PDA

View Full Version : காதலின் ரணம்



theepa
28-07-2007, 11:11 PM
காதலின் ரணம்


காதல் என்பது தீக்குச்சி போன்றது
கண்ணின் மோதலால் காதல் தீ
வளர்ந்து இதயத்தை சுட்டு மனசை
ரணமாக்கி மனிதனின் வாழ்வை
தோல்வி என்னும் பாதையில்
பித்தனாக தள்ளி விடுகின்றது...!!!


காதல் காதல் இனித்திடும் நரகமா?

அன்புடன்
நட்புக்கு சொந்தக்காரி
லதுஜா
லதுஜா

ஓவியன்
29-07-2007, 02:59 AM
காதலின் றணம்
காதல் என்பது தீக்குச்சி போன்றது
கண்ணின் மோதலால் காதல் தீ
வளர்ந்து இதயத்தை சுட்டு மனசை
றணமாக்கி மனிதனின் வாழ்வை
தோழ்வி என்னும் பாதையில்
பித்தனாக தள்ளி விடுகின்றது...!!!தீக்குச்சி சாதனையும் படைக்கும்.......!
சாதனைகளையும் அழிக்கும்.............!
எல்லாம் பாவிப்போரின் கையிலேயே தங்கியுள்ளது!
அப்படியே
காதலும்......................!

நல்ல உவமானம் சகோதரி பாராட்டுக்கள்!. :4_1_8:

விகடன்
29-07-2007, 03:08 AM
காதல்கள் எல்லாம் தோல்விப்பாதியில் இட்டுச் செல்வதில்லை சகோதரி.
பல வெற்றிக்கிம் வழிகோலுகின்றன.

இனியவள்
29-07-2007, 04:35 AM
காதல் தோல்வி சிலரை
வழி நடத்தும் வீழ்ச்சிப்பாதையில்
சிலரை அழைத்துச் செல்லும்
எழுச்சிப் பாதையில்...

காதல் இன்பத்தோடு சேர்த்து
வலிகளையும் நேசித்தால் வலிகள்
கடுகளவும் இன்பங்கள் மலையளவாகவும்
தோன்றும்...

வாழ்த்துக்கள் லது

அமரன்
29-07-2007, 09:31 AM
தீக்குச்சியை வைத்து குத்துவிளக்கும் ஏற்றலாம்..ஊரையும் கொளுத்தலாம்.....
பாராட்டுக்கள் லதுஜா.

theepa
29-07-2007, 10:56 PM
நண்ரிகள் நண்பரே