PDA

View Full Version : நானும் உன் நினைவும்



சுகந்தப்ரீதன்
29-07-2007, 09:40 AM
நிமிடத்திற்கோர் நினைவாய்
இதென்ன வாழ்க்கை...?
வெறுத்துத்தான் போகிறேன்
ஒவ்வொரு கணமும்...!
இருந்தும் நினைத்துக்
கொண்டுதான் இருக்கிறேன்
நொடிக்கொரு நினைவாய்!

சிவா.ஜி
29-07-2007, 09:46 AM
வெண்திரையில் சட்டென மாறும் காட்சிகள் போல நினைவுகளும் மாறி மாறி வந்து கொண்டுதானிருக்கின்றன. இருந்தும் நிறுத்தமுடிவதில்லை.நினைவுப் பெட்டகத்தில் அடுக்குகள் அதிகம்,மறக்க நினைத்தாலும் மறுபடி பிறக்கத்தான் செய்கிறது.அழகான கவிதை சுகந்தப்ரீதன்.வாழ்த்துக்கள்.

அமரன்
29-07-2007, 09:47 AM
இது காதலில் மட்டுமல்ல்..வாழ்க்கையிலும் இப்படித்தான்...
இளம்பருவத்தில் குழந்தைபருவமும், முதுமைப் பருவத்தில் இளம்பருவமும், புலம் பெயர்ந்து வாழ்வோருக்கு தாயக நினைவுகளும், சுற்றத்தை பிரிந்தோருக்கு பாச நினைவலைகளுமென நொடிக்கொரு தடவை வந்துகொண்டே இருக்கும். காதலில் வீழ்ந்தோருக்கும் காதலால் வீழ்ந்தோருக்கும் இதே நிலைதான். அனுமதி கேட்காது வரும் அநாகரிக வசந்தங்கள் அவை..பாராட்டுக்கள் ப்ரீதன்.

சுகந்தப்ரீதன்
29-07-2007, 09:56 AM
வெண்திரையில் சட்டென மாறும் காட்சிகள் போல நினைவுகளும் மாறி மாறி வந்து கொண்டுதானிருக்கின்றன. இருந்தும் நிறுத்தமுடிவதில்லை.நினைவுப் பெட்டகத்தில் அடுக்குகள் அதிகம்,மறக்க நினைத்தாலும் மறுபடி பிறக்கத்தான் செய்கிறது.அழகான கவிதை சுகந்தப்ரீதன்.வாழ்த்துக்கள்.

நன்றி சிவா....

சுகந்தப்ரீதன்
29-07-2007, 09:57 AM
இது காதலில் மட்டுமல்ல்..வாழ்க்கையிலும் இப்படித்தான்...
இளம்பருவத்தில் குழந்தைபருவமும், முதுமைப் பருவத்தில் இளம்பருவமும், புலம் பெயர்ந்து வாழ்வோருக்கு தாயக நினைவுகளும், சுற்றத்தை பிரிந்தோருக்கு பாச நினைவலைகளுமென நொடிக்கொரு தடவை வந்துகொண்டே இருக்கும். காதலில் வீழ்ந்தோருக்கும் காதலால் வீழ்ந்தோருக்கும் இதே நிலைதான். அனுமதி கேட்காது வரும் அநாகரிக வசந்தங்கள் அவை..பாராட்டுக்கள் ப்ரீதன்.

அநாகரிக வசந்தங்கள்....எனது பாராட்டுக்கள் நண்பரே...!

இனியவள்
29-07-2007, 12:53 PM
அருமை சுகந் வாழ்த்துக்கள்

நினைவுகள் தான் எமக்கு
நினைவூட்டுகின்றன இன்னும்
நாம் உணர்ச்சிகளோடு
இருக்கின்றோம் என

இன்பா
29-07-2007, 04:10 PM
உம்... கலக்கல் நல்ல முயற்சி...

மனோஜ்
29-07-2007, 04:27 PM
என்னங்கள் காலத்தை
கடக்க செய்வதும் உண்மை
ஆழ்த கவி அருமை

ஓவியன்
29-07-2007, 07:10 PM
நினைக்க நினைத்து
நினைத்ததை மறந்து
நினைவைகளையும் தொலைத்து
நினைக்காமலேயே
நிலைப்பதல்லவா காதல்!.

பாராட்டுக்கள் சுகந்தா......................! :icon_good:

சுகந்தப்ரீதன்
30-07-2007, 04:19 AM
அருமை சுகந் வாழ்த்துக்கள்

நினைவுகள் தான் எமக்கு
நினைவூட்டுகின்றன இன்னும்
நாம் உணர்ச்சிகளோடு
இருக்கின்றோம் என

நன்றி இனியா...

சுகந்தப்ரீதன்
30-07-2007, 04:20 AM
உம்... கலக்கல் நல்ல முயற்சி...

நன்றி புலி?!

சுகந்தப்ரீதன்
30-07-2007, 04:20 AM
என்னங்கள் காலத்தை
கடக்க செய்வதும் உண்மை
ஆழ்த கவி அருமை

நன்றி மனோஜ்...

சுகந்தப்ரீதன்
30-07-2007, 04:21 AM
நினைக்க நினைத்து
நினைத்ததை மறந்து
நினைவைகளையும் தொலைத்து
நினைக்காமலேயே
நிலைப்பதல்லவா காதல்!.

பாராட்டுக்கள் சுகந்தா......................! :icon_good:

ந்ன்றி நண்பரே....!