PDA

View Full Version : திசைமாறிய பாதைகள் - 3



வெண்தாமரை
30-07-2007, 01:38 PM
அப்புறம் என்ன அவன் நிழல் மறையும் வரை டாட்டா காட்டி கொண்டிருந்தாள்.. அவனது வந்தது ஞாயிற்றுக்கிழமை ஆனதால் அவனை என்னால் பார்க்க முடியவில்லை. ஒரிரு தடவை புகைப்படத்தில் பார்த்ததோடு சரி. மறுநாள் நான் அலுவலகம்
வந்தததும் ரொம்ப பெருமையாக சொன்னாள். அவர் வந்தார்.. நான் அதற்கு எவர் அவர் என்ன அவர் இப்போது அவர் உன் நண்பன்.. தேவையில்லாமல் ஆசைகளை வளர்த்துக்கொள்ளாதே.. சைபர் சாட் மிகவும் மோசமானது.. அதில் சிக்கினால் உயிரைதான் விடவேண்டும். நீ என் தோழி இல்லை சகோதரி உன் நன்மைகாகத்தான் சொல்கிறேன்

கேள்.. அவளோ கேட்கவில்லை. நாளுக்குநாள் தொலைபேசி வழி தகவல் அதிகரித்தன.

வேலையில் கவனம் குறையஆரம்பித்தாள்.. வேலையும் இடத்தில் அவப்பெயர் வேலையை சரியாக செய்யவில்லை என்று.. அப்போதுதான் ஒரு நாள் தன்னுடைய செல்பேசியை என்னிடம் கொடுத்தாள். நானே சார்ஜ் செய்து வைத்து இருந்தேன். மாலை 5.30 - மணிக்கு போன் வந்தது.. யார் என்று கேட்டேன். உடனே அந்த குரல் நான்தான்டி உன் மிலிட்ரி என்றான். ஓகோ அப்படியா? என்று கேட்டு அவள் இல்லை நான் அவள் தோழி என்றேன். சரி என்று கட் செய்ய பார்த்தான். உடனே நான் உங்ககிட்ட ஒரு கேள்வி கேட்கலாமா? என்றேன்..

கேளுங்கள் என்றான். நீங்கள் அவளை உண்மையாக விரும்பினால் உங்கள் அப்பா அம்மாவிடம் சொல்லி பெண் கேளுங்கள் அதைவிட்டுவிட்டு வெட்டிதனமாக தினமும் 10-தடவை போன் பண்ணி அவள் மனதையும் கெடுத்து உங்கள் மனதையும் கெடுத்துக்கொள்ளாதீர்கள் என திட்டினேன். சாரி மேடம் என்று போனை கட் செய்தான்.

அப்பாடா இனி இவள் சந்தோசமாக இருப்பாள் என எண்ணினேன்.. ஆனால் இல்லை.. புத்திகெட்டவள்.. பால் எது சுண்ணாம்பு எது என வித்தியாசம் தெரியவில்லை. அவளுக்கு பரிந்து பேசிய என்னிடமே எரிந்து விழுந்தாள்.. கேட்தற்கு அவரை நான் கணவராக நினைத்துதான் பழகி வருகிறேன் என்றாள் பார்க்கணுமோ.. அடிப்பாவி அவன் யாரு எந்த ஊரு? எப்படி ஒன்றும் தெரியாமல் இவ்வளவு தூரம் மனசில் ஆசையை வளர்த்துகிட்டியே..பாவி என்றேன். என் சொல் அவளை காயப்படுத்தியதோ என்னவோ தெரியவில்லை மறுநாள் அவன் அம்மா போன் பண்ணினார்கள்.. அந்த நேரம் அவன் இராணுவத்தில் இருந்தான்.. இவளை வந்து பார்த்த 2 -வது நாள் அவனுக்கு டியுட்டி போட்டுவிட்டார்கள்.. அதுவும் கா~;மீரில்...

அவனது அம்மா போன் பண்ணினார்கள்.. இவளிடம்தான் பேசினார்கள்.. அவள் பெயர் என்ன என்று கேட்டார்கள். மகாலெட்சுமி என்றாள்.. உடனே பெயரே சரியில்லையே என்றார் அவர்..உடனே குடும்பத்தை பத்தி கேட்டார்கள்.. அப்புறம் நிறைய கண்டி~ன் நாங்க முறையான --- (மதப்பிரச்சனை கருதி தவிர்க்கிறேன்) குடும்பம் நீ எங்கள் வீட்டிற்கு வந்தால் மதமாற வேண்டும்.. நாங்க பன்றிகறியை சாப்பிடுகிற (-----) சாதி என்றார்.

அத்தோடு நிச்சயதார்த்தம் எங்கள் வீட்டில் நடக்க வேண்டும் என்றும்.. அதற்கு உன் குடும்பத்தார் சம்மதம் வேண்டும் எனவும் திருமணத்திற்கு பின் அவர்கள் எங்கள் சாதியை குற்றம் சொல்லி பேசக்கூடாது எனவும் கட்டளை பிறப்பித்தனர். அத்தோடு அவன் அண்ணனுக்கு திருமணம் முடிந்தபிறகுதான் உங்கள் திருமணம் என்றார்.. இப்போதும் நான் கேள்விப்பட்டவரை அவன் அண்ணனுக்கு பெண்பார்க்கும் படலம் தொடர்கிறது.

இதை அத்தனையும் என்னிடம் கொட்டி தீர்த்தாள்.. அவள் அப்பாவோ என் மகள் மதம் மாற நான் சம்மதிக்க மாட்டேன்.. அத்தனை ஆச்சாரத்தோடு வளர்ந்தவள். உங்கள் நாங்க ஒன்றும் குறைந்து போகவில்லை என்று வாதாடினார்.. முடிவில் காதலித்தவன் அவன் அவனை பேசச்சொல் என்னிடம் என்றார். பேசினான். முடிவில் சொன்னதை சொல்லுமாம் கிளிப்பிள்ளை என்பது போல் எங்கள் அம்மா அப்பா

ஆசையப்படுவது சரிதானே.. ரிசிஸ்டர் அலுவலகத்தில் திருமணம் செய்து கொள்ள நான் என்ன அவளை போன்று அனாதையா என்று கேட்டான்.. கேட்டகேள்வியிலேயே உடைந்து போய்விட்டாள்.. இதுதான் வார்த்தையின் வலிமை என்பதா..

என்ன சொன்னாய் என் கணவா.... இதுநாள் வரையில் நாம பழகி 1- வருடம் ஆகிறது.. இந்த ஒரு வருடத்தில் மனைவி மாதிரிதான் உன்னுடன் பழகினேன்.. இப்போது என் தலையில் இடி இறக்கி வைத்துவிட்டாயே என்றாள். நான் வேண்டுமென்றால் உன் அப்பாவை தூக்கி எறிந்துவிட்டுவா.. என்றான்.. ஒரு பக்கம் பெத்தபாசம்... ஒரு பக்கம் வளர்த்த பாசம் இடையில் இவன்... என்ன செய்வாள் இவள்..

வான் மேகம் காற்று கடல்அலை ஆகாயம்
இத்தனையும் இணைத்து கவிதை எழுத ஆசை
ஆனால் முடியவில்லை என்னால் எனென்றால் உன் முன்னால் அத்தனையும் அழகில்லாமல் இருக்கின்றன.
என் அழகே நீதான்.. என் விருப்பம் நீதான்

இப்படிக்கு

ஜீவா (உன் ஜீவன்)

அவன் முதன் முதலில் ரோஜாமலரில் கொய்ந்த கொடுங்கவிதை.. இன்னும் அவள் நெஞ்சில் ஈராமாய்...........


பதில் நாளை..............

தொடரும்..........

அமரன்
30-07-2007, 02:19 PM
அப்பப்போ வந்து லப்டப்பை அதிகரிக்கிறீர்களே சூர்யகாந்தி(சுருக்கமா எப்படி விளிப்பதுன்னு சொல்லுங்க) காத்திருகிறேன் அடுத்த உணர்வலைக்காக.

சின்ன விண்ணப்பம்..உணர்வலைகள் தொடராக வருவதால் அலைகளின் சுட்டியை ஒவ்வொரு அலையிலும் கொடுத்தீங்கன்னா உணர இலகுவாக இருக்கும்..

வெண்தாமரை
31-07-2007, 03:40 AM
ஓ தாராளமாக தருகிறேன்.. நேரம் கிடைக்கும்போது எழுதுகிறேன்.. தகவலுக்கு நன்றி நண்பரே..

http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11205
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11221
http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11227

அன்புரசிகன்
31-07-2007, 10:36 AM
உங்கள் கதை படிக்கும் போது எனது இதய துடிப்பும் பயங்கரமாக துடிக்கிறது.... அடுத்த தொடரை எதிர்நோக்கி.................

அக்னி
31-07-2007, 12:34 PM
அடுத்த தொடரின் வருகைக்காக அதிகரித்த இதயத்துடிப்போடு
காத்திருப்போரில் நானும் ஒருவன்...
தொடருங்கள்...

வெண்தாமரை
31-07-2007, 12:55 PM
அக்னி அவர்களே நமது தள நண்;பர் ஒருவர் சொன்னார். பெண் ஏமாறுவது போல உள்ளது என்று.. இல்லை அதற்கு எதிர் மறையாக.. ஆனால் மனதில் காதலின் வடு இருக்கும் அல்லவா??... தொடர்வேன்.... உணர்வுகளின் ஓட்டம் பிடித்திருந்தால்..

அக்னி
31-07-2007, 12:58 PM
அக்னி அவர்களே நமது தள நண்;பர் ஒருவர் சொன்னார். பெண் ஏமாறுவது போல உள்ளது என்று.. இல்லை அதற்கு எதிர் மறையாக.. ஆனால் மனதில் காதலின் வடு இருக்கும் அல்லவா??... தொடர்வேன்.... உணர்வுகளின் ஓட்டம் பிடித்திருந்தால்..

உண்மையான காதல் என்றால், காதலை தானே முறித்தாலும், அல்லது அடுத்தவர் முறித்துப் போனாலும், ஆணென்றாலும், பெண்ணென்றாலும்,
அதன் வடு மரிக்கும் வரை மாறாத வடு என்பது மறுக்க முடியாது...

உணர்வுகளின் ஓட்டம், மனதை கவர்கின்றது...
சோகமென்றால்.., படிப்பினை...
இன்பமென்றால்.., நல்லூக்கம்...
துன்பமென்றால்.., வழிகாட்டல்...
இவ்வாறு கொள்ளுவோம்... எவ்வாறானாலும் தொடருங்கள்...

நன்றி!