் தர்மம் எதுவும் செய்யாதவன். கல்வி அறிவு புகட்டாதவன். இத்தனை நாள் நான் செய்தது அனைத்தும் வீன் என்று வெட்க பட வைத்து விட்டீர்களே ரிசி அவர்களே

ஷீ-நிசி
06-08-2007, 03:41 PM
வேகமான இந்த வாழ்க்கையில் ஓடுகிறவர்களே! கொஞ்சம் உங்களை சுற்றியிருப்பவர்களை ஒரு நிமிடம் கண்ணோக்குங்கள்!


ஆம்! முடிந்தவரை ஏதேனும் செய்யலாம்! வாழ்த்துக்கள் நண்பரே!

ரிஷிசேது
06-08-2007, 04:34 PM
விமர்சித்த அனைவருக்கும் நன்றிகள்,
மேலும் தொடர்வேன்