PDA

View Full Version : அடைவேன் அகிலமே!!



சிவா.ஜி
30-07-2007, 02:02 PM
கொஞ்சம் ஜாலியான கவிதை.ச்சும்மா அப்படியே.....

அமெரிக்காவின் வசீகரம்,
ஐரோப்பாவின் அழகு,
ஆசியாவின் பண்பாடு,
ஆர்டிக்,அண்டார்டிக்கின் குளுமை,
அத்தனையும் உன்னிடமிருந்தாலும்,
அருகில் வர முடியாமல்
ஆப்பிரிக்காவைப்போல்
இருண்ட கண்டமாய்
இருக்கிறாயே!
என்னோடு இணையாமல்
ஆஸ்திரேலியாவைப் போல்
ஒதுங்கியே நிற்கிறாயே!
விடமாட்டேன்.....
காதலெனும் கடவுச்சீட்டு
கையிலுண்டு
அடைந்தே தீருவேன்
என் அகிலத்தை!

அமரன்
30-07-2007, 02:10 PM
ஹா....ஹா...சிவா...அருமை..

காதல் கடவா சிட்டில்
காதல் கடவுச் சீட்டுடன்
நுழையப் பாக்கிறீரே..
பார்டர் உடைக்க விழைகிறீரே
இமிக்கிரேஷன் கிளியரா!!!!!?

இனியவள்
30-07-2007, 02:16 PM
ஆஹா அருமை சிவா வாழ்த்துக்கள்

விகடன்
30-07-2007, 02:21 PM
கடவுச்சீட்டு இருத்தாலும்
அனுமதிப்பத்திரம் அளிப்பது அவளல்லவா?


சிவா.ஜி இன் வெளினாட்டு வாழ்க்கையும் கடவுச்சீட்டு விசாக்களுக் ரொம்பத்தான் பாதிச்சிட்டுது போல

கவிதை அருமை

சிவா.ஜி
30-07-2007, 02:22 PM
ஹா....ஹா...சிவா...அருமை..

காதல் கடவா சிட்டில்
காதல் கடவுச் சீட்டுடன்
நுழையப் பாக்கிறீரே..
பார்டர் உடைக்க விழைகிறீரே
இமிக்கிரேஷன் கிளியரா!!!!!?
இமிக்கிரேஷன் கிளியராகி அவள் இதயத்துக்குள் மைக்ரேஷன் ஆவது தானே என் எண்ணம். விடப்போவதில்லை.

இனியவள்
30-07-2007, 02:25 PM
அகிலமே அவளாக
காதல் என்னும்
கடவுச்சீட்டு உயிராய்
மாறிவிட்டது இங்கொருவருக்கு :grin: :grin: :grin: :grin: :grin:

சிவா.ஜி
30-07-2007, 02:25 PM
நன்றி இனியவள்.
விராடன் மிகச் சரியாக கணித்துவிட்டாரே. பாதிக்கப்பட்டவனாயிருக்கிறேன்.
நன்றி விராடன்.

அமரன்
30-07-2007, 02:27 PM
இமிக்கிரேஷன் கிளியராகி அவள் இதயத்துக்குள் மைக்ரேஷன் ஆவது தானே என் எண்ணம். விடப்போவதில்லை.

என்னமோ பண்ணி அவங்க வைப்பிரேஷனை அதிகரிக்க போறீங்க...ம்ம்நடத்துங்க.

விகடன்
30-07-2007, 02:27 PM
விராடன் மிகச் சரியாக கணித்துவிட்டாரே. பாதிக்கப்பட்டவனாயிருக்கிறேன்.
நன்றி விராடன்.

சும்மா தட்டிப்பார்த்தேன். முயலோடும் என்று நினைக்கவே இல்லை:4_1_8:

இனியவள்
30-07-2007, 02:28 PM
சும்மா தட்டிப்பார்த்தேன். முயலோடும் என்று நினைக்கவே இல்லை:4_1_8:

அடுத்ததாக ஆமை ஓடும் விராடன் வடிவா பாருங்கோ :music-smiley-010:

அமரன்
30-07-2007, 02:30 PM
சிவா..முயல் ஆமைன்னு ஆரம்பிச்சிட்டாய்ங்க...கவனாமாக இருந்துக்கோங்க...அனுபவம் இருக்கல்ல..

இனியவள்
30-07-2007, 02:32 PM
சிவா..முயல் ஆமைன்னு ஆரம்பிச்சிட்டாய்ங்க...கவனாமாக இருந்துக்கோங்க...அனுபவம் இருக்கல்ல..

ஹீ ஹீ அமர்

எப்படிப் போனலும் ஆமையும் முயலும்
சிவாவை விடமாட்டன் என்று சொல்லி
அடம் பிடிக்குது பார்த்தீங்களோ:icon_shok:

சிவா.ஜி
30-07-2007, 02:34 PM
தேவுடா தேவுடா இம்சை தாங்க முடியலயே......இன்னும் ஓவியன்தான் பாக்கி.அவரும் வந்து முயல் ஆமைன்னு அலம்பல் பண்ணப்போறாரு.

theepa
31-07-2007, 10:52 AM
ஆகா என்னமா கற்பனை உங்கட சும்மா தூள் பரக்குது நண்பரே பாராட்டுக்கள்

அன்புடன்
லதுஜா

theepa
31-07-2007, 08:58 PM
ம்ம் ரொம்ப தான் ஆசை உங்கலுக்கு அகிலத்தையே ஆல போரிங்கலா நண்பரேம்ம்ம் ஆலுங்க ஆலுங்க ஆனால் ரொம்ப கவனமா பாத்து ஆலனும் பாராட்டுக்கள் உங்கள் கவி அருமை நண்பரே

அக்னி
31-07-2007, 09:07 PM
உலகம் வேண்டாம் எனக்கு...
சொர்க்கமாக நீ இருக்க,
உலகெதற்கு எனக்கு...
கடவுச்சீட்டும், அனுமதியும்
தேவையில்லை...
உன் விழிப்பார்வை வீச்சில்,
சொர்க்கம் என் அருகில்...
திரும்பும் கணங்களில்
நரகம் என் எதிரில்...

அழகிய கவிக்கு வாழ்த்துக்கள் சிவா.ஜி

அமரன்
31-07-2007, 09:19 PM
திரும்பும் கணங்களில்
நரகம் என் எதிரில்...

சொர்க்கமென செப்பிவிட்டு
நரகமென்கின்கிறீரே
கிரக்கத்தில் அவள்நாணி
திரும்பும் நேரத்தில்..

உமக்கு
அனுமதிதான் இல்லையே
சிட்டின் இல்லத்திலே
அனுமனின் தோழனே..

அக்னி
31-07-2007, 09:31 PM
சொர்க்கமென செப்பிவிட்டு
நரகமென்கின்கிறீரே
கிரக்கத்தில் அவள்நாணி
திரும்பும் நேரத்தில்..


கிறக்கத்தில் அவள் நாணித்
திரும்பும் பொழுதிலும்,
அவள் விழி வீச்சில்
என் விம்பம் வீழாவிட்டால்,
ஒரு நொடிதானேனும்,
அதுகூட நரகமே...

அமரன்
31-07-2007, 09:39 PM
கிறக்கத்தில் அவள் நாணித்
திரும்பும் பொழுதிலும்,
அவள் விழி வீச்சில்
என் விம்பம் வீழாவிட்டால்,
ஒரு நொடிதானேனும்,
அதுகூட நரகமே...

விழி வீச்சில் விழுந்தது
வெற்று விம்பமா?

ஒற்றென நினைத்துன்னை
உயிர்கொடுக்க வந்தவள்
குற்றுயிராகி வெம்புகிறாளே
இதற்கென்ன இயம்புகிறீர்
பற்றற்ற கோமகனே...?

அக்னி
31-07-2007, 09:44 PM
விழி வீச்சில் விழுந்தது
வெற்று விம்பமா?

ஒற்றென நினைத்துன்னை
உயிர்கொடுக்க வந்தவள்
குற்றுயிராகி வெம்புகிறாளே
இதற்கென்ன இயம்புகிறீர்..?

தத்துக்கொடுக்கவில்லை
என்னுயிரை...
சொத்தாகவே கொடுத்துவிட்டேன்...
அவள் குற்றுயிராகினால்,
வெற்றுடலாவது நானும்தான்...

அமரன்
31-07-2007, 09:47 PM
தத்துக்கொடுக்கவில்லை
என்னுயிரை...
சொத்தாகவே கொடுத்துவிட்டேன்...
அவள் குற்றுயிராகினால்,
வெற்றுடலாவது நானும்தான்...

சொத்தாகக் கேட்கவில்லை
சொத்தாக்க கேட்டாள்.
கோந்தாக இல்லாது.
கொத்திக் கிழித்தீரே..

(தூக்கம் வருகிறதுப்பூ. நாளை சந்திபோம்

சிவா.ஜி
01-08-2007, 04:55 AM
ம்ம் ரொம்ப தான் ஆசை உங்கலுக்கு அகிலத்தையே ஆல போரிங்கலா நண்பரேம்ம்ம் ஆலுங்க ஆலுங்க ஆனால் ரொம்ப கவனமா பாத்து ஆலனும் பாராட்டுக்கள் உங்கள் கவி அருமை நண்பரே

ஆள்வதில் எப்போதுமே நிறைய கவனம் தேவைதான் தீபா,அது மண்ணானாலும் சரி,பெண்ணானாலும் சரி. வாழ்த்துக்களுக்கு நன்றி.

சிவா.ஜி
01-08-2007, 04:57 AM
அட அட அட.... அக்னியும் அமரனும் போட்டிபோட்டுக்கொண்டு பதில் கவிதைகளில் கலக்குறீங்க. எப்படீப்பா இப்படியெல்லாம்......?வாழ்த்துக்கள் இருவருக்கும்.