PDA

View Full Version : திசைகள் இன்றி

இனியவள்
30-07-2007, 01:32 PM
நீ எனக்கு தந்து விட்டுச்சென்ற
நினைவுகளை வடிகளாக்கி
வடிக்கின்றேன் கவிதை...

உன் முகம் மறந்து நினைவுகளை
நான் மறக்க முயற்சிக்கையில்
காற்றில் பறக்கும் சருகாய்
உன் நினைவுகள் வட்டமிடுகின்றன
பருந்தாய்....

குயிலாய் பாடித் திரிந்து பறந்தேன்..
என் குரலை எனக்கு தெரியாமல்
களவாடிச் சென்று என் சிறகை
உடைத்து விட்டாயே...

உயிருள்ள சிலையின் உயிரை
கவர்ந்து சென்று உயிரற்றதாய்
மாற்றி விட்டாய்....

சிலை பேசும் அழகை ரசித்தவன்
சிலையை ஊமையாக்கிவிட
ஊமைக் கண்ணீர் வடிக்கின்றது
சிலை....

நீ திரும்பும் திசையெல்லாம்
திரும்பினேன் சூரியனைக் கண்ட
தாமரையாய்
திசைகளின்றி பயணிக்க விட்டு விட்டாயே
என் வாழ்க்கைப் பயணத்தை....

paarthiban
30-07-2007, 01:33 PM
நெஞ்சை உருக்கும் சோகக்கவிதை. இனியவள் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

ஓவியன்
30-07-2007, 01:38 PM
சிலை பேசும் அழகை ரசித்தவன்
சிலையை ஊமையாக்கிவிட
ஊமைக் கண்ணீர் வடிக்கின்றது
சிலை......
உண்மையிலேயே சிலை பேசுவதை இரசித்தவன், அதனை ஊமையாக்க எள்ளவேனும் முயற்சிப்பானா.............?

இல்லை, அவன் இரசிப்பது போல நடித்து சிலையை ஏமாற்றி அதன் மொழியைப் பறித்த கயவன்............!

பாராட்டுக்கள் இனியவள் வித்தியாசமான சிந்தனைகளுக்கு.....................!

வெண்தாமரை
30-07-2007, 01:46 PM
இனியவள் வடித்த இந்த இனிமையான கவிதைக்கு பாராட்டுகள்.. மேலும் வளர வாழ்த்துக்கள்.. இளங்கவியே...........

அமரன்
30-07-2007, 01:57 PM
இனியவள் அழகு கவிதை....இரண்டாவது பத்தியின் வரி அமைப்பில் விளக்கமின்மை காணப்படுகிறது. சிலை ஊமைக்கண்னீர் வடிக்கிறது..உள்ளே அழுகிறது..வெளியே காட்டிக்கொள்லவில்லை..கற்பனை அற்புதம்...தலைவியின் புலம்பல் இது..தலைவன் எப்படி...

ஆடும் மயிலும் பாடும் குயிலும்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும்
அழகு நடை அன்னமுமென
உன்னிடம் பயின்றவை -மன
தூக்கத்தை கலைக்க
நீமட்டும் ஏனடி-என்
துக்கத்தை துயில்கலைத்தாய்..

இனியவள்
30-07-2007, 03:10 PM
நெஞ்சை உருக்கும் சோகக்கவிதை. இனியவள் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

நன்றி பார்த்தீபன்

இனியவள்
30-07-2007, 03:11 PM
உண்மையிலேயே சிலை பேசுவதை இரசித்தவன், அதனை ஊமையாக்க எள்ளவேனும் முயற்சிப்பானா.............?
இல்லை, அவன் இரசிப்பது போல நடித்து சிலையை ஏமாற்றி அதன் மொழியைப் பறித்த கயவன்............!
பாராட்டுக்கள் இனியவள் வித்தியாசமான சிந்தனைகளுக்கு.....................!

நன்றி ஓவியன்

இனியவள்
30-07-2007, 03:13 PM
இனியவள் வடித்த இந்த இனிமையான கவிதைக்கு பாராட்டுகள்.. மேலும் வளர வாழ்த்துக்கள்.. இளங்கவியே...........

நன்றி சூரிய காந்தி

இனியவள்
30-07-2007, 03:17 PM
இனியவள் அழகு கவிதை....இரண்டாவது பத்தியின் வரி அமைப்பில் விளக்கமின்மை காணப்படுகிறது. சிலை ஊமைக்கண்னீர் வடிக்கிறது..உள்ளே அழுகிறது..வெளியே காட்டிக்கொள்லவில்லை..கற்பனை அற்புதம்...தலைவியின் புலம்பல் இது..தலைவன் எப்படி...

நன்றி அமர்

உன் முகம் மறந்து நினைவுகளை
நான் மறக்க முயற்சிக்கையில்
காற்றில் பறக்கும் சருகாய்
உன் நினைவுகள் வட்டமிடுகின்றன
பருந்தாய்....

இதைக் கூறுகிறீர்களா அமர்

காய்ந்த சருகுகள்
அடிக்கும் காற்றில்
பறக்கும்..

அதே போல் நினைவுகளை
மறக்க முயற்சிக்கையில்
நினைவுகளே நினைவை
ஞாபகப் படுத்த
வட்டமிடுகின்றன நினைவுகள்
பருந்தாய்....

நன்றி அமர் வாழ்த்துக்கு

இனியவள்
30-07-2007, 03:19 PM
ஆடும் மயிலும் பாடும் குயிலும்
சிறகடிக்கும் பட்டாம்பூச்சியும்
அழகு நடை அன்னமுமென
உன்னிடம் பயின்றவை -மன
தூக்கத்தை கலைக்க
நீமட்டும் ஏனடி-என்
துக்கத்தை துயில்கலைத்தாய்..

ஆடும் மயிலின்
இறகுகளைக் கொய்து
விட்டு
பட்டாம் பூச்சியின்
வர்ணங்களைப் பறித்து
அவைகளின் வாழ்வை
சிதைத்து விட்டு
உன் தூக்கம் கலைந்து
விட்டதென தூக்கத்தில்
புலம்புகின்றாயே :icon_shok:

lolluvathiyar
30-07-2007, 04:10 PM
அப்பா இனியவள் உங்கள் கவிதை படித்தவுடன்
என்னை போண்ற கல் நெஞ்ச காரனுக்கும் காதல் வரும் போல அல்லவா இருகிறது

இனியவள்
31-07-2007, 06:27 AM
அப்பா இனியவள் உங்கள் கவிதை படித்தவுடன்
என்னை போண்ற கல் நெஞ்ச காரனுக்கும் காதல் வரும் போல அல்லவா இருகிறது

ஹீ ஹீ வாத்தியாரே

கல்லைக் கூடக் கனிய*
வைக்கும் சக்தி காதலுக்கு
உண்டுங்கோ :angel-smiley-010: