PDA

View Full Version : எறும்புகள்.



அமரன்
29-07-2007, 04:51 PM
புகார்கள் மூடி இருக்க
இருட்டிலிருந்த விடியலில்
மூடாது உறங்கிய நான்
தூக்கத்தைக் கலைத்தேன்..

மலராத மலர்களில்
சொக்கி இருந்தவன்
சொம்பலை விரட்ட
பானம் தேடுகையில்
கண்களில் பட்டது
அடுப்பில் உறங்கிய
கறுப்புப் பூனை.

பூனையைதுரத்த நினைத்து
வெளியே போன அம்மாவை
தொடர்ந்த என் பார்வை
நிலைத்து நின்றது
புல்லில் தொங்கிய
பனித்துளியில்..

அமிலம் அரிக்க
சிந்தனை சிங்காரிக்க
சிலேட்டுடன் நடந்தவனை
நெருக்கி அணைத்தது
உயர் சைவ ஓட்டல்.

சிலேட்டு தூரமாகிட
பிளேட்டு கரத்துடன்
குழாயை தேடுகையில்
மீண்டும் வலித்தது..
எத்தனை எறும்புகள்
பாழும் இவ்வுலகில்.

இனியவள்
29-07-2007, 04:58 PM
மலராத மலர்களில்
சொக்கி இருந்தவன்
சொம்பலை விரட்ட
பானம் தேடுகையில்
கண்களில் பட்டது
அடுப்பில் உறங்கிய
கறுப்புப் பூனை.

பூனையைதுரத்த நினைத்து
வெளியே போன அம்மாவை
தொடர்ந்த என் பார்வை
நிலைத்து நின்றது
புல்லில் தொங்கிய
பனித்துளியில்..

அமிலம் அரிக்க
சிந்தனை சிங்காரிக்க
சிலேட்டுடன் நடந்தவனை
நெருக்கி அணைத்தது
உயர் சைவ ஓட்டல்.




அமர் வாழ்த்துக்கள்

எத்தனையோ வீட்டின் அடுப்பு
பூனைகளுக்கு உறைவிடம்

என்னைக் கவர்ந்த வரிகள் அவை அமர்
:4_1_8:

அமரன்
29-07-2007, 05:01 PM
நன்றி இனியவள்...உண்மைதான்..வளர்ந்துவிட்டோம் என்று மார்தட்டும் நாடுகளில் இதே நிலைமை இன்றும் உள்ளது..

இனியவள்
29-07-2007, 05:05 PM
வளர்ச்சியடைந்து விட்டோம்
பத்திரிக்கையில் புன்னகையோடு
ஜனாதிபது போட்டி
அம்மா தாயே பசிக்கு
நடுரோட்டில் பிச்சையெடுக்கும்
குடிமகன்....

வளர்ந்தது நாடா
நாட்டின் பெயர் கூறி
கொள்ளையடிக்கும் அரசியல்வாதிகளும்
பணக்காரர்களுமா???

ஏழைகள் ஏழையாகிக் கொண்டு போக
பணக்காரர்கள் மேலும் பணக்காரர்கள் ஆகின்றனர்

இது தான் நாட்டின் வளர்ச்சியா.....

ஓவியன்
29-07-2007, 06:34 PM
சிலேட்டு தூரமாகிட
பிளேட்டு கரத்துடன்
குழாயை தேடுகையில்
மீண்டும் வலித்தது..

எத்தனை உண்மையான வரிகள் அமர்.........!
வரிகளில் இளையோடுகின்றன வலிகள்!

எத்தனையோ பிஞ்சுகள், தங்கள் கனவுகளை இப்படியே பிளேட்டுகளுடனேயே கழுவிக்கொண்டிருக்கின்றனர்.........

அருமையான ஒரு கவிக்கருத்தைத் தந்த அமருக்கு என் நன்றிகளும் பாராட்டுக்களும்......:4_1_8:

அது சரி ஏன் அமர் எறும்புகள் என்றீர்கள், சுறுசுறுபாலா? அல்லது கடிப்பதாலா?

அமரன்
29-07-2007, 06:39 PM
நன்றி ஓவியன்..இந்தக் கவிதை எழுத எடுத்துக்கொண்ட நேரம் பத்து நிமிடங்கள்..உடனடியாக பதிந்து விட்டேன். இன்னும் மெருகேற்றி இருக்கலாம் என்று பின்னர் சிந்தித்தேன்...அதிகம் செப்பனிட ஆரம்பித்தால் கருத்தை மறைத்திடுவேன் என்ற பயத்தில் அப்படியே விட்டு விட்டுவிட்டேன்

பொதுவாக சிறுவர்களுக்கு சுறுசுறுப்பு அதிகம். எறும்புகளே அவர்களிடம் கற்றுக்கொள்ளவேண்டும். அதை வைத்தும்,

மலராத மலர்களில்
சொக்கி இருந்தவன்

இந்த மலர்களுக்காக சுறுசுறுப்பாக சேமிக்கிறானே...என்பதை வைத்தும் எறும்புகள் என்றேன்.

விகடன்
29-07-2007, 06:44 PM
கவிதை அருமை. அதனுடன் இணைந்த பின்னூட்டங்களும் குறைவின்றி...

ஓவியன்
29-07-2007, 06:55 PM
விளக்கத்திற்கு நன்றிகள் அமர்..........

சுறு சுறுப்பு சிறுவரைக் குறித்தாலும் சிறுவரைக் கடிக்கும் இரக்கமற்றவர்களை எறும்பு என்கிறீர்களோ என்று குழம்பியே அப்படிக் கேட்டேன்...............

குறைவான நேரமெனினும் நிறைவான வரிகள் அமர்...................!

அமரன்
29-07-2007, 07:00 PM
அட ஆமா..அப்படியும் சொல்லலாம்....என்னே ஒரு பார்வை ஓவியன். பாராட்டுக்கள்...

சிவா.ஜி
30-07-2007, 04:29 AM
வலி உணர்த்தும் வரிகள்.எல்லோருக்கும் கல்வி என்ற கோஷம் சரியானதுதான்.ஆனால் அதற்கு முன் எல்லோருக்கும் உணவு என்ற நிலை வந்தால் இப்படிப்பட்ட பிஞ்சுகளின் கைகள் தானாகவே பிளேட்டை விட்டு சிலேட்டை நாடும்.சுறுசுறுப்பில் மட்டுமல்ல தன் குடும்பத்துக்காக சேமிப்பதிலும் இந்த சிறியவர்கள் உயர்ந்தவர்கள். பத்து நிமிடத்தில் எழுதியதானாலும் பக்குவ சிந்தனையில் விளைந்த கவிதை. பாராட்டுக்கள் அமரன்.

அமரன்
30-07-2007, 09:10 AM
வாள்வீச்சு பின்னூட்டம் சிவா. உண்மை கருத்துக்கூட..நன்றி
சின்னதாகசொல்லி நிறைவைதந்ந்தது விராடன். நன்றி.

lolluvathiyar
30-07-2007, 04:05 PM
சிலேட்டுக்கு பதில் பிளேட்டு இந்த வார்த்தையில் இரு அர்த்தம் இருகிறது

ஒன்று இளம் வயதில் பிளேட்டு கழும் வேலைக்கு போவது
இன்னொன்று சத்துனவு கூடத்தில் பிளேட்டுடன் போவது
எது சரியான கருத்து

அமரன்
30-07-2007, 05:01 PM
நல்ல கேள்வி வாத்தியாரே...அவன் போனது சத்துணவுகூடத்தினுள் அல்ல..உணவுகூடத்தினுள். நன்றி.

ரிஷிசேது
30-07-2007, 05:27 PM
கொடிது கொடிது வருமை அதிலும்
இளமையில் வருமை

அர்புதமான கவிதை அமரன் ....
வாழ்த்துக்கள்
ரிஷிசேது

அமரன்
30-07-2007, 05:35 PM
அதிக வரிகளில் நான் சொன்னதை இருவரிகளை உதாரணம்காட்டி கலக்கி விட்டீர்கள் ரிஷி.நன்றியும் பாராட்டுக்களும்

அக்னி
30-07-2007, 06:19 PM
ஒரு பிடி சோற்றுக்காய்...
படிப்பைத் தொலைக்கும் பிஞ்சுகள்...

விண்வெளியை வெல்ல,
பறக்கும் விண்ணோடங்களின் செலவுகள்..,
திருவோடுகள் ஏந்தும்
ஆயிரமாயிரம் கரங்களின்,
பென்சில் சுமக்க வைக்குமா முதலில்...

துப்பாக்கியும் வெடிகளுமாய்,
அழிவின் புகையாகும்
யுத்தத்தின் செலவினங்கள்...
வயிற்றில் புகையும்
கோடி உயிர்களின்
பசி தீர்க்காதா முதலில்...

பதிவுகள் அனைத்தும் சிறப்பு...
பாராட்டுக்கள்...

விகடன்
30-07-2007, 06:22 PM
அக்னியின் சிந்ததை ஆரோக்கியமான புதியதோர் உலகை படைப்பதற்கு ஏதுவானது. சிந்திக்க வேண்டியவர்கள் சிந்திப்பதில்லை. சிந்தனை உள்ளவர்கள் சீர்ப்படுத்த முடிவதில்லை.

இதைத்தான் "இறைவன் ஒன்றைக் கொடுத்தால் இன்னொன்றை எடுத்துக்கொள்வான்" என்பது.

அமரன்
30-07-2007, 06:24 PM
அசத்தல் பதில் கவி அக்னி. பாராட்டுக்கள்.

இலக்கியன்
02-08-2007, 02:14 PM
நல்ல கற்பனை வளம் வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

அமரன்
02-08-2007, 02:24 PM
நன்றி இலக்கியன்.