PDA

View Full Version : அரட்டைக் காதல்



theepa
28-07-2007, 11:17 PM
அரட்டைக் காதல்

காதலிப்பதற்காகக் காதலிக்க வில்லை
காதலித்த போது தெரியவில்லை
கையைத் தொட்டபோது தட்ட வில்லை
முத்தம் இட்டபோது திட்டவில்லை
இன்று அவனுக்கு திருமணம்....!!!


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா

ஓவியன்
29-07-2007, 02:55 AM
இரு மனம் சேர்ந்து ஒரு மனமாகித் திருமணத்தில் முடிவது தானே உண்மைக் காதல்......!

இல்லையேல் அரட்டைக் காதல் தான்........!

இப்படிக் காதலின் புனிதத்திற்குக் கறுப்புப் புள்ளிகள் வைப்பவர்களை என்ன செய்வது.............?

விகடன்
29-07-2007, 03:11 AM
காதல், கல்யாணத்தில்த்தான் முடிவடைகின்றது
ஆமாம்
உங்கள் காதல்
அவன் கல்யாணத்தில்.

இனியவள்
29-07-2007, 04:32 AM
நம் காதலுக்கு முற்றுப்புள்ளி
நீ போட்ட மூன்று முடிச்சு
எனக்கல்ல இன்னொறுத்திக்கு.

அழகிய கவிதைக்கு வாழ்த்துக்கள் லது

அமரன்
29-07-2007, 09:35 AM
தொட்டபோது தட்டவும்
இட்டபோது திட்டவும் −காதல்
சட்டம் இடம்தரவில்லை....
பட்டமாக பறந்தாயே அப்போது
வாட்டமேன் இப்போது..


பாராட்டுக்கள் லதுஜா...

ஓவியன்
29-07-2007, 07:04 PM
தொட்டபோது தட்டவும்
இட்டபோது திட்டவும் −காதல்
சட்டம் இடம்தரவில்லை....
பட்டமாக பறந்தாயே அப்போது
வாட்டமேன் இப்போது..
அசத்தல் அமர்......!
பட் பட்டென பதில் கவி வடிக்கும் உம்மைப் பார்த்தால் பொறாமையாகக் கூட இருக்கிறது..........

பாராட்டுக்கள் நண்பா!.:icon_good:

theepa
29-07-2007, 10:58 PM
எனது கவியை படித்து அதர்க்கு உடனுக்கு உடன் விமர்சனங்கள் அனுப்பி என்னை ஊக்கிவிப்பதர்க்கு எனது பனிவான நண்ரிகள்

rocky
12-08-2007, 06:33 AM
அரட்டைக் காதல்

காதலிப்பதற்காகக் காதலிக்க வில்லை
காதலித்த போது தெரியவில்லை
கையைத் தொட்டபோது தட்ட வில்லை
முத்தம் இட்டபோது திட்டவில்லை
இன்று அவனுக்கு திருமணம்....!!!


அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா


க*விதை மிகவும் ந*ன்றாக* இருந்த*து தீபா.
இன்றைய சூழழில் எது உண்மைக்காதல் என்று யாரும் கணிக்கமுடியாது.
இதுவே நிதர்சண உண்மை. இதை அழகாக வெளிப்படித்தியுள்ளீர்கள். மீண்டும் பாராட்டுக்கள்.