PDA

View Full Version : நண்பனிற்கு ஒரு கடிதம்.



விகடன்
28-07-2007, 04:33 PM
நண்பனிற்கு ஒரு கடிதம்.
எந்தருமை நண்பா!
இன்றோடு சில நாட்கள்
முன்னிருந்து
உன்னிடத்தே
ஒருமாற்றம்
என்னவென்று புரியவில்லை
உனக்குள்ளே நீ
அழுவதாக
உள்மனம் சொன்னது
ஓரிரு நாட்கள்
ஒவ்வொன்றாய் கழிகையிலே
புரிந்து கொண்டேன்
"காதல்" ஆடிய விளையாட்டில் - நீ
தோற்றுப்போனதாய் மறுகுகிறாயாம்...
தோழிகள் சொல்கின்றனர்.
அதற்காக
இப்படியா அழுவாய்....?
வாழ்விலே நம்பிக்கை
குறைந்துவிட்டதாய்,
சாவொன்றே நிம்மதியை
தருமென்பதாய்,
சொல்லிக்கொள்கிறாயாம்...?
வாழத்தான் "காதல்"
மாளவல்லவே?
பிறகெதற்காக துடிக்கிறாய்?
புரிந்துகொள்ள
முயற்சி செய்.

ஒற்றை ரூபாய்க்
குற்றிக்காசுக்கட்காய்
குரலெடுத்துப்பாடும்
தெருப்பாடந் - தன்
வாழ்விலே வைத்திருக்கும்
நம்பிக்கையை
புற்று நோய் வந்தும்
புத்துயிக்காய் ஏங்கும்
ஒரு நோயாளி
வாழ்விலே வைத்திருக்கும்
விருப்பத்தை
எல்லாமே
மண்ணோடு மண்ணாக
மரித்து விட்ட போதும்
ஈழ மக்கள் வாழ்க்கையிலே
வைத்திருக்கும் நம்பிக்கையை
பகுத்தறிவும் படிப்பறிவும்
கொண்டவன்- நீ
மறந்துவிட்டால் சரிதானோ...?

இடப்பெயர்விலும்,
அகதிவாழ்விலும்
ஏற்றுக்கொண்ட இன்னலில்
இதையும் ஒன்றாக
எண்ணிக்கொள்...!
இளைஞனிற்ற்கு புதைகுழியாய்
"காதல்" வேண்டாம்
புத்துயிர் கொடுப்பதற்காய்
புதுவேகம் தருவதற்காய்
உயிர்க்கட்டும்
உள்ளமுடைந்து
கல்லறையை நாடக்
"காதல்" வேண்டாம்.
உண்மையை உணர
உலகினை வெல்ல
"காதல்" செய்வாய்.
தேவதாஸ்களுக்கான
தேவை இப்போதில்லை
ஆகவே அறிந்து கொள்
பெற்ற தாயவள்
பேதலித்தழுவதற்கு
சந்தர்ப்பம் கொடாதே
உன்னைக் காதலி
உலகம் உன்னைக்
காதலிக்கும்


அன்புடன்
கீர்த்தனீ சீதரன்
மொரட்டுவை பல்கலைக்கழகம்


இந்த கவிதை எனது சொந்த ஆக்கமில்லை. இருந்தாலும் இங்கே பதிக்கிறேன். ஏனென்றால் மன்றத்தில் பலர் காதல் கவிதைகளை அதிலும் கவலைனிலையிலிருந்து வரைகின்றனர். "நண்பனிற்கு ஒரு கடிதம்." என்ர கவிதையை படிக்கும்போது ஞாபகத்தில் வந்த பல மன்ற நண்பர்களுக்காக இதை இங்கே பிரசுரிக்க வேண்டுமென்று முடிவுசெய்தேன்.

மேலும்,
இந்த பதிவு தரமற்றதாகவோ அல்லது அனுமதிக்க முடியாததாகவோ யாராவது கருதினால் எந்தவித தடையுமின்றி நீக்கிவிடலாம். எனக்கு ஆட்சேபனை கிடையாது என்பதனையும் அறியத்தருகின்றேன்.

அமரன்
28-07-2007, 07:08 PM
நம்பிக்கை உரம் இக்கவிதை. பகிர்வுக்கு நன்றி விராடன்..

இளசு
28-07-2007, 10:03 PM
நன்றி விராடன்..

இதை இலக்கியங்கள் பகுதிக்கு மாற்றுகிறேன்..

விகடன்
29-07-2007, 11:30 AM
நன்றி விராடன்..

..

நன்றியெல்லாம் எனக்கெதுக்குங்க. நான் இந்த கவிதையைப் பொறுத்தவரை ஒரு காவியே. அனைத்து பாராட்டுக்களும் போய்ச்சேரவேண்டிய அந்த முகந்தெரியா மனிதர் கீர்த்தனீ சீதரன் தாங்க.

ஓவியா
02-09-2007, 10:28 PM
சிறந்த பதிவு, பதிவினை ரசித்தேன்.

இங்கு வழங்கியதற்க்கு எனது நன்றிகள் விராடா.


முன்பு நான் அதிகம் பயன்படுத்திய வாசகம் இது!! இப்பொழு???

உன்னைக் காதலி
உலகம் உன்னைக்
காதலிக்கும்