PDA

View Full Version : ஒரு மரமாவது.....



ரிஷிசேது
29-07-2007, 10:46 AM
கனவுகளை தூக்கியெறிந்தாயிற்று
துரத்தும் எதிர்காலம் பற்றிய பயத்தில்
போட்டியும் பொறாமையும் நிறைந்த
உலகத்தின் காலச்சுழற்சியில் விழுந்தாயிற்று

அப்பன் பாட்டன் முப்பாட்டன்
செய்தன செய்து தின்பன தின்று
என் குடும்பம் நான் எனதென்று
சுய நலமியாய் வாழவும் பழகி

ஓடி ஓடி பணம் சேர்த்து
சோர்ந்து போய் திரும்பிப்பார்க்கையில்
நோய் நொடி எட்டிப்பார்க்க மெல்ல
ஞானம் வந்து உலகிற்கு ஏதோ
செய்வோமென நினைக்கயில்
மரண பயம் நீளும் கருணையெனும் போர்வையில்

யாருக்கொல்லாம் கொடுக்கலாம்?
இல்லையென வருவோர்க்கு கொஞ்சம்
கஷ்டத்தில் வாழும் சொந்தத்திற்கு கொஞ்சம்
கடனில் தவிக்கும் நட்புக்கு கொஞ்சமென
நீளும் பட்டியலில் வரக்கூடும் சிலர்
பக்தி சொல்லி பறிப்பதற்கு

அஞ்சாமலிருக்கலாம்
எப்படியும் பிணி மூப்பு சாக்காடு இல்லாமல் போகாது
அதற்குள்...

ஒரு மரமாவது வைத்துவிட வேண்டும்
நிழலும் மழையும் தர இவ்வுலகிற்கு.....

சிவா.ஜி
29-07-2007, 11:14 AM
மிக உயர்ந்த சிந்தனை. மற்ற தானங்கள் பெயரிழந்து மறைந்துவிடும்.மரம் வைத்தால் நிழலில் பெயர் பரப்பும்.இன்றைய சூழலில் மிகத்தேவையான ஒரு செயல். அனவரும் செய்யவேண்டியது. அதனை அழகாய் எடுத்துரைத்த ரிஷிக்கு பாராட்டுக்கள்.

அமரன்
29-07-2007, 11:23 AM
அற்புதமான வார்த்தைகள். நிஜத்தின் சிதறல்கள். தேடல் வாழ்க்கையின் உயிர்நாடி. அதனால் ஓட்டம் தவிர்க்கமுடியவில்லை..ஓடி ஓடி ஏதோ அடைந்து விட்டோம் என்று நினைத்து திரும்பிப்பார்த்தால்..அடையாளங்களைத் தொலைத்திருப்போம். சிலருக்கு வாழ்க்கையில் பங்கெடுக்கவும் தோழ் கொடுக்கவும் பகிர்ந்துக்கவும் யாரும் இருக்கமாட்டார்கள். மீண்டும் சில அடையாளங்களை பதிக்க நினைப்போம். எப்படிப்பத்திப்பது? சொந்தச் சொத்துக்களை தேட நினைப்போம். எப்படி தேடுவது..?தடுமாறும் மனது. அவ்வேளையில் தூற்றுவோர் தூற்றுவார். ஏமாற்றுவோர் ஏமாற்றுவார்..அந்த தடுமாற்றத்தை தீர்க்கும் அமுதமாக ரிஷியின் கவி.
பாராட்டுக்களும் நன்றியும்.

விகடன்
29-07-2007, 11:45 AM
ஒரு மரமாவது வைத்துவிட வேண்டும்
நிழலும் மழையும் தர இவ்வுலகிற்கு.....

ஆமாம் ரிஷிசேஷன்.
பல்லாயிரம் செலவழித்து கண்ணக்கிடும் புண்ணியம் தேடிக்கொள்வதிலும் பார்க்க மரமொன்றை நடுகையினால் கணக்கில்லா புண்ணியம் சம்பாதித்துக்கொள்ளலாம்.

கனிவான கருத்தை கவிவடிவில்.
பாராட்டுக்கள்

இனியவள்
29-07-2007, 12:16 PM
வாழ்த்துக்கள் ரிஷி

இப்படித் தான் முக்காவாசி பேர்
பணம் பணம் என்று உழைத்து
சந்தோஷத்தைக் காற்றில் பறக்க
விடுகின்றனர் பட்டம் போன்று