PDA

View Full Version : திசைமாறிய பாதைகள் - 2வெண்தாமரை
30-07-2007, 10:12 AM
ஆம்; அலுவலக வாசலில் நின்று கொண்டு அவளது செல்பேசிக்கு தகவல் கொடுக்கிறான் நான் உன் ஊரில்தான் இருக்கிறேன். அதுவும் உன் அலுவலக வாசலில்தான். அதுவும் விளையாட்டுக்கு என எண்ணுகிறாள். பின்னர் செல்பேசியை அவனுடன் பேசியபடியே வெளியே
வருகிறாள்.. ஆமாம் அவனேதான்.. அவன் அவன் என்கிறேன்.

யார் அந்த அவன்........................................????

ஆமாம் சிங்காரசோலையாம் சென்னையை பிறப்பிடமாக கொண்டவன்.. பெயர்:ஜீவா.(பெயர் மாற்றப்பட்டுள்ளது). உயரம்: 6.25 படிப்பு: பாலிடெக்னிக் முடித்து தொலைநிலைக்கல்வியில் இளநிலை பயில்பவன்.. 3-வருடத்திற்கு முன்னால் இராணுவத்தில் பணிபுரிந்தவன்.. உடன் பிறந்தோர்: ஒரு

அண்ணன்.. பெற்றோர்கள்: அம்மா வீட்டு அதிகாரி அப்பா - மளிகை கடை வைத்திருப்பவர்.. இத்துடன்

அவர் வேறு மதத்தை சார்ந்தவர். அம்மா இளநீர் என்றால் அப்பா வெந்நீர் ரொம்ப கண்டிப்பானவர். இனி இவர்களைப்பற்றி.. சாட்டிங்கில் தன்னைப்பற்றி முழு விபரங்களையும் சொன்னாள்.. அத்தோடு தன் நிலைமையையும் எடுத்துரைத்தாள்.. நேரில் வந்தவனை பார்த்தவளுக்கு கண்ணீர் தான் வந்தது.. பார்த்ததும் கதறி அழுதுவிட்டாள்.
உடனே கண்ணீரை துடைத்துவிட்டான்.. கண்ணீரை துடைத்துவிட்டு உன் அப்பா எங்கே என்றான்.. இப்போது வந்துவிடுவார்.. உட்காருங்கள் என்று பக்கத்தில் இருந்த நாற்காலியை காட்டினாள்.. அப்புறம் அம்மா அண்ணன்கள் பற்றி தனது வாழக்கையை பற்றி சொன்னாள்.. அவன் தன்னை உண்மையாக நேசிப்பதாக நினைத்து.... பின்னர்

அவளது அப்பா வந்தார்.. இயல்பான உரையாடல் பின்னர் அவனிடம் நீ அவளை உண்மையாக விரும்புகிறாயா. பழகி கொஞ்ச நாளில் இவளை உனக்கு பிடித்துவிட்டதா என்றார்.. அப்படி என்ன குணங்கள் உனக்கு பிடித்துவிட்டது. என்றார்.

அதற்கு அவன் உங்கள் பெண்ணின் எளிமை எனக்கு பிடித்திருக்கிறது. அழகு பிடித்திருக்கிறது. அப்புறம் பண்பு பிடித்திருக்கிறது.. என்றான்.. சரி உங்கள் வீட்டில் இது தெரியுமா என்றார். இல்லை இனிமேல்தான் சொல்ல வேண்டும்.. சரி நீங்கள் வீட்டில் சொல்லி ஒரு முடிவு வரும்வரை நீங்கள் இருவரும் அதுவரை நண்பர்களே! என்று சொல்லிவிட்டு சென்றார்.. பின்னர் அவள் அவனிடம் நீங்கள் உங்கள் வீட்டில் சொல்லி என்னை திருமணம் செய்து கொள்வீர்களா? என்னை
விட்டு விட மாட்டீர்களே! என்றாள்.. அதற்கு மாட்டேன்.. இது உன் மீது சத்தியம் என்று சத்தியம் செய்தான்.. அத்துடன் எனக்கு நேரமாகி விட்டது நான் புறப்படுகிறேன் என கூறி நெற்றிப்பொட்டில் முத்தமிட்டு சென்றான்.. பின்னர் அவர்கள் நண்பர்களாக அல்ல காதலர்களாக கோலம் மாறினார்கள்..
நேரம் போதவில்லை..

தொடரும்........... [/MEDIA][/MEDIA]

அமரன்
30-07-2007, 10:16 AM
என்னங்க சூர்யகாந்தி..எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டு போகிறது சம்பவப்பகிர்வு. தொடருங்கள்..

வெண்தாமரை
30-07-2007, 10:26 AM
நண்பர் அமரன் அவர்களே! நன்றி! இது வெறும் கதையல்ல உணர்ச்சிக்குவியல்.

அமரன்
30-07-2007, 10:31 AM
ஆம் தோழி..உணர்ச்சிக்குவியலின் பகிர்வு இவ்விழை.
ஒவ்வொரு எழுத்திலும் அது இழையோடுகிறது..தொடருங்கள்.

சிவா.ஜி
30-07-2007, 10:39 AM
உணர்ச்சிகளின் குவியலை ஒருங்கிணைத்து சொல்ல எழுத்தில் ஆளுமை வேண்டும். அந்த ஆளுமை உங்கள் எழுத்துக்களில் தெரிகிறது. தொடருங்கள் சூரியகாந்தி வாழ்த்துக்கள்.

தளபதி
30-07-2007, 11:34 AM
வரிகளில் தமிழ் மேல் உங்கள் ஆளுமை தெரிகிறது. நன்றாக கொண்டு செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

அன்புரசிகன்
30-07-2007, 11:43 AM
இது நல்லா இல்ல.... ஆமா சொல்லிப்புட்டேன்.. இதிலும் பார்க்க கோலங்கள் நாடகம் பரவாயில்லை. :D :D :D :D பொறுத்த இடங்களில் வந்து தொடரும் போடுறீங்களே...
அழகாய் படைத்திருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

வெண்தாமரை
30-07-2007, 12:16 PM
கோலங்கள் நாடகத்தின் பரம ரசிகராக தாங்கள். நான் சொன்னது அவளது வாழ்க்கை கோலம்..

இனியவள்
30-07-2007, 02:42 PM
படிக்க படிக்க அருவியாய்
ஓடுகின்றது உணர்ச்சிகள்
வாழ்த்துக்கள் சூரியகாந்தி

அக்னி
31-07-2007, 01:30 PM
உங்கள் உணர்ச்சிக் குவியலில் விறுவிறுப்பு இருந்தாலும்,
கூடவே மனதில் ஒரு சோகத்தையும் இழையோடிப் போகின்றது...