PDA

View Full Version : அர்த்தம் தான் என்னவோ



theepa
28-07-2007, 11:36 PM
அர்த்தம் தான் என்னவோ


நீ வருவாய் என என் இரு விளிகலும்
தினமும் ஏங்குகின்றன...!

உன் பெயரைச் சொல்லியே என் உயிர்
சுவாசிக்கின்றது....!

உன்னோடு பேசத்துடிக்கும் என் இதழ்கள்
பிறரிடம் பேச மறுக்கின்றது...!

உன் குரலைக் கேட்க என் செவிகலிரண்டும்
நாளும் தவிக்கின்றன...!

உன்னைக் கானாத நாளில் என் இதயம்
வலிக்கின்றது...!

ஆணே என்னில் நீ ஏற்படுத்திய இம்மாற்றத்திற்கு
அர்த்தம் தான் என்னவோ?


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஓவியன்
29-07-2007, 02:49 AM
நீ வருவாய் என என் இரு விழிகளும்
தினமும் ஏங்குகின்றன...!

உன் பெயரைச் சொல்லியே என் உயிர்
சுவாசிக்கின்றது....!

உன்னோடு பேசத்துடிக்கும் என் இதழ்கள்
பிறரிடம் பேச மறுக்கின்றது...!

உன் குரலைக் கேட்க என் செவிகளிரண்டும்
நாளும் தவிக்கின்றன...!

உன்னைக் காணாத நாளில் என் இதயம்
வலிக்கின்றது...!

ஆணே என்னில் நீ ஏற்படுத்திய இம்மாற்றத்திற்கு
அர்த்தம் தான் என்னவோ?
சில விடயங்களுக்கு அர்த்தமே புரிவிக்கவே தேவையில்லை, புரிந்தே தான் இருக்கும் போது மீளப் புரிய வைக்க வேண்டியதில்லையல்லவா.............

பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் லதுஜா!

இனியவள்
29-07-2007, 04:40 AM
இதற்கு பெய.................ர்

எதோ சொல்லுவினமே ஹிம்

அங் ஞாபகம் வந்திட்டு அதற்கு பெயர் தான் காதலுங்கோ அம்மணி

வாழ்த்துக்கள் லது அழகிய கவிக்கு :icon_08:

விகடன்
29-07-2007, 04:50 AM
இப்படித்தான் எங்களுக்கும் ஒரு நண்பன் இருந்தான் பாருங்கோ. திடீரென்று எங்களுடனெல்லாம் கதைப்பதை குறைத்துக்கொண்டான். கதைத்தாலும் அவளைப்பற்றியே கதைப்பான்.

ஏதோ நாங்களெல்லாம் தூரமாகிப் போவதுபோல் தோன்றும். இப்பவும் கூட!!!

அமரன்
29-07-2007, 09:24 AM
ஆணும் பெண்ணும் ஒன்று சேர்ந்து சமூக வேலிகளை உடைக்கும்வரை இந்த நோய் இருக்கும் லதுஜா. இருபாலருக்கும் இடையே ஏதோ ஒரு திரை இருக்கிறது. அது விலகவேண்டும். விலகிவிட்டால் இது இல்லாமல் போய் அன்பு என்னும் சுகந்தம் பரவும். பாராட்டுக்கள் தோழியே..

theepa
29-07-2007, 11:00 PM
நண்ரிகல் என் அருமை நன்பர்கலே