PDA

View Full Version : உங்கள் கற்பனையில் "வாழ்க்கை" தொடர்இணைய நண்பன்
30-07-2007, 12:37 PM
தோழர்களே முன்னர் நான் தமிழ்மன்றத்திற்காக எழுதிய தொடர்நவீனத்தின் முதல் அங்கமே இது.வேலை-நேரமின்மை காரணங்களால் தொடர்ந்து எழுதிக்கொள்ள முடியவில்லை.அதனால் இதன் தொடரை உங்கள் கற்பனையில் விடுகிறேன்.ஒவ்வொருத்தரும் தங்கள் கற்பனையில் கதையை தொடரலாம்.ஒருவர் விட்ட இடத்திலே மற்றவர் எழுத வேண்டும்.எனக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் போது இணைந்து கொள்கிறேன்.சிறு துளி பெருவெள்ளம் என்பது போல உங்கள் கற்பனை வடிவில் "வாழ்க்கை" பெரும் தொடர் நவீனமாக தொடரும் என்ற நம்பிக்கியுடன் இங்கே முதல் அங்கத்தை பதிக்கிறேன்.நன்றி

இணைய நண்பன்
30-07-2007, 12:37 PM
http://www.filehive.com/files/0730/v1.JPGஅங்கம் - 1

பாஸ்ட் நெட் சென்டெர்" இன்டெர் நெட் மையம்.
இரவு 9 மணி!
வழமை போல் வாடிக்கையாளர்கள் நிரம்பியிருந்தது.
சிவா மெயின் கம்பியுட்டரில் அமர்ந்து முன்னைய நாள் கணக்குகளை சரி செய்து கொண்டிருந்தான்.
அங்கே ஓர் இளைஞன் வந்தான்.அவனுடன் ஓர் இளம் பெண்.
அவர்கள் புதியவர்கள்.இதற்கு முன்னர் சிவா அவர்களைப்பார்த்ததே இல்லை.


" வன் கம்பியுட்டர் பிளீஸ்..."
" சுவர்"
" யு கன் கெட் கம்ப்யுட்ர் நொம்பர் 5."
"ஒ கே சார்!"


அவர்கள் இருவரும் ஐந்தாம் நம்பர் கம்பியுட்டரில் அமர்ந்தார்கள்.
சிவா மீண்டும் தனது வேலையில் மூழ்கத்துவங்கினான்.
அந்த இளைஞன் கம்பியுட்டர் யூஸ் பண்ண பக்கத்தில் அமர்ந்திருந்தாள் அந்த நங்கை.
"........."
"--------"
"........"
"--------"
இருவருக்குமிடையே ஏதோ உரையாடல் நடந்து கொண்டிருந்தது.ஆனால் அடுத்தவர்களுக்கு அது கேட்க வாய்ப்பில்லை.அந்த அளவு மெதுவாக கதைத்துக் கொண்டிருந்தார்கள்.
30 நிமிடம் கழிந்திருக்கும்.
திடீரென அவள் எழுந்து ,
பட படவென சிவா அமர்ந்திருக்கும் பிரதான கம்பியுட்டர் அருகே வந்தாள்.


அவளிடத்தில் ஏதோ பதற்றம் நிலவையது.
முகத்தில் சோகம்!!
மேசையின் மீதிருந்த பேனைவை எடுத்து சிறு காகிதம் ஒன்றில் ஏதோ அவசரமாக கிறுக்கி விட்டு - அதை சிவாவின் கையில் திணித்து விட்டு மீண்டும் தன்னுடன் வந்த இளைஞன் இருந்த கம்பியுட்டரில் அமர்ந்து கொண்டாள்.
திடீரென நடந்த இச்செயல் ..சிவாவுக்கு ஒன்றுமே விளங்கவில்லை.
அவள் கொடுத்த காகிதத்தை நோக்கினான்.
அதில்,
" என்னுடன் வந்திருக்கும் இளைஞனால் எனக்குப் பிரச்சினை.ப்ளீஸ் உதவவும்"
என்று எழுதி இருந்தாள்.


"இவர்கள் யார்?"
"இவளுக்கு என்ன பிரச்சினை?"
"பிரச்சினை என்றால் ஏன் அந்த இளைஞனுடன் ஒன்றாய் வந்தாள்?"
"இதில் நான் எப்படித்தலை போடுவது?"
சிவாவின் மனதில் பல கேள்விகள்.


என்ன செய்வதென்றே புரியாது ஓரக் கண்களால் அவர்களை அவதானித்துக்கொண்டிருந்தான்.

அந்த இளைஞன் எதோ கோபத்துடன் கேட்டுக்கொண்டிருந்தான்.அவளோ அப்பாவி போல ஏதும் பேசாது அவன் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவள் எழும்பிப்போக முயற்சித்தாள்.இளைஞனோ அவளுடைய கைகளைப்பிடித்து அமரவைத்தான்.
தனது மொபைலை எடுத்து யாருக்கோ பேச முயற்சித்தாள்.ஆனால் மறுகணம் அவன் அவளிடமிருந்து மொபைலை கைப்பற்றிக்கொண்டான்.
மீண்டும் எதோ அவளிடம் கேட்டான்.
அவள் மௌனமாக இருந்தாள்.
-------
எதிர் பாராத விதமாக பளாரென அவள் கன்னத்தில் அறைந்தான்.
ஆனால் அவளோ எந்த சலன்மும் இன்றி இருந்தாள்.
இவர்களுடைய சிறு யுத்தத்தை வேறு யாரும் கண்டு கொள்ளவில்லை.
சிவா மட்டுமே அவதானித்துக்கொண்டிருந்தான்.அவளுக்கு உதவ வேண்டும் என்ற அவா ஒருபக்கம். ஏன் வீண் வம்பு என்று தயக்கம் இன்னொரு பக்கம்.சிவா தன்னுடைய வேலைகளை அப்படியே வைத்து விட்டு இவர்களுடைய செயலை அவதானித்துக்கொண்டிருந்தான்.
நேரடியாகப்போய் என்ன பிரச்சினை என்று கேட்கவும் முடியாது.தனக்கு அவர்களுடைய பிரச்சினை தெரியும் என்று காட்டிக்கொள்ளவும் முடியாது.அந்த இளைஞன் தனக்கு தெரியும் என்று அறிந்தால் இன்னும் பிரச்சினை ...அதனால் சிவாவும் மௌனமாக இருந்தான்.
மீண்டும் அவள் எதோ அந்த இளைஞனிடம் சொல்லிவிட்டு எழுந்து வந்தாள்.
" கன் ஐ யூஸ் யுவர் டொய்லெட்"
"சுவர்" என்று சிவா சொன்னதும் அவசரமாக மேசையின் மீதிருந்த பேனாவையும் காகிதம் ஒன்றையும் லபக்கென கையில் பொத்தியவாறு டொய்லெட்டை நோக்கினாள்.
அந்த இளைஞனுக்கோ இங்கு நடக்கும் இவளின் செயல் அறிய வாய்ப்பிருக்கவில்லை.
சில வினாடிகளில் டொய்லட்டிலிருந்து வந்தவள் சிறுகாகிதத்தையும் பேனாவையும் சிவாவின் கையில் தினித்து விட்டு மீண்டும் அந்த இளைஞன் அருகே போய் அமர்ந்தாள்.

சிவா காகிதத்தை நோக்கினான்.
"என்னுடன் வந்திருப்பவன் பெயர் ராஜா.அவன் முகத்தை நன்றாக ஞாபகத்தில் வைத்துக்கொள்.உனது உதவி எனக்கு தேவைப்படும்.மீண்டும் உன்னை தனியே சந்திபேன்.தன்ங்ஸ் போ யுவர் கெல்ப்.ஐ ஆம் கீதா.

அவள் பெயர் கீதா. அவன் பெயர் ராஜா.
அவ்வளவு தான் சிவாவுக்கு கிடைத்த விடை.ம்...பெரு மூச்சு விட்டவாறு காகிதத்தை மடித்து தனது பேர்சுகுள் பத்திரப்படுத்திக்கொண்டான்.
ஒரு மணி நேரம் கழிந்தது..
அவர்கள் நெட் ப்ரௌசினுக்கு கேட்டிருந்த நேரம் முடிந்தது.
இருவரும் காசு கொடுப்பதற்காக சிவாவிடம் வந்தார்கள்.சிவா ராஜாவின் முகத்தை நன்றாக உற்று நோக்கி தனது மனத்திரையில் பதிவு செய்து கொண்டிருந்தான்.
" எவ்வளவு " ராஜா கேட்டான்
" 50 ரூபா" என்றான் சிவா
அவன் உடனே 100 ரூபா நோட்டை நீட்ட சிவா அதை

எடுத்துக்கொண்டு பாக்கிப்பணத்தைக்கொடுத்தான்.
"தாங்ஸ்" என்றவாறு பணத்தை வாங்கிக்கொண்டு வெளியேறினான்.கீதாவும் அவனைப்பின் தொடர்ந்தாள்.
என்னடா இது என்று புரியாத புதிராய் சிவா அவர்கள் மறையும் வரை பார்த்துக்கொண்டிருந்தான்

**********

கதிரவன் மெல்ல மெல்ல உலகை எட்டிப்பார்த்துக்கொண்டிருந்தான்.அவனின் வருகை கண்டு இருள் மெதுவாய் ஓடி ஒழிய வெளிச்சம் எங்கும் படர்ந்து கொண்டிருந்தது.
"கா..கா.." " கீ..கீ".."கூ..க்.கூ" "கொக்கர கோ..."கீச்..பீச்.....என பறவைகளும் பிராணிகளும் தத்தமது பாசையில் கத்தியவாறு இரை தேடி விரைந்து கொண்டிருந்தன.
மக்கள் காலைக் கடங்களை முடித்து விட்டு தத்தமது அலுவல்களுக்காக விரைந்து கொண்டிருந்தார்கள்.


மொத்தத்தில் அந்த ஊரே பம்பரமாக சுழன்று கொண்டிருந்தது..
ஊரின் முச்சந்தியில் சிறு பஸ் தரிப்பு நிலையம்.அது அவ்வூரின் இளைஞர் கழகத்தின் இலவச சேவைகளில் ஒன்று.இச்சிறு பஸ் தரிப்பு நிலையம் பலவருடங்கள் பழமை வாய்ந்தாலும் அதன் சேவை நிகரற்றது. தர்ந்த கட்களும் உடைந்த கூறையும்..சுவரில் கிறுக்க பட்டிருந்த , " ஐ லவ் யூ கீதா" " அகமட் +ரபீகா" " எம் + எஸ் " லவ்" என்ற பல வர்ண வாசகங்களும் பஸ் தரிப்பு நிலையத்தின் வயதை எடைபோட்டுக்கொண்டிருந்தது.
6 மணி பஸ்ஸுக்காக அங்கே மக்கள் காத்துக்கொண்டிருந்தார்கள்.
அதே நேரம் பஸ் தரிப்பு நிலையத்தின் ஓர் ஒரத்தில்.....

தொடரும்....
இனி உங்கள் கற்பனையில் தொடரும்