PDA

View Full Version : திருட்டு



theepa
28-07-2007, 11:21 PM
திருட்டு


கண்ணை மூடி கண் திறப்பதற்குள்
களவாடுவோர் மத்தியில் என்
கண்கலைத் திறந்திருக்கும் போதே
என் இதயத்தை திருடிய கள்ளன்
அல்லவா நீ....!!!


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஓவியன்
29-07-2007, 02:46 AM
விரும்பி அனுமதித்த திருட்டுத்தானே.........

காதலில் மட்டும்தானோ திருடரும் திருட்டைக் கொடுத்தவரும் ஒரு சேர திருட்டால் மனம் மகிழ்ந்திருப்பது.....?

பாராட்டுக்கள் லதுஜா!.

விகடன்
29-07-2007, 03:06 AM
உங்கள் அனுமதியுடனான திருட்டுத்தானே!!!
பதிலிற்கு அவனிதயத்தை திருடாமலா விட்டுவ் வைத்தீர்கள் லதுஜா?

இனியவள்
29-07-2007, 04:37 AM
ஆஹா லது

அழகான கற்பனை

அதற்கு பெயர் திருட்டல்ல
பண்டமாற்று முறை
அவன் இதயத்தை கொடுத்து
உன் இதயத்தை கொடுக்கின்றான்..
எப்படி இது திருட்டாகும்

வாழ்த்துக்கள் தோழியே

அமரன்
29-07-2007, 09:27 AM
திருடன் வருவது தெரிந்ந்தால் கதவை மூடவேண்டியதுதானே. செய்யமாட்டோமே அதை. காதலில் மட்டும்தான் திருட்டுகொடுப்பது சந்தோசமாக இருக்கிறது...பாராட்டுக்கள் லதுஜா.

சிவா.ஜி
29-07-2007, 09:30 AM
திருடும் பொருளே திருடச் சொல்வது காதலில் மட்டும்தானே.இதயத்திருடன்
இதயத்தை திருடிக்கொண்டு காதலை வைத்துவிட்டு போய்விட்டான். வாழ்த்துக்கள் லதுஜா.

theepa
29-07-2007, 10:57 PM
நண்ரிகல் என் அனைத்து நன்பர்கலுக்கும்

ஓவியன்
30-07-2007, 03:09 AM
நன்றிகள் என் அனைத்து நண்பர்களுக்கும்

அன்பான சகோதரி எழுத்துப்பிழைகளில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்...................!

உங்கள் பதிப்புக்கள் மேலும் மேலும் அழகு பெறும்:natur008: .

theepa
31-07-2007, 10:54 AM
நிச்சயமாக சரி பர்க்கின்ரேன் நண்பரே

அன்புடன்
லதுஜா

அக்னி
31-07-2007, 11:13 AM
நான் பறிகொடுத்தது
உன்னிடம் என்
ஓரிதயத்தையே...
ஆனால்,
என் இதயம் கதறியது,
தன்னைச்சுற்றிலும்
பல இதயங்கள்... என்று...
நீ திருடிய இதயங்களில்
ஒன்றா நானும்..?

பாராட்டுக்கள் லதுஜா...