PDA

View Full Version : பேனா.....!



ஓவியன்
30-07-2007, 04:19 AM
பேனா என்ற தலைப்பில் இங்கே குறுங் கவிதைகளைப் பதிக்கலாம் என எண்ணுகிறேன், நண்பர்களே உங்கள் பதில் கவிதைகளையும் அவிழ்த்து விடுங்கள்....!:natur008:

கதை பல சொல்லி
கதை பல முடிக்கும்
அரையடி நண்பன்.......!

ஓவியன்
30-07-2007, 04:28 AM
வேண்டியதைக் கேள்
வேண்டும் வரம் தருவேன்,
கனவிலே கடவுள்......!

வேண்டி வந்தேன்
ஒரு பேனா,
அநீதியைச் சாடவென்று.......!

சிவா.ஜி
30-07-2007, 04:34 AM
எழுதுகோலுக்கு எழுத்தால் மாலை கோர்க்கத் தொடங்கியிருக்கும் ஓவியனுக்கு
வாழ்த்துக்கள்.

அவலங்களையும் எழுதும்!
அநீதிகளையும் எழுதும்!
நல்லதையும் எழுதும்,
நவீன உலகின் நக்கீரன்!

ஓவியன்
30-07-2007, 04:41 AM
நீதியை முழக்கி
நீட்டி எழுதியதால்
பேனாக்களின் உடலெங்கும்
துப்பாக்கிச் சிதறல்கள்........!


பி.கு - ஈழத்தில் இன அழிப்பில் தமிழருக்காய் குரல் கொடுக்குன் பேனாக்கள் காலத்திற்கு காலம் வேரறுக்கப் பட்டுக் கொண்டே இருக்கின்றன - பேரினவாதப் பூதத்தால்!.

ஓவியன்
30-07-2007, 04:58 AM
வெரித்தாஸ் கேட்டதால்
அறையப்பட்டன பேனாக்கள்,
பலர் காதுக்குள்.......!

அட
நல்லதும் கெட்டதும்
பாவிப்பதில் இல்லை
பாவனையிலே உள்ளது!.

சிவா.ஜி
30-07-2007, 05:04 AM
விதி எழுதி
கதை முடித்து
முள் உடைக்கப்பட்ட
பேனாக்கள் சொல்கின்றன
நீதியால் செய்யப்பட்ட
சட்டபூர்வ கொலைகளின்
எண்ணிக்கைகளை!

ஓவியன்
30-07-2007, 05:10 AM
அருமை சிவாஜி!


சதி எழுதி
சதிராடி
சாய்க்கப் படுகின்றன
பேனாக்கள்......!
பத்திரிகைச் சுதந்திரத்திர
நாடுகளில்............!

ஓவியன்
30-07-2007, 05:16 AM
கதை எழுதிக்
கதை சொன்ன
காதலியின் பேனாக்கள்
இப்போதும் உறுத்துகின்றன
என் சட்டைப் பையில்!

அடச்சே வாங்கக்கூடாதாமே
அன்பளிப்பாய் ஒரு பேனாவேனும்........!

ஓவியன்
30-07-2007, 05:29 AM
பென்
பேனையாகி பின்
பேனாவாகி.........

அட
என்ன மாதிரி
மருவுகின்றன
பேச்சுவழக்கில் சொற்கள்!.

ஓவியன்
30-07-2007, 05:54 AM
பேனாக்களின் கண்ணீரும்
துப்பாக்கிக் கவிதைகளும்
மீட்டு வருமா
தொலைந்த எம்
பூபாள இராகத்தை............?

சிவா.ஜி
30-07-2007, 06:21 AM
அசத்துறீங்க ஓவியன். அத்தனையும் அழகு. இன்னும் அசத்துங்க.

ஓவியன்
30-07-2007, 06:28 AM
மிக்க நன்றிகள் சிவாஜி!

இப்படி ஒரே தலைப்பிலான குறுங்கவிதைகள் எம் சிந்தனைகளை வளர்க்க நன்றே உதவும்.......

இப்படி ஒரு குறுங்கவிதை அமர் எழுதினார் அரிசியல் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10304) என்று ஏராளமான பின்னூட்டங்கள் கவிதையாகவே வந்தன அதற்கு.........

இளசு
30-07-2007, 06:30 AM
ஓவியனுக்கும் சிவா.ஜிக்கும் வாழ்த்துகள் சொல்லி...

விரல் தூரிகை எழுதுகோல்..
கருவிகள் பல*
காரியம் ஒன்றே!

ஓவியன்
30-07-2007, 06:47 AM
அன்பான இளசு அண்ணா!

Join Date: 31 Mar 2003
Posts: 12,001

உங்கள் பதின்மூவாயிரத்தை நோக்கிய பயணத்தின் முதற் பதிவு இந்த திரிக்குக் கிடைத்தமை எனக்குக் கொள்ளை மகிழ்ச்சியே........

மிக்க நன்றிகள் அண்ணா!.

அமரன்
30-07-2007, 07:40 AM
ஆஹா.....ஓவியன் சிவா அருமையான கவிதைகள்..அட போட்டு பயத்தில் ஓட வைக்கும் வரிகள்..ஓடமுன்னர் வாழ்த்துக்கள் சொல்லி விடுகிறேனே....வாழ்த்துக்கள் தோழர்களே..எழுதுங்கள் தோழர்களே.

ஓவியன்
30-07-2007, 07:49 AM
உம்மைக் குறிவைத்துத் தொடக்கப் பட்ட திரியிது - ஓடுகிறேன் என்றால் என்ன நியாயம்?

அமரன்
30-07-2007, 07:56 AM
பதுமைகளாய் இருந்தவர்களை
புதுமை யாக்கிய புதுமை..
பெனா...

(சிலநாட்களுக்கு கவிதை என்ற பெயருடன் ஏதாவது கிறுக்கி நண்பர்களை அழவைக்கவேண்டாம் என நினைத்தேன். விடமாட்டீங்களே...)

ஓவியன்
30-07-2007, 08:08 AM
பழமை கழிந்து
புதுமை புகுத்த
காணமல் போகின்றன
பேனா மைகளும்.......!

அமரன்
30-07-2007, 08:08 AM
வர்ணங்கள் மாறினாலும்
வடிவங்கள் மாறினாலும்
வர்ண வருடிகளுக்கு
வெடியாயிருப்பது...பேனா....

ஓவியன்
30-07-2007, 08:20 AM
திடுக்கிட்டு விழித்தேன்!
என் சட்டைப் பைப்
பேனாவின் அழுகை
விசும்பலில்.......

நான் வர்ணங்களைத்
தொலைக்கையில் தானும்
தொலைத்ததால் இப்படித்தான்
அடிக்கடி அழுது
என் நித்திரையைக்
கெடுக்கிறது.....!

அமரன்
30-07-2007, 08:20 AM
அடிமை வாழ்வின்
விடியல் தூதுவன்
பேனா.

அமரன்
30-07-2007, 08:22 AM
கோடுகள் போட்டு
கோடுகளை தகர்க்கும்
அதிசயப் பிறவி
பேனா....

அமரன்
30-07-2007, 08:23 AM
வெண்ணிற காகிதங்களை
வண்ணங்கள் ஆக்கி
எண்ணங்கள் சுமக்கும்
உறவுப்பாலம்...பேனா.

ஓவியன்
30-07-2007, 08:27 AM
வர்ணங்கள் மாறினாலும்
வடிவங்கள் மாறினாலும்
வர்ண வருடிகளுக்கு
வெடியாயிருப்பது...பேனா....
அழகான வரிகள் அமர், வர்ணவருடிகள் மட்டுமல்ல வர்ண மாறிகளும் கூட......!

அமரன்
30-07-2007, 08:29 AM
நன்றி ஓவியன்...மாற்றம் அருமை..உம் கவிதைகள் மிக அருமை...
என் பங்கில் இன்னொன்று

இசைக்கா மூங்கில்காடுகளுக்கு
ஓசை கொடுக்கும் முங்கில்
பேனா...!

ஓவியன்
30-07-2007, 08:40 AM
அமர்!
சின்ன சின்ன வரிகளில் அழகழகான கவிதைகள்!
கலக்கிட்டீங்கப்பூ!

அமரன்
30-07-2007, 08:42 AM
பொய்மையை உரிக்கும்
உண்'மை'யின் உருவம்
பேனா..

அமரன்
30-07-2007, 09:06 AM
உணர்வு மகவுகட்கு
பிரசவம் பார்க்கும்
உணர்வில்லா வைத்தியன்.
பேனா...

சிவா.ஜி
30-07-2007, 09:16 AM
அமரன் கலக்குறீங்க. சின்னச்சின்னதாய் செதுக்கப்பட்ட வரிகள்.

அமரனின் கையில்
பேனா தூரிகையானது!
ஓவியனின் கையில்
தூரிகை பேனாவானது!

ஓவியன்
30-07-2007, 09:16 AM
உணர்வை மையாக்கி
உண்மையை வரியாக்கி
வரலாற்றுத் தாள்களில்
ஓடிய பேனாக்கள்
ஓய்வதில்லை.....

வேண்டுமானால்
கை மாறக்கூடும்,
ஆனால் கதை
மாறுவதில்லை......!

ஓவியன்
30-07-2007, 09:18 AM
அமரனின் கையில்
பேனா தூரிகையானது!
ஓவியனின் கையில்
தூரிகை பேனாவானது!

அடடே மிக்க நன்றிங்க சிவா.ஜி!

அமரன்
30-07-2007, 09:24 AM
நன்றி சிவா..என்னமா.... யோசிக்கிறீங்க இங்கேயும் எங்கேயும்..அதான்.. வெற்றிகள் தேடி வருகிறது உங்களை...

போர் முனைப்பில்
ஏர்முனை மழுங்கையில்
வாளாயிருப்பது
பேனா முனை....

சிவா.ஜி
30-07-2007, 09:45 AM
ஒழுக்கம் பேணா..பேனா
போய்விடும் வீணா,
உண்மை உரைக்கும் பேனா
உயர்ந்துவிடும் தானா!

ஓவியன்
30-07-2007, 09:54 AM
வளவாதிருப்பதல்ல*
வாளாயிருப்பதே
பேனா.........!

என்று உரைத்த அமருக்கு நன்றிகள்!:nature-smiley-002:

ஷீ-நிசி
30-07-2007, 10:13 AM
அடடா.... வாழ்த்துக்கள் ஓவியன்...

கவிதை குழந்தைகளை அன்றும் இன்றும் பெற்றெடுப்பது இந்த பேனா தானே!

அதற்கு கவி பாட விழைந்த நண்பர்கள் சிவா மற்றும் அமரன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்!

இன்னும் இந்த திரியை சிறப்பிக்க இருக்கும் நம் மன்ற கவிஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்!

நாங்கள் விடும் கண்ணீருக்கு
எந்நாளும் நிறங்களில்லை...
நீ விடும் கண்ணீரில்
இல்லாத நிறங்களேயில்லை!

சிவா.ஜி
30-07-2007, 11:12 AM
வந்து விட்டது ஷீ−யின் டச். அசத்தலான கவிதை.பாராட்டுக்கள் ஷீ.

அமரன்
30-07-2007, 12:40 PM
வளவாதிருப்பதல்ல*
வாளாயிருப்பதே
பேனா.........!

என்று உரைத்த அமருக்கு நன்றிகள்!:nature-smiley-002:

கருவி நானாகிலும்
காரணம் நீயல்லவா..
களமமைத்துக் கொடுத்த
தளபதி உனக்கு...
தலைவணங்குகிறேன்..
சொல்கிறது என்பேனா.....

இவ்விழைக்கு ஷீ இழைத்த மகுடம் ஜொலிக்கிறது...பராட்டுக்க்கள்.

அமரன்
30-07-2007, 12:45 PM
தனிமை போக்கும்
இனிமைக் காதலி
பேனா..!

அமரன்
30-07-2007, 12:46 PM
பகைமை விரட்டும்
அருமை நண்பன்
பேனா...!

இனியவள்
30-07-2007, 12:46 PM
பேனா எழுத்தாளர்களின்
உயிர் நாடி..
விலையோ சிறியது
செய்யும் காரியமோ
பெரியது....

அமரன்
30-07-2007, 12:48 PM
இதுவரை நான் சொன்னவற்றினை ஒரு கவிதையில் சொல்லும் முயற்சி.

தனிமை தாங்கி
பலமை நீக்கி
புதுமைகள் ஆக்கும்
புலமை பித்தன்.

இதயம்
30-07-2007, 12:49 PM
விதி எழுதி
கதை முடித்து
முள் உடைக்கப்பட்ட
பேனாக்கள் சொல்கின்றன
நீதியால் செய்யப்பட்ட
சட்டபூர்வ கொலைகளின்
எண்ணிக்கைகளை!

அசத்தல்..!

இனியவள்
30-07-2007, 12:56 PM
பேனா பிடிப்பவர்கள்
எடுக்கின்றனர் ஓட்டம்
துப்பாக்கி எடுக்கும்
கயவர்களைக் கண்டு

இனியவள்
30-07-2007, 12:57 PM
இருண்டு இருக்கும் நீதியை
வெளிச்சத்துக்கு கொண்டு
வருகின்றது பேனா

இனியவள்
30-07-2007, 12:59 PM
கண்மூடி கை நீட்டி
இருளில் இருக்கும்
நீதியை பேனா கொண்டு
இன்னும் இருட்டுக்குள்
தள்ளி கெடுக்கின்றனர்
பேனாவின் மகிமையை
பாலில் கலந்த விஷமாய்
சில கயவர்கள்

அமரன்
30-07-2007, 12:59 PM
அமர்க்கள வீரரின்
துப்பாகிகள் இறங்கும்
பேனாப் போராளிகளின்
வருகை காண்கையில்..

இனியவள்
30-07-2007, 01:02 PM
பேனாவை ஆயுதமாக்கி
போராடுகின்றனர் அரசியல்
என்னும் யுத்த களத்தில்

ஓவியன்
30-07-2007, 01:15 PM
நாங்கள் விடும் கண்ணீருக்கு
எந்நாளும் நிறங்களில்லை...
நீ விடும் கண்ணீரில்
இல்லாத நிறங்களேயில்லை!
உங்கள் பின்னூட்டக் கவிதை இந்த திரியின் வெற்றிக்குக் கட்டியம் கூறுகிறதே.............

மிக்க நன்றிகள் ஷீ!

இனியவள்
30-07-2007, 01:17 PM
ஊற்றெடுக்கும் எண்ணக்
கருக்களை வடிகட்டும்
அழகிய வடிகட்டி பேனா

ஓவியன்
30-07-2007, 01:19 PM
கருவி நானாகிலும்
காரணம் நீயல்லவா..
களமமைத்துக் கொடுத்த
தளபதி உனக்கு...
தலைவணங்குகிறேன்..
சொல்கிறது என்பேனா.....[/COLOR]
அடடே இது எனக்கா அமர்.............!

ஆனாலும் கொஞ்சம் ஓவர் தான்.................!:nature-smiley-008:
ஆனால் அழகான வரிகள் அமர்.....! :4_1_8:

அமரன்
30-07-2007, 01:21 PM
அடடே இது எனக்கா அமர்.............!
ஆனாலும் கொஞ்சம் ஓவர் தான்.................!:nature-smiley-008:
ஆனால் அழகான வரிகள் அமர்.....! :4_1_8:

இறுதியில் ? போட மறந்ததால் உமக்காகிவிட்டது போலும்...சரி சரி..வைத்துக்கொள்ளும்..

(யாருக்கு தெரியும் எனக்காக என்பேனா சொன்னதோ தெரியாது..தமிழுக்காக நான் சொன்னதோ தெரியாது...)

ஓவியன்
30-07-2007, 01:21 PM
ஊற்றெடுக்கும் எண்ணக்
கருக்களை வடிகட்டும்
அழகிய வடிகட்டி பேனா

அடடே இனியவள், என்னமோ எதோ குறையுதே என்று நினைத்திருந்தேன் − குறை நீக்குகின்றன உங்கள் கவிதைகள்!.

சிவா.ஜி
30-07-2007, 01:25 PM
அடைக்கப்பட்ட
அறிவுப் பெட்டகத்தை
திறக்கின்ற திறவுகோல்
இந்த எழுதுகோல்!

ஓவியன்
30-07-2007, 01:26 PM
பேனாக்களைக் கொன்று
துப்பாக்கியால் கவி
வரைந்தது கயவர்
கூட்டம்.......................!

வெளிச்சத்திற்கு
கொணர்ந்து நியாயம்
கேட்டன அதே
பேனாக்கள.............!

அமரன்
30-07-2007, 01:29 PM
அசத்தலப்பூக்களே....சிவா....ஓவியன்...

ஓவியன்
30-07-2007, 01:29 PM
அடைக்கப்பட்ட
அறிவுப் பெட்டகத்தை
திறக்கின்ற திறவுகோல்
இந்த எழுதுகோல்!

பெட்டக அறிவை
எட்டு திக்கிலும்
கொட்டி முழக்குவதும்
இதே எழுதுகோல்.........!

சிவா.ஜி
30-07-2007, 01:33 PM
எழுகின்ற எண்ணங்களை
விரல் வழியே கடத்தி
வெள்ளைத்தாள்களை
உள்ளத்தாள்களாக்கும்
நல்லக் கடத்தல்காரன்
நம் கையின் பேனா!

இனியவள்
30-07-2007, 01:37 PM
கெட்டதிற்கு
முற்றுப்புள்ளி
பேனா வைக்கும்
இறுதிப்புள்ளி

அக்னி
30-07-2007, 07:02 PM
கறுப்பாய்க்,
கருமைக்குள்,
ஓடித்திரிந்து,
தலையை பிராண்டவைக்கும்,
நீ...
பேயா..? பேனா..?

பேனாவுக்குக் குறுங்கவிதை நன்றா..?

விகடன்
30-07-2007, 07:13 PM
விரலிடுக்குகளில்
வினோதப் பணி புரிந்து
வினைகளை களைந்தெறியும்
விசித்திரப் பிறப்பு

அக்னி
30-07-2007, 07:17 PM
எனது பேனா கவிதைக்கு யாருமே கருத்து சொல்லவில்லையே....

அமரன்
30-07-2007, 07:19 PM
கறுப்பாய்க்,
கருமைக்குள்,
ஓடித்திரிந்து,
தலையை பிராண்டவைக்கும்,
நீ...
பேயா..? பேனா..?
பேனாவுக்குக் குறுங்கவிதை நன்றா..?
வெண்மைக்குள் ஓடித்திருந்தால்
பேனா
கறுமைக்குள் ஓடித்திருந்தால்
பேன்
கருமைக்குள் வெண்மையெனில்
பேய்

அக்னி
30-07-2007, 07:20 PM
வெண்மைக்குள் ஓடித்திருந்தால்
பேனா
கறுமைக்குள் ஓடித்திருந்தால்
பேன்
கருமைக்குள் வெண்மையெனில்
பேய்

அபாரம் அமரன்... வார்த்தை ஜாலம் கவர்கின்றது...

அமரன்
30-07-2007, 07:22 PM
அபாரம் அமரன்... வார்த்தை ஜாலம் கவர்கின்றது...

இதற்குப் பதில் இங்கே..http://www.tamilmantram.com/vb/showpost.php?p=246032&postcount=37

இளசு
30-07-2007, 08:02 PM
ஒரு தமிழ்ராட்டினம் சுற்றிய குழந்தையாய் குதூகலம்..

வர்ணம், தீர்ப்பு, நிறம் என எத்தனை வார்த்தை ஓவியங்கள்!
விரல்களால் தட்டச்சி, எழுதுகோலுக்கு விழா எடுக்கும் அனைவருக்கும்
வாழ்த்துகள்..

−−−−−−−−−−−−−−−−−−
வாராவாரம் மணிக்கணக்கில் பேசினாலும்
பெற்றவரை நெகிழவைத்ததோ போனவார
அரைத்தாள் கடிதம்தான்!

சிவா.ஜி
31-07-2007, 04:27 AM
விரலிடுக்குகளில்
வினோதப் பணி புரிந்து
வினைகளை களைந்தெறியும்
விசித்திரப் பிறப்பு

அருமை விராடன்.பேனாவுக்கு புதுப்பரிமாணம் கண்ட உங்களுக்கு வாழ்த்துக்கள்.

சிவா.ஜி
31-07-2007, 04:30 AM
கறுப்பாய்க்,
கருமைக்குள்,
ஓடித்திரிந்து,
தலையை பிராண்டவைக்கும்,
நீ...
பேயா..? பேனா..?

பேனாவுக்குக் குறுங்கவிதை நன்றா..?

நன்று நன்று மிக நன்று. அக்னியின் அசத்தல் சிந்தனை. அழகான சிலேடை.இன்னும் அசத்துங்கள் அக்னி.

அமரனின் பதில் கவிதை பிரமாதம்.பாராட்டுக்கள் அமரன்.

அக்னி
31-07-2007, 10:00 AM
மனதின் உணர்வுகள்...
விரல்களின் துடிப்புகள்...
வார்த்தைகளாய்ப்
பிரசவிக்க
தன் குருதி சிந்தும்,
தாயாக...
பேனா...

அக்னி
31-07-2007, 10:02 AM
விரல்களில்
ஊஞ்சல் கட்டி ஆடியது
பேனா...
தான் சந்தோஷிக்கவல்ல...
நாம் பயன்பெற...

அக்னி
31-07-2007, 10:04 AM
தனது ஓட்டத்தில்,
தனது உயிரைத்
தேய்மானமாக்கி...
தனது உயிர் இழந்து,
எமது எழுத்துக்கு,
சாகாவரம் தரும்..,
தியாகி...
பேனா...

விகடன்
31-07-2007, 10:11 AM
செவிவழிக் கல்வியை
விளிவழியாக்கி
பரம்பரைக் கல்வியை
பலரடைய வைத்தது .....இந்தப் பேனா!

ஓவியன்
31-07-2007, 10:23 AM
இரத்தமில்லா யுத்தம்
ச*த்தமில்லா யுத்தம்
சாத்தியமா?

சாத்தியமே
ஓயாமல் சமராடுகிறது
பேனா.............!

சிவா.ஜி
31-07-2007, 11:59 AM
விசை தட்டும்
விரல்களே
எழுதுகோலாகிவிட்டதால்
கணிணியின் பேனா
கைவிரல் என்'பேனா'

என்னுடைய ஆயிரமாவது பதிவை எழுத்துக்கு மூலமாய் இருக்கும் எழுதுகோலுக்கு அர்ப்பணிக்கிறேன்.

அமரன்
06-08-2007, 09:43 AM
காலையில் ஊற்றுப்பேனாவின் மை முடிந்தபோது எழுந்தபொறி பழைய நினைவுகளிலும் பற்றிவிட கொளுந்துவிட்ட கவிதை இது.

முடிந்த மையை நிரப்புகையில்
வாழக்கற்றுக் கொடுத்த
ஊற்றுப்பேனா
இறந்து உயிர்க்கையில்
வாழ்க்கையை போதித்தது.

ஓவியன்
06-08-2007, 09:46 AM
காலையில் ஊற்றுப்பேனாவின் மை முடிந்தபோது எழுந்தபொறி பழைய நினைவுகளிலும் பற்றிவிட கொளுந்துவிட்ட கவிதை இது.

அடடே ஊற்றுப் பேனாதான் பாவிக்கிறீங்களா ? − அருமை, கவிதையும் தான் :nature-smiley-008:

சிவா.ஜி
06-08-2007, 09:47 AM
அசத்தல் அமரன். இப்படித்தான் சில சமயங்களில் தட்டும் பொறி அருமையாக அமைந்து விடுகிறது.வாழ்த்துக்கள்.

இலக்கியன்
06-08-2007, 09:53 AM
பேனா...
எண்ணங்களை
வரிவடிவமாக்கும்
உளி

ஓவியன்
06-08-2007, 10:00 AM
வித்தியாசமான கற்பனை இலக்கியன் − பாராட்டுக்கள்!. :nature-smiley-008:

kalaianpan
09-08-2007, 04:16 PM
சும்மா கலக்கிட்டீங்க சார்..........

ஓவியன்
09-08-2007, 10:28 PM
நன்றி கலை!.

அக்னி
09-08-2007, 10:42 PM
இரத்தம் கக்கி,
ஆயுளைக் குறைக்கும்
பேனா..!
சரித்திரம் ஆகி,
சாதனை படைக்கும்
ஆனால்..!

ஓவியன்
09-08-2007, 10:46 PM
ஆனால்
சரித்திரம் படைக்கும்
பேனாக்கைகள்
இன்னமும்
தரித்திரதில்.............

அக்னி
09-08-2007, 10:55 PM
ஆனால்
சரித்திரம் படைக்கும்
பேனாக்கைகள்
இன்னமும்
தரித்திரதில்.............

திறம் கொண்ட
கைகளில் தவழ்ந்தாலே,
சரித்திரம்...
மடம் கொண்ட
கைகளில் நடந்தாலும்,
தரித்திரம்...

ஓவியன்
09-08-2007, 11:10 PM
திறமும்
மடமும்
தேடி வருவதில்லை,
நாமாகத்
தேடிக் கொள்வதே!

அக்னி
09-08-2007, 11:19 PM
தேடி கொண்டாலும்,
மூடிக் கொண்டால்,
கூடிக் கொண்டாலும்,
பயனில்லை...
பேனாவும், நாமும்...

ஓவியன்
09-08-2007, 11:25 PM
மூடி வைத்திருப்பதெல்லாம்
வீணாகாதிருப்பதற்கே.............,
எம்மையும், பேனாவையும்!

அக்னி
09-08-2007, 11:30 PM
பேனா பேசுவது...
நிரந்தரம்...
எம் நா பேசுவது...
கண நேரம்...

ஓவியன்
09-08-2007, 11:35 PM
கண நேரக்
கவிதைகளை
நிரந்தமாக்குவது
பேனாக்கள்...........

அக்னி
09-08-2007, 11:45 PM
கவியாக தைகள்...
காரணம் இந்தப்
பேனா..?
மாட்டியதால்,
நகவிடுக்கில்
நசிபட்டு,
ரத்தம் சிந்தியது...

(இருபார்வையில்...)

அமரன்
10-08-2007, 12:11 AM
ரத்தம் சிந்தினாலும்
யுத்தம் செய்து
நித்தம் நம்
முத்தம் கூட்டவது
பேனா.....!

நான் ரொம்ப நல்ல பையனாக்கும்

ஆதவா
10-08-2007, 12:42 AM
இப்பொழுதுதான் இந்த திரியையைப் பார்க்கிறேன்.... பல நல்ல கவிதைகள் காணக்கிடைக்கின்றன..
பேனா கவிதை என்றதும் பால்ய வயதில் எழுதித் தொலைத்த சில வரிகள்

பேனாக்கள் எப்போதும்
உண்மையே பேசும்
எழுத்துக்கள் எப்பொழுதுமல்ல.

பேனாக் கவிதைகள் கவிதைக்கே எழுதப்படும் விமர்சனங்கள் போன்றது...

நொடிந்த பேனாவில்
ஒடிந்து போனது வாழ்வு
மரண தண்டனை..

இது இப்போது நினைத்தது.... இனியும் நினைத்தால்.??

பேனாவைத் தொலைத்துவிட்டு
காகிதத்தைத் தேடுகிறேன்
?????

அது என்னவாக இருக்குமென்று நினைக்கிறீர்கள்/???

ஓவியன்
10-08-2007, 12:51 AM
அருமை ஆதவா!

வயதைத் தொலைத்துவிட்டு ஆசைகளை அனுபவிக்க முயல்பவரைப் பற்றியதா கடைசியாக பதித்த கவிதை?

ஆதவா
10-08-2007, 12:53 AM
அருமை ஆதவா!

வயதைத் தொலைத்துவிட்டு ஆசைகளை அனுபவிக்க முயல்பவரைப் பற்றியதா கடைசியாக பதித்த கவிதை?

இருக்கலாம்.. உங்கள் பார்வையில் அப்படித் தோன்றுகிறது.. இறுதி வார்த்தை நீங்கள் பொருத்தத்திற்கேற்ப இட்டால் அர்த்தம் மாறும்.... இல்லையா?

ஆதவா
10-08-2007, 01:01 AM
விதி எழுதி
கதை முடித்து
முள் உடைக்கப்பட்ட
பேனாக்கள் சொல்கின்றன
நீதியால் செய்யப்பட்ட
சட்டபூர்வ கொலைகளின்
எண்ணிக்கைகளை!

நொடிந்த பேனாவில்
ஒடிந்து போனது வாழ்வு
மரண தண்டனை..

இப்போதுதான் எழுதினேன்..... மறுபடியும் வந்து படித்துப் பார்த்தால் அட....... நான் எழுதியது வேஸ்ட்....வாழ்த்துக்கள் சிவா...




நாங்கள் விடும் கண்ணீருக்கு
எந்நாளும் நிறங்களில்லை...
நீ விடும் கண்ணீரில்
இல்லாத நிறங்களேயில்லை!

ஹி ஹி.... நிசம்தான்..


பெரும்பாலான கவிதைகள் ஒரேமாதிரி தோன்றுவதுதான் மைனஸ் பாயிண்ட்..

வெவ்வேறுவிதங்களில் சிந்திக்க மக்களே!!

ஓவியன்
12-08-2007, 08:02 AM
பெரும்பாலான கவிதைகள் ஒரேமாதிரி தோன்றுவதுதான் மைனஸ் பாயிண்ட்..
வெவ்வேறுவிதங்களில் சிந்திக்க மக்களே!!

உண்மைதான் ஆதவா!
ஒரே தலைப்பில் வெவ்வேறு விதமாக சிந்திப்பது நல்ல பயிற்சியாக அமையும்...........!

அக்னி
12-08-2007, 01:11 PM
சிந்தப்பட்ட இரத்தத்தில்,
வெறிதீர்ப்பது,
ஆயுதங்களின் போராட்டம்...
அழிவுகளின் உச்சம்...
சிந்தும் மையில்,
உயிர்விடுவது,
பேனாவின் தியாகம்...
ஆக்கங்களே மிச்சம்...

சிவா.ஜி
12-08-2007, 02:03 PM
அசத்தல் அக்னி.பிரமாதமான வரிகள். வாழ்த்துக்கள்

பட்டையடித்தால்
என் நடையும்
உன் நடையும்
அலங்கோலம்!

ஓவியன்
13-10-2007, 03:36 AM
பட்டையடித்தால்
என் நடையும்
உன் நடையும்
அலங்கோலம்!

அழகு சிவா அழகு....

வாழ்க்கை வாழத்தான்
பேனா
மூடி திறந்து
எழுதுவதற்குத்தான்....

aren
13-10-2007, 03:40 AM
அனைவருக்கும்
நல்ல தீர்ப்பையே
சொல்லும்
நீதிபதி
நிராயுதபானியான என்னை
கொலைசெய்வது ஏன்
அவர் தூக்கிலிடு
என்ற தீர்ப்பை
கொடுத்தவுடன்!!!

aren
13-10-2007, 03:41 AM
மனதில்
இருப்பதை
எழுத்தில்
வடித்திட
உதவும்
ஒரு ஆதம
நண்பன் நான்!!!

ஓவியன்
13-10-2007, 03:45 AM
மனதில்
இருப்பதை
எழுத்தில்
வடித்திட
உதவும்
ஒரு ஆதம
நண்பன் நான்!!!

வளர்ந்து வரும்
விஞ்ஞான அறிவால்
வேலைத் திட்டாண்டம்
வளர முடியா
எனக்கும் கூட....

aren
13-10-2007, 03:58 AM
பிஞ்சுக்கைகள் முதல்
கிழடுகள் வரை
வலம் வரும்
என்னை
மை தீர்ந்தவுடன்
தீர்த்துக்கட்டுவதேன்!!!

aren
13-10-2007, 04:03 AM
நீ படித்து
பெரிய ஆளாக வர
என்றும் உதவும்
நண்பன் நான்!!!

எனக்கு கர்வம்
கிடையாது
சில சமயங்கள்
கொஞ்சம் அழுது
அடம் பிடிப்பேன்
நீதான் என் கண்களை
துடைத்துவிடவேண்டும்!!!

அழுகிறேன்
என்று என்னை
ஒதுக்கிவிடாதே!!!

உன்னை என்னோடு
எப்பொழுதும் வைத்திரு
என்றும் உன்
உற்ற நண்பனாக
நான் இருப்பேன்!!!

ஓவியன்
13-10-2007, 05:21 AM
அழகான கவிதைகள் ஆரென் அண்ணா!

பேனா என்றதும் கவிஞர்களெல்லாம் எழுதிக் கொண்டே இருப்பார்கள் போலுள்ளது. இது கூட பேனாவின் வெற்றி தானே......!! :)

ஓவியன்
13-10-2007, 05:24 AM
வேலையில்லாச்
சோம்பேறி,
பகட்டுக்காக
பாக்கெட்டிலிருக்கும்
தங்கப் பேனா..!

aren
13-10-2007, 09:11 AM
வேலையில்லாச்
சோம்பேறி,
பகட்டுக்காக
பாக்கெட்டிலிருக்கும்
தங்கப் பேனா..!

அருமை ஓவியன்.

அதை வேலையில்லாமல்
ஆக்கியது
பேனாவின் தவறல்லவே!!!

தவறான இடத்திற்கு
போய் சேர்ந்தது
அதன் தூரதிர்ஷ்டம்!!!

aren
13-10-2007, 09:13 AM
பொன்னும்
பொருளும்
இருக்கமுடியாத
இடத்தில் நான் - இதயத்தில்

(நீங்க சர்ட் பாக்கெட் என்று நினைத்தால் அது பேனாவின் தப்பல்ல)

praveen
13-10-2007, 09:17 AM
பேனாவை பற்றி இவ்வளவு கவிதையா, நமது மன்றத்து கவிஞர்கள் புள்ளி வைத்தால் கோடு போட்டு ரோடு போட்டு விடுவார்கள் என்று தெரிகிறது. இதில் பதிய எனக்கு கவிதை எதுவும் தெரியவில்லை. அதுதான் நண்பர்கள் எல்லோரும் எழுதி விட்டார்களே.

aren
13-10-2007, 09:20 AM
பேனாவை பற்றி இவ்வளவு கவிதையா, நமது மன்றத்து கவிஞர்கள் புள்ளி வைத்தால் கோடு போட்டு ரோடு போட்டு விடுவார்கள் என்று தெரிகிறது. இதில் பதிய எனக்கு கவிதை எதுவும் தெரியவில்லை. அதுதான் நண்பர்கள் எல்லோரும் எழுதி விட்டார்களே.


முதலில் ஒரு வார்த்தை எழுத ஆரம்பியுங்கள் பின்னர் அடுத்த வரிகள் தானாகவே வந்துவிழும்.

கஜினி
13-10-2007, 09:24 AM
அழுவதற்கும்
எழு(து)வதற்கும் மட்டுமே
ஆண்டவனால் படைக்கப்பட்ட
ஜீவன் பேனா..!

aren
13-10-2007, 09:25 AM
என் வாழ்க்கை
என் முதலாளிக்கு
பணி செய்து கிடப்பதே!!!

ஆனால் நான்
அடிமையில்லை
அவரின்
உண்மையான நண்பன்
அவர் சொல்
தவறாதவன்!!!

aren
13-10-2007, 09:26 AM
நினைப்பின்
பிரதிபலிப்பு
நான்!!!

கஜினி
13-10-2007, 09:28 AM
அன்னையின் அன்பையும்
தந்தையின் பாசத்தையும்
உடன்பிறந்தோரின் உள்ளத்தையும்
நண்பனின் தோழமையையும்
காதலியின் இதயத்தையும்
கண்முன் நிறுத்துவது
பேனா..!

aren
13-10-2007, 09:28 AM
படித்தவனுக்கும்
படிக்காதவனுக்கும்
உதவிடும்
உத்தமன் நான்!!!

படித்தவன்
என்னால்
எழுதகிறான்
படிக்காதவன்
என்னால்
கைநாட்டு
இடுகிறான்!!!

கஜினி
13-10-2007, 09:29 AM
என் முதலாளி சிரிப்பதற்காக
தினமும் அழுபவன்
நான்..!

கஜினி
13-10-2007, 09:31 AM
மாணவனின்
கேள்வியும் நான்
பதிலும் நான்
மதிப்பெண்ணும் நான்..!

கஜினி
13-10-2007, 09:33 AM
கவிஞனின் கவிதைகளை
முதலில் ரசிப்பவன்(ள்)
நான்தான்..!

aren
13-10-2007, 09:33 AM
தான்
என்ற அகம்பாவம்
இல்லாமல்
முதலாளி
இழுக்கும்
இடத்திற்கெல்லாம்
தலைதெறிக்க
ஓடுபவன்!!!

கஜினி
13-10-2007, 09:35 AM
வண்ணங்களை மாற்றினாலும்
எண்ணங்களை மாற்றாதவன்(ள்)
நான்..!

கஜினி
13-10-2007, 09:38 AM
கவிஞனின் கவிதையிலும்
கதாசிரியரின் கதையிலும்
காதலர்களின் கடிதத்திலும்
மாணவரின் தேர்விலும்
மலர்ந்து இருப்பவன்(ள்)
நான்..!

aren
13-10-2007, 09:38 AM
உன் எண்ணங்களை
எந்த நிறத்தில்
வேண்டுமானாலும்
வெளிப்படுத்தும்
திறன் படைத்தவன் நான்!!!

கஜினி
13-10-2007, 09:39 AM
உயிரில்லாத என்னால்தான்
எழுத்துக்களுக்கும் எண்ணங்களுக்கும்
உயிர் கொடுக்கமுடியும்..!

aren
13-10-2007, 09:41 AM
எழுத்துக்களுக்கு
உயிர் நான் கொடுத்தாலும்
எழுதுபவனுக்கு
அனைத்து பயன்களும்
போய் சேருகிறது!!!

praveen
13-10-2007, 10:41 AM
ஆரென் விருப்பபடி


பேனாவை ஆங்கிலத்தில்
பெண் என்பர் ஏனென்றால்

இரண்டின் தலைமேலே
தங்கத்தால் அழகுபடுத்தலாம்

இரண்டும் முக்காலும்
மூக்கை சிந்தும்

இரண்டையும் அரவத்துடன்
ஒப்பிடலாம்.

இரண்டும் காண
கற்பனை ஊறும்.

அமரன்
13-10-2007, 11:07 AM
தமிழ்ப்பேனாவும்
ஆங்கிலப்பேனாவும்
கலந்து உருவாக்கிய
கவிதை
கவிஞனாக்கியது
பிரவீனை....

மலைத்தேன்
என்கிறது என்பேனா...!

பூமகள்
13-10-2007, 01:20 PM
ஆரென் விருப்பபடி

பேனாவை ஆங்கிலத்தில்
பெண் என்பர் ஏனென்றால்

இரண்டின் தலைமேலே
தங்கத்தால் அழகுபடுத்தலாம்

இரண்டும் முக்காலும்
மூக்கை சிந்தும்

இரண்டையும் அரவத்துடன்
ஒப்பிடலாம்.

இரண்டும் காண
கற்பனை ஊறும்.
அட... இப்படியொரு திரி இருக்கா??
எனக்கு தெரியாம போச்சே...!!
நல்லதொரு முயற்சி.. வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள் ஓவியன் அண்ணா.
நல்ல ஒப்புமை.... பாராட்டுகள் ப்ரவீண் அண்ணா.

யவனிகா
13-10-2007, 01:38 PM
அமரன்,ஓவியன்...
பேனாக்கள்
மறுஜென்மத்தை மறுதலிக்கின்றன...
இப் பிறவியிலேயே
பிறவிப் பயன் கிட்டிவிட்டதாம்..
உங்கள் கவிதைகளால்...

பூமகள்
13-10-2007, 01:44 PM
"சிந்தையில்
உதித்ததை
காகிதத்தில்
வரையும்
வரைமானி..
பேனா..!!"

aren
14-10-2007, 12:11 AM
ஆரென் விருப்பபடி


பேனாவை ஆங்கிலத்தில்
பெண் என்பர் ஏனென்றால்

இரண்டின் தலைமேலே
தங்கத்தால் அழகுபடுத்தலாம்

இரண்டும் முக்காலும்
மூக்கை சிந்தும்

இரண்டையும் அரவத்துடன்
ஒப்பிடலாம்.

இரண்டும் காண
கற்பனை ஊறும்.

வாவ்!!! கலக்கல் பிரவீன்!!!

தொடக்கமே இப்படி அருமையாக அழகாக வந்திருக்கிறது. எழுத எழுத உங்கள் எழுத்துக்கள் இன்னும் மின்னும் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

praveen
14-10-2007, 05:19 AM
வாவ்!!! கலக்கல் பிரவீன்!!!

தொடக்கமே இப்படி அருமையாக அழகாக வந்திருக்கிறது. எழுத எழுத உங்கள் எழுத்துக்கள் இன்னும் மின்னும் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

நான் ஆவலுடன் எதிர்பார்த்த உங்கள் கருத்துக்கு முன்னர் இன்னும் நண்பர்கள் கருத்தையும் கண்டேன். மிக்க மகிழ்ச்சி, அதே போல தவறிருந்தால் தயங்காமல் சுட்டி காட்டவும் வேண்டுகிறேன்.

யவனிகா
14-10-2007, 07:11 AM
ஆரென் விருப்பபடி


பேனாவை ஆங்கிலத்தில்
பெண் என்பர் ஏனென்றால்

இரண்டின் தலைமேலே
தங்கத்தால் அழகுபடுத்தலாம்

இரண்டும் முக்காலும்
மூக்கை சிந்தும்

இரண்டையும் அரவத்துடன்
ஒப்பிடலாம்.

இரண்டும் காண
கற்பனை ஊறும்.

அசத்தல் கவிதை...காளமேகக் கவிக்கு பக்கத்து வீடா நீங்கள்...தொடர்ந்து அசத்துங்கள் பிரவீண்.வாழ்த்துக்களுடன்,
யவனிகா.

யவனிகா
14-10-2007, 05:23 PM
நான் சிரிந்து மகிழ்ந்த* கணங்களையும்,
கொதித்துக் குமுறிய கணங்களையும்,
வெட்கிச் சிவந்த கணங்களையும்
நீ தானே முதலில் உள்வாங்கி
உலகுக்கு அறிவித்தாய்...
இன்று உன்னைப் பற்றி எழுதுகையில்
எப்படி உணர்கிறாய் நீ? −என் பேனாவே?

சிவா.ஜி
15-10-2007, 02:33 PM
பிரமாதம் யவனிகா...அசத்திட்டீங்க....

"எப்படி உணர்கிறாய் நீ?−என் பேனாவே....

பெருமையாய் பேசப்படும்போது வெட்கித் தலைகுணிந்து..ஆனந்தக்கண்ணீர் விடுகிறது....அழகான எழுத்துக்களாய்...

ஓவியன்
28-10-2007, 03:04 AM
பொன்னும்
பொருளும்
இருக்கமுடியாத
இடத்தில் நான் - இதயத்தில்

(நீங்க சர்ட் பாக்கெட் என்று நினைத்தால் அது பேனாவின் தப்பல்ல)

ஆகா வித்தியாசமான சிந்தனை....
கலக்கிடீங்க அண்ணா..!! :)

ஓவியன்
28-10-2007, 03:06 AM
அழுவதற்கும்
எழு(து)வதற்கும் மட்டுமே
ஆண்டவனால் படைக்கப்பட்ட
ஜீவன் பேனா..!

"நச்" என ஒரு கூர்மையான பேனாவின் வரிகளாக ஒலித்தன...
பாராட்டுக்கள் கஜனி!.

ஓவியன்
28-10-2007, 03:08 AM
இரண்டையும் அரவத்துடன்
ஒப்பிடலாம்.

இரண்டும் காண
கற்பனை ஊறும்.

அசத்திட்டீங்க பிரவின், இரண்டையும் காண கற்பனை ஊறும் என்ற கற்பனை அல்லா நிதர்சன வரிகள் அசத்தல். :)

ஓவியன்
28-10-2007, 03:10 AM
பல பேனாக்களை
தமக்காகவே
கவி எழுத வைத்தது
இக் கவித்திரி
"பேனா"......!:)

ஓவியன்
28-10-2007, 03:12 AM
இன்று உன்னைப் பற்றி எழுதுகையில்
எப்படி உணர்கிறாய் நீ? −என் பேனாவே?

ஆகா, ஒரு தாய் தன் குழந்தையிடமிருந்து தன்னைப் பற்றி பெருமையாக கேட்ட போது பெற்ற "பெருமிதம்" உணர்ந்திருக்கும் அந்த பேனா...!!

ஓவியன்
28-10-2007, 03:15 AM
"சிந்தையில்
உதித்ததை
காகிதத்தில்
வரையும்
வரைமானி..
பேனா..!!"

எல்லாம் வரைமானி...!!!
அவற்றில்
சில தேச அபிமானி
சில சமூக அபிமானி...

பாராட்டுக்கள் பூ தங்கைக்கு...!! :)

ஓவியன்
28-10-2007, 03:16 AM
வாவ்!!! கலக்கல் பிரவீன்!!!

தொடக்கமே இப்படி அருமையாக அழகாக வந்திருக்கிறது. எழுத எழுத உங்கள் எழுத்துக்கள் இன்னும் மின்னும் என்பதில் ஐயமில்லை. பாராட்டுக்கள். தொடருங்கள்.

நன்றி வணக்கம்
ஆரென்

உண்மைதான் அண்ணா!!!

பிரவின் உங்களால் நிச்சயமாக முடியும், எழுதுங்கள்....
இங்கே தான் தாராளமாக எழுதிப் பழக முடியும்.

யவனிகா
28-10-2007, 04:21 AM
ஆரென் விருப்பபடி


பேனாவை ஆங்கிலத்தில்
பெண் என்பர் ஏனென்றால்

இரண்டின் தலைமேலே
தங்கத்தால் அழகுபடுத்தலாம்

இரண்டும் முக்காலும்
மூக்கை சிந்தும்

இரண்டையும் அரவத்துடன்
ஒப்பிடலாம்.

இரண்டும் காண
கற்பனை ஊறும்.

பேனாவை பெண்ணோடு ஒப்பிடல் தொடர்கிறது.பேனா பெண் என்றால், அதை உபயோகிப்பவர் ஆண் தானே!

ஆணே! சொன்னதை அன்றி
மற்றவவை எழுத உரிமையில்லை!
பெண்ணுக்கும், பேனாவுக்கும்!

பல நேரங்களில் உபயோகமேயின்றி
அழகுக்காக மட்டுமே வீற்றிருக்கிறோம் ஆண்களிடம்!

உபயோகிக்கத் தெரியாமல்
முனை உடைந்த பேனாக்கள் அதிகம்,பெண்களைப் போல!

பிடிக்கவில்லையெனில் பிரச்சனையில்லை...தூக்கியெறியலாம்
புதிது வாங்கலாம், எந்தப் பேனாவும்
எழுதியவனை விசிறி அடித்ததில்லை,
பெண்ணைப் போல!

யவனிகா
28-10-2007, 04:23 AM
பல பேனாக்களை
தமக்காகவே
கவி எழுத வைத்தது
இக் கவித்திரி
"பேனா"......!:)

இது நல்லாயிருக்கே!

ஓவியன்
28-10-2007, 06:43 AM
என்னை மாற்றினும்
என் வர்ணங்களை மாற்றினும்
உன்னை மாற்றாவிடின்,
நீ எழுதும்
உன் எண்ணங்கள் மாறா(து)!.

ஓவியன்
12-05-2008, 04:05 AM
மை என்னும் ஆடை
உடுத்தி காகிதங்களின்
நிர்வாணம்
தொலைக்கிறது பேனா...!!

கவிக் கருத் தந்த நாகராஜன் அண்ணாவுக்கு நன்றிகள் பல...

ஷீ-நிசி
12-05-2008, 04:56 AM
ஒவ்வொருமுறையும்,
ஒரு காகித விதவையை
மங்கலகரமாக்குகிறது என் பேனா!

praveen
12-05-2008, 05:06 AM
ரெம்ப நாளுக்கு முன்னர் நான் முதன் முதலில் ஒரு கவிதை(?) நமது மன்றத்தில் எழுதினேன். நண்பர்கள் பாராட்டுகள் தொடர்ந்து வந்ததை கவனிக்க மறந்தேன். (ஒருவேளை யாராவது அன்போடு திட்டியிருந்தால் என்று :) ), அப்படி யாரும் கையில் கல்லை எடுக்காததால் இன்னொன்று.

பலரை வாழவைக்கும் அரசு நடைமுறைகளுக்கும் காரணம் இதுவே,
சிலரை தூக்குமேடைக்கு அனுப்பும் இறுதி தீர்ப்புக்கும் இதுவே.
முன்னது திரும்ப பயன்படுமாம், ஆனால் பின்னது துக்கத்தில்
தற்கொலை செய்து கொள்ளுமாம்.

நாகரா
12-05-2008, 01:32 PM
உன் இரத்தம்
எம் மொழிகளின்
நாவு

உன் கண்ணீர்
எம் எண்ணங்களின்
வரி வடிவம்

காகிதப் பாதையில்
நீ
நடக்கும் போது
சிந்தும் வியர்வைத் துளிகளே
எம் இலக்கிய விதைகள்

எப்போதும்
எச்சிலைத்
துப்பிக் கொண்டிருக்கும்
உன் அநாகரிகம் தான்
எம் நாகரிகத்தின்
முகவரி

நீ
எம் நெற்றிக் கண்களின்
இமைகளைக் கிள்ளியெறிந்த
ஆறாவது விரல்

காகிதச் சிலுவையில்
எம் எண்ணங்களின்
சிலுவைப்பாட்டை
நீ
வழங்காவிட்டால்
எமக்கு
உயிர்த்தெழல்கள்
இல்லாமலே போய்விடும்

உன் தலை கவிழ்தலில் தான்
மானுடராம்
எம் தலை நிமிர்தல்கள்
நிச்சயிக்கப்படுகின்றன

ஏட்டுப் பாறையில்
உன் தலையால் முட்டி
நீ
செதுக்கும்
தலையெழுத்துக்கள் தாம்
எம் எதிர்காலத் தலையெழுத்தை
நிர்ணயிக்கின்றன

கைக் கூண்டிலிருந்த
விரல்கட்குச்
சிறகாக
நீ
முளைத்த போது
அவை காகித வானில்
பறந்து விட்டுச் சென்ற
சுவடுகள் தாம்
எம் எழுத்துக்கள்

உன் பாதைகள்
எம் இலட்சியங்களை
முடிவு செய்கின்றன

உன் சுவடுகள்
எம் பாதங்களுக்குப்
பாதைகளைத்
தெரிவு செய்கின்றன

உன் குருதித் துளிகள்
எம் நிஜ முகங்களைப்
பிரதிபலித்து விடுகின்றன

விரல்களின் தூக்கில்
தொங்கும் போது
நீ
உயிர்க்கிறாய்

உன் கழுத்தைச் சுற்றி
மனித விரல்களையே
அணிந்த போதையில் தான்
தலை கால் தெரியாமல்
நீ
தலையால் நடக்கிறாயா!

ஆறாவது அறிவு
மனிதனுக்கு வாய்த்த போது
நீ
ஆறாவது விரலாக
முளைத்து விட்டாயா!

விரல்கள்
என்ற ஓரறிவு உயிரிகள்
ஈரறிவு உயிரிகளாய்ப்
பரிணமிக்க
உன்னைத்
தம் நாவாக
வளர்த்துக் கொண்டனவா!
(வளரும்)

ஓவியன்
12-05-2008, 04:02 PM
ஒவ்வொருமுறையும்,
ஒரு காகித விதவையை
மங்கலகரமாக்குகிறது என் பேனா!

அமங்கல காகிதங்களை
மங்கலமாக்கும் பேனா
பெருமை பகன்ற
ஷீ வரிகள் அழகு...!! :icon_b:


ஆனால் பின்னது துக்கத்தில்
தற்கொலை செய்து கொள்ளுமாம்.

துக்கத்தில் தானா தற்கொலை....!! :mad:
ஒரு கொலையால் எத்தனை மரணங்கள்....!!

ஒரு கொலைக்குத் தண்டனையாய் ஒரு மரணம்...
அந்த மரணத்தினால் ஓர் தற்கொலை...!! :frown:

பாராட்டுக்கள் பிரவீன், தொடர்ந்து கவிதைப் பகுதிக்கு வாங்க...!!
ஏன்னா நாங்களே அங்கே இருக்கையில், உங்களுக்கு என்ன கவலை...!! :D

ஓவியன்
12-05-2008, 04:07 PM
காகிதப் பாதையில்
நீ
நடக்கும் போது
சிந்தும் வியர்வைத் துளிகளே
எம் இலக்கிய விதைகள்

எப்போதும்
எச்சிலைத்
துப்பிக் கொண்டிருக்கும்
உன் அநாகரிகம் தான்
எம் நாகரிகத்தின்
முகவரி

அடடா அண்ணா, இந்தக் கவித் திரியினைத் தொடங்கியமைக்கு எனக்கு கிடைத்த மிகப் பெரிய பரிசு உங்கள் அழகிய கவிதை....!! :)

எதைச் சொல்ல, எதை விட.....
ஒவ்வொரு வரிகளிலும்
நமக்கும் பேனாக்கும் இடையிலான உறவு
வெளிச்சமாக விரிகிறது...

மனதாரப் பாராட்டுகிறேன்
அருமையான கவித் துளியென...!! :icon_b:

நாகரா
12-05-2008, 04:51 PM
அற்புதமான பேனாத் திரி துவங்கிப் பற்பல அருங்கவிதைகளை அப்பேனாவால் உமிழ வைத்த உமக்கும் என் நன்றியும் பாராட்டும் ஓவியன்.

வெள்ளை முட்பரப்பில்
தலையால் நடந்து
மூளையைப் பிழிகிறேன்
அப்பிழிவில் தெரியும்
துடிக்கும் என் இருதய ஈரம்

உலர்ந்தும்
உலராத உயிர்மை
என் உயிர் மை

மை பாய்ந்த காகிதக் கூடும்
என் மெய்
உயிர் மை உறையும் உயர்மெய்
உயிர்மெய்

ஒரு மையின் உண்மையே
கூடுகளனைத்திலும்
ஒரு மெய்யின் உள் மை
உள் மெய்

ஒருமையை உண்
உண் இம்மை
உண் இம்மெய்

உண் மை
உண்மையை உண்ண உண்ண
உன் மெய் விளங்கும்
உன் மை உயிர்மையை
என் மை கசியும்

வெண்மையில் கருமையால்
விழி பிறக்கத் தெரியும்
மெய்ப்பொருள் விளக்கம்

aren
22-05-2008, 01:47 AM
எழுத நினைத்தேன்
எழுத முடியவில்லை - பேனாவில் இங்க் இல்லை!!!

அல்லது

கவிதை வந்தது
எழுத்து வரவில்லை - இங்க் இல்லை!!!

ஆதி
23-05-2008, 08:50 AM
எண்ணக் கருப்பையின்
பிரசவ வாய்

எழுத்துப் பால்
சுரக்கும் காம்பு - பேனா..