PDA

View Full Version : நானும் என் கவி ஓவியங்களும்.............!ஓவியன்
28-07-2007, 07:10 PM
அன்பான மன்றத்து உறவுகளே!, மன்றம் வந்து பல நாளாகியும் இந்த பகுதியில் என்னை அறிமுகப் படுத்தாதமைக்கு நான் இதற்கு தகுதியானவனா என்று என்னிடம் நானே கேட்ட கேள்வியே பிரதான காரணமானது. ஆனாலும் என்னை வளர்ந்துக் கொண்டு இங்கே என்னை அறிமுகப் படுத்தலாமென முடிவெடுத்திருந்தேன், ஆனால் பின்னர் தான் அறிந்தேன் என் வளர்ச்சிப் பாதை மிக மிக நீளமா.........னது என்று. அத்துடன் அன்பு உறவு அமரன் உற்சாகப் படுத்தியதன் உடனடி விளைவே இந்த பதிவு.........

ஈழத்தின் வன்னியில் பிறந்து மத்தியகிழக்கிலே பிழைக்க வந்து மன்றத்திலே தஞ்சம் நாடி வந்த அன்றில் நான். வாசனைமிக்க என்பெயரை கலை வாழ்க்கைக்காக ஓவியனாக்கியவன். சிறுவயது தொடங்கி ஓவியங்கள் மீதும் வர்ணங்கள் மீதும் நான் கொண்ட தீராக் காதல் இந்த புனை பெயருக்கும் வழி கோலியது. சிறுவயது முதலே நான் காதலித்தாலும் கரம் பற்ற மறந்த அல்லது மறுத்த காதலி கவிதை, அதற்கு நான் கரம் பற்றிய மற்றொரு காதலியான ஓவியம் காரணமாக இருந்திருக்கலாம். கவிதைக் காதலியைக் கண்கொட்டாமால் இரசித்தும் அவள் அழகைப் பருகி வந்தாலும் ஒருவனுக்கு ஒருத்தியே போதுமென இருந்து விட்டேன் போல..........!.

சிறு வயதில் பாடசாலைக் காலங்களில் ஓவியம், கதை, கட்டுரை போன்ற போட்டிகளில் அய்ராமல் கலந்து கொண்டிருந்தாலும் கவிதைப் போட்டிகள் பக்கம் தலை வைத்துக் கூடப் படுத்ததில்லை. ஆனால் கவிதைகளை ஆழமாக இரசித்துக் கொண்டே இருந்தேன். அப்போது 2005 ம் ஆண்டு யாழ்ப்பாணம் மீதான இராணுவ ஆக்கிரமிப்பால் எங்கள் பகுதிக்கும் பாடசாலைக்கும் யாழில் வசித்த பல உறவுகள் புலம் பெயர்ந்து வந்து எங்களுடனிணைந்து கொண்டனர். புலம் பெயர்வு எவ்வளவு மோசமானதானாலும் அது எனக்கு ஒரு நன்மையையும் செய்தது. ஆமாம் அந்த புலப் பெயர்வால் எங்கள் பாடசாலைக்கு வந்தசேர்ந்த ஈழத்தின் புகழ் பூத்த கவிஞர் பண்டிதர் ச.வே.பஞ்சாட்சரம் ஐயா அவர்களின் அறிமுகம் எனக்குக் கிடைத்தது. அந்தக் காலத்தில் அந்தப் பெரியவரின் வார்த்தைகளிலும் வசனங்களிலும் என்னையே தொலைத்து செந்தமிழில் நனையக் கிடைத்தமை என் பாக்கியமே. அந்த பெரியவரால் கவிதைகள் மேல் எனக்கிருந்த காதல் அதிகரித்தாலும் நான் ஒரு கவிதைகளேனும் எழுதவில்லை. எனக்கு ஏன் இந்த பொல்லாப்பு என்று விட்டுவிட்டேன்.

பின்னர் காலத்தின் சுழற்சியால் மத்திய கிழக்குக்கு பணிபுரிய வந்த போது தமிழ்மன்றம் என்னை இருகரம் நீக்கி வரவேற்று என் தமிழார்வத்தை வளர்த்தது. மன்றத்தின் ஆரம்ப காலத்தில் நான் திரிகளை ஆரம்பிப்பதிலும் மற்றையவர்களின் திரிகளுக்குப் பின்னூட்டம் இடுவதிலுமே என் காலத்தைக் கழித்தேன். அப்போது ஒரு நாள் பென்ஸ் அண்ணா என் கையெழுத்தைப் பார்த்து ஓவியன் கலக்கல் ஒரு கவிதையையே கையெழுத்தாக வைத்திருக்கிறாயே பாராட்டுக்கள் என்றார். அந்த பாராட்டு என்னை வசிட்டர் வாயால் பிரமரிஷிப் பட்டம் பெற்ற பெருமையை எனக்கு அளித்து நானும் கவிதை எழுத வேண்டுமென மேன் மேலும் ஆர்வமூட்டியது. தொடர்ந்து என்னை மாற்றவென வந்தது ஒரு திரி, கவிதை எழுதுவது எப்படி என்று.........
ஆதவன் ஆரம்பித்த அந்த திரி எனக்குக் கவிதை எழுதும் ஆவலை அதிகரித்தது அந்த திரியில் எங்கள் இளசு அண்ணா இப்படி (http://www.tamilmantram.com/vb/showpost.php?p=189830&postcount=77) என்னைக் கவிதை எழுத ஊக்குவித்தார். அப்போதும் நான் எழுதவில்லை, ஒருவாறாக அரட்டையடித்து மயூவைக் கிண்டலடித்து மன்றத்தின் தூணாகிய போது பூ அண்ணா வாழ்த்து தெரிவிக்கையில் ஓவியன் மன்றத்தில் தனித்தன்மையைப் பேண எதாவது செய்யுங்கள் என்று ஊக்கமூட்டினார், தொடந்து அவரது தனிமடல்கள் என்னை ஊக்கப் படுத்த எனது முதல் கவிதையை நான் கண்ட தமிழ் மன்றம் என்ற தலைப்பில் இட உடனே அன்பு நண்பர் ஷீ எனக்கு ஆலோசனை தந்து அந்தக் கவிதையைச் செம்மைப் படுத்தினார். அந்த திரிக்குக் கிடைத்த உற்சாகப் பின்னூட்டங்கள் என்னைக் தொடந்து கவி எழுத வைத்தன.

என்னை ஊக்குவிக்க வந்தது போலவே எனக்குத் தெரிந்தது கவிச்சமர் திரி அங்கே செல்வன் அண்ணாவின் கவியால் மயங்கி அவர் கவிதைகளிலிருந்து ஏராளம் விடயங்களைக் கற்றேன். அங்கே கவிச்சமர் நண்பர்களது கவிதைகளும் என்னை வளர்த்தன, எங்கள் கவிச் சமர் எல்லாத் திரிகளிலும் பரவின. முக்கியமாக அமரன் தொடக்கிய அரிசியல் என்ற குறுங்கவிதைத் திரியும் நான் தொடக்கிய வெறொரு(த்)தீ குறுங்கவிதைத் திரியும் என்னை மேன்மேலும் வளர்த்தது. தொடர்ந்து எனக்குக் கிடைத்த பின்னூட்டங்களாக முக்கியமாக இளசு அண்ணா, பென்ஸ் அண்ணா, பூ, ஆதவா, ஷீ, அக்னி, அமரன், சிவா, அன்பு, இனியவள், ஓவியா, வாத்தியார், போன்றோர் வடிவில் என் கவிதை வரிகளுக்கு மேன் மேலும் பலமூட்ட இன்று நான் என் கவி ஓவியங்களுடன் உங்கள் முன்னே என் அறிமுகம் செய்யும் பாக்கியம் கிட்டியது.

இந்த அரும்பாக்கியத்தை எனக்களித்த அன்புள்ளங்களுக்கு நன்றிகள் கோடி....................!


மன்றத்தில் எனது கவிதைகள்..........!

வாழ்த்துக் கவிதைகள்
நான் கண்ட தமிழ் மன்றம்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9212)

குறுங்கவிதைகள்
பசுமை! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9326)
வேறொரு(த்)தீ! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10203)
தமிழ்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10409)
மறதி!. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10793)
நேர்(மாறு) விகித சமன்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10920)
வேட்டை...! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11000)
விலாங்கும் வெளவாலும்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11014)

காதல் கவிதைகள்
கண்மூடா(து) காதல்!. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10360)
புரிகிறது!. (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10359)
காலத்தின் நிமிடங்கள்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10586)

புதிய கவிதைகள்
கைவந்த கழுகுகள்! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9243)
மீண்டும் போவதெப்போ............? (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=10497)
படைப்பின் பேதம்.........! (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11262)
காணாமல் போன கவிதை........... (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=11350)

அமரன்
28-07-2007, 07:27 PM
இது கவிஞர் அறிமுகமா..
சிந்திக்க வைக்கிறது.
கவிஞனும் ஓவியனும்
கலந்து செய்தகலவை இது...

இதைப்படிக்கையில் ....
காட்சிகள் விரிகிறது.
வார்த்தைகள் தொடர்கிறது..
அதனால் இது
விபரணச்சித்திரம்..

கவிஞர்கள் எதையும்
மிகைப்படுத்திக் கூறுவார்கள்.
இந்தக்கவிஞனின் நேற்றையகாற்று
யதார்த்தமாக சுகந்தம் பரப்புகிறது. .
அதனால் இது
எனதருமை நண்பனின் கறுப்புபெட்டி...

மன்றம் வளர்த்த செடி
மரமாகி கிளைபரப்பி நிற்கிறது.
இம்மரத்தில் இளைப்பாற
புதிய பறவைகள் வரும்..
அப்போ நானும்
ஒரு பறவையாக இருப்பேன்....


மன்றச்சிற்பிகள் செதுக்கிய சிற்பமே
சிலையாகிப்போனேன்..நான்...

ஓவியன்
28-07-2007, 07:33 PM
மன்றம் வளர்த்த செடி
மரமாகி கிளைபரப்பி நிற்கிறது.
இம்மரத்தில் இளைப்பாற
புதிய பறவைகள் வரும்..
அப்போ நானும்
ஒரு பறவையாக இருப்பேன்....


மன்றச்சிற்பிகள் செதுக்கிய சிற்பமே
சிலையாகிப்பொனேன்..நான்...

ஆகா நண்பா!, நீங்கள் இன்னுமொரு விருட்சமாக பக்கத்தில் அல்லவா நிற்பீர்கள் புதிய பறவைகளை வரவேற்க............

உங்கள் அன்புக்கும் அழகான பின்னூட்டக் கவிதைக்கும் என் நன்றிகள் கோடிகள்.

விகடன்
28-07-2007, 07:34 PM
பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய பாதை என்று சொல்வார்கள் வழமையான பேச்சு நடையில். ஆனால் அவற்றையெல்லாம் மரகதத்தால் பதித்ததைப்போல உணருகின்றேன்.
ஒழுங்கான வழினடத்தலில் உருவம் பெற்று நிற்கும் ஓவியனிற்கும் அவரை வடித்தெடுக்க அச்சுக்களாக அமைந்த மன்றத்து சான்றோர்களுக்கும் பாராட்டுக்கள்.

மேலும்,
தமிழின்பால் கொண்ட பற்ற்றினால் இன்னும் இன்னும் பல ஆக்கங்களையும் உதவிகளையும் தந்து மன்றம் சிறக்க வழிகோல வாழ்த்துகின்றேன்.

அன்புடன்
நான்

அமரன்
28-07-2007, 07:36 PM
ஆகா நண்பா!, நீங்கள் இன்னுமொரு விருட்சமாக பக்கத்தில் அல்லவா நிற்பீர்கள் புதிய பறவைகளை வரவேற்க............

உங்கள் அன்புக்கும் அழகான பின்னூட்டக் கவிதைக்கும் என் நன்றிகள் கோடிகள்.
ஏம்பா ஓவியன்...இது கவிதை இல்லப்பா..
இதைப்படித்ததும் என்னுள் விழுந்த விதை..
உமக்காக ஒரு கவிஎழுத ஆசைதான்...பார்ப்போம்.
காலம்கூடிவந்தால் எல்லாம் கைகூடுமாமே...

ஓவியன்
28-07-2007, 07:44 PM
தமிழின்பால் கொண்ட பற்ற்றினால் இன்னும் இன்னும் பல ஆக்கங்களையும் உதவிகளையும் தந்து மன்றம் சிறக்க வழிகோல வாழ்த்துகின்றேன்.
மிக்க நன்றி விராடன்!,
காலத்தால் இணைந்த நாம் இங்கும் கை கோர்த்து நடப்போம் − ஒன்றாகவே!.

ஓவியன்
28-07-2007, 07:53 PM
ஏம்பா ஓவியன்...இது கவிதை இல்லப்பா..
இதைப்படித்ததும் என்னுள் விழுந்த விதைஹீ!,ஹீ! அமரா!
அது என்னமோ தெரியலைப்பா.........!
நீங்க எழுதுறது எல்லாமே கவிதை, கவிதையாத் தான் தெரிகிறது!. :spudnikbackflip:

இனியவள்
29-07-2007, 04:23 AM
ஓவியரே வாழ்த்துக்கள்

அழகான அறிமுகம்..
ரசிக்க வைத்து எங்களையும்
எழுதத் தூண்டும்
அழகிய கவிதைகள்...:icon_08:

ஓவியன்
29-07-2007, 04:54 AM
மிக்க நன்றி இனியவள்!

உங்களைப் போல நிறையக் கவிதைகள் எழுதவில்லையே என்று என்னைக் கவலைப் பட வைத்தவரல்லா நீங்கள், உங்கள் அனைவரது அன்புக்கு இன்னமும் எழுதலாம் பல ஆயிரம் கவிதைகள்.

இளசு
29-07-2007, 07:11 AM
அன்பு ஓவியன்..

மன்றச்சோலையில்
தண்ணென்ற ஆக்கநீர் பாய்ச்சும்
ஜீவநதிகள் பல...
ஓவியநதியும் அதில் ஒன்று..

அன்பும் பண்பும் அடக்கமும் ஆக்கமான ஆளுமையும்
சுயமரியாதை, சுயபரிசோதனை, சுயசிந்தனையும்...


ஏழும் கலந்து என்ன ப*டைக்கும்?
எங்கள் வர்ணநேச வானவில் ஓவியநதி கிடைக்கும்!

அண்ணனின் பாச மலர்கள் உன் நதிக்கரை எங்கும்!


வாழ்த்துகள் ஓவியன்!

மனோஜ்
29-07-2007, 07:27 AM
ஓவியங்கள் வரைந்து எம்மை
வியப்பில் ஆழ்தியது இன்னும் என் மனதினில்
யதார்த்தமான கவிதைகள் பல தந்து
இன்னும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தொடர்ந்து வேண்டுகிறோன்

சிவா.ஜி
29-07-2007, 09:10 AM
அன்பு நன்பர் ஓவியனுக்கு மனம் நிறந்த வாழ்த்துக்கள். எழுத்துக்களில் தமிழ் விளையாடுகிறது,எதார்த்தம் கோலோச்சுகிறது,வித்தியாசப் பார்வையின் விவரணம் தெரிகிறது.ஓவியர்களின் எண்ணக்கலவையே வண்ணக்கலவையாகத்தான் இருக்கும். அதுவும் தூரிகை பிடித்த கையில் எழுதுகோல் ஏந்தியபோது எழுத்துக்களெல்லாம் வண்ணங்களாக வடிவாக வருகிறது. காதல் கவிதையிலும் சமுதாயக் கருத்து சொல்லும் கவிதைகளிலும் உங்கள் தனி முத்திரை பதித்து எங்களை பரவசமாக்கி வருகிறீர்கள்.மென்மேலும் பலப்பல கவி ஈந்து எங்களோடு இணைந்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.

சுகந்தப்ரீதன்
29-07-2007, 09:23 AM
அறிமுகமும் ஒவியமாக ஒளிர்கிறது.....வாழ்த்துக்கள் ஒவியரே...மென்மேலும் ஒளிரட்டும் உங்கள் கவிஒவியங்கள்!

ஓவியன்
29-07-2007, 12:18 PM
அன்பும் பண்பும் அடக்கமும் ஆக்கமான ஆளுமையும்
சுயமரியாதை, சுயபரிசோதனை, சுயசிந்தனையும்...
ஏழும் கலந்து என்ன ப*டைக்கும்?
எங்கள் வர்ணநேச வானவில் ஓவியநதி கிடைக்கும்!

அண்ணனின் பாச மலர்கள் உன் நதிக்கரை எங்கும்!
வாழ்த்துகள் ஓவியன்!

மிக்க நன்றிகள் அண்ணா!

உங்கள் பாசமலர்களின் வாசனையின் வலிமைதான் இந்த தம்பியின் உற்சாக மருந்து, அது தொடர்ந்து கிடைக்கும் என்ற போது ஓவிய நதியின் வேகத்திற்கு ஏது தடை.....?:natur008:

ஓவியன்
29-07-2007, 12:20 PM
ஓவியங்கள் வரைந்து எம்மை
வியப்பில் ஆழ்தியது இன்னும் என் மனதினில்
யதார்த்தமான கவிதைகள் பல தந்து
இன்னும் எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்த தொடர்ந்து வேண்டுகிறோன்நன்றி நண்பா!,
எனை வாழ்த்த கிடைக்கும் ஒவ்வொரு இடங்களிலும் என் பெயராலே கவி படைக்கும் நண்பா!, என்றென்றும் எனக்கு வேண்டும் உங்கள் அன்பு...........

ஓவியன்
29-07-2007, 06:17 PM
ஓவியர்களின் எண்ணக்கலவையே வண்ணக்கலவையாகத்தான் இருக்கும். அதுவும் தூரிகை பிடித்த கையில் எழுதுகோல் ஏந்தியபோது எழுத்துக்களெல்லாம் வண்ணங்களாக வடிவாக வருகிறது. காதல் கவிதையிலும் சமுதாயக் கருத்து சொல்லும் கவிதைகளிலும் உங்கள் தனி முத்திரை பதித்து எங்களை பரவசமாக்கி வருகிறீர்கள்.மென்மேலும் பலப்பல கவி ஈந்து எங்களோடு இணைந்திருக்க மனமார வாழ்த்துகிறேன்.தெளிவான பார்வையுடன் விமர்சனம் தரும் உங்களைப் போன்றோரின் நட்பல்லவா என்னை இந்த துறையில் வளர்த்தெடுத்துக் கொண்டிருக்கிறது..........

மிக்க நன்றிகள் சிவா.ஜி − தொடர்ந்தும் தோள் தொட்டுப் பயணிப்போம்.

ஓவியன்
29-07-2007, 06:18 PM
அறிமுகமும் ஒவியமாக ஒளிர்கிறது.....வாழ்த்துக்கள் ஒவியரே...மென்மேலும் ஒளிரட்டும் உங்கள் கவிஒவியங்கள்!மிக்க நன்றி சுகந்தா..........!
தொடர்ந்து இணைந்திருங்கள் சேர்ந்தே கலக்குவோம்....................

அக்னி
30-07-2007, 05:57 PM
மனம் எங்கே உள்ளது..? உணர்வுகளின் உருவம் என்ன..?
இல்லாத அரூவங்கள் மனிதனின் ஏற்றத்தையும் இறக்கத்தையும் தீர்மானிக்கும் சக்திகளாக...
அந்த சக்திகளின் வெளிப்படுத்தலுக்கு, போடப்பட்ட வழித்தடங்கள் ஆற்றல்கள்...
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், மறைந்திருக்கும் ஆற்றல்கள்..,
வெளிப்படுவதும், அப்படியே உறைந்தே போவதும் அவனவனின் முயற்சியிலேயே...
தனது ஆற்றல்களின் தடங்களைச் செப்பனிட்டு, திறன்பெற்று, புகழ்பெற்று,
பயணிக்கும் கவிஓவியன் பாதையில், எனது வாழ்த்துக்களும் பூக்களாக...

விகடன்
30-07-2007, 06:06 PM
மிக்க நன்றி சுகந்தா..........!
தொடர்ந்து இணைந்திருங்கள் சேர்ந்தே கலக்குவோம்....................

புரியவில்லையே சுகந்தன் மற்றும் ஓவியன்

ஓவியன்
30-07-2007, 06:10 PM
ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், மறைந்திருக்கும் ஆற்றல்கள்..,
வெளிப்படுவதும், அப்படியே உறைந்தே போவதும் அவனவனின் முயற்சியிலேயே...
தனது ஆற்றல்களின் தடங்களைச் செப்பனிட்டு, திறன்பெற்று, புகழ்பெற்று,
பயணிக்கும் கவிஓவியன் பாதையில், எனது வாழ்த்துக்களும் பூக்களாக...
சத்தியமான வரிகள் அக்னி................!

உங்கள் வாழ்த்துப் பூக்கள் என்றைக்கும் எனக்குத் தேவை நண்பனே − கேட்காமலேயே குறைவின்றி அள்ளி அள்ளித் தருவதற்குக் கோடி நன்றிகள்!.

ஓவியன்
30-07-2007, 06:12 PM
புரியவில்லையே சுகந்தன் மற்றும் ஓவியன்
சில இடங்களில் சில விடயங்கள் புரியாமல் இருப்பது தான் நல்லது நண்பரே................! :sport-smiley-014:

அக்னி
30-07-2007, 06:24 PM
சில இடங்களில் சில விடயங்கள் புரியாமல் இருப்பது தான் நல்லது நண்பரே................! :sport-smiley-014:

புரிகிறது நண்பரே...

விகடன்
30-07-2007, 06:34 PM
புரிகிறது நண்பரே...

அடடே.
அக்னிக்கு புரிஞ்சிரிச்சாமெல்லே

"நுதலும் ....... " பழ மொழி மறந்திருச்சு.

நான் பொறுப்பாளியில்லை. இது உரியவர்களுக்கு.

அக்னி
30-07-2007, 06:38 PM
அடடே.
அக்னிக்கு புரிஞ்சிரிச்சாமெல்லே

"நுதலும் ....... " பழ மொழி மறந்திருச்சு.

நான் பொறுப்பாளியில்லை. இது உரியவர்களுக்கு.

அது நுணல் என்று நினைக்கின்றேன்... நுதல் என்றால் நெற்றி என்று பொருள்படும்...

kampan
13-08-2007, 05:26 AM
கவிதையும் ஓரு ஓவியம்தான்
இரண்டிற்கும் மூலதனம் கற்பனைதான்
இரண்டிற்கும் தூண்டுதல் பாராட்டுத்தான்
இரண்டும் இன்பத்திலும் துன்பத்திலும்
இயல்பாக வருபவை.

வாழ்க் உன் சேவை.

உன் நடைகண்டு மகிழும் மழலை.

பூமகள்
13-08-2007, 06:17 AM
அன்புச்சகோதரர் ஓவியன்,

தங்களின் கவித்திறனைக் கண்டு அகம் மகிழ்ந்தோம்...!
தமிழ்த்தாயின் கடைக்குட்டியாம் இந்த சிறு மழலையின் மனமார்ந்த பாராட்டுக்கள்...!

உங்கள் அசிகளுடன் நானும்,
தமிழ் பயணத்தில் உங்களுடன்,
தமிழ் மன்றத்தில் புதுமைகள் படைக்க
உத்வேகத்துடன்....!

நன்றிகளோடு..

ஓவியன்
13-08-2007, 06:47 AM
வாழ்க் உன் சேவை.

உன் நடைகண்டு மகிழும் மழலை.

நன்றி கம்பன்!
இங்கு வந்த போது நடக்கவே தெரியா மழலை, இன்று தத்தி தத்தி நடக்க வைக்கிறது இந்த மன்றம் வெகுவிரைவில் ஓடவும் வைக்கும்.

இந்த பேறைத் தந்த மன்றத்துக்குத் தலை வணங்குகிறேன்.

ஓவியன்
13-08-2007, 06:50 AM
உங்கள் அசிகளுடன் நானும்,
தமிழ் பயணத்தில் உங்களுடன்,
தமிழ் மன்றத்தில் புதுமைகள் படைக்க
உத்வேகத்துடன்....!

நன்றிகளோடு..

நன்றி பூமகள்!

உங்களைப் போன்ற துடிப்பு மிக்க இளையோரால் இந்த மன்றத் தாயயின் புகழ் மேன் மேலும் இந்த அவனியில் உயர்ந்து விளங்கட்டும்.

leomohan
13-08-2007, 08:26 AM
என்ன ஓவியன், நீங்கள் வரைந்த படங்கள் என்று ஆர்வமாக வந்தால், கவிதைகளாக இருக்கிறதே. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். :-)

ஓவியன்
13-08-2007, 08:54 AM
என்ன ஓவியன், நீங்கள் வரைந்த படங்கள் என்று ஆர்வமாக வந்தால், கவிதைகளாக இருக்கிறதே. எனக்கும் கவிதைகளுக்கும் காத தூரம். :-)

மோகன் என்னை வைத்துக் காமடி கீமடி பண்ணலியே?

உங்களுக்காக சிரிப்புக்கள் விடுகதைகள் பகுதியில் இந்த திரியில் (http://www.tamilmantram.com/vb/showthread.php?t=9857) என்னால் வரையப் பட்ட ஓவியங்கள் சில உள்ளன.

விகடன்
14-08-2007, 10:30 AM
அது நுணல் என்று நினைக்கின்றேன்... நுதல் என்றால் நெற்றி என்று பொருள்படும்...

மறந்தாச்சு என்று போடும்போது பிழையாகத்தானே எழுதவேண்டும். இல்லையா?

இருந்தாலும் இரு எழுத்துக்களால் குழப்பத்தை ஏற்படுத்திவிடக்கூடியதுதான். சுட்டிக்காட்டியமைக்கு பாராட்டுக்களும் நன்றிகளும்

ஆதவா
28-01-2008, 02:26 AM
இந்தத் திரியை இத்தனை நாளும் தவறவிட்டுவிட்டேன் நண்பா...

நீங்கள் கவிதை எழுதுவதைக் காட்டிலும் ஓவியம் வரைவதில் வல்லவர் என்பது எனக்கு நன்றாகத் தெரியும்... கார்ட்டூன் ஓவியங்கள் பல உங்கள் கைவண்ணத்தில் இதே மன்றத்தில் ஜொலித்தவைதானே!!

ஓவியம் பெரிதா? காவியம் பெரிதா? இன்றும் கூட புகழ்பெற்ற பல ஓவியங்களை நாம் கண்டிருப்போம்...... ஓவியத்திற்குப் பேசும் திறம் உண்டு. பல கவிதைகளை ஒரு ஓவியத்தில் அடக்கிவிடுவதும் உண்டு. ஆனால் கவிதை அப்படியல்ல. படிக்க, ரசிக்க, புரிய, தெரிந்திருக்கவேண்டும். இல்லாவிடில் அந்தக் கவிதையே வீண்..

கவிதை எழுதுவது என்பது என்னைப் பொறுத்தவரையிலும் பொழுதுபோக்கு.. அந்தப் பொழுதையும் நல்லவிதமாகப் போக்கவேண்டும் என்பது என் விருப்பம். அது தமிழில் எனும்போது என் பொழுதுகள் இனிமையாகவே போக்கப்படுகிறது.. அப்படியொரு பொழுதுபோக்கை ஏன் நீங்கள் தொடரக்கூடாது? உங்கள் கருத்துக்களையே ஏன் கவிதை ஆக்க இயலாது? ஏற்கனவே யாராவது அந்தக் கருத்தில் இட்டிருக்கிறார்கள் என்ற பயமா? கவலை விடுங்கள்.. இன்று பெரிய கவிஞர் என்று வர்ணிக்கப்படும் வைரமுத்து கூட " அற்றைத் திங்கள் அந்நிலவில்" என்ற வரியையே சுட்டாரே! நாம் எழுதுவதெல்லாம் எதுவும் புதுமை அல்ல. ஏற்கனவே எழுதி வைத்தது...

அக்னிக் குஞ்சொன்று கண்டேன்
அதை அங்கொரு காட்டிலோரு
பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு - தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?

உங்களை ஒரு அக்னிக் குஞ்சாக நான் காண நினைக்கிறேன்.. உங்கள் பயணக் காடுகள் வெந்து தணியட்டும்....

வாழ்த்துகளுடன்
ஆதவன்