PDA

View Full Version : காலங்கள்

இனியவள்
29-07-2007, 05:08 AM
கடந்த காலத்தை நினைக்காதே
அது உன் நிகழ்காலத்தை
இறந்த காலமாக மாற்றிவிடும்...

எதிர்காலத்தை நினைத்துப் பயந்து
நிகழ்காலத்தை விணாக்காதே
அது நிகழ்காலத்தைக் கேள்விக்குறியாக
மாற்றிவிடும்...

கடந்த கால சோகத்தை மறந்து
நிகழ்கால சந்தோஷத்தை அனுபவித்து
எதிர்காலத்தை வரவேற்க தயாராய் இரு
உன் வாழ்க்கை இன்பமாய் அமையும்

ஓவியன்
29-07-2007, 05:22 AM
நிகழ்கால வாழ்க்கையில் என்
இறந்ததகால (காதல்)கவிதைகள்
எதிர்காலக் காதலர்களுக்காகவே....!

அருமை இனியவள் - பாராட்டுக்கள்!.

விகடன்
29-07-2007, 05:26 AM
காலங்களை இட்டு குழப்பிக்கொள்ளாது இன்றைய காலமே உன் கையில் என்பதை எடுத்துக் காட்டும் இனியவளின் கவிதை அருமை...

அமரன்
29-07-2007, 09:15 AM
இறந்தகால படிப்பினை.நிகழ்கால நிலைமை இரண்டினையும் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடவேண்டும் இனியவள். எதிர்காலம் என்பது மிக முக்கியமானது. அருமையாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.

பாராட்டுச்சொன்னதற்காக.
நேற்று என்பது கனவு
நாளை எனது கற்பனை
இன்று மட்டுமே நிஜம்..
நான் நட்ட ரோஜா இன்றே பூக்கனும்னு அடம்பிடிக்கக்கூடாது..ஆமா சொலிட்டேன்.

ரிஷிசேது
29-07-2007, 10:26 AM
கவிதை மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

சிவா.ஜி
29-07-2007, 10:39 AM
அப்படியே ஆகட்டும் இனியவாளனந்தமாயி அவர்களே. எதிர்காலத்தை சந்தோஷமாக வரவேற்போம்.

ஓவியன்
29-07-2007, 10:42 AM
அப்படியே ஆகட்டும் இனியவாளனந்தமாயி அவர்களே. எதிர்காலத்தை சந்தோஷமாக வரவேற்போம்.அட இது கூட நல்லாயிருக்கே......:grin:

மன்மதன்
29-07-2007, 11:06 AM
கடந்த கால சோகத்தை மறந்து
நிகழ்கால சந்தோஷத்தை அனுபவித்து
எதிர்காலத்தை வரவேற்க தயாராய் இரு
உன் வாழ்க்கை இன்பமாய் அமையும்

ம*ன*திற்கு இத*மான* வ*ரிக*ள்.. பாராட்டுக*ள்.

இனியவள்
29-07-2007, 12:45 PM
நிகழ்கால வாழ்க்கையில் என்
இறந்ததகால (காதல்)கவிதைகள்
எதிர்காலக் காதலர்களுக்காகவே....!

அருமை இனியவள் - பாராட்டுக்கள்!.

நன்றி ஓவியரே

இனியவள்
29-07-2007, 12:46 PM
காலங்களை இட்டு குழப்பிக்கொள்ளாது இன்றைய காலமே உன் கையில் என்பதை எடுத்துக் காட்டும் இனியவளின் கவிதை அருமை...

நன்றி விராடன்

இனியவள்
29-07-2007, 12:47 PM
இறந்தகால படிப்பினை.நிகழ்கால நிலைமை இரண்டினையும் கொண்டு எதிர்காலத்தை திட்டமிடவேண்டும் இனியவள். எதிர்காலம் என்பது மிக முக்கியமானது. அருமையாக சொல்லியுள்ளீர்கள் பாராட்டுக்கள்.
பாராட்டுச்சொன்னதற்காக.
நேற்று என்பது கனவு
நாளை எனது கற்பனை
இன்று மட்டுமே நிஜம்..
நான் நட்ட ரோஜா இன்றே பூக்கனும்னு அடம்பிடிக்கக்கூடாது..ஆமா சொலிட்டேன்.

ஹீ ஹீ அமர்
இந்தக் காலத்தில் இன்று
நட்ட ரோஜாச் செடி
இன்றே பூத்தாலும்
பூக்கும் விஞ்ஞான வளர்ச்சி
அப்படி

நன்றி அமர்

இனியவள்
29-07-2007, 12:48 PM
கவிதை மிக அருமையாக உள்ளது. வாழ்த்துக்கள்

நன்றி ரிஷி

இனியவள்
29-07-2007, 12:49 PM
அப்படியே ஆகட்டும் இனியவாளனந்தமாயி அவர்களே. எதிர்காலத்தை சந்தோஷமாக வரவேற்போம்.

அட என்ன பெயர் இது :sprachlos020: :sprachlos020: :sprachlos020:

அட அப்படியே ஆகட்டும் இனிதாய்
வரவேற்போம் இனிமையாய் அமைய
இருக்கும் எதிர்காலத்தை

இனியவள்
29-07-2007, 12:50 PM
ம*ன*திற்கு இத*மான* வ*ரிக*ள்.. பாராட்டுக*ள்.

நன்றி மன்மதன்

உங்களது முதல் பின்னூட்டம் இது எனது கவிக்கு நன்றிகள் :icon_08:

சிவா.ஜி
29-07-2007, 12:52 PM
அட என்ன பெயர் இது :sprachlos020: :sprachlos020: :sprachlos020:

அட அப்படியே ஆகட்டும் இனிதாய்
வரவேற்போம் இனிமையாய் அமைய
இருக்கும் எதிர்காலத்தை

எங்க ஊர்ல உபதேசம் செய்யறதுக்கு ஒரு அம்மா இருக்காங்க. அவங்க பேரு அமிர்தானந்தமாயி...ஹீ..ஹீ

இனியவள்
29-07-2007, 12:56 PM
எங்க ஊர்ல உபதேசம் செய்யறதுக்கு ஒரு அம்மா இருக்காங்க. அவங்க பேரு அமிர்தானந்தமாயி...ஹீ..ஹீ

ஆஹா சிவா

இதற்குப் பெயர் தான்
உபதேசமா சொல்லவேயில்லை :sprachlos020: :sprachlos020: :sprachlos020:

சிவா.ஜி
29-07-2007, 01:05 PM
உபதேசத்தை,உபதேசமென்று தெரியாமல்,உபதேசித்த இனியவளானந்தமாயி பல்லாண்டு வாழ்க.

அமரன்
29-07-2007, 01:09 PM
உபதேசத்தை,உபதேசமென்று தெரியாமல்,உபதேசித்த இனியவளானந்தமாயி பல்லாண்டு வாழ்க.

கோசம் வருகிறது கொடியைக்காணலையே..

இனியவள்
29-07-2007, 01:10 PM
எல்லோரும் ஒரு முடிவோட இருக்கினம் போல இருக்கே :sprachlos020: :sprachlos020: :sprachlos020:

சிவா.ஜி
29-07-2007, 01:11 PM
கொடியை புதுவிதமாக டிசைன் செய்யக் கொடுத்திருக்கிறேன்.கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

அமரன்
29-07-2007, 01:12 PM
எல்லோரும் ஒரு முடிவோட இருக்கினம் போல இருக்கே :sprachlos020: :sprachlos020: :sprachlos020:

எப்படிங்க கண்டுபிடிச்சீங்க*....

இனியவள்
29-07-2007, 01:22 PM
கொடியை புதுவிதமாக டிசைன் செய்யக் கொடுத்திருக்கிறேன்.கூடிய விரைவில் எதிர்பார்க்கலாம்.

அட அது எல்லாம் எதுக்கு சிவா

வீட்டிலை இருக்கும் பாருங்கோ
உடுப்புக் காயப்போடுற கொடி
அதைக் கொண்டு வாங்கோ

அது சரி யாரைக் காயப்போடப்
போறீங்கள் உங்களை இல்லையே :grin: :grin:

இனியவள்
29-07-2007, 01:22 PM
எப்படிங்க கண்டுபிடிச்சீங்க*....

எல்லாம் நீங்கள் சொல்லித் தந்தது தான் :music-smiley-010:

சிவா.ஜி
29-07-2007, 01:25 PM
ஆஹா இதுக்குப் பேர்தான் தடி கொடுத்து அடி வாங்கறதா......

இனியவள்
29-07-2007, 01:25 PM
ஆஹா இதுக்குப் பேர்தான் தடி கொடுத்து அடி வாங்கறதா......

தடி கொடுத்து யாரிடம்
அடி வாங்கினீங்கள் :confused:

அமரன்
29-07-2007, 01:26 PM
அட அது எல்லாம் எதுக்கு சிவா

வீட்டிலை இருக்கும் பாருங்கோ
உடுப்புக் காயப்போடுற கொடி
அதைக் கொண்டு வாங்கோ

அது சரி யாரைக் காயப்போடப்
போறீங்கள் உங்களை இல்லையே :grin: :grin:

அதிலே காய்வது உடுப்புகளா..
மழையில் நனைந்த
வானவில் என்றல்லவா நினைத்தேன்..

இனியவள்
29-07-2007, 01:27 PM
அதிலே காய்வது உடுப்புகளா..
மழையில் நனைந்த
வானவில் என்றல்லவா நினைத்தேன்..

வானவில் மழையில்
நனைந்தால் கலர்கள்
மாயமாய் போய்விடும்
அமர் :grin: :grin: :grin:

அமரன்
29-07-2007, 01:28 PM
வானவில் மழையில்
நனைந்தால் கலர்கள்
மாயமாய் போய்விடும்
அமர் :grin: :grin: :grin:

உண்மை என்றுமே மாயமாகாது...!!!?

சிவா.ஜி
29-07-2007, 01:28 PM
ஒன்ணுமே தெரியாத பச்சப்புள்ளயாட்டம் கேக்கறதப் பாரு...சொக்கா எனக்கு வேணும் இதுவும் வேணும் இன்னமும் வேணும்......பொலம்ப வுட்டுட்டாய்ங்களே......

அமரன்
29-07-2007, 01:29 PM
ஒன்ணுமே தெரியாத பச்சப்புள்ளயாட்டம் கேக்கறதப் பாரு...சொக்கா எனக்கு வேணும் இதுவும் வேணும் இன்னமும் வேணும்......பொலம்ப வுட்டுட்டாய்ங்களே......

இன்னும் வேணுமா.....!!!!?

இனியவள்
29-07-2007, 01:30 PM
இன்னும் வேணுமா.....!!!!?

ஹீ ஹீ அமர்

இன்னும் வேணுமாம்
கொஞ்சம் குடுங்க :grin:

சிவா.ஜி
29-07-2007, 01:31 PM
நான் இந்த ஆட்டத்துக்கு வர்ல அம்பேல்......

இனியவள்
29-07-2007, 01:31 PM
உண்மை என்றுமே மாயமாகாது...!!!?

ஹீம் அமர் உண்மை
என்றும் மாயமாகாது

ஆனால் சில பொய்கள்
வானவில் போன்றது
கலர் கலரா பொய் சொல்லி
காணாமல் போறீனம் :grin: :grin: :grin:

அக்னி
31-07-2007, 02:54 PM
காலத்தின் ஓட்டத்தில்,
பந்தயவீரர்களாய் நாங்கள்...
நிகழ்காலத்தின் தடத்தில்,
முமுமையான முயற்சிகளும்
குவிமையப்படுத்தப்பட்டாலே,
இறந்தகாலத்தின் தோல்விகள்,
மேவப்பட்டு,
எதிர்காலத்தின் வெற்றிகள்
கூடிவரும்...

இனியவளுக்கும், இனிய பின்னூட்டங்கள், கவிதைகள் தந்த அனைவருக்கும் பாராட்டுக்கள்...

இனியவள்
31-07-2007, 02:56 PM
நன்றி அக்னி

கவியோடு கவி சேர்ந்து
கவிப்போர்க்களமாகின்றது
படைக்கப்படும் ஒவ்வொரு
திரிகளும் பின்னூட்டங்கள்
மூலம் :icon_08: