PDA

View Full Version : மாறுகின்றேன்



இனியவள்
29-07-2007, 04:54 AM
புல் நுனி பனித் துளியாய்
மாறுகின்றேன்
அதிகாலையி நீ நடக்கையில்
உன் பாதைச் சுவடுகள்
என்னைத் தீண்டுவதற்காய்....

பூக்களாய் மாறுகின்றேன்
உன் விரல் கொண்டு
என்னைப் பறித்திட..

காற்றாய் மாறித் தவழ்கின்றேன்
உன் கேசத்தில்..

விரல் நிகமாய் மாறுகின்றேன்
நீ வெட்ட வெட்ட முளைப்பதற்காய்....

நிலவாய் மாறி குளிர்விக்கின்றேன்
அனலாய் சுட்டெரிக்கும் சூரியனிடம்
இருந்து உன்னை விடுவித்து....

பட்டாம் பூச்சியாய் சிறகடிக்கின்றேன்
உன் இதயம் என்னும் கோயிலில்..

தூசாக நினைத்து என்னை உதறித் தள்ளாதே
மூச்சுக்காற்றாய் மாறி உனக்கு சுவாசம் தருகின்றேன்

ஓவியன்
29-07-2007, 05:15 AM
மாறவைத்து
மாற்றிவைத்து பின்
மாறா துன்பம் தான்
காதலோ........!

அழகான வரிகள் பாராட்டுக்கள் இனியவள்!.

விகடன்
29-07-2007, 05:19 AM
கதலியி(காதலனி)ன் தன்னையே அர்ப்பணிக்கும் கதலியி(காதலனி)ன் கனிவான பேச்சுக்கள்
அருமை இனியவள்.
பாராட்டுக்கள்

அமரன்
29-07-2007, 09:18 AM
அருமையான கற்பனை...பட்டாம்பூச்சி பறப்பது சோலைஎன்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும். பாராட்டுக்கள் இனியவள். தொடருங்கள்..
ஓவியனே..அருமை. அட்சரம்.

அமரன்
29-07-2007, 09:19 AM
மாறவைத்து
மாற்றிவைத்து பின்
மாறா துன்பம் தான்
காதலோ........!



மாறவைத்து
மாற்றிவைத்து
மாறி துவைப்பது
காதல் (அப்பூ.)

சிவா.ஜி
29-07-2007, 09:25 AM
இப்படி ஒரு காதலி கிடைக்க எந்த காதலன் கொடுத்துவைத்திருக்கிறானோ என்று பொறாமைப் படும்படியான கவிதையின் நாயகி.
எல்லாம் கொடுத்தேன்
என்னையும் கொடுத்தேன்
உன் சுவாசமாய் இருப்பேன்
எனக்கு வேண்டியதெல்லாம்
உன்னில் வாசம் செய்ய
இதயத்தில் ஓர் இடம்!

இனிய கவிதை தந்த இனியவளுக்கு வாழ்த்துக்கள்.

இனியவள்
29-07-2007, 12:22 PM
மாறவைத்து
மாற்றிவைத்து பின்
மாறா துன்பம் தான்
காதலோ........!
அழகான வரிகள் பாராட்டுக்கள் இனியவள்!.

நன்றி ஓவியன்

நான்கு வரிக் கவிதை
உணர்த்திச் செல்கின்றது
காதல் பயணத்தின்
பாதையை வாழ்த்துக்கள்
ஓவியன்

இனியவள்
29-07-2007, 12:23 PM
கதலியி(காதலனி)ன் தன்னையே அர்ப்பணிக்கும் கதலியி(காதலனி)ன் கனிவான பேச்சுக்கள்
அருமை இனியவள்.
பாராட்டுக்கள்

நன்றி விராடன்

இனியவள்
29-07-2007, 12:24 PM
அருமையான கற்பனை...பட்டாம்பூச்சி பறப்பது சோலைஎன்றால் இன்னும் பொருத்தமாக இருக்கும். பாராட்டுக்கள் இனியவள். தொடருங்கள்..
ஓவியனே..அருமை. அட்சரம்.

நன்றி அமர்...

கொஞ்சம் வித்தியாசமாக
இருக்கட்டு என்று சோலையைத்
தவிர்த்து விட்டேன் அமர்

இனியவள்
29-07-2007, 12:25 PM
இப்படி ஒரு காதலி கிடைக்க எந்த காதலன் கொடுத்துவைத்திருக்கிறானோ என்று பொறாமைப் படும்படியான கவிதையின் நாயகி.
எல்லாம் கொடுத்தேன்
என்னையும் கொடுத்தேன்
உன் சுவாசமாய் இருப்பேன்
எனக்கு வேண்டியதெல்லாம்
உன்னில் வாசம் செய்ய
இதயத்தில் ஓர் இடம்!
இனிய கவிதை தந்த இனியவளுக்கு வாழ்த்துக்கள்.

நன்றி சிவா..

கோடு போட்டால் பாதை
அமைக்கின்றீர்கள் அனைவரும்
வாழ்த்துக்கள்