PDA

View Full Version : திசைமாறிய பாதைகள். 1



வெண்தாமரை
29-07-2007, 01:45 PM
திசைமாறிய பாதைகள் - 2: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11221
திசைமாறிய பாதைகள் - 3: http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11227


எனது அருமை தோழி பெயர்: மகாலெட்சுமி. பெயருக்கு ஏற்றாற்போல் மகாலெட்சுமிதான்.. சுருக்கமாக மகா என்று அழைப்போம். பத்தாம் வகுப்பு வரைதான் படிப்பு. ஆனால் நிறைய புத்தசாலிதனம்.. விரைவில் புரிந்துகொள்ளும் கற்பூறபுத்தி. சுமாரான நிறம். அழகான கண்கள். படபடவெடன பேசும் சுபாவம்.. ஆனால் அத்தனை பேச்சிலேயும்
ஒரு சுவாரஸ்யம்.. யாருக்கும் அவளுடன் பேசி கொண்டே இருக்கலாமா? என தோன்றும்.மொத்ததில் கம்பம் வடித்த கவிதை நீ என்று கூட சொல்லலாம். இப்போது பரந்து விரிந்து கிடக்கும் நவீன யுகத்தில் உண்மையான காதல் சாத்தியமா? சாட்டிங் உலக நட்பு வளையம் அதில் அவளும் சிக்கினாள்.. உண்மையாக விரும்பி இப்போது அவனை தவிர வேறு யாரையும் மனதில் நினைக்காமல் வாழவும் முடியாமல் சாகவும்

முடியாமல் தவிக்கும் ஒரு பேதையின் கதை. பெண்ணாய் பிறந்தாலே பாவம்தான் போல.. அவளது குடும்பம் சுத்த பட்டிகாடு.. அம்மா அப்பா யாவரும் படிக்காதவர்களே..அவளுக்கு 3 அண்ணன்கள்..கடைசியாக அவள்தான்.. அவர்களுக்கு பெண் குழந்தை என்றாலே பிடிக்காது.. பிறந்துவிட்டாள். என்ன செய்ய பெத்த கடமைக்கு வளர்ந்துதானே ஆகவேண்டும். சிறுவயதில் இருந்தே ஆண் பெண் என்ற பேதமை இருந்தாலும் அதை அவள் பெரிதாக எடுத்துகொள்வில்லை.. 10-வகுப்பு முடிந்ததது. 10-ம் வகுப்பில் 90 சதவீதம் மதிப்பெண் வாங்கி அவளுக்கு டாக்டர் ஆக வேண்டும் ஆசை. ஆனால் அவளது பெற்றோர்
முட்டுகட்டை.. இதே நேரத்தில் அவளுக்கு முந்திய அண்ணன் பத்தாம்வகுப்பு தான் ஆனால் பெயில்.. அழுதாள்புரண்டாள் முடியாது என்றனர்.. அவளது அண்ணைனை டுட்டோரியல் வகுப்பில் சேர்த்தனர்.. போக மாட்டேன் என்றவனை வலுகட்டாயமாக அனுப்பினார்.. ஏக்கமே
வடிவாக நின்றாள்.அதிலேயும் தோல்விதான்.. இப்படி 2 தடவை அனுப்பியும் அவன் தேறவேயில்லை.
அப்போதுதான் நீ வீட்டில் இருக்க வேண்டும் கம்புயூட்டர் சென்டரில் டைப் பண்ண போ என்றார் அவளது அம்மா. இதுதான் நல்ல தருணம் என்று சரி சொன்னாள்.. வேலைக்கு சேர்ந்த 2 மாதத்தில் கம்ப்யூட்டரை நன்றாக கையாள கற்றுக்கொண்டாள்..

அவளை வேலைக்கு சேர்;த்திருக்கும் முதலாளியோ சிறுவயது முதலே நன்றாக இவளை அறிந்தவர் ஒரு தகப்பன் ஸ்தானத்தில் அவளை பார்த்துக் கொண்டார். அவளது அத்தனை செலவுகளையும் செய்தார். தன் மகளை போல வளர்த்தார். இப்போது அவள் ஒரு டிகிரி

முடிக்காத சாப்ட்வேர் இன்ஜீனியர். அவளது திறமை அவளிடம்.. ஆனால் புயல் வீசிக்கொண்டுதான் இருக்கிறது இன்னமும்.. விவரம் தெரிந்த நாளில் இருந்து தாய் பாசம் என்றால் என்னவென்று தெரியாமல் வளர்ந்ததால். தனக்கு தாயாகவும் தந்தையாகவும் இருக்கும் முதலாளியை அப்பா என்றே அழைத்தாள்.
இந்த தருணத்தில் சாட்டிங் போவது பொழுதுபோக்கு ஒரு 3 வருடங்களுக்கு முன்னால் சாட்டிங்கில் அவனை சந்தித்தாள். பாத்ததும் பிடித்து போய்விட அவன் அவளிடம் கேட் வார்த்தை நாம கல்யாணம் பண்ணிக்கொள்ளாலாமா? இவளும் சரி என்று சொல்லவில்லை. முடிந்தால் என்னை தேடி வந்து என் அப்பாவிடம் முறைப்படி பெண் கேள் என்றாள்.. அவனும் சரி என்றாள். இவள் அதை விளையாட்டாக எடுத்துக்கொண்டாள்.. ஆனால் அது விளையாட்டு அல்ல விதி என்று பிறகுதான் தெரிந்ததது. வானில் சிறகடித்து பறக்கும் பட்டாம்பூச்சியாக இருந்தவள் அவனைப் பார்த்ததும் விட்டில் பூச்சியாகி விட்டாள்.. மறுநாள் காலையில் அலுவலக வாசலில் அவன் பிரமிக்கும் ஆச்சர்யம்.. நீங்க எப்படி இங்க என வார்த்தைகள் வராத நிலை..

இன்னும் தொடரும்..

அன்புரசிகன்
29-07-2007, 01:57 PM
இன்னமும் இவ்வாறான பெண்ணடிமைகள் இருப்பது வருந்தத்தக்கது.

அழகாக வார்த்திருக்கிறீர்கள். அதுவும் வந்த முதல் நாளே...

வாழ்த்துக்கள் சூரியகாந்தி.

ஒரு அன்பான வேண்டுகோள். உங்கள் பெயரை தமிழில் அழகாக சூரியகாந்தி என பெயர்மாற்றம் செய்யலாம். அதற்கு இங்கே (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9783)செல்லுங்கள்.

பாராட்டுக்கள். உங்கள் இந்தக்கதைக்கு எனது 100 இ-பணம் உங்களை வந்தடையும்.

இனியவள்
29-07-2007, 02:01 PM
தொடருமா ?????

தொடருங்கள் சூரியகாந்தி

முதலில் வாழ்த்துக்கள் அழகாய்
கதையை நகர்த்தி செல்வதற்கு :icon_08:

விகடன்
29-07-2007, 02:09 PM
சூர்யகாந்தியின் கருத்துக்களை எழுத்துவடிவில் அமைக்கும் திறமை அபாரம். வந்த ஆரம்பத்திலேயே தமிழில் தட்டச்சு பிரமிக்க வைக்கிறது.


பாராட்டுக்க*ள்

சிவா.ஜி
29-07-2007, 02:14 PM
கண்டதும் காதல்,கடிதத்தில் காதல் என்பதெல்லாம் ஒருபக்கம் இருக்க இப்போது இது ஒன்று முளைத்து வளர்ந்து வருகிறது.எத்தனையோ கல்லூரிப் பெண்கள் மணிக்கனக்காக சாட்டிங்கில் அமர்ந்து தங்கள் நேரத்தை மட்டுமல்லாது சில சமயம் வாழ்க்கையையே இழக்கிறார்கள். அப்படி ஒரு
பேதைப் பெண்ணின் சோகக்கதையை நல்ல நடையில் கொண்டு செல்லும்
சூரியகாந்திக்கு வாழ்த்துக்கள். இப்படிப்பட்ட பாடங்கள் தேவைதான். தொடருங்கள் சூரியகாந்தி.

அமரன்
29-07-2007, 02:50 PM
தோழி...உங்கள் தமிழ் தட்டச்சுக்கும் தமிழுக்கும் எனது பாராட்டுக்கள்.
பெண்களுக்கு கல்வி தேவை இல்லை என்னும் நிலை மாறி வந்தாலும் சில இடங்களில் இது இன்னமும் இருக்கிறது.
தொழில்நுட்பமுன்னேற்றம் நல்லதையும் செய்கிறது..கெட்டதையும் செய்கிறது..அந்தக்கத்தியை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதுதான் முக்கியம். உங்கள் தோழி அதை எப்படி பயன்படுத்தி இருகிறார் என்ற ஆவலை கிளப்பிவிட்டீர்கள்..காத்திருகிறோம். தொடருங்கள்..

ஓவியன்
29-07-2007, 04:48 PM
தொடருங்கள் சகோதரி உங்கள் துயரக்கதையில் உங்களோடு பங்கெடுக்கக் காத்திருக்கின்றோம்!.

தங்கவேல்
30-07-2007, 12:15 AM
பெண்கள் காதல் மாயையில் சிக்கி காணாமல் போகிறார்கள். மகாலட்சுமி கதை என்னவோ சொல்ல வருகிறது. அதை படிக்க கூட என் மனம் ஒப்பவில்லை. இதயத்தை யாரோ கையால் பிசைவது போல வேதனை வருகிறது. கண்ணீர் விடுவதை விட வேறு என்ன செய்ய முடியும் என்னால். கடவுள் காப்பாற்றட்டும்.

அக்னி
31-07-2007, 12:27 PM
பெண்பிள்ளைகள் மீது வீட்டில் தொடங்கும் அடக்குமுறைகளே...
அவர்களை அன்பிற்கு ஏங்க வைத்து, படுகுழியில் வீழ்த்துவதற்கான ஆரம்பம்...
ஒரு சம்பவத்தை அழுத்தமாக் சிறப்பான நடையில் ஆரம்பித்தமைக்கு நன்றிகள்...
சம்பவத்தின் போக்கு எவ்வாறு அமையப்போகின்றது என்பதை அடுத்த பாகங்களில் காணலாம் என்று நினைக்கின்றேன்.

தென்னாட்டு சிங்கம்
31-01-2009, 02:36 AM
ம்ம்.. சோக முடிவா.. அல்லது நிறைவான முடிவா என்பதை அடுத்த பாகத்தின் மூலம்தான் அறிய முடியும்.. அப்போது சொல்கிறேன் என் கருத்தை..